வெள்ளி, 25 நவம்பர், 2016

உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.

bala murugan உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"உயிர் போனால் என்ன ஆகும்?": உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது. 

இப்படி ஒருவர் பின்னூட்டத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். பதில் சொல்லாவிட்டால் நம் மதிப்பு என்ன ஆவது? ஆகவே இதோ பதில் எழுதுகிறேன்.


இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள்.


உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது ?


அதாவது உயிர் என்ற ஒரு வஸ்து உடல் என்ற வஸ்துவை விட்டுப் பிரிகிறது என்பது இதில் மறைந்திருக்கும் பொருள். காலம் காலமாக மக்கள் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உடல் என்பதுவும் உயிர் என்பதுவும் வெவேறு வஸ்துகள். ஒரு கால கட்டத்தில் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது, அப்போது அந்த உடலை சவம் என்கிறோம், அதை மண்ணில் புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம்.


இது ஒரு மாயை. மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், பின்பு இறக்கிறான். இது வாழ்க்கையில் நிதரிசனமாகப் பார்க்கிறோம். ஆனால் இறப்பு என்றால் என்ன என்று சிந்திப்பதில்லை. காரணம் இறப்பைக் கண்டு இனம் தெரியாத ஒரு பயம். யாரும் தங்களுடைய இறப்பைப் பற்றி சிந்திப்பதில்லை. தான் இறக்க மாட்டோம் அல்லது தன்னுடைய இறப்பிற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது என்றே ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.


இந்த காரணத்தினால்தான் இறப்பு என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் என்ன? என்று யாரும் வெளிப்படையாகப் பேசப் பயப்படுகிறார்கள். எனக்குப் புரிந்த சில தத்துவங்களை இங்கே கூறுகிறேன்.
முதலாவது உயிர் என்பது ஒரு வஸ்துவே அல்ல. அது ஒரு செயற்பாட்டு நிலை. மனிதன் பிறக்கும்போது அவனுடைய அவயவங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. அவன் வளரும்போது அந்த செயல்கள் தொடர்கின்றன. இந்த நிலையை அவன் உயிருடன் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறோம். அவன் முதுமை அடையும்போது இந்த செயற்பாடுகள் குறைந்து ஒரு நிலையில் முற்றிலுமாக நின்று போகிறது. அந்த நிலையில் அவன் உயிருடன் இல்லை என்று கூறுகிறோம்.


செயல்பாடுகள் நிற்பதுதான் இயற்கையின் விதி. மனிதனின் உடலில் உயிர் என்று தனியாக ஏதும் இல்லை. அவன் செயல்கள் முற்றிலுமாக நின்று விடும்போது அவன் உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே தவிர, வேறு எந்த மாற்றமும் நடைபெறுவது இல்லை.


ஆனால் நம் ஆன்மிக வாதிகள் இந்த உயிர் என்று வழக்கத்தில் உள்ள வார்தையை ஆன்மா என்று கூறி, ஒருவன் இறக்கும்போது அவனுடைய ஆன்மா அந்த உடலை விட்டு வெளியேறி வேறு ஒரு உடலில் புகுந்து ஒரு புதுப் பிறவி எடுக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். இது முற்றிலும் ஒரு புனைவே ஆகும். மனித மனத்திற்கு ஒரு ஆறுதல் தரவே இவ்வாறு சொல்லப்படுகிறது.


மற்றபடி, ஆன்மா என்பது ஒரு பொய்யான கற்பனை. அப்படி ஆன்மா பிரிந்து வேறு ஒரு உடலுக்குள் புகுகின்றது என்பதுவும் ஒரு மாபெரும் பொய்யே. இறப்பிற்குப் பின் எதுவும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லாம் மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும் .

22 கருத்துகள்:

 1. உடலும் உயிரும்.....

  உங்கள் விளக்கங்கள் நன்று! புரியாத விஷயங்கள் இப்படி பல உண்டு இங்கே....

  பதிலளிநீக்கு
 2. // மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும். //
  தெரிந்தோ தெரியாமலோ நாமும் இந்த ஆன்மிக வணிகர்களிடம் வணிகம் செய்துகொண்டு இருக்கிறோம்.
  அறிவியல் வழியே தந்திருக்கும் பதில் ஏற்புடையது. நன்றி!

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. Welcome. This is purely my understanding. Everybody has full freedom to have their own convictions and nobody else can thrust their ideas on others.

   நீக்கு
 4. சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். செயல்படுகிறான், செயல்பாடு நின்றுவிடுகிறது என்பதி சரி. அதில் இருக்கும் ஆன்மா செயல்படமுடியாத உடலைவிட்டு நீங்கிவிடுகிறது. சிலருக்குக் கிடைக்கும் புரிதலுக்கான உணர்வையோ அனுபவத்தையோ மற்றவர்களுக்கு விளக்குவது கடினம்.

  பதிலளிநீக்கு
 5. உயிர் அல்லது ஆன்மா பற்றி நீங்கள் புரிந்து கொண்டுள்ளதை நன்கு ஆழமாக சிந்தித்து, அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியுள்ளீர்கள்.

  இதைப்பற்றியெல்லாம் நான் நினைப்பதும், கேள்விப்பட்டுள்ளதும், புரிந்து கொண்டுள்ளதும் முற்றிலும் வேறு என்பதால் மேற்கொண்டு இதில் நான் இங்கு விவாதம் செய்ய விருப்பம் இல்லை.

  ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும், தங்களின் தனிப்பாணியிலான, தங்களின் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான பதிவு. பொதுவாக ‘உயிர்’ என்பதற்கு ஆன்மீக ரீதியான பதில் கூறும் எவரும், அந்த உயிரை வேறு ஒரு பொருளாக்கி, அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று மேற்கோள் வரிகள் காட்டுவதுதான் வழக்கம். எனக்கும் இவ்வாறே எழுதத் தோன்றும். ஆனால் இவ்வாறெல்லாம் இல்லாமல், உயிர் என்பதற்கான ஒரு வித்தியாசமான, மாற்று சிந்தனையோடு கூடிய வரவேற்கத் தக்க கட்டுரை இது. இன்னும் இதுபோல் நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆன்மா என்பதெல்லாம் கட்டுக்கதை என்று புத்தரும் கூறியுள்ளார் ,ஆனால்,வியாபாரிகள் பிழைப்பு கெட்டு விடும் என்பதால் விடுவதாய் இல்லை :)

  பதிலளிநீக்கு
 8. நான் உங்கள் கருத்திலிருந்து....... என் அம்மா இறந்து 23 வருடங்கள் 85 நாட்கள் கழித்து என் அப்பா இறந்தார்கள் , அதை என் அம்மா என் கனவில் வந்து எனக்கு indicate செய்தார்கள் ..ஆச்சரியம் என்னவென்றால் என் அம்மா இறந்த அன்று எந்தப் புடவையுடன் அனுப்பி வைத்தோமோ அதே புடவையுடன்......... நான் திடுக்கிட்டு விட்டேன் நான் ஆன்மா உண்டு என நம்புகிறேன்.
  விவாதம் என எண்ணவேண்டாம் , இப்படி ஒரு விஷயமும் உண்டு என்பதைச் சொல்லுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவத்தையும் நம்பிக்கையையும் நான் மிகவும் மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் சில பல நம்பிக்கைகள் உண்டு. அதைப் பற்றி விவாதம் செய்வது தேவையில்லை. ஒருவர் வாழும்போது அடுத்தவருக்கு கஷ்டம் கொடுக்காமலிருந்தால் அதுவே மிகப் பெரிய தியாகம்.

   நீக்கு
 9. பகவான்ஜி-- புத்தரின் முக்கியக் கொள்கை அஹிம்சை. புத்தமத்த்தைப் பின்பற்றும் 99% புலாலுண்ணுபவர்கள். உண்மையிலேயே இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள, பின்பற்றவேண்டியவைகள் ஏராளம் இருக்கும்போது, இறந்தபின் என்ன நடக்கும் என்பதில் கவனம் எதுக்கு என்பது புத்தரின் கருத்தாய் இருந்திருக்கும். கந்தசாமி சார் அதைத்தான் நினைக்கிறார் என்று தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலால் உண்ணுவது தவறு என்று ஹிந்து மதமும் சொல்கிறது ,உண்ணாமல் இருக்கிறார்களா ? விவேகானந்தர் மீன் கறியை விரும்பி சாப்பிடுவாராமே ,அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

   நீக்கு
  2. பகவான்'ஜி - வங்காளத்தவர், மீனைப் புலாலுணவாக எண்ணுவதில்லை. விவேகானந்தர் சாப்பிட்டாரா என்பது தெரியாது, ஆனால், வங்காள அந்தணர்கள் மீனை உணவாக எடுத்துக்கொள்வார்கள் என்று படித்திருக்கிறேன்.(கடல் வாழைக்காய் என்பது மீனைக் குறிப்பிட உபயோகப்படுத்துவது என்று ஞாபகம்) இது, அந்த அந்த இடங்களுக்குரிய, தொழில்களுக்கேற்ற பழக்கம் என்று நினைக்கிறேன். ஹிந்துமதம் எங்கு அதனைக் குறிப்பிடுகிறது (புலால் உண்ணாமை) என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் வள்ளுவனும் 'புலால் உண்ணாமை'யைச் சிறப்பித்து எழுதியுள்ளார். அதனை, 'உண்ணாமை நல்ல பழக்கம்' என்ற அளவில்தான் புரிந்துகொள்ள முடியும்.

   நீக்கு
 10. //சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லாம் மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும்// நீங்க சொல்வது சரி but நரகம் என்ற ஒன்று கிடையாது ன்னு முன்னோர்கள் சொல்லிருந்தாங்கன்னா, தப்பு செய்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும். சொர்கம் என்ற ஒன்று கிடையாது ன்னு முன்னோர்கள் சொல்லிருந்தாங்கன்னா, இப்போ நடக்குற கொஞ்ச நஞ்ச நல்ல செயல்களும் நடக்காது போகும்.மக்களை நல்வழிப்படுத்தவே இதெல்லாம் கண்டுபிடித்தார்கள், நம் முன்னோர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள விஸ்வநாத்,

   இப்போதிருக்கும் மனிதர்க்ள இந்த சொர்க்கம்-நரகம் என்பவற்றை நம்புகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? எனக்கு அந்த நம்பிக்கை அற்றுப்போய் பல காலம் ஆகிவிட்டது.

   நீக்கு
 11. வணக்கம் ஐயா.ஃபெப்ருவரி மார்ச் வாக்கில் மாதத்தில் எனக்கு வந்திருந்த பின்னூட்டத்துக்குப் பதிலால நான் இரண்டு பதிவுகள் எழுதி இருந்தேன் உரத்த சிந்தனைகள் என்னும் தலைப்பில் முதல் பதிவின் சுட்டியை இணக்கிறேன் நீங்கள் வந்த சுவடு தெரியாததால் இந்த இணைப்பு. இதுவும் இதற்கு அடுத்து தொடரும் உரத்த சிந்தனைகள் என்றும் இருக்கும் பின்னூட்டத்தில் சொல்ல முடியாத அளவு நீளம் படிக்க அழைக்கிறேன்
  http://gmbat1649.blogspot.in/2016/02/blog-post_29.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பே படித்திருக்கிறேன். என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியாமல் விட்டு விட்டேன். இந்தப் பதிவும் ஏறக்குறைய அதனுடைய தொடர்ச்சி மாதிரித்தான் இருக்கிறது.

   நீக்கு
 12. உயிர் என்பது இயக்கம் என்பதை நான் மறுக்கிறேன். இயக்கம் இல்லாத பல உயிரினங்கள் உள்ளன. தாவரங்கள். மேலும் நுண்ணுயிரிகளான வைரஸ் பாக்டீரியா போன்றவைக்கு நம்மைப்போல இருதயம் மூளை இரத்தம் போன்றவை இல்லை. தன்னியக்கம் என்பதும் கிடையாது. ஆனாலும் ஒரு இயக்கமும் இல்லாத இவைகளை உயிரினங்கள் என்று தான் குறிப்பிடுகிறோம்.

  ஆன்மா பற்றி உங்கள் கருத்தை விவாதிக்க நான் வரவில்லை. உங்களுக்கு ஆன்மா கிடையாது. அதனால் நீங்கள் அவ்வாறு எழுதுகிறீர்கள். இது கடவுள் இல்லை என்று கூறுவது போலத்தான். எனக்கு ஆன்மா உண்டு. அதனால் ஆன்மா பற்றி சொல்லவில்லை.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் பயாலஜி படித்திருந்தால் தாவரங்கள், நுண்ணுயிர்கள் அனைத்திற்கும் இயக்கம் உண்டு என்று படித்திருப்பீர்கள். இயக்கம் என்றால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவது மட்டுமல்ல. ஒரு உடலுக்குள்ளேயே நடைபெரும் இராசயன மாற்றங்களும் இயக்கம் என்றே அறியப்படும். இந்த இயக்கம் நின்று போவதுதான் இறப்பு. மற்றபடி உயிர் அல்லது ஆன்மா என்று ஒரு வஸ்துவும் இல்லை என்பது என் கொள்கை.

   இந்தப் பதிவு சிந்தனையைத் தூண்டத்தானே ஒழிய வேறு தனிப்பட்டவர்களின் மனதைக் காயப்படுத்துவதற்காக இல்லை.

   நீக்கு
 13. இந்தப் பதிவு சிந்தனையைத் தூண்டத்தானே ஒழிய வேறு தனிப்பட்டவர்களின் மனதைக் காயப்படுத்துவதற்காக இல்லை.

  எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. படிப்பவர் மனத்தைக் காயப்படுத்தும் தளங்களுக்கு யாராவது வருவார்களா? தங்களுடைய நக்கல், நையாண்டி, தமாசு ஆகியவற்றிற்காகத் தான் நான் உங்கள் தளத்திற்கு வருகின்றேன். தங்களுடைய பாணியில் ஒரு punch இருக்கும். அதுவே அதன் சிறப்பு. சும்மா விளையாட்டுக்கு பந்து எறிந்து பிடிப்பது போலத் தான் பின்னுட்டங்களும். மற்றபடி உயிர் பற்றிய விவாதம் அடுத்த பத்தியில்.

  What is life is the question for which no satisfactory answer has been found either by theists or atheists. I refuse to accept chemical reactions as life. The same chemical reactions outside a living body does not produce a living body. Self duplication is also not life, since there are inanimate objects which duplicate themselves. Whatever the method so far, man has not produced a living body in the lab without the aid another living body, either by cloning, or fertilisation. Therefore we can say life is not determinable, except as a quality. when this quality and quantity (body) are in harmony it is called a living being. As Jesus said "If salt loses it saltiness then it is not salt". Similarly if life goes out then living being becomes just a material.

  Thank you for kindling my inquest to improve.

  உண்மை எங்கே உண்மை எங்கே என்று தேடு.,எங்கிருந்த போதிலும் அதை நாடு.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்குள் இப்படி ஒரு சிந்தனை என்பதே ஆச்சரியம் தான் ஐயா...!

  பதிலளிநீக்கு