சனி, 19 நவம்பர், 2016

இரண்டு வயிற்றெரிச்சல் சம்பவங்கள்

                        Image result for car accident at night
சிவகங்கை மாவட்டத்திலிருந்து நான்கு பேர் புறப்பட்டு கோவை வந்தார்கள். அவரகளில் இருவருடைய உறவுப் பையன்கள் கோவையில் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு ஒரு இரண்டாம் கையாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.

இதற்குள் மாலை 7 மணி ஆகி விட்டது. அன்றே சிவகங்கை திரும்புவது என்று முதலிலேயே முடிவு செய்திருந்தார்கள். சரி, சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று ஒரு நல்ல ஓட்டலில் (அநேகமாக அசைவமாக இருக்கலாம்) நன்றாக சாப்பிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.

அந்த நாலு பேரில் ஒருவன் கார் ஓட்டத்தெரிந்தவன். இரண்டு பேர் ஜோசியர்கள். கார் ஓட்டத்தெரிந்தவன் நான் தூங்காமல் கார் ஓட்டுவேன் என்று பெருமையாகச்சொல்லி இருக்கவேண்டும். அதை மற்ற மூவரும் நம்பி 9 மணிக்கு கோவையிலிருந்து சிவகங்கை புறப்பட்டிருக்கிறார்கள்.

பல்லடம் - தாராபுரம் சாலையில் குண்டடம் என்னும் ஊருக்குப் போகும்போது அநேகமாக இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி உணவுக்குழாயிலிருந்து ரத்தத்தில் சேரும் நேரம். அப்போது மூளைக்கு ரத்தம் குறைவாகச் செல்லும். ஒரு மாதிரியாக கண்ணைச் சொருகி வரும்.

இந்த நிலையில் கார் ஓட்டுனர் ஒரு நிமிடம் கண்ணை மூடி விட்டார். எதிரில் அரசு பஸ் வந்து கொண்டிருக்கிறது.  காரும் பஸ்சும் 80 கிமீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். கார் பஸ்ஸுக்குள் புகுந்து அப்பளமாகப் பொடிந்தது. நான்கு பேரும் சிவகங்கை போவதற்குப் பதிலாக யம பட்டணம் போய்ச்சேர்ந்தார்கள்.

என் கேள்விகள் இரண்டு.

1. பயண அசதியுடன் ஏன் இரவில் கார் ஓட்டவேண்டும்? கோயமுத்தூரில் இரவு தங்கி விட்டு காலையில் ஏன் புறப்பட்டு இருக்கக் கூடாது?

2. அந்த நாலு பேரில் இரண்டு பேர் ஜோசியர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி குண்டடத்தில் யமன் காத்துக்கொண்டு இருக்கிறான் என்பது தெரியாமல் போனது எப்படி?

அடுத்த சம்பவம்.

                  Image result for new 2000 rupee note

நாமக்கல் என்ற ஊரில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திலிருந்து
ஓய்வு பெற்ற ஒருவர் தன்னுடைய மகளை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிப் போயிருக்கிறார். மகளை மருத்துவ மனையில் விட்டு விட்டு பக்கத்திலுள்ள பேங்கிற்குப் போய் 22000 ரூபாய் எடுத்து அதை ஒரு பையில் வைத்து தன்னுடைய காரில் வைத்து ஆஸ்பத்திருக்குத் திரும்பி வந்தார்.

கார் கண்ணாடிகளை எல்லாம் ஏற்றி விட்டு காரைப் பூட்டி விட்டு ஆஸ்த்திரிக்குள் போய் வேலையை எல்லாம் முடித்து விட்டு மகளுடன் காருக்கு வந்தார். காரைப் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி. கார் கண்ணாடியை உடைத்து பணப்பையை யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

இங்கு என் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான். அதாவது 22000 ரூபாய் ( பதினொரு  2000 ரூபாய் நோட்டுகள்) ஒரு சில டன் எடை கொண்டிருக்குமா? அவ்வளவு கனத்தை கையில் தூக்க முடியாமல் காரிலேயே விட்டு விட்டுப் போனாரா? அல்லது 22000 ரூபாய் அவருக்கு ஒரு பொருட்டு இல்லையா?

13 கருத்துகள்:

  1. தங்களது கேள்விகள் இரண்டுமே நியாயம்தான் ஐயா
    இதெல்லாம் நடக்க வேண்டிய விதி என்று எடுத்துக்கொள்ளுவோம் வேறு வழி ?
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. இரண்டு செய்திகளுமே வருத்தம் தரக்கூடியவைகள் தான். கார் ஓட்டும் ஓட்டுநர்கள் பலபேர் வயிறு முட்ட சாப்பிட்ட மாட்டார்கள். அப்படி சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடும் என்பதால் தான். கூடியவரை இரவு நேரக்தில் அதுவும் இரவு 12 மணிக்கு மேல் கார் ஓடுவதை தவிர்க்கவேண்டும். பாவம் அவர்கள் விதி அவர்களை அவ்வாறு பயணம் செய்யத்தூண்டியிருக்கிறது.

    இரண்டாவது நிகழ்வுக்கு காரணம் அவரது அஜாக்கிரதைதான். நீங்கள் சொன்னதுபோல் 11 நோட்டுகளை கையில் கொண்டு செல்லமுடியாதா என்ன?

    பதிலளிநீக்கு
  3. முதலில் நடந்த சம்பவம் "தவறு". இரவுப் பயணம் மிகவும் ரிஸ்க். நாம சரியா இருந்தாலும் ரோட்டில் வண்டிகளை ஓட்டுவரும் அத்தனை வாகன ஓட்டிகளும் சரியா இருக்கணும். Probability கம்மி. ஜோசியம்லாம் பெரும்பாலும் தனக்குப் பார்த்துக்க மாட்டார்கள். விதி எப்போதும் கண்ணை மறைக்கும். திருச்சில எங்கப்பா ஆலோசித்த பெரிய திறமையான ஜோசியருடைய ஒரே பெண் திருமணம் நடந்து குறைந்த காலத்தில் கணவனை இழந்தார்.

    இரண்டாவது சம்பவம் "தப்பு". அந்த அவசரத்தில் கையில் வைத்திருப்பதைவிட காரில் வைத்திருந்தால் Safety என்று நினைத்திருக்கலாம். அந்த மொமன்டில் எடுக்கும் தீர்மானம்தானே.

    பதிலளிநீக்கு
  4. இரண்டு சம்பவங்களையும் கேட்க மிகவும் பரிதாபமாக உள்ளன.

    எதிலும் (உயிரோ அல்லது பணமோ) மிகவும் முன்னெச்சரிக்கையும், அதிக கவனமும் தேவை என்பது நன்கு புரிகிறது.

    இது நமக்கு மட்டும் புரிந்து என்ன லாபம்?

    பதிலளிநீக்கு
  5. முதல் கேஸ்: கடவுள் தந்த உயிரை கடவுள் எடுத்துகிட்டார்.
    இரண்டாம் கேஸ்: மோடி கொடுத்த பணத்தை மோடி எடுத்துக்கிட்டார். மோடி வித்தை.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. நடக்கும் முன் தெரிவதில்லை நடந்து முடிந்தபின் காரணங்களை ஆராய்கிறோம் சிவகங்கையிலிருந்து வந்தவர்களை உங்களுக்குத் தெரியுமா. அவர்கள் திட்டம் பற்றியும் தெரியுமா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் செய்தியை செய்தித்தாள்களின் மூலமாகவே அறிந்தேன். அறிந்ததும் மனதில் ஒரு விரக்தி தோன்றியது. அதன் பிரதிபலிப்புத்தான இந்தப் பதிவு.

      நீக்கு
  7. இரண்டு சம்பவங்களும் அஜாக்கிரதையைத்தான் குறிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் விதியின் செயல் என மனதை தேற்றவேண்டியது தான் ஐயா!

    பதிலளிநீக்கு
  9. விதி என்று மட்டுமே சொல்லக் கூடிய நிகழ்வுகள். ஜோசியர்களுக்குத் தங்கள் பலனைக் காண நேரம் இருந்திருக்காது. அல்லது தங்கள் பலன் தங்களுக்குத் (கன்னுக்குத்) தெரியாதோ என்னவோ! இரண்டாவது சம்பவம் சக மனிதர்களை நம்பித்தான் இவ்வுலகில் வாழ்கிறோம். அவர்கள் இப்படிச் செய்தால் என்ன செய்ய!

    பதிலளிநீக்கு
  10. அலட்சியம், அஜாக்கிரதை...இன்னும் என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு