கஞ்சி வரதப்பா என்று ஒருத்தன் சாமி கும்பிட்டானாம். பக்கத்தில் பசியால் வாடிக்கிடந்த ஒருவனுக்கு "கஞ்சி வருதப்பா" என்று கேட்டதாம். உடனே அவன் எங்கே வருதப்பா என்றானாம்.
அது மாதிரி ஆகிப்போச்சு என் கதை. விண்டோஸ் 10 வருது வருது என்று இரண்டு நாட்களாக இரவும் பகலும் காத்திருந்து தூக்கம் போனதுதான் மிச்சம். ஒன்றையும் காணோம். வேற வேலை எதுவும் ஓட மாட்டேங்கிறது.
இப்ப லேடஸ்ட் செய்தி என்னவென்றால் அது வருவதற்கு வாரக்கணக்குல் அல்லது மாதக் கணக்கில் ஆகலாம் என்கிறார்கள். இதை வீண்டோஸ் 10 புரொக்கராமை தேனாம்பேட்டை காங்கிரஸ் கிரவுண்டில் கொடுப்பதாக மைக்ரோசாப்ட் காரன் சொல்லியிருந்தால் அப்துல் கலாம் இறுதிச்சடங்குக்கு ஒருவரும் போயிருக்கமாட்டார்கள்.
போகட்டும். யாராச்சும் இந்த விண்டோஸ் 10 புரொக்ராமை இன்ஸ்டால் பண்ணிட்டீங்களா? சொன்னீங்கன்னா நான் வயித்தெரிச்சல் பட தோதாயிருக்கும்.
வீட்டில் இருக்கிற பத்து விண்டோஸையும் திறந்து வைங்க, அப்போ windows 10 வரும்.
பதிலளிநீக்குபகவான்ஜி மன்னிப்பாராக.
--
Jayakumar
எங்க ஊட்ல ஆறு ஜன்னல்தானுங்க இருக்கு, இன்னும் நாலுக்கு நான் எங்க போவேன்? கஷ்ட காலம் இப்படி ஜன்னல் மூலமாவா வரணும்? ஐயோ கடவுளே !
நீக்குஹா ஹா :)
நீக்கு:))))))))))))))
நீக்குபலரும் முடித்து விட்டதாக (100% completed) கேள்விப்பட்டேன்...!
பதிலளிநீக்குஐயோ, வயிறு பத்திக்கிட்டு எரியுதே !
நீக்குமுடித்த நண்பர்கள் : ப்ளாக்கர் நண்பன் (Abdul Basith) மற்றும் மெட்ராஸ் பவன் (A.G.Sivakumar)
நீக்குடவுன் லோடு ஆகிவிட்டது இன்ஸ்டால் பண்ணியாச்சு !
பதிலளிநீக்குமைக்ரோசாப்ட் புக்கிங் பண்ணி இருந்தால் மட்டுமே வருமென்று என் பையன் சொன்னான் ,சரியாக தெரிந்து கொண்டு முயற்சியுங்கள் :)
மிக்க சந்தோஷம். மைக்ரோசாப்ட் புக்கிங்க் நானும் செய்து வைத்திருக்கிறேன். வரட்டும். காத்திருக்கிறேன்.
நீக்குநமக்கு விண்டோஸ் 7 நே போதும்னு சிவனேன்னு இருக்கேன்!
பதிலளிநீக்குஓம் சிவாய நமஹ.
நீக்கு:))
பதிலளிநீக்குவிரைவில் கிடைக்கட்டும்....
தளிர் சுரேஷ், கில்லர்ஜி ஸ்டைலில் எழுத ஆரம்பித்துவிட்டார் போலுள்ளது. அவர் கூறியபடி பொறுத்திருந்து பார்ப்போம்.
பதிலளிநீக்குநான் பயன்படுத்துவது விண்டோஸ் 7 pirated version தான் , மென்பொருள் துறையில் வேலை செய்வதால் எந்த மென்பொருளையும் பணம் கொடுத்து வாங்க கூடாது என்று ஒரு உயர்வானா எண்ணம் !!!! ????
பதிலளிநீக்குநல்ல கொள்கைதான்.
நீக்குநல்லவேளை! எனக்கு இந்த அவஸ்தைகள் இல்லை!
பதிலளிநீக்குஉங்களைச் சனி பிடிக்கவில்லை. தப்பித்தீர்கள்.
நீக்குபுதியதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆவல் ஆச்சர்யப் படுத்துகிறது . சீனியர் பதிவர்களில் OS பற்றி தெரிந்த ஒரே பதிவர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கும் புதுப்பித்துக் கொள்ளும் பண்பிற்கும் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநானும் பலகணி பத்திற்கு(!) ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.
பதிலளிநீக்குகாத்திருப்போம். வேறு வழி? தானம் கொடுக்கிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்க முடியுமா?
நீக்குநானும் காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்கு