செவ்வாய், 8 நவம்பர், 2016

போச்சு, போச்சு, எல்லாமே போச்சுஇப்படி மோடி என் தலைல கல்லைத் தூக்கிப் போடுவார்னு நான் நினைக்கவேயில்லை. என் சொத்தையெல்லாம் காசாக்கி ஆயிரம் ரூபாயாகவும் ஐந்நூறு ரூபாயாகவும் வைத்திருந்தேனே? அதெல்லாம் செல்லாதாமே? கடவுளே நான் இனி என்ன செய்வேன்?

மொத்தம் இருப்பதை எண்ணிப்  பார்த்தேன். ஆயிரம் ரூபாய் நோட்டு ஒண்ணும் ஐந்நாறு ரூபாய் நோட்டுகள் நான்கும் இருக்கின்றன. இவைகளை நான் என்ன செய்வேன்? ஐயோ, கடவுளே என்னை இப்படி சோதிக்கலாமா?

13 கருத்துகள்:

 1. மொத்தம் தங்களிடம் இருப்பதோ 1+4 = 5 நோட்டுகள் மட்டுமே. மொத்த மதிப்பு ரூ. 3000 மட்டுமே எனத் தெரிகிறது.

  அவற்றை வங்கியில் தங்கள் கணக்கினில் இந்த மாத இறுதிக்குள் தனியாகக் கட்டி விடும்படியாக இருக்கும்.

  பிறகு அதே தொகையை வங்கியிலிருந்து ATM மூலம் இன்றிலிருந்து ஒரு 4-5 நாட்களுக்குப்பின் எடுத்துக்கொள்ளும்படியாக இருக்கும்.

  அப்போது உங்களுக்கு ஒரு 2000 ரூபாய் நோட்டும், இரண்டு புதிய 500 ரூபாய் நோட்டுக்களும் கிடைக்கக்கூடும்.

  நம் தாய் நாட்டின் நலன் கருதி இந்த சிறிய சோதனையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனவே தயவுசெய்து புலம்ப வேண்டாம். :)

  பதிலளிநீக்கு
 2. மோடிஜிக்கு மொய் எழுதிவிடுங்கள். போஸ்ட் ஆபீஸ் உண்டல்லவா. மணி ஆர்டர் அனுப்பி விடுங்கள்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. சார்.. அதுல ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டையும், ஒரு ஐ'நூறு ரூபாய் நோட்டையும் கண்ணாடிச் சட்டத்தில் மாட்டி ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மீதியை மாத்திரம் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. "வீட்டில் கைக்குழந்தை கூட இல்லையே.." என்ற வரியையும் சேர்த்திருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 5. யாரு கல்யாணத்துக்காவது போய் மொய் வையுங்க ஐயா... பின்னாலே வரும்
  த.ம.3

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கென்ன. வீட்டிலேயே டாக்டர். அவசர ஆத்திரத்துக்குப் பணம் எதற்கு

  பதிலளிநீக்கு
 7. உண்மையில் உங்களை அதிகம் சோதித்துவிட்டார் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள தாட்களை வைத்திருக்கும் தங்களுக்கே இந்த கவலை என்றால், எண்ணமுடியாமல் கத்தை கத்தையாய் வைத்திருப்போருக்கு எப்படி இருக்கும்? அதை நினைத்து ஆறுதல் அடையுங்கள்.

  பதிலளிநீக்கு