சனி, 12 நவம்பர், 2016

என் பதிவுத் தளத்தை வாடகைக்கு விடுகிறேன்.


                      Image result for for rent sign

பதிவு எழுத விஷயங்களைக் கண்டு பிடிப்பது வர வர மிக கஷ்டமாக இருக்கிறது. இந்தக் கஷ்டத்தை எப்படிப் போக்கவது என்று யோசித்ததில் ஒரு வழி புலனாகியது.

இந்த ஞானோதயம் எப்படி வந்தது என்றால், சமீபத்தில் என் ஆப்த நண்பர், திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவில் போட்டிருந்த பின்னூட்டம் என் மனதைக் கவர்ந்தது.

சுட்டி- http://engalblog.blogspot.com/2016/10/blog-post_18.html
கேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம் 

இந்தப் பின்னூட்டம் எல்லோருடைய சிந்தனைக்கும் விருந்தாகட்டுமே என்று அதை என் தளத்தில் பதிவிட்டேன். அந்தப் பதிவில் என்னுடைய பங்களிப்பு மூன்றே மூன்று வரிகள்தான்.

நான் பதிவிடும்போது அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை. 

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு. 

இந்தக் குறளைப் பலமுறை படித்திருந்தும் பதிவு போடும்போது நினைவிற்கு வரவில்லை. விளைவு என்னவென்றால் என் தளம் ஹைஜாக் செய்யப்பட்டு விட்டது. 

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவுலகில் மிகப் பிரபலமானவர் என்று முன்பே தெரியும். ஆனாலும் அவர் இவ்வளவு பிரபலம் என்று நான் நினைக்கவில்லை.

எவ்வளவு பின்னூட்டங்கள் ! அதற்கு அவர் பதிலளித்திருக்கும் விதம். இவை என்னை ஆச்சரியப்படுத்தி விட்டன. 

பொதுவாக பதிவர்கள் (நான் உட்பட) பின்னூட்டங்களை ஆழ்ந்து படிப்பதில்லை என்று அறிவேன். ஆனால் திரு வை.கோபாலகிருஷ்ணன் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் கவனமாகப் படித்து பொருத்தமான பதில்கள் கொடுத்திருக்கிறார்.

மொத்தப் பதிவையும் பிடிஎப் பைலாகத் தரவிறக்கி உள்ளேன். மொத்தம் 100 பக்கத்திற்கு மேல். பின்னூட்டங்கள் 107. இதன் மொத்தத்தையும் வேண்டுபவர்கள் எனக்கு தங்கள் மெயில் விலாசத்துடன் பின்னூட்டம் போடவும்

இவ்வாறு என் தளத்தை மேன்மைப் படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி.

வேறு பதிவர்கள் தங்கள் படைப்புகளை என் தளத்தில் வெளியிட ஆசைப்பட்டால் என் தளம் வாடகைக்கு கிடைக்கும் என்று அன்புடன் கூறிக்கொள்கிறேன்.

23 கருத்துகள்:

  1. ஹிஹிஹி வாடகை இல்லாமலேயே அதை ஓரளவு முன்பே நாங்கள் செய்து வருகிறோம் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

    தங்களின் சமீபத்திய மேற்படி பதிவான ‘வாழ்வியல்’ என்பதன் தொடர்ச்சி போலிருக்குது இந்தப் பதிவு.

    உங்களுக்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள் ஸார்.

    பதிலளிநீக்கு
  3. //மொத்தப் பதிவையும் பிடிஎப் பைலாகத் தரவிறக்கி உள்ளேன். மொத்தம் 100 பக்கத்திற்கு மேல். பின்னூட்டங்கள் 107. இதன் மொத்தத்தையும் வேண்டுபவர்கள் எனக்கு தங்கள் மெயில் விலாசத்துடன் பின்னூட்டம் போடவும்.//

    இதனை இலவசமாக (அதாவது விலை ஏதும் இல்லாதவாறு) அனுப்ப முடியுமானால் எனக்கும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.

    என் மெயில் விலாசம்: valambal@gmail.com

    பதிலளிநீக்கு
  4. //வேறு பதிவர்கள் தங்கள் படைப்புகளை என் தளத்தில் வெளியிட ஆசைப்பட்டால் என் தளம் வாடகைக்கு கிடைக்கும் என்று அன்புடன் கூறிக்கொள்கிறேன்.//

    இவ்வாறு கிடைக்கும் தள வாடகையில், தாங்கள் பார்த்து எனக்கு ஏதும் ராயல்டி தருவீர்களோ என்ற சபலம் என் மனதில் இப்போது புதிதாகத் தோன்றி புல்லரிக்க வைக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா இப்படியும் வருமானம் ஈட்டலாம் போலயே.....
    த.ம.3

    பதிலளிநீக்கு
  6. சைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டும்தானா எல்லோருக்கும்தானா என்று பதிவில் சரியாக சொல்லவில்லையே

    பதிலளிநீக்கு
  7. தளம் வாடகைக்கா...?
    ஹா..ஹா...
    இது நல்ல ஐடியாவா இருக்கே....

    பதிலளிநீக்கு
  8. சார், நீங்கள் இன்னும் எத்தனையோ தலைப்புகளில் எழுதலாம். நிறைய லைட்டர் சப்ஜெக்ட்ஸ் இருக்கு. எழுதுங்கள். "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே. குடியிருக்க ..... வாடகை என்ன தரவேண்டும்" என்ற பாடலை நினைவுகூற வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. விலையில்லா பொருட்கள் தரும் காலம் இது. எனவே தங்கள் தளத்தில் பதிவிட கட்டணம் ஏதும் வசூலிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் தளத்திலே நான் குடியிருக்க வேண்டும்
    குடி யிருக்கவே நான் வாடகை என்ன தரவேண்டும்

    பதிலளிநீக்கு
  11. அருமையான யோசனை. இதுபற்றி நானும் சிந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நெல்லைத் தமிழனிடம் கேட்டுப் பாருங்கள் ,எனக்கு தெரிந்து அவர்தான் ,அடுத்தவர் தளத்தில் தொடர்ந்து பதிவுகள் போட்டு வருகிறார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்'ஜி... கலாய்ப்பதற்கு நானா கிடைத்தேன்.... ஏதோ காரணங்களுக்காக நான் பிளாக் வைத்துக்கொள்ளவில்லை.. முக'நூல் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நான் இல்லை.

      நீக்கு
    2. தவறாய் சொல்லி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்!நெல்லைத் தமிழன் ஜி ...நம்பவே முடியலே!தரமான எழுத்துக்கு சொந்தக் காரரான நீங்கள் பிளாக் ஆரம்பிக்கலாமே ?

      நீக்கு