ஞாயிறு, 5 ஜூலை, 2015

விளம்பரங்களும் உண்மையும்

     Image result for சிட்டுக்குருவி லேகியம்                Image result for சிட்டுக்குருவி லேகியம் 

சிட்டுக்குருவி லேகியம் பற்றிய விளம்பரங்களை அநேகமாக எல்லோரும் பார்த்திருப்பார்கள். வாலிப, வயோதிக நண்பர்களே என்று ஆரம்பிக்கும். அதில் பனங்கருப்பட்டியும் ஏலக்காய், சுக்கு, கிராம்பு போட்டு ஒரு லேகியம் தயாரித்திருப்பார்கள். அதை சாப்பிட்டால் அப்படியாகும் இப்படியாகும் என்று சொல்லியிருப்பார்கள். இந்த விளம்பரத்தை நம்பி பலர் ஏமாறுவார்கள்.

இன்று தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் இந்த ரகமே. உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று ஒரு விளம்பரம். பற்களை நெல் உமிக்கரியும் உப்பும் கலந்த கலவைத்தூளில் விளக்குவது தமிழ்நாட்டில் பல காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம். உப்பு பற்களுக்கு நல்லது என்று நம் மக்களுக்குப் பலகாலமாகத் தெரியும். பற்பசைக்காரர்கள் இந்த விஷயத்தை இப்போதுதான் அவர்கள் கண்டுபிடித்த மாதிரியும் அது பற்களுக்கு நல்லது என்பது மாதிரியும் விளம்பரம் செய்கிறார்கள். இதற்கு மயங்குபவர்கள் நிறைய உண்டு.

நியூட்ரமுல் என்று ஒரு பொருள். வெறும் கொழுப்பு நீக்கிய பால் பவுடர்தான். கொஞ்சூண்டு வைடமின்களை, பிபிஎம் அளவில் சேர்த்திருப்பார்கள். ஆஹா, எங்கள் பொருளைச் சாப்பிட்டால் உங்கள் குழந்தைக்கு உங்கத்தில் இல்லதா போஷாக்கு கிடைக்கும் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதில் மயங்கி பல தாய்மார்கள் அதை வாங்கித் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். அது மட்டுமா. நாங்கள் எங்கள் குழந்தைக்கு நியூட்ரமுல் கொடுக்கிறோமாக்கும் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் பெருமை பாராட்டிக்கொள்வார்கள்.

ஃபோர்ட்டிபைடு (Fortified) என்று ஒரு இங்கலீஷ் வார்த்தை இருக்கிறது. வலிமைப் படுத்துதல் என்று அர்த்தம். எங்கள் டானிக் ஃபோர்ட்டிபைடு செய்யப்பட்டது என்று விளம்பரம் வரும். என்ன ஐயா செய்தீர்கள் என்றால் கூடக் கொஞ்சம் பி வைட்டமின் அல்லது பெர்ரஸ் சிட்ரேட் சேர்த்திருப்பார்கள். இது வலிமை கூட்டப்பட்டது என்று விளம்பரம் செய்வார்கள். அவர்கள் சேர்த்துள்ள இத்தணூண்டு விஷயத்துக்காக ஏகப்பட்ட விலையைக் கூட்டியிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் சதிச் செயல்.

மக்களின் மத்தியில் சில வியாதிகள் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். இத்தகைய வியாதிகளுக்கு எந்த வைத்தியமும் பலனளிக்காது. மூட்டு வலி, வெண்குஷ்டம், காது கேளாமை, சோரியாசிஸ் இவை போன்றவை. இத்தகைய வியாதியினால் துன்பப்படுபவர்கள் பல வகையான வைத்தியங்கள் செய்து பார்த்து தங்கள் நோயைக் குடப்படுத்த முடியாமல் வருந்துகிறவர்கள். கடலில் விழுந்தவன் ஒரு துரும்பு கிடைத்தால் கூட அதைப் பற்றிக்கொண்டு தப்பிக்க முடியுமா என்று மெயற்சிப்பானாம். அது போல இவர்களும் எவனாவது இந்த சீக்குகளை கடப்படுத்துகிறேன் என்று சொன்னால் போதும். உடனே அவனிடம் ஓடிப்போய் காசைத் தொலைப்பார்கள்.

சோற்றுக் கத்தாழை என்று ஒரு செடி. கிராமங்களில் வேலியோரமாக வளர்ந்திருக்கும். முன்பு ரயில்வே லைன் ஓரத்தில் நட்டிருப்பார்கள். இது மண் அரிப்பைத் தடுக்கும் ஒரு தாவரம். இதில் அநேக மருத்துவ குணங்க்ள ஒளிந்திருக்கின்றன என்று யாரோ ஒருவன் கதை கட்டி விட்டு விட்டான். அவ்வளவுதான். சோப்பு கம்பெனிக்காரர்கள், முகத்திற்குப் போடும் கிரீம் கம்பெனிக்காரர்கள் எல்லாம் எங்கள் பொருளில் சோற்றுக் கத்தாழை கலந்திருக்கிறோம் என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சில விவசாயிகள் சோற்றுக் கத்தாழையை ஒரு பயிர் மாதிரி பயிரிட ஆரம்பித்து விட்டார்கள்.

அனைத்து தாவரங்களிலும் மனித உடம்பிற்கான ஏதோவொரு மருந்துக் குணம் இருக்கிறது. அந்த குணம் அந்த தாவரத்தை நாள்பட உபயோகித்தால்தான் பயன் தரும். அரச மரத்தை சுற்றி வந்து அடி வயிற்றைத் தடவிப் பார்த்த கதையாக, ஒன்றைச்சாப்பிட் உடனே குணம் தரக்கூடிய தாவர மருந்துகள் எவையும் இல்லை. இதை உணராமல் விளம்பரங்களைக் கண்டு மயங்குபவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

ஆகவே விளம்பரங்களை மட்டும் நம்பி அதனால் ஏமாந்து போகாதீர்கள்.

16 கருத்துகள்:

 1. நல்ல பதிவு.

  ஆனால் நாங்கள் விளம்பரங்கள் வந்த உடனேயே சேனலை மாற்றி விடும் பழக்கம் உடையவர்கள்!

  பதிலளிநீக்கு
 2. //சோற்றுக் கத்தாழை ---------- இதில் அநேக மருத்துவ குணங்க்ள ஒளிந்திருக்கின்றன என்று யாரோ ஒருவன் கதை கட்டி விட்டு விட்டான்.//

  ஐயா! சோற்றுக் கத்தாழை மருத்துவக்குணமுடையது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளதாகவும், ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுவதாகவும் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள். இது கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுவதாகவும் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 3. ஐயா

  சொன்னபடியே பழனிக்கு போய் சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விட்டீர்கள் போலிருக்கிறது. வாங்கின லேஹியம் வேலை செய்யவில்லை என்று தோன்றுகிறது.

  பொருளாதாரம் விரிவடைய வேண்டுமாயின் பணம் சம்பாதிப்பது போன்று அதனைச் செலவும் செய்ய வேண்டும். ஆகவே மனிதனின் தேவைகளை விரிவடையச் செய்ய வேண்டும். மனிதனுக்கு என்ன தேவை என்பது தெரியாது அல்லவா. அதனால் விளம்பரங்கள் செய்ய வேண்டும். அதனால் நாம் என்னிடம் காசு இருக்கிறது இதையும் வாங்கி பார்ப்போம். சரியானால் நல்லது இல்லை என்றால் "போனால் போகட்டும் போடா".

  விளம்பரம் என்ற பெட்ரோல் இல்லையேல் உற்பத்தித் தொழில் துறை நின்று விடும். மறைக்கப்பட்ட உண்மைகளையும் தெரியப்படுத்த வேண்டும் என்று விளம்பரங்களைக் கட்டுப்படுத்தினால் அது விளம்பரம் ஆகாது. அது ஆய்வுரை ஆகி விடும்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று எவ்வளவு கூறினாலும் மக்கள் ஏற்கின்றார்களோ என்பது புரியவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு விளம்பரங்கள் மக்களை மூளைச்சலவை செய்துவருகின்றன. பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

  ஆரம்ப வரிகள் படித்ததுமே ஓர் பேரெழுச்சி ஏற்படத்தான் செய்தது :)))))

  பதிலளிநீக்கு
 6. இதுபோலவே அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய மூலிகையில் இருந்து தயாரிக்கப் பட்டது என்று ஒரு விளம்பரம் . அதையும் நம்பி மக்கள் ஏமாறத் தான் செய்கிறார்கள். விளம்பரங்கள் சொல்வது உண்மை இல்லை என்று தெரிந்தும் பெருமைக்காக வாங்கும் கூட்டம் உண்டு

  பதிலளிநீக்கு
 7. ". கடலில் விழுந்தவன் ஒரு துரும்பு கிடைத்தால் கூட அதைப் பற்றிக்கொண்டு தப்பிக்க முடியுமா என்று மெயற்சிப்பானாம். அது போல இவர்களும் "

  உண்மைதான்.

  God Bless YOu

  பதிலளிநீக்கு
 8. ஐயா

  சொன்னபடியே பழனிக்கு போய் சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விட்டீர்கள் போலிருக்கிறது. வாங்கின லேஹியம் வேலை செய்யவில்லை என்று தோன்றுகிறது.

  பொருளாதாரம் விரிவடைய வேண்டுமாயின் பணம் சம்பாதிப்பது போன்று அதனைச் செலவும் செய்ய வேண்டும். ஆகவே மனிதனின் தேவைகளை விரிவடையச் செய்ய வேண்டும். மனிதனுக்கு என்ன தேவை என்பது தெரியாது அல்லவா. அதனால் விளம்பரங்கள் செய்ய வேண்டும். அதனால் நாம் என்னிடம் காசு இருக்கிறது இதையும் வாங்கி பார்ப்போம். சரியானால் நல்லது இல்லை என்றால் "போனால் போகட்டும் போடா".

  விளம்பரம் என்ற பெட்ரோல் இல்லையேல் உற்பத்தித் தொழில் துறை நின்று விடும். மறைக்கப்பட்ட உண்மைகளையும் தெரியப்படுத்த வேண்டும் என்று விளம்பரங்களைக் கட்டுப்படுத்தினால் அது விளம்பரம் ஆகாது. அது ஆய்வுரை ஆகி விடும்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 9. விளம்பரம் பார்த்து ஏமாந்து போகும் பலருக்கும் இது நல்லதோர் அறிவுரை. என்னமாய் ஏமாற்றுகிறார்கள்/ஏமாறுகிறார்கள்!

  பதிலளிநீக்கு
 10. மிகச்சிறப்பாக விளம்பரங்களின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டிருக்கிறீர்கள்! அருமையான விழிப்புணர்வு பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு ஐயா! இப்போது ப்ரெய்ன் பவர் அதிகரிக்கும்னு சொல்லிக்கூட ஒரு பவுடன் வந்துள்ளதே ஏதோ ஒரு ப்ராண்ட் ந்யூற்றமுல் போல....கணக்குஎழ்லிதாகச் சால்வ் செய்வது போலவும், வல்லாரைக் கீரை பவுடன் சாப்பிட்டால் நல்ல நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று. முன் ஜென்ம நினைவுகள் வராமல் இருந்தால் சரி...

  பதிலளிநீக்கு