செவ்வாய், 15 நவம்பர், 2016

ஒரு முக்கிய யுத்த தந்திரம்.

Swiss castles, beautiful, travel

அந்தக் காலத்தில் ராஜாக்கள் இருந்தார்கள் என்று சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம். அவர்கள் யுத்தத்திற்காக படைகள் வைத்திருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம்.

அப்படி படைகள் வைத்திருக்கும்போது அந்த படை வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டுமல்லவா? அவர்களைச் சும்மாவே வைத்துக் கொண்டு சம்பளம் கொடுப்பது எந்த ராஜாவிற்கும் சாத்தியமில்லை.

ஆகவே ஒவ்வொரு ராஜாவும் அண்டை நாடுகளின் மிது படையெடுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது. இந்தப் படையெடுப்பில் முக்கியமானது எதிரி ராஜாவின் கோட்டையைப் பிடிப்பது.

இப்படி எதிரியின் கோட்டைக்குள் புகும்போது ஒரு முக்கியமான யுத்த தந்திரம் இருக்கிறது. அதாவது கோட்டைக்குள் எதிரிப் படையின் பலம் அதிகமாக இருந்து தாக்குபவர்களின் பலம் குறைவாக இருந்தால் தபித்து ஓடி வரவேண்டுமல்லவா? அதற்காக ஒரு தப்பிக்கும் வழியைத் தயார் செய்து விட்டே கோட்டையின் உள்ளே புகுவார்கள்.

இந்த யுக்தி ராஜாக்களின் சண்டைகளுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கைக்கும் தேவையானது ஆகும். எந்த ஒரு ரிஸ்க்கான காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும் ஒருக்கால் அந்தக் காரியம் வெற்றியடையாவிட்டால் எப்படி சேதமில்லாமல் வாபஸ் வாங்குவது என்று திட்டமிட்டு விட்டே அந்தக் காரியத்தை ஆரம்பிக்கவேண்டும்.

இந்த யுக்தியை சாணக்ய நீதி என்றும் சொல்லலாம். சர்க்கார் உத்தியோகம் பார்த்து ரிடையர் ஆகி பென்ஷன் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எனக்கே இவ்வளவை கயுக்தியான அறிவு இருந்தால், அந்த அரசையே நடத்துபவர்களுக்கு எவ்வளவு குயுக்தி இருக்கும்?

பின்குறிப்பு: ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விவகாரத்திற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி சம்பந்தப்படுத்துபவர்கள் ராஜத்துரோக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

23 கருத்துகள்:

  1. 500, 1000 க்கு சம்பந்தமே இல்லை ஐயா நம்புகிறோம் ஆனால் 2000 க்கு...?
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. "எப்படி சேதமில்லாமல் வாபஸ் வாங்குவது என்று திட்டமிட்டு விட்டே" - எப்படி சார் காரியம் வெற்றியடையாமல் இருக்கும்? அப்படி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாவிட்டாலும், வெற்றிபெற்றோம் என்று காண்பிக்க ஆட்சி செய்பவர்களுக்குத் தெரியாதா?

    அதுவும் தவிர, நமக்கு, நம் மூளை மட்டும்தான். ஆட்சி செய்பவர்களுக்கு எத்தனை ஆலோசகர்கள் (பொருளாதாரம், அரசியல், ஆட்சி என்று பல்வேறு முனைகளில்)

    பதிலளிநீக்கு
  3. ஐயா! கடைசியில் நீங்கள் சொல்லியிருப்பது ‘எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை.’ என்று சொல்வது போல் உள்ளதே!

    பதிலளிநீக்கு
  4. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் இருக்கிறதோ

    பதிலளிநீக்கு
  5. படித்தது.

    ஒரு குளம் இருந்ததாம். அதில் முதலைகள் இருந்தனவாம். முதலையை பிடிக்க குளத்தை வற்ற வைத்தார்களாம். வற்ற வைக்க துடங்கியவுடன் முதலைகள் வெளியேறி தப்பித்து விட்டனவாம். குளத்தில் இருந்த சிறிய பெரிய மீன்கள் தான் தண்ணீர் இல்லாமல் தவித்தனவாம்.

    இந்தக் கதைக்கும் தற்போதைய நிலைமைக்கும் சமபந்தம் உண்டு என்று நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. விற்ற சரக்குக்கு வாபஸ் என்ற பேச்சே இல்லை.ஏனெனில் கம்பெனிக்கு நஷ்டம் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. ஸ்ரீராம். புதன், 16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:20:00 IST

      //JK ஸார் பதிலும் ஸூப்பர்!//

      http://usha-srikumar.blogspot.in/2016/11/blog-post_15.html#.WCwSadJ96Uk

      நீக்கு
    2. ஸ்ரீராம். புதன், 16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:20:00 IST

      http://usha-srikumar.blogspot.in/2016/11/blog-post_15.html#.WCwSadJ96Uk

      நீக்கு
  8. எங்களுக்குத் தெரியும் ஐயா, தொடர்பில்லை என்பது.

    பதிலளிநீக்கு
  9. ரூ 1000 எனும் சிறு கோட்டால் கறுப்பு பணம் வருமென்றால் அதை தீர்க்க எளிய வழி ரூ 2000 எனும் எளிய கோடுதானே

    பதிலளிநீக்கு
  10. http://usha-srikumar.blogspot.in/2016/11/blog-post_15.html

    இதோ இந்த மேற்படி பதிவினில் ‘காணவில்லை ..... முதலைகளை!!!!’ என்ற தலைப்பினில் ஓர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    ஏனோ அந்த ஞாபகம் எனக்கு இங்கு இதைப்படித்ததும் வந்தது.

    பதிலளிநீக்கு
  11. அந்த சாணக்கிய நீதி இந்த ஆட்சியாளர்களுக்கு இருப்பது போல் தெரியவில்லையே :)

    பதிலளிநீக்கு
  12. I do not see an exit route. Nor there is any need for that. On a minimum fake notes have had a death knell. For replacing the demonetised notes steps are taken on a war footing. I think soiled notes kept off from circulation in currency chests have been released for circulation to ease supply. Restrictions on demand for currency would be gradually relaxed and concurrently supply situation also would improve.Then what is left out is the effectiveness of tax authorities and judiciary on black money - Babu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I imagined that there would be an exit route for bigwigs to convert their black money. If you say that there is no such route I am immensely happy.

      நீக்கு
    2. No exit route for the govt. As for blackmoney sharks the system has enough supporters the so called professionals chartered accountants, advocates,investment counsellors politicians and the tardy judiciary.However for once most of the money would be banked in and suffer some tax. Fake currencies in current circulation would expire. - Babu

      நீக்கு