செவ்வாய், 1 நவம்பர், 2016

வாழ்வியல்

ஒரு பதிவில் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் போட்ட பின்னூட்டம்.  இந்தப் பின்னூட்டத்தில் வாழ்வின் ஆதாரங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இதில் கூறப்பட்ட கருத்துகளை ஆழமாக சிந்தித்து பயன் பெற வேண்டுகிறேன்.

குறிப்பாக  பிழைத்தார்-செத்தார் இந்த இரண்டு சொற்களை அவர் பிரயோகித்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. 


வை.கோபாலகிருஷ்ணன் said...

அவரவர் வசதிப்படி, செளகர்யப்படி, மத நம்பிக்கைப்படி, மன சாட்சிப்படி யோசிக்க வைக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றி கதைஎன்ற பெயரில் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

இருப்பினும் பின்னூட்டங்கள் என்ற பெயரில் பலரும் நன்றாகவே இங்கு கதைவிட்டுள்ளார்கள். 

எந்த ஒரு ஜீவனும் எதற்கும் பிறரை நம்பி இழுத்துக்கொண்டு நாறக்கூடிய அவல நிலை ஏற்படாமல், மணக்க மணக்கச் சட்டுப்புட்டுன்னு போகும் பாக்யம் செய்திருக்க வேண்டும். இதை சொல்வது மிகவும் எளிது. ஆனால் அதுபோல எல்லோருக்கும் பாக்யம் கிடைத்து நடப்பது மிகவும் கஷ்டம். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு. 

அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது. 

இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியிறுத்திச் சொல்லிக்கொள்கிறேன். 

அழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.

பலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? 

எனவே எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்து முடியாமல் 
படுத்துவிடும் நிலைக்கு வந்த ஒருவர் ................... 

அடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது 

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக 

அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளோ 

டிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே ..... 

பி--ழை--த்--தா--ர். :)

இல்லாதுபோனால் 

செ--த்--தா--ர். :)

oooooooooooooooooooooooooo

இன்றைய உலக யதார்த்தங்களை யோசிக்க வைக்கும் நிகழ்வினை எழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவரும் நன்றிகள்.
October 19, 2016 at 4:42 AM

ஒரிஜினல் பதிவில் பிரசுரமான சில பின்னூட்டங்களையும் வாசகர்கள் சௌகரியத்திற்காக இங்கே கொடுத்திருக்கிறேன்.  அந்தத் தளத்தின் ஆசிரியருக்கு நன்றி.

காமாட்சி said...
வயோதிகம் ஒரு சாபம்தான். நாலுங்கிடக்க நடுவில் போய்விடுகிரார்களே அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். வயோதிகத்திலும் வியாதிகள் இல்லாது இருப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அனாயாஸேன மரணம் கிடைத்தால் அதைவிட பாக்கியம் கிடையாது. மற்றபடி நேரம்,காலம், பொழுது எல்லாம் பார்த்து எதுவும் வருவதில்லை. நீங்கள் எழுதியிருப்பதுபோல ஒவ்வொரு முதியவர்களும் நினைப்பார்கள். கிடைத்தால் பரலோக ஸாம்ராஜ்யம்தான். எல்லாம் எழுதுவதற்கு நன்றாக உள்ளது. அவரவர்கள் வினைப்பயன் அனுபவித்தே தீரவேண்டும். பெற்ற பிள்ளைகளோ, மற்றவர்களோ கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் முதியவர்களிடம் என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். நீயாரையா இதெல்லாம் சொல்வதற்கு என்று பதில் வரும். இது தொடர்கதைதானே தவிர பலவும் நல்லது,கெட்டது என எல்லா வகைகளையும் உள்ளடக்கியது.கொஞ்சம் வயதானவர்களை சிந்திக்க வைத்துவிட்ட உண்மைப் பதிவு இது. அன்புடன்
ஜீவி said...
'மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும்.' என்று காமாட்சி அம்மா சொன்னதை எடுத்துச் சொன்னீர்கள், ஸ்ரீராம்!

இது யதார்த்தமான உண்மை. சாமவேதத்தில் இந்த யதார்த்த உண்மைக்கும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது. மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.
Geetha Sambasivam said...
இந்தப் பதிவுக்கு என் கருத்தை இடுவதற்கு முன் ரொம்ப யோசித்தேன். மனம் புண்படும்படி எழுதிடுவோமோ என்ற பயம் தான். ஆனால் இப்போத் தான் ஶ்ரீராம் இங்கே வந்திருக்கும் கருத்துகளைப் படிக்கச் சொன்னார். பலரும் நான் நினைத்தாற்போலவே எழுதி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அறுபதைக் கடந்தவர்கள் என்பதும் புரிகிறது. இப்போது என் கருத்தைத் தாராளமாய்ச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
Geetha Sambasivam said...
தவறாக நினைக்க வேண்டாம். ஒரு கட்டத்தில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமிப்பது தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த மகனோ, மகளோ குடும்பத்தில் அதிகம் வேலை செய்பவர்களாகவோ அல்லது அவர்களும் வயதானவர்களாகவோ அல்லது நோயாளிகளாகவோ இருக்கலாம் இல்லையா? ஒன்றுமே இல்லை என்றாலும் வேலை நிமித்தம், பணி நிமித்தம் வெளியே செல்ல நேரிடும். எப்போதும் வயதான தாய், தந்தையைக் கவனிப்பது என்பது இயலாது என்பதே யதார்த்தம்! குறைந்த பட்சமாக சாமான்கள் வாங்கவானும் வெளியே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே வீட்டோடு இருக்கும்படி நம்பிக்கையான ஆள் கிடைத்தால் போடுவதில் தவறில்லை என்பது என் கருத்து. வீட்டில் இருப்பவர்கள் அவங்க வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்து தான் வயதான பெற்றோரின் கழிவுகளை அகற்ற முடியும். அதே ஆளைப் போட்டு விட்டால் உடனடியாகச் சுத்தம் செய்வார்கள். பிரச்னைகளும் வராது இல்லையா! //

இது தான் நான் ஶ்ரீராமுக்கு இந்தக் கதை குறித்து அனுப்பிய கருத்து! நீங்களே சொல்லுங்கனு ஶ்ரீராம் சொன்னதாலே இங்கே கொடுத்திருக்கேன். ஆனால் இதைச் சொல்லும் முன்னர் ரொம்பவே தயங்கினேன். :)
Geetha Sambasivam said...
அநாயாசமான மரணமே அனைவரும் எதிர்பார்ப்பது! ஆனால் அதுக்கும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும். மற்றபடி சிராத்தம் செய்வதோ, தானங்கள் செய்வதோ அவரவர் மனோநிலையையும் குடும்ப நிலையையும் பொறுத்தது. இந்தக் கதையில் வரும் பிள்ளை/பெண் தாயிடம் பற்று இருந்ததால் தான் தாயின் நிலை அலங்கோலமாக இருக்க வேண்டாம் என்று ஆளைப் போட்டாவது கவனிக்கச் சொல்லி இருக்கார். என்ன ஒரு குறைனால் அம்மாவிடம் அருகே அமர்ந்து தினம் பத்து நிமிஷமாவது செலவிட்டிருக்கலாம். அதற்கு அவருக்கு நேரமில்லை போலும்! அல்லது மனசு வரலையோ! எதுவோ தெரியலை. ஆனாலும் பெற்ற தாய் கடைசியில் இப்படிச் சொல்லிட்டுச் செத்திருக்கவும் வேண்டாம். நம் பிள்ளைகளுக்கு நாம் செய்துவிட்டு அதைத் தியாகம் என்று சொல்வது சரியில்லை. பிள்ளை நன்றாக இருக்கணும்னு தானே பாடுபட்டுப் பிள்ளையை வளர்க்கிறோம். நாம் மட்டுமா? எல்லாப் பெற்றோரும் செய்வது தான் இது! பிள்ளை ஒண்ணும் தெருவிலே விட்டுடலையே! தன்னோடு வைத்துக் கொண்டு ஆளைப் போட்டுத் தானே பார்த்துக்கொள்ளச் செய்தார். அதுக்கும் பணம் செலவு செய்யணும் இல்லையா? அந்த மனசு பிள்ளைக்கு இருந்திருக்கு இல்லையா?
Geetha Sambasivam said...
ஆகவே தானங்கள் செய்வதோ, சிராத்தத்தை விமரிசையாகச் செய்வதோ அவரவர் வசதிப்படி. ஒண்ணுமே கொடுக்க முடியாதவங்க சிராத்தம் செய்யாமலே இருக்காங்களா என்ன? அதுக்குத் தகுந்தாற்போல் நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் வளைந்து கொடுக்கிறதே தவிர கட்டாயப்படுத்த வில்லை. செய்யாமலே இருப்பவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதும் இல்லை. அவரவர் மன விருப்பம், பண வசதி பொறுத்தே தானங்கள் கொடுப்பது எல்லாம் நடைபெறும். ஒரு சில இடங்களில் புரோகிதர்கள் கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்து புரோகிதர்கள் வசதி இல்லாதவங்களுக்குக் குறைவான செலவிலேயே முடித்துத் தருவதையும் பார்த்திருக்கேன்.
Geetha Sambasivam said...
//மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.//

எல்லா வேதங்களிலும் ஔபாசனம் சிராத்தம் செய்யும் குடும்பத் தலைவரின் மனைவியால் தான் ஆரம்பித்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து சிராத்தம் ஆரம்பிக்கும் முன்னும் கணவன் மனைவியின் அனுமதி வாங்கித் தான் செய்ய ஆரம்பிப்பார். இது பொதுவானது. ஆனால் சாமவேதத்தில் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாக இருந்தாலோ, வீட்டுக்கு விலக்காக இருந்தாலோ, வெளிஊர் சென்றிருந்தாலோ கணவனுக்கு ஹோமம் வளர்த்து சிராத்தம் செய்யும் அருகதை கிடையாது. ஹோமம் இல்லாமல் வெறும் சிராத்தம் மட்டுமே நடக்கும். அதே போல் இரு பிராமணர்கள் பிதுர்க்களாகவும், ஒரு மஹாவிஷ்ணுவும் உண்டு. சமையலும் சிராத்த சமையல் தான் செய்யணும். ஆனால் ஹோமம் மட்டும் இருக்காது. இது நான் இல்லாத சமயங்களில் என் கணவர் செய்திருக்கார். என் கடைசி மைத்துனர் அவர் மனைவிக்கும், தந்தைக்கும் செய்து வரும் சிராத்தத்தில் ஹோமம் இல்லாமலேயே செய்து வருகிறார். இரணிய சிராத்தம் எனப்படும் சிராத்தத்தில் தான் யார் செய்தாலும் எந்த வேதக்காரர்களாக இருந்தாலும் ஹோமம் இல்லை. சிராத்த மந்திரங்களும் அதற்குத் தனியாக உண்டு.
Geetha Sambasivam said...
சாமவேதத்தில் மனைவி இல்லைனா கணவன் சிராத்தமே செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லபப்டவில்லை! சிராத்தம் செய்! ஆனால் மனைவி இல்லாமல் ஹோமம் வளர்க்காதே! என்பது தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஞா. கலையரசி said...
எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ

தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”. இப்படிப்பட்ட வார்த்தைகளை அம்மா காதுபட மகன் பேசுவது தான் தவறு. முதுமையில் படுக்கையில் விழுந்தால் நமக்குமே இதே கதிதான். திரு கோபு சார் சொல்லியிருப்பது போல பெற்றோர் நன்றிக்கடனைப் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். பல வீடுகளில் இது தான் இன்றைய நிலைமை. யதார்த்தமான கதைக்குப் பாராட்டுக்கள் வெங்கட்!
RAVIJI RAVI said...
அம்மா செய்தவற்றிற்கு பிரதி பலன் எவராலும் செய்துவிடமுடியுமா? ஒரு விழுக்காடாவது...? சுத்தம் செய்யவாவது ஒரு ஆளை ஏற்பாடு செய்தவரையில்...சரிதான். ஒருவரின் மறைவிற்குப்பிறகு இதை செய்திருக்கலாமே ...விட்டுவிட்டோமே என்ற எண்ணம் மேலிடுவதும் இயல்புதான். பெத்த மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு...ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்! சற்றே உணர்ச்சிகரமான பதிவுதான். நன்றி!!!
Geetha Sambasivam said...
அதே போல் சாம வேதத்தில் மூத்த பிள்ளைக்கு மனைவி இல்லை என்றாலோ அல்லது மனைவியால் சிராத்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனாலோ அடுத்த பிள்ளையின் மனைவி இருந்தால் கூட ஹோமம் பண்ணி சிராத்தம் என்பது இல்லை. மூத்த பிள்ளையின் மனைவி இருந்தால் மட்டுமே மூத்த பிள்ளை செய்யும் சிராத்தத்தில் ஹோமம் உண்டு. தம்பி மனைவி இருந்தால் கூட ஹோமம் இல்லை. மூத்த பிள்ளை, மூத்த மருமகள் இருவருமே இல்லை என்றால் மட்டுமே அடுத்த பிள்ளை தன் மனைவியுடன் சேர்ந்து ஹோமம் வளர்த்துப் பெற்றோரின் சிராத்தம் செய்யலாம்.
ஜீவி said...
கீதாம்மா, வேதங்களில் கூட யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக நான் அழுத்தமாக எடுத்துக்காட்டிய ஒரு விஷயத்தை ரொம்பவே dilute பண்ணி விட்டீர்கள்.
வெங்கட் நாகராஜ் said...
கதையல்ல நிஜம்.....

சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கும் விதமாகவே இருக்கின்றன. ஆள் வைத்து பார்த்துக் கொள்வதில் தவறில்லை - இருந்தாலும் பெற்ற குழந்தைகளும் கொஞ்சம் அனுசரணையாக இருக்கலாமே என்பதைச் சொல்லத்தான் இந்தப் பகிர்வு.

தங்களது கருத்துகளைச் சொன்ன அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. எனது பகிர்வையும் இங்கே வெளியிட்ட “எங்கள் பிளாக்” ஆசிரியர் குழுவிற்கு மனம் நிறைந்த நன்றி.

அலுவலக வேலைகள், தமிழகப் பயணம் என சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலாத சூழல்..... கருத்துச் சொன்ன அனைவருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்கும் மீண்டும் நன்றி!
Thulasidharan V Thillaiakathu said...
ஹை நம்ம வெங்கட்ஜி! அவர்களின் கதை! அருமையான கதை. ஜிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்.

துளசி, கீதா...

கீதா: பொதுவாக கருத்திடும் முன்னர் பிற பின்னூட்டங்களைப் பார்ப்பது இல்லை. கருத்திட கீழே அழுத்திக் கொண்டே வரும் போது சுப்புத்தாத்தாவின் கருத்தில் ஒரு வரி கண்ணில் படவும் உடனே வாசித்தேன்.அப்படியே நான் அடிக்கடிச் சொல்லும் கருத்து. நானும் எனது மகனுக்குச்சொல்லியிருப்பது அதுதான்..தாத்தாவின் அம்மா சொல்லியிருப்பது போல். அந்தத் தினம் என்றில்லாமல் எப்போதுமே...

அருமையான கருத்துடனான கதை. முடிவும் கண்ணில் கண்ணீஈர் வரவஹைத்துவிட்ட்து. எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்தப்பதிவினில் நான் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்து, மகிழ்ந்து, வியந்து, பாராட்டி ‘வாழ்வியல்’ என்ற தலைப்பினில் இன்று நம் பெரியவர் .. முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள் தனது ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில் தனிப்பதிவே வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அதற்கான இணைப்பு:

http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
Anonymous said...
//அவை என்னுடைய தியாகங்களுக்கு
ஈடாகுமா//

பெற்றோருடைய அன்பு, பாசம், தியாகம் என்பது அரித்தால் சொரிந்துகொள்வது போல. Basic instinct. அடுத்த வீட்டு குழந்தைக்கு செய்தால்கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் Basic instinct தான். சுயநலத்துடன் குழந்தையை வளர்த்தால், குழந்தைகளும் வளர்ந்த பிறகு சுயநலத்துடன்தான் இருக்கும். முற்பகல் செய்யின்.

109 கருத்துகள்:

 1. சிவகுமார் ஜெயபாரதி நடித்த மறுபக்கம் என்ற சினிமா தான் ஞாபகத்தில் வந்தது. இருவரும் அருமையாக நடித்திருப்பர்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. http://engalblog.blogspot.com/2016/10/blog-post_18.html

  மேற்படி இணைப்பினில் நான் எழுதியிருந்த பின்னூட்டம் தங்களைக் கவர்ந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

  அதனை இங்கு தாங்கள் தனிப்பதிவாகவே வெளியிட்டுள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

  அந்தப்பதிவினிலேயே ’ஊஞ்சல்’ வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள், போன்ற ஒருசிலர் என் கருத்துடன் ஒத்துப்போய் பின்னூட்டமிட்டுள்ளார்கள்.

  பல சமயங்களில் பதிவினை விட, பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்து விடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் படிக்க யாருக்கும் தங்களைப் போன்ற பொறுமை இருப்பது இல்லை. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

  இந்தத்தங்களின் சிறப்புப்பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 3. ”ஒருவன் ஆழ்ந்த தூக்கத்தில்,

  தான் விழித்திருப்பது போலக் கனவு கண்டானாம்.

  உடனே விழித்துப்பார்த்தானாம்.

  ஆனால் அவன் அப்போது ஆக்சுவலாகத் தூங்கிக்கொண்டு இருந்தானாம்.”

  -=-=-=-

  இந்த மேற்படி ஜோக் போலத்தான் உள்ளது .....

  ’பி-ழை-த்-தா-ர் / செ-த்-தா-ர்’

  என்ற என் வார்த்தைப் பிரயோகங்களும். :)

  பதிலளிநீக்கு
 4. அங்கேயே ரசித்தேன். அங்கு இது சம்பந்தமாக நல்லதொரு விவாதம் இருந்தது.

  வைகோ ஸார் மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவார். வெளிப்படையான கமென்ட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். செவ்வாய், 1 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:49:00 IST

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //அங்கேயே ரசித்தேன். அங்கு இது சம்பந்தமாக நல்லதொரு விவாதம் இருந்தது.//

   தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //வைகோ ஸார் மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவார். வெளிப்படையான கமெண்ட்.//

   பல நேரங்களில், சிலரின் பதிவுகளுக்கு, என் மனதில் தோன்றிடும் வெளிப்படையான கருத்துக்களை, மிக நீண்ட கமெண்ட்ஸ் ஆக எழுதி வைத்துவிட்டு, அனுப்பும் முன் பலமுறை யோசித்து விட்டு, பிறகு ஏதோ ஒரு தயக்கத்தில் நான் அதனை அனுப்பாமலேயே விட்டு விட்டதும் உண்டு, ஸ்ரீராம்.

   அவற்றை எனக்குப்பிடித்தமான வேறு யாரேனும் ஒரே ஒருவருக்கு மட்டும் படிக்க மெயில் மூலம் அனுப்பிவைத்து, அவரின் கருத்துக்களை மெயில் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் உண்டு.

   நீக்கு
 5. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டங்கள் எப்பொழுதும் முன்னுக்கு நிற்பன. அவற்றில் ஒன்றை முதன்மைப்பதிவாகத் தேர்ந்தெடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country
   செவ்வாய், 1 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:04:00 IST

   //திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டங்கள் எப்பொழுதும் முன்னுக்கு நிற்பன.//

   முனைவர் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள். என் பின்னூட்டங்கள் ’எப்போதும் முன்னுக்கு நிற்பன’ என மனம் திறந்து தாங்கள் பாராட்டிச் சொல்லியுள்ளீர்கள் என்பதை அறிய தன்யனானேன். மிக்க நன்றி, ஐயா.

   நீக்கு
 6. வை.கோ சாரின் கதைகள் சுவாரஸ்யம் என்றால் அவர் போடும் பின்னூட்டங்களும் அருமையாகவே இருக்கும். ஆழ்ந்து ரசித்து மேற்கோள் காட்டி பின்னூட்டம் இட்டு நம்மை ரஸிக்கச் செய்வார். பிழைத்தார்! செத்தார் குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் அருமை! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ‘தளிர்’ சுரேஷ் செவ்வாய், 1 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:58:00 IST

   //வை.கோ சாரின் கதைகள் சுவாரஸ்யம் என்றால் அவர் போடும் பின்னூட்டங்களும் அருமையாகவே இருக்கும். ஆழ்ந்து ரசித்து மேற்கோள் காட்டி பின்னூட்டம் இட்டு நம்மை ரஸிக்கச் செய்வார்.//

   ஆஹா, இதனை இன்று பிரபல பத்திரிகை எழுத்தாளராக மாறிக்கொண்டுவரும் தங்கள் வாயிலாகக் கேட்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

   //பிழைத்தார்! செத்தார் குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் அருமை!//

   ஆஹா, இதனைத் தங்கள் வாயிலாக இங்கு இன்று படிக்க நேர்ந்துள்ள நானும் பி-ழை-த்-தே-ன் ! :)

   மிக்க நன்றி, ஸார்.

   நீக்கு
 7. வெளிப்படையாகக் கருத்து சொல்பவர்கள் மிகக்குறைவு அதற்காக பின்னூட்டம் எழுதியவர்கள் கதை விட்டுள்ளார்கள் என்பதும் நிரடுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. G.M Balasubramaniam
   செவ்வாய், 1 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:42:00 IST

   நமஸ்காரங்கள் ஸார்.

   //வெளிப்படையாகக் கருத்து சொல்பவர்கள் மிகக்குறைவு.//

   ஆமாம். இதனை நான் அப்படியே ஒத்துக்கொள்கிறேன். இதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது எனது கருத்து.

   (1) பதிவினை முழுமையாகவும் பொறுமையாகவும் வாசிக்காதவர்கள் + வாசித்துப் பார்த்தும் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்துகொள்ளவே முடியாதவர்கள்.

   இதற்கும் நேரமின்மை, பொறுமையின்மை, அலுப்புத்தட்டும் எழுத்துக்கள் என பல காரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்

   (2) நமக்கேன் வம்பு என ஒதுங்கிக்கொண்டு செல்பவர்கள்.

   //அதற்காக பின்னூட்டம் எழுதியவர்கள் கதை விட்டுள்ளார்கள் என்பதும் நிரடுகிறது//

   உண்மையில்லாத போலித்தனமான ஏனோ தானோ கருத்துக்களைப் பின்னூட்டமாகக் கொடுத்துள்ளவர்களுக்கு, நான் சொல்லியுள்ளது நிச்சயமாக கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கக்கூடும்.

   தாங்கள் மேலே ’வெளிப்படையாகக் கருத்து சொல்பவர்கள் மிகக்குறைவு’ என்று சொல்லியுள்ளது போல, எனக்கு அன்று அந்தப்பதிவினைப் படித்ததும், ஏற்பட்ட மன உணர்வுகளை என் அனுபவத்தில் நானும் வெளிப்படையாக எழுதியுள்ளேன் என்பதையும் தங்களுக்கு இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

   தங்களின் சமீபத்திய http://gmbat1649.blogspot.in/2016/11/blog-post.html ‘உறவுகளும் வலை நட்புகளும்’ என்ற பதிவினையும் பார்த்தேன் ... படித்தேன் ... அதில் என்னைப்பற்றியும், இந்தப்பதிவினைப்பற்றியும் கூட சில வரிகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள்.

   அதன் தொடர்ச்சியாக ”விருப்போ வெறுப்போ இல்லாமல் யோசித்தால் அதுதான் நிதர்சனம் என்பது விளங்கும். அன்பு உறவு என்பவை எல்லாமே வேஷமாகிக் கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் எழுகிறது” எனவும் தாங்களே எழுதியுள்ளீர்கள்.

   அதற்காகத் தங்களுக்கு என் நன்றிகள், ஸார்.

   நீக்கு
 8. //அடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது
  அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது
  அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது
  அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக
  அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளோ
  டிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே .....
  பி--ழை--த்--தா--ர். :)
  இல்லாதுபோனால்
  செ--த்--தா--ர். :)//

  என்ற என் அந்தப்பின்னூட்டத்தில்

  ‘அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது’

  என்ற ஒரு வரி மட்டும் இந்தப்பதிவினில் விட்டுப்போய் உள்ளது.

  இது சும்மா உங்கள் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 9. உங்கள் பின்னூட்டத்தை ‘எங்கள் பிளாக்கில்’ படித்தேன். உங்களுடைய கருத்து எனக்குப் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. முழுமையாகச் சிந்தித்துப்பார்த்தால், ‘பாசம்’ என்ற வார்த்தையே தமிழில் மிக அழகாக அமைந்துள்ளது. ‘பாசம்’, வழுக்கலில் விடத்தான் செய்யும். அது நேர்மையான நியாயமான முடிவுக்கு நம்மை வரவைக்காது.

  மனிதன் என்பவன் கொஞ்சம் மேம்பட்ட, தன்னுடைய நலனையே முதன்மைப்படுத்திச் சிந்திக்கும் மிருகம். தன் நலன், தன் கடமை, தன் பெயர், தான் நிலை நிறுத்தியிருக்கும் பிம்பம், இதுதான் அவனுக்கு முதல். மற்ற எல்லாமே அதற்குப் பின்பு தான். இதில் அபூர்வ நிகழ்வுகளையும், அபூர்வப் பிறவிகளையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

  நான் எழுதியிருப்பது ஓரளவு உணர்ந்த, பார்த்த, படித்ததன் பேரில். வயது ஆக ஆக என் இந்தக் கருத்தில் சிறிது மாற்றம் கொள்ளலாம். இதனை மனதில் வைத்து என் கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் அனுபவம், தளம் மிக உயர்ந்தது.

  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு.

  பெற்றோரில், தந்தை கடமையைச் செய்கிறார். பல கடமைகளை அவரால் தாய்போல் செய்ய இயலாது. இது உலக இயற்கை என்று நினைக்கிறேன். தாய், அவர் கடமையோடு, பெற்ற பாசத்தையும் வைத்துக் குழந்தையை வளர்க்கிறார். குழந்தைகளைப் பற்றிய எந்தப் பிரச்சனைக்கும் (கல்வியாகட்டும், திருமணமாகட்டும், வேலையாகட்டும், எதுவாக இருந்தாலும்) தந்தை தன் அறிவுத் திறமையால், கடமையைக் கைக்கொண்டு முடிவு எடுக்கிறார். தாய் பெரும்பாலும் பாசத்தால் தன் முடிவை அல்லது சரியான நிலையை எடுக்கத் தவறுகிறார். இரண்டிலும் நோக்கம் ஒன்றே. ஆனால் தந்தை குழந்தையின் வளர்ச்சியில் (அவனை மனிதனாக்குவதை) பெரும் பங்கு ஆற்றுகிறார். இது வெறும் கடமைதான். வேறு எந்தப் பெயரும் இதற்குக் கொடுத்தாலும், கடமையின்பாற்பட்டதே. தியாகங்கள் என்று இருப்பவை எல்லாம், தன் குழந்தை என்ற தன் நலம் சார்ந்ததே. இவைகள் நிச்சயமாக மேற்குலகங்களில் கிடையாது. அன்பு உண்டு ஆனால் தன் நலத்தில் பெரும்பாலும் compromise இல்லை. 18 வயதாகிவிட்டால், குழந்தை என்ற நிலையிலிருந்து மனிதன் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். அதற்கு அப்புறம் ‘ஹாய்’ என்ற தொடர்பும், கொஞ்சம் அதிகமானால் மனதில் உள்ள நன்றி உணர்ச்சியும்தான். 18 வயதுக்குப் பின், பெற்றோர் எதற்கும் செலவழிப்பது, ‘நான் உனக்குச் செய்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொல்லிக் காட்டும்படியானது (எங்களிடம் கன்சல்டன்ட் ஆக வேலைபார்த்த பிரிட்டனைச் சேர்ந்த 48 வயதானவர் என்னிடம் சொன்னது… You know, my son, over 18 years, is staying with me to complete his studies. I am not charging him rent or electricity expenses. He said as if he is doing a great favor. இதைப் போன்ற பலரிடம் நான் பேசியிருக்கிறேன். எனக்கு ஒவ்வொருவருடைய வாழ்க்கைமுறையையும் அறிந்துகொள்ள ஆவல்.). அதனால் பெற்றோர் செய்வது முற்றிலும் கடமையின்பாற்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன்
   செவ்வாய், 1 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:31:00 IST

   //உங்கள் பின்னூட்டத்தை ‘எங்கள் பிளாக்கில்’ படித்தேன். உங்களுடைய கருத்து எனக்குப் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது.//

   எனது நேரடிப் பதிவோ அல்லது பிறர் பதிவுகளில் என்னுடைய ஒருசில பின்னூட்டங்களோ, உங்களைப்போன்ற ஒருசிலரின் சிந்தனைகளைத் தூண்டி, புதிய சிந்தனைகளையும், புதிய பார்வைகளையும் தோற்றுவித்தால் அதுவே என் எழுத்துக்களுக்கான மிகப் பெரிய அங்கீகாரமாகவும் வெற்றியாகவும் நினைத்து நானும் மகிழ்கிறேன். :)

   //முழுமையாகச் சிந்தித்துப்பார்த்தால், ‘பாசம்’ என்ற வார்த்தையே தமிழில் மிக அழகாக அமைந்துள்ளது. ‘பாசம்’, வழுக்கலில் விடத்தான் செய்யும். அது நேர்மையான நியாயமான முடிவுக்கு நம்மை வரவைக்காது.//

   இதனை நானும் 100% ஆக அப்படியே ஒப்புக்கொள்கிறேன். இந்த நம்மை வழிக்கிவிழச்செய்யும் பாசத்தைப்பற்றியேதான், நான் பதிவுலகில் நுழைந்த புதிதில் ஓர் பதிவினில் மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளேன். இதோ அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

   //மனிதன் என்பவன் கொஞ்சம் மேம்பட்ட, தன்னுடைய நலனையே முதன்மைப்படுத்திச் சிந்திக்கும் மிருகம். தன் நலன், தன் கடமை, தன் பெயர், தான் நிலை நிறுத்தியிருக்கும் பிம்பம், இதுதான் அவனுக்கு முதல். மற்ற எல்லாமே அதற்குப் பின்பு தான். இதில் அபூர்வ நிகழ்வுகளையும், அபூர்வப் பிறவிகளையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. //

   ஆமாம். ’தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு’ என்று உள்ளபோது சுயநலத்திற்குப் பிறகே பிறர் நலத்தைப்பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க இயலும் என்பதே என் கருத்தும்.

   //நான் எழுதியிருப்பது ஓரளவு உணர்ந்த, பார்த்த, படித்ததன் பேரில். வயது ஆக ஆக என் இந்தக் கருத்தில் சிறிது மாற்றம் கொள்ளலாம். இதனை மனதில் வைத்து என் கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் அனுபவம், தளம் மிக உயர்ந்தது.//

   தங்களை ஓரளவுக்கு மிக நன்றாகவே புரிந்துகொண்டுள்ளவன் நான். இன்றைய தேதியில் நான் பார்த்தவரையில், மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்துடன் கூடிய, மிக அழகான கருத்துக்களைப் பின்னூட்டங்களாக இடுவோரில் தாங்களே நம்பர் ஒண்ணாகத் திகழ்ந்து வருகிறீர்கள் ...... என் பார்வையில்.

   **பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு** - VGK

   //பெற்றோரில், தந்தை கடமையைச் செய்கிறார் ................................... ................................ இதைப் போன்ற பலரிடம் நான் பேசியிருக்கிறேன். எனக்கு ஒவ்வொருவருடைய வாழ்க்கைமுறையையும் அறிந்துகொள்ள ஆவல்.). அதனால் பெற்றோர் செய்வது முற்றிலும் கடமையின்பாற்பட்டது.//

   மிக அழகாக ஆழமாக சிந்தித்துச் சொல்லியுள்ளீர்கள். தாங்கள் சொல்லியுள்ளதையேதான் நானும் சொல்லியுள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. மிக்க நன்றி.

   நீக்கு
 10. அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது.

  இது மிக நியாயமான கருத்து. கடமையைச் செய்துவிட்டுப் பலனை எதிர்ப்பார்ப்பது எவ்வளவு குறைவான எண்ணம். ஆனால், பெற்றோர் அவர்களுடைய முதுமை என்னும் வியாதியை, மற்ற எல்லா நோயாளிகளைப் போன்றே தானேதான் அனுபவித்துக் கடக்க வேண்டும். இதில் அவர்கள் எதிர்பார்க்கவேண்டியது, முடிந்தால் பண உதவி (அதுவும் தான் செய்ததற்குப் பிரதிபலன் என்று நினைத்துத்தான். அப்படி பண உதவியை எடுத்துக்கொள்ளும்போது, ‘தந்தை என்ற கடமையில் செய்ததற்கான’ பலன் எதுவும் அவருக்குக் கிட்டாது.). பணம் இல்லாதபோது ஆறுதலான ஓரிரு வார்த்தை. அவ்வளவுதான். ஒவ்வொரு மனிதனும் தனி உயிர். வாழ்க்கை என்னும் ஆற்றை அவன்/அவள் தானே மட்டும்தான் கடக்கவேண்டும். மற்ற எல்லோரும் பிம்பங்களே. ப்ராப்தம் இருந்தால், மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லாவிட்டால், தனித்துத்தான் கரை சேரவேண்டும். இதில் மனைவி, சகோதர சகோதரிகள், பெற்றோர், குழந்தைகள் என்று எந்த தனிப்பட்ட பிரிவும் கிடையாது. எல்லோரும் பிம்பங்களே.

  இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியுறுத்திச் சொல்லிக்கொள்கிறேன்

  பாசம் என்ற ஒன்று நிஜமானதல்ல. அது வெறும் எண்ணம் (illusion). பொறுமை, சகிப்புத்தன்மை, சேவை மனப்பான்மை – இது இருக்கும் மனிதப் பிறவிகள் அபூர்வம். அதாவது ஆயிரத்தில் ஒன்று. இதன் காரணம், மனிதப் பிறவி (அல்லது உயிரினம்) என்பதே தனிப்பட்டது. ‘தான், தன் சுகம்’ என்பதுதான் முதல். மற்றபடி, அன்பு, பாசம் எல்லாம் வெளி வேஷம்தான். நாம் ‘பாசம்’ வைக்கிறோம் என்று நினைத்தாலே, அது one sided என்று நமக்கு நிச்சயமாகத் தெரியவேண்டும். எந்தப் பற்றும் ஒரு நோக்கத்தின்பாற்பட்டது. பச்சையாகச் சொல்லவேண்டுமானால், அது selfish approach. ஏமாற்றத்துக்குத் தயாராக இருக்கவேண்டியதுதான்.

  அழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.

  அப்பா போன உடனேயே, ‘அடடா.. நம்மை வளர்த்த நேசித்த ஜீவன் போய்விட்டதே’ என்று உணர்ச்சியில் அழுகை எல்லோருக்கும் வரும். அது 1 நிமிடம்தான். அதற்குப் பின் மனது, அதனால் தனக்கு, தன் வாழ்க்கைக்கு என்ன நன்மை, கெடுதல் என்றுதான் சிந்திக்கும். அந்த ஒரு நிமிடம் தவிர, அவ்வப்போது மனதில் ‘அடடா.. நம் அப்பா/அம்மா இதை செய்தார்களே’ என்று மனதில் அன்பு, நன்றி உணர்ச்சி தோன்றும். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது.

  பலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?

  பதிலளிநீக்கு
 11. கூட்டுக் குடும்பங்களிலிருந்து எப்போது தனிக் குடித்தனம், வெளி ஊரில் வேலை (தன்னுடைய வளர்ந்த இடத்தை விட்டு) என்று எப்போது வந்துவிட்டோமோ, அப்போதே வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் என்ற முடிவுக்கு வந்தாகிவிட்டது. அப்புறம் எப்படி எதையும் (பணத்தைத் தவிர) எதிர்பார்க்கமுடியும்? மனைவியிடம் கணவனுக்கு ஒரு periodல் ஆசை, அடுத்த periodல், தனக்கான வேலைகளும், தன் குழந்தைகளுக்கான உதவிகளும் செய்யும் ஆத்மா. இந்த சமயத்தில் ஆண் அதிகாரம்தான் அதிகமாக இருக்கும். குழந்தைகள் அவரவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்வரையான periodல், அவள் ஆலோசனைகளையும் கேட்டு, ஆனால் அதிகாரமாக முடிவெடுக்கும் சமயம். அதன் பின்பான periodல்தான், அவள், தன் வாழ்வில் எவ்வளவு முக்கியம், தன் survivalக்கு அவள் எவ்வளவு இன்றியமையாதவள் என்று புரிந்து அவளிடம் ஓரளவு மிகுந்த அன்புகாட்டும் பருவம். இது இறப்புவரை தொடரும். அப்போதும் மனது, ‘நான் முந்திப்போக வேண்டுமே’ என்றுதான் எண்ணும். ‘அவள் முந்திவிட்டால்’ நம் நிலை சந்தி சிரித்துவிடுமே என்று மனது எண்ணத்தான் செய்யும். எனக்குத் தோன்றுகிறது, மனைவியிடம் அவள் கணவனுக்கு இருப்பது நன்றி உணர்ச்சி. அதைப் பாசம் என்று எண்ணுதல் சரியல்ல. இதேபோல்தான் மனைவிக்கும். ஆனால், குழந்தைகள் என்பவர்கள் ரத்த சம்பந்தமுள்ளவர்கள். பெரும்பாலும், ரத்த சம்பந்தமுள்ளவர்களிடம், அன்போ, பாசமோ மலையிலிருந்து பெய்யும் தண்ணீர் போல, அது கீழ்’நோக்கி மட்டுமே பாயும். மேல் நோக்கி வரவே வராது. அப்பாக்கு மகனிடம் உள்ள பாசம், நேசம்… எதுவும், மகனுக்கு, அவன் மகனிடத்தில்தான் இருக்கும். அப்பாவிடம் வரவே வராது. கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட நன்றி உணர்ச்சி இருந்தாலே அதிகம்.

  நீங்கள் கடைசியில் சொன்ன, ‘எனவே எதற்கும்…….. இல்லாதுபோனால் செத்தார்’ என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

  இதைத் தளத்தில் எழுதவில்லை. ஏனென்றால், அது இடுகைக்குச் சம்பந்தமில்லாதுபோகும்.

  சிந்திக்கச் செய்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன்
   செவ்வாய், 1 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:31:00 IST

   **அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது.** - VGK

   //இது மிக நியாயமான கருத்து.//

   தங்களின் இந்தப் புரிதலுக்கு மிக்க நன்றி.

   //கடமையைச் செய்துவிட்டுப் பலனை எதிர்ப்பார்ப்பது எவ்வளவு குறைவான எண்ணம்.//

   இன்று யாரும் விரும்பிக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக எனக்குத் தோன்றுவது இல்லை.

   அவரவர்களின் பருவக்கோளாறுகள், முடைகள், தேக அரிப்புகள், கட்டுக்கடங்காத காம வெறிகள், எல்லா உயிர்களுக்குமே இதில் உள்ள மிக இயல்பான இச்சைகள், சமூக மதிப்பீட்டுக்காக மட்டுமே என பல்வேறு காரணிகளுடன், குடும்பக்கட்டுப்பாட்டு உபகரணங்களில் உள்ள குறைபாடுகள் என எவ்வளவோ விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

   அப்படியும், சிலர் இதனை விரும்பி தலைகீழே நின்று கஜகர்ணம் போட்டாலும் இந்த குழந்தைப்பேறு என்பது எல்லோருக்குமே அவ்வளவும் சுலபமாகக் கிடைத்து விடுவதும் இல்லை.

   குழந்தைப்பேறு இல்லாதவர்களைக் கோயில் கட்டிக் கும்பிடத்தோன்றும், அபார சம்சாரிகளின் பார்வைக்கு என்பதே இதில் ஒளிந்துகொண்டுள்ள மாபெரும் உண்மையோ உண்மை. எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.

   பிறந்துவிட்ட குழந்தையை, பெரும்பாலான பெற்றோர்கள், எப்பாடு பட்டாவது வளர்க்கத்தான் வேண்டியுள்ளது என்பது தலைவிதியாக உள்ளது.

   இதில் கடமையாவது ... கத்திரிக்காயாவது? என்பதே என் கேள்வி.

   நம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் கணவன் மனைவிகள் மிகவும் சுதந்திரமாகவே செயல்பட்டு, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

   நம் நாட்டின் சுதந்திரத்திற்குப்பின் மட்டுமே, கணவன் மனைவிக்குள் இருந்து வந்த இந்த தாம்பத்ய சுதந்திரமும் பறிபோய் உள்ளது.

   பல்லாண்டுகள் வரை (1980 வரைகூட) ’இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் போதுமே’ எனச் சொல்லி அரசாங்கத்தார் விளம்பரம் செய்து வந்தனர்.

   அதன் பிறகு ’நாம் இருவர் .... நமக்கு இருவர்’ எனச் சொல்ல ஆரம்பித்தனர்.

   அதன்பின் ’நாம் இருவர் .... நமக்கு ஒருவர்’ என ஆனது.

   இப்போது அந்த ஒரு குழந்தையையும் ஒத்திப்போட்டு விட்டு

   ‘நான் ஒரு குழந்தை ... நீ ஒரு குழந்தை ... ஒருவர் மடியினில் ஒருவரடி’

   எனப்பாடிக்கொண்டு வரும் காலமாகவும் மாறியுள்ளது.

   குழந்தைகளை வளர்ப்பதில் அவ்வளவு சிரமங்கள் (Practical Difficulties) இன்று அதிகரித்துப்போய் விட்டன.

   நாட்டுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்து கணவன்-மனைவிக்குள் அன்று ஒருகாலத்தில் இருந்துவந்த சுதந்திரம் பறிபோய், நிறைய தடுப்பு முறைகள் பெருகிப்போய் விட்டன.

   இது காலத்தின் கட்டாயம் என்றாகிப்போய் விட்டது.

   இதில் யாரைச்சொல்லியும் குற்றமில்லை.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

   //ஆனால், பெற்றோர் அவர்களுடைய முதுமை என்னும் வியாதியை, மற்ற எல்லா நோயாளிகளைப் போன்றே தானேதான் அனுபவித்துக் கடக்க வேண்டும். இதில் அவர்கள் எதிர்பார்க்கவேண்டியது, முடிந்தால் பண உதவி (அதுவும் தான் செய்ததற்குப் பிரதிபலன் என்று நினைத்துத்தான். அப்படி பண உதவியை எடுத்துக்கொள்ளும்போது, ‘தந்தை என்ற கடமையில் செய்ததற்கான’ பலன் எதுவும் அவருக்குக் கிட்டாது.). பணம் இல்லாதபோது ஆறுதலான ஓரிரு வார்த்தை. அவ்வளவுதான்.//

   எவ்வளவு பணம் இருந்தாலும் ஒருவர் வலியை மற்றவர் வாங்கிக்கொள்ளவே முடியாதுதான். நானும் இதனை அப்படியே ஒத்துக்கொள்கிறேன். அவரவர்களின் வலியை அவரவர்கள் மட்டுமே அனுபவித்து ஆக வேண்டும்.

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

   //ஒவ்வொரு மனிதனும் தனி உயிர். வாழ்க்கை என்னும் ஆற்றை அவன்/அவள் தானே மட்டும்தான் கடக்கவேண்டும். மற்ற எல்லோரும் பிம்பங்களே. ப்ராப்தம் இருந்தால், மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லாவிட்டால், தனித்துத்தான் கரை சேரவேண்டும். இதில் மனைவி, சகோதர சகோதரிகள், பெற்றோர், குழந்தைகள் என்று எந்த தனிப்பட்ட பிரிவும் கிடையாது. எல்லோரும் பிம்பங்களே.//

   கானல் நீர் போன்ற இதனை நிஜமான நீர் என நினைத்து மான் போலத் துரத்தித் துரத்தி ஓடும் மனிதர்களின் நிலைமை பரிதாபமானது என்பதே என் கூற்றும்.

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)

   **இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியுறுத்திச் சொல்லிக்கொள்கிறேன்.** - VGK


   //பாசம் என்ற ஒன்று நிஜமானதல்ல. அது வெறும் எண்ணம் (illusion). பொறுமை, சகிப்புத்தன்மை, சேவை மனப்பான்மை – இது இருக்கும் மனிதப் பிறவிகள் அபூர்வம். அதாவது ஆயிரத்தில் ஒன்று. இதன் காரணம், மனிதப் பிறவி (அல்லது உயிரினம்) என்பதே தனிப்பட்டது. ‘தான், தன் சுகம்’ என்பதுதான் முதல். மற்றபடி, அன்பு, பாசம் எல்லாம் வெளி வேஷம்தான். நாம் ‘பாசம்’ வைக்கிறோம் என்று நினைத்தாலே, அது one sided என்று நமக்கு நிச்சயமாகத் தெரியவேண்டும். எந்தப் பற்றும் ஒரு நோக்கத்தின்பாற்பட்டது. பச்சையாகச் சொல்லவேண்டுமானால், அது selfish approach. ஏமாற்றத்துக்குத் தயாராக இருக்கவேண்டியதுதான்.//

   What you say is Very Correct. That is what I have also strongly expressed as my opinion.

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5)

   **அழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.** - VGK

   //அப்பா போன உடனேயே, ‘அடடா.. நம்மை வளர்த்த நேசித்த ஜீவன் போய்விட்டதே’ என்று உணர்ச்சியில் அழுகை எல்லோருக்கும் வரும். அது 1 நிமிடம்தான். அதற்குப் பின் மனது, அதனால் தனக்கு, தன் வாழ்க்கைக்கு என்ன நன்மை, கெடுதல் என்றுதான் சிந்திக்கும். அந்த ஒரு நிமிடம் தவிர, அவ்வப்போது மனதில் ‘அடடா.. நம் அப்பா/அம்மா இதை செய்தார்களே’ என்று மனதில் அன்பு, நன்றி உணர்ச்சி தோன்றும். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது.//

   அந்த ஓரிரு நாட்களோ, ஓரிரு வாரமோ அழுகை வரத்தான் செய்யும். அதற்காக வாழ்க்கை பூராவும் அதை நினைத்து அழுதுகொண்டேவா இருக்க முடியும்?

   ஒருசிலருக்கு மட்டும், அவர்களின் பெற்றோர்கள் மீதான, அந்த நன்றி உணர்ச்சிகள் கடைசிவரை மனதிலாவது இருக்கக்கூடும். அதுவே பெரிய பாக்யம்தான்.

   அதுவும் ஒருவர் உயிருடன் இருக்கும்வரை அவரைப்பற்றி அறிந்துகொள்ள முடியாத அன்பும், பாசமும், பிரியமும், அவரின் முக்கியத்துவமும் அவர் மறைந்த பிறகே மற்றவர்களால் நன்கு உணர முடியும் என்பதே இன்றைய யதார்த்தங்களில் ஒன்றாக உள்ளது.

   >>>>>

   நீக்கு
  6. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (6)

   **பலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?** - VGK

   //கூட்டுக் குடும்பங்களிலிருந்து எப்போது தனிக் குடித்தனம், வெளி ஊரில் வேலை (தன்னுடைய வளர்ந்த இடத்தை விட்டு) என்று எப்போது வந்துவிட்டோமோ, அப்போதே வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் என்ற முடிவுக்கு வந்தாகிவிட்டது. அப்புறம் எப்படி எதையும் (பணத்தைத் தவிர) எதிர்பார்க்கமுடியும்? மனைவியிடம் கணவனுக்கு ஒரு periodல் ஆசை, அடுத்த periodல், தனக்கான வேலைகளும், தன் குழந்தைகளுக்கான உதவிகளும் செய்யும் ஆத்மா. இந்த சமயத்தில் ஆண் அதிகாரம்தான் அதிகமாக இருக்கும். குழந்தைகள் அவரவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்வரையான periodல், அவள் ஆலோசனைகளையும் கேட்டு, ஆனால் அதிகாரமாக முடிவெடுக்கும் சமயம். அதன் பின்பான periodல்தான், அவள், தன் வாழ்வில் எவ்வளவு முக்கியம், தன் survivalக்கு அவள் எவ்வளவு இன்றியமையாதவள் என்று புரிந்து அவளிடம் ஓரளவு மிகுந்த அன்புகாட்டும் பருவம். இது இறப்புவரை தொடரும். அப்போதும் மனது, ‘நான் முந்திப்போக வேண்டுமே’ என்றுதான் எண்ணும். ‘அவள் முந்திவிட்டால்’ நம் நிலை சந்தி சிரித்துவிடுமே என்று மனது எண்ணத்தான் செய்யும். எனக்குத் தோன்றுகிறது, மனைவியிடம் அவள் கணவனுக்கு இருப்பது நன்றி உணர்ச்சி. அதைப் பாசம் என்று எண்ணுதல் சரியல்ல. இதேபோல்தான் மனைவிக்கும். ஆனால், குழந்தைகள் என்பவர்கள் ரத்த சம்பந்தமுள்ளவர்கள். பெரும்பாலும், ரத்த சம்பந்தமுள்ளவர்களிடம், அன்போ, பாசமோ மலையிலிருந்து பெய்யும் தண்ணீர் போல, அது கீழ்’நோக்கி மட்டுமே பாயும். மேல் நோக்கி வரவே வராது. அப்பாக்கு மகனிடம் உள்ள பாசம், நேசம்… எதுவும், மகனுக்கு, அவன் மகனிடத்தில்தான் இருக்கும். அப்பாவிடம் வரவே வராது. கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட நன்றி உணர்ச்சி இருந்தாலே அதிகம்.//

   நீங்களும் என்னைப்போலவே இதனை நன்கு உணர்ந்து சொல்லியுள்ளீர்கள் என்பதால் என் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகிறது.

   அதிலும் ”அன்போ, பாசமோ மலையிலிருந்து பெய்யும் தண்ணீர் போல, அது கீழ்நோக்கி மட்டுமே பாயும். மேல் நோக்கி வரவே வராது” என்ற தங்களின் வரிகளை நான் மிகவும் இரஸித்தேன். அது மட்டும்தான் உண்மை.

   >>>>>

   நீக்கு
  7. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (7)

   //நீங்கள் கடைசியில் சொன்ன, ‘எனவே எதற்கும்…….. இல்லாதுபோனால் செத்தார்’ என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.//

   மிக்க மகிழ்ச்சி, நண்பரே !

   //இதைத் தளத்தில் எழுதவில்லை. ஏனென்றால், அது இடுகைக்குச் சம்பந்தமில்லாதுபோகும்.//

   அதுவும் சரிதான்.

   இருப்பினும் நான் விரும்பிச்செல்லும் தளங்களில், இடுகையினை விட அதில் கூறப்படும் பிறரின் பல்வேறு கருத்துக்கள் என்னைச் சுண்டி இழுக்கும். அதில் நான் மிகவும் லயித்துப்போவது உண்டு.

   //சிந்திக்கச் செய்ததற்கு நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆழ்ந்து வாசித்து, சிந்தித்துக் கூறியுள்ள ஆரோக்யமான மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  8. ஆஹா, வைகோவின் ராசியே தனி. இந்தப் பதிவில் என் சரக்கு இரண்டே இரண்டு வரிகள்தான். மீதம் முழுவதும் வைகோவின் பின்னூட்டமே. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்கள்தான். ஒரு ஆரோக்யமான கருத்துப் பரிவர்த்தனை/அலசல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்தப் பின்னூட்டங்களைப் பற்றிச் சொல்லாம்.

   இந்த அனுபவத்திற்கு நான் வைகோ அவர்களுக்கு என்றென்றும் நன்றி சொல்ல வேண்டும்.

   நீக்கு
  9. ப.கந்தசாமி வியாழன், 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:23:00 IST

   //ஆஹா, வைகோவின் ராசியே தனி. இந்தப் பதிவில் என் சரக்கு இரண்டே இரண்டு வரிகள்தான். மீதம் முழுவதும் வைகோவின் பின்னூட்டமே. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்கள்தான். ஒரு ஆரோக்யமான கருத்துப் பரிவர்த்தனை/அலசல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்தப் பின்னூட்டங்களைப் பற்றிச் சொல்லாம்.//

   ஒரு பத்தாயிரம் வாலா பட்டாஸ் கட்டை கொளுத்த ஓர் மிகச்சிறிய தீப்பொறி போதும்.

   அந்த மிகச்சிறிய தீப்பொறி போன்றதே தங்களின் ‘இரண்டே இரண்டு வரி சரக்கு’ என்பது.

   இது இத்துடன் முடியாது. தொடர்ந்து சில நாட்களுக்கு வெடித்துக்கொண்டே இருக்கும். இன்னும் பலரும் இங்கு வரக்கூடும். காத்திருங்கள்.

   //இந்த அனுபவத்திற்கு நான் வைகோ அவர்களுக்கு என்றென்றும் நன்றி சொல்ல வேண்டும்.//

   அடடா, நன்றி என்ற அதெல்லாம் நமக்குள் எதற்கு ஸார்?

   இந்த பட்டாஸ் கட்டு முழுவதும் வெடிக்கும் வரை, அதனை மேலும் பலரும் வந்து ரஸிக்கும் வரை, புதுப்பட்டாஸ் எதையும் கொளுத்திப் போடாமல் இருங்கோ, அதுவே போதும்.

   நீக்கு
 12. கோபு சார்.. உங்களைவிட அனுபவக் குறைவு காரணமாக, நான் மனதில் தோன்றியதை, எனக்குச் சரி என்று பட்டதை எழுதினேன். அது உங்களுக்குச் சரி என்று படுவதை எண்ணி மகிழ்ச்சி.

  VGK Said "தலைகீழே நின்று கஜகர்ணம் போட்டாலும்", "நான் ஒரு குழந்தை ... நீ ஒரு குழந்தை ... ஒருவர் மடியினில் ஒருவரடி" - நீங்களே விரும்பாவிட்டாலும் உங்களால் நகைச்சுவை இல்லாமல் எழுதுவது கடினம் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன்
   வியாழன், 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:32:00 IST

   //VGK Said
   "தலைகீழே நின்று கஜகர்ணம் போட்டாலும்",
   "நான் ஒரு குழந்தை ... நீ ஒரு குழந்தை ... ஒருவர் மடியினில் ஒருவரடி" -

   நீங்களே விரும்பாவிட்டாலும் உங்களால் நகைச்சுவை இல்லாமல் எழுதுவது கடினம் என்று தோன்றுகிறது.//

   அடிப்படையிலேயே நான் ஒரு நகைச்சுவை விரும்பி என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அதை எந்த ரூபத்திலாவது, என் படைப்புக்களில் நுழைத்துவிடத்தான் நான் எப்போதுமே முயற்சிப்பேன்.

   பெரும்பாலும் அது தானாகவே ஆங்காங்கே என் எழுத்துக்களில் வந்து விழுந்துவிடும்.

   மேலும் பத்திரிகைகளில் படைப்புகளுடன் வெளியிடப்படும் ஓவியங்கள், வலைத்தளத்தினில் வெளியிடப்படும் அசையும் (GIF Animated) படங்கள் ஆகியவற்றில் ஓர் சின்னக்குழந்தைபோல எனக்கு ஆசை உண்டு.

   இவையெல்லாம் இல்லாமல் வெளியிடப்படும் எழுத்துக்களை, நான் வலைப் பதிவுகளில் படிக்க விரும்புவதே இல்லை. அது எப்பேர்ப்பட்ட பிரபல எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ள, தலை சிறைந்த காவியமாகவே இருப்பினும்கூட.

   தகுந்த ஓவியம் இல்லாத காவியங்களை வெளியிடுவதும், படிப்பதும் வேஸ்ட் என நினைப்பவன் நான்.

   அதுபோல, வலைத்தளத்தினில் சின்னச் சின்ன பத்திகள், பாத்திகள் போலப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபக்ஷம் நான்கு வாக்கியங்களுக்கு மேல் எந்த ஒரு பத்தியிலும் இருக்கக்கூடாது. பத்திகளுக்கு இடையே தகுந்த இடைவெளி கொடுத்து, Bold Letters இல் அவை கலர் கலராக காட்டப்பட்டிருக்க வேண்டும்.

   THE WAY OF PRESENTATION இல் இதுபோன்ற எந்தவொரு அழகுணர்ச்சியும் இன்றி, மொய்-மொய் என்று அடை போல எழுதிக்கொண்டே போவோர்களின் எழுத்துக்களைக் கண்டால் எனக்கு அடியோடு பிடிப்பது இல்லை.

   இதிலெல்லாம் என்னுடன் எப்போதுமே கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த பதிவர்களில் சிலர், தங்களைத் தாங்களே இப்போதெல்லாம் மாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்க எனக்கும் சற்றே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பதிவர்களில் சிலர் இத்தகைய Marketing Technology ஐ, என் மூலம் மிகவும் தாமதமாகத் தெரிந்துகொண்டுள்ளார்கள்.

   உதாரணமாக இதோ இந்த என் பதிவினில் உள்ள படங்களை மட்டுமாவது தலையோடு கால் பாருங்கள். நான் சொல்லவருவது என்னவென்று உங்களுக்கே புரியவரும். அது ஒரு முழுநீள நகைச்சுவை கதையும்கூட.

   http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

   தலைப்பு:- ‘பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?’

   நீக்கு
 13. அடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது

  அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது
  அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது
  அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக

  அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளோ

  டிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே .....

  பி--ழை--த்--தா--ர். :)

  இல்லாதுபோனால்

  செ--த்--தா--ர். :)//  நீங்கள் சொல்வது போல் என் அப்பா சும்மா கை மடக்கி படுத்தவர் எழுந்து கொள்ளவில்லை (51 வயது)

  அம்மா 75 வயது மூன்று மாதம் புரட்டாசியில் படுத்து கார்த்திகை மாதம் இறைவனடி அடைந்தார்கள்.

  மாமனார் 105 வயது மூன்று வருடம் வெங்டேஷேன் என்பவர் மிகவும் அன்பாய் பார்த்து கொண்டார், ஊதியத்திற்கு என்றாலும் மிகவும் அன்பாய் மாமாவிற்கு எல்லாம் செய்தார். மாமா செய்த சிவபூஜை பலன் பார்த்துக் கொள்ள நல்ல ஆள் கிடைத்தார். என் கணவர், கணவரின் தம்பி மகன் அருகில் இருக்க உயிர் போனது. மற்ற மகன்களும் உடனே வந்து விட்டார்கள். வெளிநாட்டில் இல்லாமல் உடனே வரும் தூரம்.

  எங்களுக்கு எப்படியே! இறைவனுக்கு தான் தெரியும்.

  உங்கள் பின்னூட்டத்தை ஸ்ரீராம் தளத்திலும் படித்தேன் இங்கும் படித்தேன்.

  நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் வை.கோ சார். முதுமையில் எதிர்பார்ப்பு கூடாது என்பது உண்மை.


  நாங்களும் குழந்தைகளிடமும் எதிர்பார்க்கவில்லை ஒன்றும்.
  ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுத்த நாளாய் போகிறது.
  மீதி நாட்களையும் அவர் பொறுப்பு என்று விட்டு விட்டோம் இருவரும்.
  எண்ணெய் முந்துமோ திரி முந்துமோ ! பின்னால் இருப்பவர் நிலை !என்ன என்பதை பற்றி கவலை படாமல் எல்லாம் அவன் விட்ட வழியாக ஓடிக் கொண்டு இருக்கிறது காலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு வியாழன், 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:08:00 IST

   வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   ஏதோ என் மனதுக்குப்பட்டதை அப்படியே சொல்லியிருந்தேன்.

   தாங்கள் இங்கு கடைசி பத்தி (Paragraph) யில் சொல்லியிருப்பது அத்தனையும் எனக்கும் பொருந்துபவை மட்டுமே. ஈஸ்வரோ ரக்ஷது !

   நீக்கு
 14. வை.கோபு சாரின் மனந்திறந்த பின்னூட்டம் கந்தசாமி ஐயா அவர்களின் தளத்தில் தனி ஒரு பதிவுக்கு வித்திட்டிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி. முன்னெப்போதையும் விட முதியவர்களை ஒரு சுமையாகக் கருதும் மனப்போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். படுக்கையில் விழுந்தவர் விரைவில் இறந்தால் பிழைத்தார்; இல்லையேல் அவர் செத்தார் என்பது மிகச்சரி. இங்கு பிழைத்தார், செத்தார் என்பதற்கான அர்த்தம் அப்படியே எதிர்ப்பதத்தில் மாறி வருவதை எங்கள் பிளாக்கில் வாசித்த போதே ரசித்தேன். திரு கோபு சார் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மையே. இது தான் இன்றைய யதார்த்தம். அருமையான ஒரு பின்னூட்டம் கொடுத்து எல்லாரையும் சிந்திக்க வைத்திருக்கும் திரு கோபு சாருக்குப் பாராட்டுக்கள். தனியொரு பதிவாக வெளியிட்ட திரு கந்தசாமி ஐயாவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி வியாழன், 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:30:00 IST

   //வை.கோபு சாரின் மனந்திறந்த பின்னூட்டம் கந்தசாமி ஐயா அவர்களின் தளத்தில் தனி ஒரு பதிவுக்கு வித்திட்டிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி.//

   இதை நானே எதிர்பார்க்கவில்லை, மேடம். எனக்கும் இதில் மகிழ்ச்சியே.

   //முன்னெப்போதையும் விட முதியவர்களை ஒரு சுமையாகக் கருதும் மனப்போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.//

   பொதுவாக எங்கு திரும்பினும் அப்படித்தான் கேள்விப்படுகிறோம். சில இடங்களில் நம் கண்களால் இதனைப் பார்த்து உணரவும் முடிகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகளாக உள்ளன. தாங்கள் சொல்வது போல, முதியவர்களை சுமையாகக் கருதும் மனப்போக்குகள் இதுபோல இப்போது ஆங்காங்கே அதிகரித்துத்தான் வருகின்றன என நினைக்கத் தோன்றுகிறது. காலம் மாற மாற கலாச்சாரங்களும் மாறி வருகின்றன.

   //படுக்கையில் விழுந்தவர் விரைவில் இறந்தால் பிழைத்தார்; இல்லையேல் அவர் செத்தார் என்பது மிகச்சரி. இங்கு பிழைத்தார், செத்தார் என்பதற்கான அர்த்தம் அப்படியே எதிர்ப்பதத்தில் மாறி வருவதை எங்கள் பிளாக்கில் வாசித்த போதே ரசித்தேன்.//

   என் சொல்லாடலில், தங்களின் இந்த ஸ்பெஷல் ரஸனைக்கு என் நன்றிகள், மேடம்.

   //திரு கோபு சார் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மையே. இது தான் இன்றைய யதார்த்தம். அருமையான ஒரு பின்னூட்டம் கொடுத்து எல்லாரையும் சிந்திக்க வைத்திருக்கும் திரு கோபு சாருக்குப் பாராட்டுக்கள். தனியொரு பதிவாக வெளியிட்ட திரு கந்தசாமி ஐயாவுக்கு நன்றி.//

   ஏதோ என் சொந்த அனுபவத்தில், என் பார்வையில் பட்டுள்ள பல முதியோர்களின் நிலைமையைக் கண்டும், அவர்களின் மன வருத்தங்களைக் காதால் கேட்டும், நான் இவ்வாறு சில முடிவுகளுக்கு வந்து அதனைப் பின்னூட்டமாக எழுதும்படி ஆகிவிட்டது. இதனை இவ்வாறு பின்னூட்டமாக எழுதி வெளியிடலாமா வேண்டாமா என்றே பல மணி நேரம் யோசித்துக்கொண்டு இருந்தேன். இதனால் யார் மனமாவது புண்படுமோ எனவும் நினைத்துத் தயங்கினேன். இது மிகவும் இன்றைய யதார்த்தங்களைச் சொல்லும் அருமையான பின்னூட்டம் என தாங்களே சொல்லியுள்ளதில் சற்றே ஆறுதல் பட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 15. very well said. Only those who are in this stage can realise it very correctly.
  I think it is been writtem but for me.
  vijayalakshmi

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. viji வியாழன், 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:47:00 IST

   வாங்கோ விஜி மேடம். செளக்யமா இருக்கீங்களா? நாம் இருவரும் நமக்குள் தொடர்புகொண்டே பலநாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அடிக்கடி உங்களை நான் நினைத்துக்கொள்வதுண்டு.

   //very well said. மிக நன்றாகச் சொல்லப்பட்டுள்ளது.//

   மிக்க நன்றி.

   //Only those who are in this stage can realise it very correctly. இதுபோன்ற முதிர்ந்த நிலையில் உள்ளவர்களால் தான் இதனை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.//

   நாம் இருவருமே கிட்டத்தட்ட சமமான வயதினிலும், குடும்ப அனுபவங்களிலும் உள்ளதால், நான் எழுதியுள்ள இதனைத் தங்களால் மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி, விஜி.

   //I think it has been written for me. இது எனக்காகவே எழுதப்பட்டுள்ளதோ என நான் நினைக்கிறேன். vijayalakshmi//

   இது இன்றைய பொதுவான உலக யதார்த்தமாக இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை. யார் யார் முடிவு எப்படி விதிக்கப்பட்டுள்ளதோ!! எதையும் நம்மால் மாற்ற முடியப்போவதும் இல்லை. We (You & I) are sailing on the same boat ! அதனால் எதற்கும் கவலைப்படாதீங்கோ, விஜி .... ப்ளீஸ். - அன்புடன் கோபு

   நீக்கு
 16. இந்த பதிவுக்கு என்ன கமெண்ட் போட்டா சரியா இருக்கும். திரு.கோபால்ஸார் வயதிலும் அநுபவத்திலும் மூத்தவங்க. நன்கு யோசித்து எந்த இடத்தில் எதுபோல எழுத்தை கையாள வேண்டும் என்று நன்கு தெரிந்தவங்க. பெற்றோர் குழந்தைகளிடம் எந்த எதிர் பார்ப்பதும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சரியான விஷயம்தான்..அதை மறுப்பதற்கில்லை. ஒரு ஆணும் பெண்ணும் திருமணபந்தத்தில் இணைந்து தங்கள் சந்தோஷத்துக்காகத்தான் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.. சில வீடுகளில் குழந்தைகள் மேல கோபப்படும்போது. சில முரட்டு குழந்தைகள் கேட்டுடறாங்க. நானா என்னை பெத்துக்க சொன்னேன். உங்க சந்தோஷத்துக்காகத்தான் என்னை பெற்றுக்கொண்டீர்கள்.என்று..... அதேசமயம் குழந்தை பிறந்து தவழ்ந்து நடந்து மழலையில் கொஞ்சி பெற்றவர்களையும்..மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவதை மறுக்கவே முடியாது..சின்னவயசுல குழந்தைகளுக்கு தேவையான உணவு..உடை..கல்வி... அன்பு கொடுக்கிறோம். கடமைக்காகவோ பாசத்துக்காகவோ...அந்த குழந்தைகளால் பெற்றவர்களும் மற்றவர்களும் சந்தோஷப்பட்டுத்தான் இருக்காங்க.. வயசானவங்களுக்கு பிறகு பெரியவங்களுக்கு தன் பயம்..னு ஒன்னு எப்படியோ வந்து விடுகிறது. மகன் நம்மை கவனிப்பானோ மாட்டானோ வரும் மருமகள் எப்படி இருப்பாளோ என்று தேவை இல்லாத மன உளைச்சல்களை சந்திக்க வேண்டிய வருத்தம். யாரைச்சார்ந்தும் யாரும் இல்லை. யாரைநம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கதான்...... ஒவ்வொருவரும் தனிமனிதர்கள்தான். அவங்கவங்க வலி வேதனை அவங்கதான் தாங்கிக்கணும். என்னமோ சொல்வாங்களே பணத்தால் பட்க்கையைத்தான் வாங்க முடியும்...தூக்கத்தை வாங்க முடியாது.. மருந்து மாத்திரை வாங்க முடியும் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. உணவை வாங்க முடியும் பசியை வாங்க முடியாது...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப்பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள்...ஸாரின் ரிப்ளைகள் எல்லாம் நிதானமாக படிச்சபிறகு என்ன எழுதுவதுன்னு குழப்பம்தான். யாரைசார்ந்தும் யாரும் இருக்க வேண்டாம். எல்லா உயிர்களுமே தனி தனி தான். வெந்ததைத்தின்று வேளைவநுதால் போகப்போற உயிர்தான்..ஒருவரை ஒருவர் அநுசரித்து விட்டுக்கொடுத்து அர்த்த முள்ள வாழ்க்கையை அனைவரும் வாழலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... வெள்ளி, 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:09:00 IST

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த பதிவுக்கு என்ன கமெண்ட் போட்டா சரியா இருக்கும். திரு. கோபால் ஸார் வயதிலும் அநுபவத்திலும் மூத்தவங்க. நன்கு யோசித்து எந்த இடத்தில் எதுபோல எழுத்தை கையாள வேண்டும் என்று நன்கு தெரிந்தவங்க.//

   அடடா, ஏதேதோ இப்படிச் சொல்றீங்களே! மிகவும் கூச்சமாக இருக்குதுங்க! :)

   //பெற்றோர் குழந்தைகளிடம் எந்த எதிர் பார்ப்பதும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சரியான விஷயம்தான்.. அதை மறுப்பதற்கில்லை.//

   சில வயதான பெற்றோர்கள், பொருளாதார ரீதியாகவும், உடல்நிலை ரீதியாகவும், தாங்கள் பெற்ற பிள்ளைகளையோ / பெண்களையோ நம்பித்தான் வாழ வேண்டியதாக உள்ளது. என்ன செய்வது? அதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

   //ஒரு ஆணும் பெண்ணும் திருமணபந்தத்தில் இணைந்து தங்கள் சந்தோஷத்துக்காகத்தான் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள்..//

   ஆமாம். ஆக்சுவலாக திருமண பந்தம் என்பதே சந்தோஷம் கொள்ளத்தான் செய்து வைக்கப்படுகின்றன.

   இந்த சந்தோஷத்தின் அடையாளமாக பெரும்பாலோனருக்கு குழந்தைகளும் ஏற்பட்டு விடுகின்றன.

   >>>>>

   நீக்கு
  2. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (2)

   //சில வீடுகளில் குழந்தைகள் மேல கோபப்படும்போது. சில முரட்டு குழந்தைகள் கேட்டுடறாங்க. நானா என்னை பெத்துக்க சொன்னேன். உங்க சந்தோஷத்துக்காகத்தான் என்னை பெற்றுக்கொண்டீர்கள் என்று.....//

   இந்தக்காலத்தில் இதுவும் ஆங்காங்கே நாம் பார்ப்பதுதான் / கேட்பதுதான்.

   அந்தக் காலத்தில் பெற்றோர்களிடம் இதுபோலெல்லாம், நேருக்கு நேர் பேச முடியாமல் ஒருவித தயக்கமும் மரியாதையும் இருந்து வந்தன.

   //அதேசமயம் குழந்தை பிறந்து தவழ்ந்து நடந்து மழலையில் கொஞ்சி பெற்றவர்களையும்.. மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவதை மறுக்கவே முடியாது..//

   நிச்சயம் மறுக்கவே முடியாது. அது மட்டுமே, சிற்றின்பத்தால் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பேரின்பமாகும். :)

   >>>>>

   நீக்கு
  3. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (3)

   //சின்னவயசுல குழந்தைகளுக்கு தேவையான உணவு.. உடை.. கல்வி... அன்பு கொடுக்கிறோம். கடமைக்காகவோ பாசத்துக்காகவோ... அந்த குழந்தைகளால் பெற்றவர்களும் மற்றவர்களும் சந்தோஷப்பட்டுத்தான் இருக்காங்க..//

   ஆம். சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டதால், சந்தோஷம் அளிக்கும் அந்தக் குழந்தைகளுக்கு அவர்களின் 18-20 வயது வரை, உணவு, உடை, கல்வி, அன்பு எல்லாமே கொடுத்துத்தான் வளர்க்கப்பட வேண்டியுள்ளது. அதுதான் மிகவும் நியாயமும் கூட.

   //வயசானவங்களுக்கு பிறகு பெரியவங்களுக்கு தன் பயம்..னு ஒன்னு எப்படியோ வந்து விடுகிறது. மகன் நம்மை கவனிப்பானோ மாட்டானோ வரும் மருமகள் எப்படி இருப்பாளோ என்று தேவை இல்லாத மன உளைச்சல்களை சந்திக்க வேண்டிய வருத்தம்.//

   எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வது என்பது இதுதான்.

   >>>>>

   நீக்கு
  4. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (4)

   //யாரைச்சார்ந்தும் யாரும் இல்லை. யாரைநம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கதான்...... ஒவ்வொருவரும் தனிமனிதர்கள்தான். அவங்கவங்க வலி வேதனை அவங்கதான் தாங்கிக்கணும். என்னமோ சொல்வாங்களே பணத்தால் படுக்கையைத்தான் வாங்க முடியும்... தூக்கத்தை வாங்க முடியாது.. மருந்து மாத்திரை வாங்க முடியும் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. உணவை வாங்க முடியும் பசியை வாங்க முடியாது...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.//

   மிகவும் அழகழகான உதாரணங்களாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். அதே...அதே!

   >>>>>

   நீக்கு
  5. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (5)

   //இந்தப்பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள்... ஸாரின் ரிப்ளைகள் எல்லாம் நிதானமாக படிச்சபிறகு என்ன எழுதுவதுன்னு குழப்பம்தான்.//

   குழம்ப வேண்டிய அவசியமே இல்லை.

   ஏதோ எனக்குத் தோன்றியதை நான் எழுதினேன். அது இந்த முனைவர் கந்தசாமி ஐயாவைக் கவர்ந்துபோய், அவர் தனிப்பதிவாகவே வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

   அதற்கு அவரே எதிர்பாராத அளவுக்குப் பின்னூட்டங்கள் குவிந்து வருகின்றன.

   அவரவர்களுக்குத் தோன்றிடும், கருத்துக்களை அவரவர்களின் அனுபவத்தின் பேரில், அவரவர்கள் பின்னூட்டமாக எழுதி மேலும் இந்தப்பதிவினை சிறப்பித்து வருகின்றனர்.

   நானும் பொறுமையாக ஒவ்வொருவருக்கும் தகுந்தபடி பதில் அளித்தும் வருகிறேன். அவ்வளவுதான்.

   இங்கு கருத்தளிக்க யாருக்கும் தயக்கமோ, குழப்பமோ தேவையில்லை. இது ஒரு ஆரோக்யமான கலந்துரையாடல் மட்டுமே.

   >>>>>

   நீக்கு
  6. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (6)

   //யாரைசார்ந்தும் யாரும் இருக்க வேண்டாம். எல்லா உயிர்களுமே தனி தனி தான். வெந்ததைத்தின்று வேளைவந்தால் போகப்போற உயிர்தான்.. ஒருவரை ஒருவர் அநுசரித்து விட்டுக்கொடுத்து அர்த்த முள்ள வாழ்க்கையை அனைவரும் வாழலாம்...//

   மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தெளிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 17. கோபால் ஸாரின் பதிவுகளும் சரி ஒவ்வொருவருக்கும் அவங்க கொடுக்கும் பின்னூட்டங்களும் சரி.. படிக்குறவங்களை ரொம்ப யோசிக்க வைக்குது.அதே சமயம் ரசிக்கவும் வைக்குது.. யாரும் யாரும் சார்ந்நு இருக்க வேண்டாம் என்பது சரியான கருத்துதான்.. இளமை பருவத்தில் இருக்கும் உடல் வலிமையோ மன தைரியமோ... வயதாக ஆக குறைந்துதானே போகிறது. அதற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ளணும். சம்பாதிக்கும் காலத்திலேயே குழந்தைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதுடன் தனக்கும் தன்னை நம்பி இருக்கும் மனைவிக்கும் பாதுகாப்புக்காக ஒரு தொகை சேமித்து வைப்பது நல்லது. பணத்துக்காக யார் கையையும் எதிர் பார்க்க வேண்டியதில்லை. உடல் நலக்குறைவு எப்போது எந்த ரூபத்தில் வரும் என்று சொல்லவே முடியாது. அந்த நேரம் அன்பான பாசமான ஓரிரு வார்த்தைகளைத்தான் மனது எதிர்.பார்க்கும்
  இறக்குமு நேரம் தெரிந்தால் இருக்கும் நேரம் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள்... இருக்கும்வரை நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலாமே... கடமை பாசம் எல்லாமே பேச்சளவில்தான் இருக்கு. ஸார் சொல்லி இருப்பதுபோல ஒப்பாரி வைத்து அழக்கூட காசு கொடுத்து ஆள் பிடிக்கத்தான் வேண்டியிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்.......
   வெள்ளி, 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:07:00 IST

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //கோபால் ஸாரின் பதிவுகளும் சரி ஒவ்வொருவருக்கும் அவங்க கொடுக்கும் பின்னூட்டங்களும் சரி.. படிக்குறவங்களை ரொம்ப யோசிக்க வைக்குது.//

   அடாடா, நீங்க சொல்லும் இதுவும் என்னை மிகவும் யோசிக்கத்தான் வைக்குது.

   //அதே சமயம் ரசிக்கவும் வைக்குது..//

   அப்பாடா, அதுதான் மிகவும் முக்கியமாகும். மிகவும் சந்தோஷம் :)

   >>>>>

   நீக்கு
  2. VGK >>>>> ஆல் இஸ் வெல் (2)

   //யாரும் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்பது சரியான கருத்துதான்.. //

   அது எப்படி சேராமலும், சாராமலும் தனித்து இருக்க முடியும்? அப்படியிருந்தால் வாழ்க்கையே வெறுத்துப்போய் விடுமே.

   //இளமை பருவத்தில் இருக்கும் உடல் வலிமையோ மன தைரியமோ... வயதாக ஆக குறைந்துதானே போகிறது. அதற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ளணும். சம்பாதிக்கும் காலத்திலேயே குழந்தைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதுடன் தனக்கும் தன்னை நம்பி இருக்கும் மனைவிக்கும் பாதுகாப்புக்காக ஒரு தொகை சேமித்து வைப்பது நல்லது. பணத்துக்காக யார் கையையும் எதிர் பார்க்க வேண்டியதில்லை.//

   இது மிகவும் முக்கியமான + அவசியமானதோர் நல்ல ஆலோசனை. நம் ஒவ்வொருவரின் வருமானத்திலும் சேமிப்பு ஒன்றே முதல் செலவாக இருக்க வேண்டும்.

   வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, ஒரேயடியாகக் கஞ்சனாகவும் இல்லாமல், சற்றே முடிந்தவரை சிக்கனமாக வாழ்ந்து சேமித்துக்கொள்வது மிகவும் நல்லது.

   >>>>>

   நீக்கு
  3. VGK >>>>> ஆல் இஸ் வெல் (3)

   //உடல் நலக்குறைவு எப்போது எந்த ரூபத்தில் வரும் என்று சொல்லவே முடியாது.//

   மிகவும் கரெக்ட். அது நாமே எதிர்பாராமல், எந்த ரூபத்திலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்தான். நம்மால் முடிந்தவரை முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முயற்சிக்கலாம்.

   //அந்த நேரம் அன்பான பாசமான ஓரிரு வார்த்தைகளைத்தான் மனது எதிர்பார்க்கும்.//

   அதுவும் குறிப்பாக ஒருசிலரிடமிருந்தே நம் மனது, இந்த அன்பான பாசமான ஓரிரு வார்த்தைகளை மிக அதிகமான நம்பிக்கைகளுடன் எதிர்பார்க்கும். அந்த எதிர்பார்ப்பும் சமயத்தில் ஏமாற்றமாகி விடும் போதுதான், நம் மனம் மிகவும் துவண்டு போய்விடும்.

   >>>>>

   நீக்கு
  4. VGK >>>>> ஆல் இஸ் வெல் (4)

   //இறக்கும் நேரம் தெரிந்தால் இருக்கும் நேரம் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள்...//

   அது என்னவோ மறுக்க முடியாததோர் உண்மைதான். எந்தக் குடும்பத்திலும் பிறக்கும் சீனியாரிடி படி யாருக்கும் இறப்பு அமைவது இல்லை.

   சென்ற மாதம் பெங்களூரிலிருந்து ஒருவர் தன் மனைவி + 9 வயது ஒரே மகனுடன், தன்னுடைய வயதான + உடல்நிலை சரியில்லாமல், மிகவும் சீரியஸ் ஆக உள்ள பெற்றோர்களை கும்பகோணம் அருகேயுள்ள ஸ்வாமிமலை என்ற ஊரில் சந்திக்க காரில் புறப்பட்டு வந்தார். அவரும் அவரின் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை ஆவார்.

   ஜெயங்கொண்டம் அருகே வந்தபோது கார் விபத்துக்கு உள்ளாகி, தாய் தந்தையரைப் பார்க்கப் புறப்பட்டு வந்தவரே காலமாகிவிட்டார். இந்தக்கொடுமையை என்னவென்று சொல்வது?

   //இருக்கும்வரை நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலாமே...//

   நிச்சயமாக இவ்வாறு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அனைவரும் முயற்சிக்கலாம்.

   >>>>>

   நீக்கு
  5. VGK >>>>> ஆல் இஸ் வெல் (5)

   //கடமை பாசம் எல்லாமே பேச்சளவில்தான் இருக்கு.//

   கலிகாலம் அப்படித்தான் இருக்கும். இன்றைய வாழும் சூழல் [Life Style] அவ்வாறு அனைவரையும் மாற்றி விட்டுள்ளது. யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. பொறுமை இல்லை. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், எவ்வளவு சொத்து சேர்த்துக்கொண்டாலும் திருப்தி என்பது இல்லை.

   RICHNESS
   is not Earning More, Spending More Or Saving More,
   but
   "RICHNESS IS WHEN YOU NEED NO MORE"

   http://gopu1949.blogspot.in/2013_11_01_archive.html

   >>>>>

   நீக்கு
  6. VGK >>>>> ஆல் இஸ் வெல் (6)

   //ஸார் சொல்லி இருப்பதுபோல ஒப்பாரி வைத்து அழக்கூட காசு கொடுத்து ஆள் பிடிக்கத்தான் வேண்டியிருக்கு.//

   இதனை நான் மிகவும் சமீபத்தில்தான் கேள்விப்பட்டு அறிந்துகொண்டேன். என்னால் இதனை உண்மை என்றே முதலில் நம்பவே முடியவில்லை. பிறகு அது சில இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறும் யதார்த்தமான செயல்தான் என்பதை அறிந்ததும், மிகவும் மன வேதனை அடைந்தேன்.

   -=-=-=-

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
 18. பதிவுக்கு எடுத்துக்கொண்ட விஷயமும்.. பின்னூட்டங்கள்...ரிப்ளை பின்னூட்டங்கள் படித்து ... உருப்படியான நல்ல ஒரு கலந்துரையாடலாகவே நினைக்க முடிகிறது. இது ஒரு ஆரோக்யமான விஷயம்தான். அவரவர் கருத்தை சுதந்திரமாக இங்கு பதிவு செய்து...தகுந்த பதிலும் கிடைக்கிறது. இதுபோல விஷயங்களை கலந்துரையாடல்மூலம் .... தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது. பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத நிகழ்வுதான்.. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது... பழயன கழிதலும் புதியன புகுதலும்தானே யதார்த்தம். அதை அழகாக இந்த பகிர்வு உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீனி வாசன் சனி, 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:30:00 IST

   வாங்கோ, வணக்கம்.

   //பதிவுக்கு எடுத்துக்கொண்ட விஷயமும்.. பின்னூட்டங்கள்... ரிப்ளை பின்னூட்டங்கள் படித்து ... உருப்படியான நல்ல ஒரு கலந்துரையாடலாகவே நினைக்க முடிகிறது.//

   அச்சா .... பஹூத் அச்சா ! :)

   //இது ஒரு ஆரோக்யமான விஷயம்தான். அவரவர் கருத்தை சுதந்திரமாக இங்கு பதிவு செய்து... தகுந்த பதிலும் கிடைக்கிறது. இதுபோல விஷயங்களை கலந்துரையாடல்மூலம் .... தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது.//

   ஆமாம். இதனைக்கேட்க மிகவும் சந்தோஷமே.

   //பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத நிகழ்வுதான்.. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது... பழயன கழிதலும் புதியன புகுதலும்தானே யதார்த்தம். அதை அழகாக இந்த பகிர்வு உணர்த்துகிறது.//

   யதார்த்தமான விஷயங்களைத் தாங்களும் அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   நீக்கு
 19. //உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியிறுத்திச் சொல்லிக்கொள்கிறேன். //

  பெரிப்பா நீங்களே இப்டிலாம் சொல்லலாமா மத்த குடும்பங்களில் எப்படியோ. “நம்ம” மாதிரி குடும்பங்களில் அன்பும் பாசமும் அடி மனசுல இருந்து வர விஷயமில்லையா. யாரு சொல்லியும் யாரு மேலயும் அன்பு காட்டவோ வெறுப்ப காட்டவோ முடியாது. அடி மனசிலேந்து வரணும்…
  உதாரணத்துக்கு உங்க கிட்டேந்தே ஒரு விஷயம் சொல்றேன். கொஞ்ச நாள் முன்ன உங்க ஒரு பதிவு படிக்க கிடைச்சது.. பெரிம்மா பத்தி ரொம்ப உயர்வாகவும் பாராட்டுதலாகவும் சொல்லி இருந்தீங்க. எப்ப நான்.சாப்பிட என்ன கேட்டாலும் எந்த நேரமாக இருந்தாலும் முகம் சுளிக்காம செய்து தருவா என் பசி ருசி அறிந்தவ என் மனைவின்னு சொல்லி இருந்தீங்க. பெரிம்மா அப்படி பண்ணி தந்தது உங்கமேல உள்ள அன்பாலயும் பாசத்தாலயும்தானே. இதுல எங்கேந்து வெளி வேஷம் வந்தது.
  இன்னொரு பதிவுல உங்களைவிட அதிக வித்யாசமுள்ள உங்க பெரியக்கா பத்தி சொல்லி இருந்தீங்க. உங்க மேல அவங்களுக்கு அளவுகடந்த அன்பும் பாசமும் இப்பவும் உண்டுனு. சின்ன வயசுல உங்கள பள்ளிக்கூடம் கூட்டிண்டு போறதிலேந்து உங்களை அன்பா கவனிச்சவங்க அவங்கதான்னும் சொல்லி இருந்தீங்க. இதுல யாருக்கும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்ல. இதை எப்படி வெளி வேஷமா நினைக்க முடியும்.
  இன்னமும் சொல்ல தோணறது………..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy ஞாயிறு, 6 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:27:00 IST

   **உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியிறுத்திச் சொல்லிக்கொள்கிறேன்.**

   //பெரிப்பா நீங்களே இப்டிலாம் சொல்லலாமா?//

   வா....... டா என் செல்லக்குழந்தாய், ஹாப்பி.

   //மத்த குடும்பங்களில் எப்படியோ. “நம்ம” மாதிரி குடும்பங்களில் அன்பும் பாசமும் அடி மனசுல இருந்து வர விஷயமில்லையா.//

   அப்படியும் இருக்கலாம். இப்போதும் “நம்ம” மாதிரி குடும்பங்கள் சிலவற்றில் அது போல இருப்பதாக உனக்கும் உன்னைப்போன்ற சில இளம் வயது பெண் குழந்தைகளுக்கும் தோன்றலாம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> ஹாப்பி (2)

   //யாரு சொல்லியும் யாரு மேலயும் அன்பு காட்டவோ வெறுப்ப காட்டவோ முடியாது. அடி மனசிலேந்து வரணும்… //

   உன் அடிமனசிலிருந்து வந்துள்ள இந்தக்கருத்துக்கள் என்னை மிகவும் வியக்கச்செய்து விட்டன. சபாஷ்....டா செல்லம்.

   என் நெகடிவ் கருத்துக்கு, மிகவும் பாஸிடிவ் ஆன மாற்றுக்கருத்துச் சொல்லியுள்ள உனக்கு முதற்கண் என் ஸ்பெஷல் பாராட்டுகள்......டா.

   நானும் உன்னைப்போல 20+ வயதில் இருந்தபோது இதைப்போலவேதான் + இதையும்விடக் கூடுதலாகவேதான் பாஸிடிவ் ஆக நினைத்துக் கொண்டிருந்தேன்.

   இப்போது நான் 60+ சீனியர் ஸிடிஸன் ஆகியிருப்பதால், உலகத்தைப்பற்றிய என் பார்வை மேலும் நன்கு உள்வாங்கி, ஊடுறுவி, விஸ்தாரமாகியும் விட்டதாலும், சில கசப்பான உண்மைகளைப் புரிந்துகொண்டுள்ளதாலும், இதுபோல என்னை எழுத வைத்துள்ளது.

   மேலும் நான் சொல்லியுள்ளது, என் இன்றைய பார்வையில் + அனுபவங்களில் என் சொந்தக்கருத்து மட்டுமே.

   உன்னைப் போன்ற இளசுகளின் பார்வையில் அன்பும் பாசமும் போலியில்லாமல் மிக அழகாகத் தெரிவது கேட்க எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.......ப்பா.

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> ஹாப்பி (3)

   //உதாரணத்துக்கு உங்க கிட்டேந்தே ஒரு விஷயம் சொல்றேன். கொஞ்ச நாள் முன்ன உங்க ஒரு பதிவு படிக்க கிடைச்சது.. பெரிம்மா பத்தி ரொம்ப உயர்வாகவும் பாராட்டுதலாகவும் சொல்லி இருந்தீங்க. எப்ப நான் சாப்பிட என்ன கேட்டாலும் எந்த நேரமாக இருந்தாலும் முகம் சுளிக்காம செய்து தருவா; என் பசி ருசி அறிந்தவ என் மனைவின்னு சொல்லி இருந்தீங்க. பெரிம்மா அப்படி பண்ணி தந்தது உங்கமேல உள்ள அன்பாலயும் பாசத்தாலயும்தானே. இதுல எங்கேந்து வெளி வேஷம் வந்தது.//

   ’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று சொல்லுவார்கள். இன்றுவரை சூதுவாது தெரியாத, மிகவும் அப்பாவியான (INNOCENT), ஸாத்வீக குணங்கள் மட்டுமே கொண்டுள்ள உன் பெரிம்மா எனக்குக் கிடைத்துள்ளது, நான் செய்துள்ள ஏதோவொரு அதிர்ஷ்டம் என்றே இன்னமும் நான் நினைக்கிறேன். ’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்று சொல்லுவார்கள்.

   நான் நள்ளிரவு ஒரு மணிக்கு, சுடச்சுட பஜ்ஜி கேட்டாலும், வெங்காய தூள் பக்கோடா கேட்டாலும், உடனே முகம் கோணாமல் ஆசையாக எனக்கு அன்று செய்துகொடுத்தவள்தான். நான் அவற்றையெல்லாம் நான் மறைக்கவோ மறுக்கவோ இல்லை. அது ஒரு பொற்காலம். இனிமை ததும்பிய இன்பமான நாட்கள் ..... அவை.

   இன்று அவளின் உடல்நிலையாலும், என் உடல்நிலையை உத்தேசித்தும் அவளாலும் செய்து தர இயலாமல் உள்ளது. என் உடல்நிலையால் நானும் அதையெல்லாம் கேட்டு அவளுக்கு அவஸ்தைகள் கொடுக்கவோ, சாப்பிட்டு என் உடம்பைக் கெடுத்துக்கொள்ளவோ விருப்பம் இல்லாமல்தான் உள்ளது.

   கட்டுக்கடங்காமல் மிகவும் ஆசை ஏற்படும்போது இருவருமாக சேர்ந்தே கடையில் பஜ்ஜி-பக்கோடா என எதையும் வாங்கி இப்போதும் சாப்பிட்டுக்கொண்டுதான் வருகிறோம் என்பது தனிக்கதை.

   எதற்கும் ஆசைப்படாத அவளுடைய மிகச்சிறப்பான + விசித்திர + விசேஷ குணாதிசயங்களையும், ‘சுடிதார் வாங்கப் போறேன்’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள கதையொன்றில் அவளை ஓர் கதாபாத்திரமாகவே காட்டி சிறப்பித்துள்ளேன்.

   அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html தயவுசெய்து அவசியமாகப் படித்துப் பாரு. புரியும்.

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> ஹாப்பி (4)

   //இன்னொரு பதிவுல உங்களைவிட அதிக வயது வித்யாசமுள்ள உங்க பெரியக்கா பத்தி சொல்லி இருந்தீங்க. உங்க மேல அவங்களுக்கு அளவுகடந்த அன்பும் பாசமும் இப்பவும் உண்டுனு. சின்ன வயசுல உங்கள பள்ளிக்கூடம் கூட்டிண்டு போறதிலேந்து உங்களை அன்பா கவனிச்சவங்க அவங்கதான்னும் சொல்லி இருந்தீங்க. இதுல யாருக்கும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்ல. இதை எப்படி வெளி வேஷமா நினைக்க முடியும்.//

   ஆமாம். என் பெரிய அக்கா போல ஒருத்தியை நான் உலகம் பூராவும் வலைவீசித் தேடினாலும் என்னால் கண்டு பிடிக்கவே இயலாதுதான்.

   அவளின் படங்களும், சில முக்கியமான செய்திகளும் இதோ இந்தப்பதிவுகளில் என்னால் எழுதப்பட்டுள்ளன.

   https://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-01-03-first-prize-winners.html
   (சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு)

   http://gopu1949.blogspot.in/2013/10/62.html
   (அவர்கள் வீட்டில் வைத்துள்ள 2013-ம் ஆண்டு கொலுவுடன்)

   http://gopu1949.blogspot.in/2011/07/2.html
   (காரினை ஒட்டியுள்ள படத்தில், 9 கெஜம் மடிசார் புடவையில் ஹாரத்தி சுற்றுபவர்கள்)

   http://gopu1949.blogspt.in/2011/03/blog-post_09.html
   (பெயர் காரணம்)

   http://gopu1949.blogspot.in/2012/03/2.html
   (மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - பகுதி-2)

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> ஹாப்பி (5)

   இப்போதுகூட, இன்று 06.11.2016 ஞாயிறு இரவு, சுமார் 8 மணிக்கு, என் பெரிய அக்கா இங்கு நம் ஆத்துக்கு வந்து ஒரு மணி நேரம் மனம் விட்டுப் பேசிவிட்டுபோனாள்.

   மனோரக்கா, தேங்காய் வெல்லப் பூர்ணம், எள்ளுப்பொடி, முள்ளு முறுக்கு என எனக்குப் பிடித்தவற்றைக் கொடுத்துவிட்டுப் போனாள்.

   இன்று 77 வயதாகும் அவளுக்கும், 87 வயதாகும் அவள் கணவருக்கும் கல்யாணம் ஆகி வரும் 14.11.2016 அன்று 60 வருடங்கள் ஆகப்போகிறது.

   சீர் வரிசையுடன் போய் சிறப்பித்து வர நினைத்துள்ளேன். :)

   >>>>>

   நீக்கு
  6. கோபு >>>>> ஹாப்பி (6)

   //இன்னமும் சொல்ல தோணறது………..//

   நீ இவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் நினைவு வைத்துக்கொண்டு சொல்லியுள்ளதே என்னை பிரமிக்க வைத்துள்ளது......டா, தங்கம்.

   இருப்பினும் புராண பக்திக் கதைகளில் ஈடுபாடுகொண்டுள்ள உனக்கு ஒன்றை நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

   நாம் இன்றுள்ள நிலைமையில் ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டியுள்ளது.

   இதையே நான் எழுதியுள்ள ‘அஞ்சலை’ என்ற கதையைப் படித்தால் நீ நன்கு உணரலாம். அதற்கான இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html

   மஹா பாரதக்கதையிலும் குந்திதேவி, தன் ஒரு மகனான அர்ஜுனனை உயிருடன் தக்க வைத்துக்கொள்ள, தன் மற்றொரு மகனான கர்ணன் என்பவனை இழக்க நேரிடுகிறது, என்பது உனக்கே தெரிந்திருக்கும்.

   பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் செய்த லீலைகள் என்றாலும், பாசமாவது ... பந்தமாவது .......... என அனைத்துக்கும் ஓர் ஸ்டேஜில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

   புராணக்கதைகளில் வரும் அப்பேர்ப்பட்ட மஹாத்மாக்களின் நிலைமையே இப்படி என்றால், மிகச் சாதாரண மனிதர்களாகிய நம் நிலையை என்னவென்று சொல்வது?

   நான் சொல்லும் இவையெல்லாம், உனக்குப் போகப்போக, வயதாக வயதாக மட்டுமே, முற்றிலுமாக, உன் சொந்த உலக அனுபவங்களிலேயே தெரிந்துகொள்ள இயலும்.

   >>>>>

   நீக்கு
  7. கோபு >>>>> ஹாப்பி (7)

   உன் அன்பான வருகைக்கும், என்னுடன் உனக்கான வாத்ஸல்யத்துடனும் உரிமையுடனும் கூடிய ஆத்மார்த்தமான, அழகிய, யோசிக்க வைக்கும், புத்திசாலித்தனமான + ஆணித்தரமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ...... டா ...... ஹாப்பி.

   அன்புடன் உன் கோபு பெரிப்பா.

   -oOo-

   நீக்கு

 20. //நானும் உன்னைப்போல 20+ வயதில் இருந்தபோது இதைப்போலவேதான் + இதையும்விடக் கூடுதலாகவேதான் பாஸிடிவ் ஆக நினைத்துக் கொண்டிருந்தேன். //

  ஆமா பெரிப்பா...என் வயசுக்கு போதிய அநுபமோ பக்குவமோ இல்லைதான்..

  மஹா பாரதத்திலேந்து சில விஷயங்கள் சொல்லி இருக்கேள். எனக்கும் ஒரு விஷயம் படிச்ச நினைவு இப்ப வரது.... துரியோதனன் நகர்வலம் போய்வந்ததும்..தன் குருநாதரிடம் என்கண்ணுக்கு நல்லவன்களே தென்படலே. எல்லாரும் மோசமானவங்களாதான் தெரியறாங்கனு சொன்னாறாம்

  அதுவே தர்மரும் நகர்வலம் போய் வந்து குருநாதரிடம்.. ஓன்கண்ணில் மோசமானமான்னு யாருமே தென்படலையே. எல்லாருமே நல்லவர்களாகத்தானே தெரிகிறார்கள் என்றாறாம்...

  இதிலிருந்து என்ன புரிஞ்சுக்க முடியறது.. அவரவர் அநுபவத்தில் அவரவர் கண்ணோட்டம் அமைஞ்சிருக்கு..

  இங்க பின்னூட்டம் போட்டிருக்கவா எல்லானுமே உங்க கருத்துக்கு ஆதரவாதான் எழுதியிருக்கா.அவரவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. கூடவும் கூடாது. இங்க எல்லாருக்குமே எழுத்து சுதந்திரம் கருத்து கூறும் சுதந்திரம் இருக்கு..

  இன்னும் சொல்லலாமா..????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy திங்கள், 7 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:43:00 IST

   வாம்மா ........ என் பட்டுக்குட்டி ஹாப்பி.

   **நானும் உன்னைப்போல 20+ வயதில் இருந்தபோது இதைப்போலவேதான் + இதையும்விடக் கூடுதலாகவேதான் பாஸிடிவ் ஆக நினைத்துக் கொண்டிருந்தேன்.**

   //ஆமா பெரிப்பா...என் வயசுக்கு போதிய அநுபவமோ பக்குவமோ இல்லைதான்..//

   அப்படியெல்லாம் நினைக்காதே, சொல்லாதே. உன்னிடம் அனைத்துத் திறமைகளும், அசாத்யமான அறிவும், ஆற்றலும், மிகவும் பக்குவமாகவும், அழகாகவும், அசத்தலாகவும் கச்சிதமாகவே அமைந்துள்ளன.

   அவை ஒவ்வொன்றிலும் உன்னால் தூவப்பட்டுள்ள சொக்குப்பொடியில்தான் நானும் அப்படியே மயங்கிப்போய், உன்னை என் நெருங்கிய நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டுள்ளேனாக்கும்.

   In fact உன்னை ஆலமரம் போன்ற எங்களின் மிகப்பெரிய குடும்பத்திற்குள் எப்படியாவது கொண்டுவந்து நுழைத்துக்கொண்டு விடணும் என மிகவும் ஆசைப்பட்டேன். அதற்குத்தான் எனக்குப் ப்ராப்தம் இல்லாமல் போய்விட்டது.

   சரி பரவாயில்லை. உன் மனதின் விருப்பப்படியே அது நடக்கட்டும் என நானும் ஒதுங்கிக்கொண்டு, பிறகு உனக்காக பிரார்த்தித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> ஹாப்பி (2)

   //மஹா பாரதத்திலேந்து சில விஷயங்கள் சொல்லி இருக்கேள். எனக்கும் ஒரு விஷயம் படிச்ச நினைவு இப்ப வரது.... துரியோதனன் நகர்வலம் போய்வந்ததும்.. தன் குருநாதரிடம் என்கண்ணுக்கு நல்லவன்களே தென்படலே. எல்லாரும் மோசமானவங்களாதான் தெரியறாங்கனு சொன்னாறாம்

   அதுவே தர்மரும் நகர்வலம் போய் வந்து குருநாதரிடம்.. ஓன்கண்ணில் மோசமானமான்னு யாருமே தென்படலையே. எல்லாருமே நல்லவர்களாகத்தானே தெரிகிறார்கள் என்றாறாம்...

   இதிலிருந்து என்ன புரிஞ்சுக்க முடியறது.. அவரவர் அநுபவத்தில் அவரவர் கண்ணோட்டம் அமைஞ்சிருக்கு..//

   நான் ஒரு உதாரணம் சொன்னால், நீ மிகப்பெரிய ப்ரும்மாஸ்திரத்தையே போட்டு என்னை வீழ்த்தி விட்டாய்.

   மகனிடமோ, மகளிடமோ, பேரனிடமோ, பேத்தியிடமோ தோல்வி அடைவதைப்போன்ற ஒரு மகிழ்ச்சியோ வெற்றியோ இருக்கவே முடியாது என நினைப்பவன் நான்.

   அதனால் உன் இந்தக்கருத்து, என்னை அப்படியே வென்று விழுங்கியே விட்டது. இதை உன் மூலம் கேட்கும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீ சமத்தோ சமத்து + மஹா கெட்டிக்காரி என்பதை நினைக்க எனக்குப் பெருமையாக உள்ளது.

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> ஹாப்பி (3)

   //இங்க பின்னூட்டம் போட்டிருக்கவா எல்லாருமே உங்க கருத்துக்கு ஆதரவாதான் எழுதியிருக்கா. அவரவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. கூடவும் கூடாது. இங்க எல்லாருக்குமே எழுத்து சுதந்திரம் கருத்து கூறும் சுதந்திரம் இருக்கு..//

   கரெக்டூஊஊஊஊ .... டா செல்லக்குட்டி.

   //இன்னும் சொல்லலாமா..????//

   நீ உன் மழலை மொழியில் எதை வேண்டுமானாலும், உன் பெரிப்பாவிடம் சொல்லிக்கொண்டே போகலாம். நான் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்று மகிழ்வேன்.

   இருப்பினும் இங்கு நீ எனக்குக் கொடுத்துள்ள ப்ரும்மாஸ்திரம் மட்டுமே போதுமோ என்று நினைக்கத்தோன்றுகிறது. இருப்பினும் உன் ஆசைப்படி, திருப்தியாக இன்னும் என்ன சொல்ல நினைக்கிறாயோ அவற்றை தாராளமாகச் சொல்லலாம் :)))))

   நீக்கு
 21. //இன்று 77 வயதாகும் அவளுக்கும், 87 வயதாகும் அவள் கணவருக்கும் கல்யாணம் ஆகி வரும் 14.11.2016 அன்று 60 வருடங்கள் ஆகப்போகிறது.

  சீர் வரிசையுடன் போய் சிறப்பித்து வர நினைத்துள்ளேன். :)//

  என் நமஸ்காரங்களையும் அத்தயிடமும்சொல்லிடுங்கோ...பெரிப்பா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy திங்கள், 7 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:46:00 IST

   **இன்று 77 வயதாகும் அவளுக்கும், 87 வயதாகும் அவள் கணவருக்கும் கல்யாணம் ஆகி வரும் 14.11.2016 அன்று 60 வருடங்கள் ஆகப்போகிறது.

   சீர் வரிசையுடன் போய் சிறப்பித்து வர நினைத்துள்ளேன். :)**

   //என் நமஸ்காரங்களையும் அத்தயிடமும் சொல்லிடுங்கோ...பெரிப்பா...//

   நிச்சயமாகச் சொல்லி விடுகிறேன், ஹாப்பி.

   நல்லவேளையாக உன் போட்டோவை, உன் அத்தையிடம் நான் இதுவரைக் காட்டவே இல்லை. இல்லாதுபோனால் உன் அத்தை என்னை நச்சரித்து, உன் ஊருக்கே என்னைவிட்டுத் தன்னையும் கூட்டிப்போகச் சொல்லி, உன் அப்பா, அண்ணா, மன்னி, பாட்டிகள் முதலிய எல்லோருடைய அனுமதியையும் பெற்று, உன்னை நாங்கள் இந்நேரம் கடத்திக் கொண்டே வந்திருப்போமாக்கும். புரிகிறதா? :))))))))))))))))))))

   எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அதனால் நல்லவேளை நீ தப்பித்தாய். எல்லாம் கடவுள் செயல் .... நடப்பது எல்லாம் நாராயணன் செயல். யார் தாலியை யார் கட்ட முடியும்?

   நீக்கு
 22. நான் உங்க கூட பழக ஆரம்பிச்சு சுமாரா மூணு நாலு மாசமிருக்குமா...... அதற்குள்ள எப்படி என்மேல இவ்வளவு அன்பும் வாத்சல்யமும் வைக்க முடிஞ்சது உங்களால.....எனக்கு எதானும் பிரச்சனைனு வந்தால் உங்க கிட்ட என்னால வெளிப்படையா எப்படி சொல்லிக்க முயறது... உடனே நீங்களும் என் நன்மைக்காக மனப்பூர்வமாக கடவுளிடம் எப்படி பிரார்ர்த்தனுைபண்ண முடியறது இதெல்லாம் எதில் சேர்த்தி. ஆத்மார்த்தமான அன்பில் சேராதா.. எனக்கு மட்டுமில்லை உங்க நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரையுமே அன்பினால் அரவணைச்சுண்டு இருக்கேளே. முன்னா பார்க்கில் "சிலர்" சொல்லி இருக்காங்க... உங்களாலதான் உங்க ஆசிர்வாதத்தாலதான் அவங்களுக்கு நல்ல கல்யாண வாழ்க்கை சந்தோஷம்... வசதிகள் கிடைச்சிருக்குனு.. இதெல்லாம் ஆத்மார்த்தமான அன்பினால் இல்லைனு சொல்லுவீங்களா.... என்கிட்டயோ மத்தவங்க கிட்டயோ உங்களுக்கு எந்த வித எதிர்பார்ப்புமே கிடையாது....
  உங்க கருத்துக்கு மாறாக நிறைய எதிர் கருத்த பதிவு பண்ணிட்டேன் ஸாரி பெரிப்பா.. சின்ன பொண்ணு தானே இவளுக்கு தெரிந்தது இவ்வளவு தான்னு விட்டுடுங்கோ.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //happy திங்கள், 7 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:59:00 IST

   வாம்மா ..... ஹாப்பி

   //நான் உங்க கூட பழக ஆரம்பிச்சு சுமாரா மூணு நாலு மாசமிருக்குமா...... அதற்குள்ள எப்படி என்மேல இவ்வளவு அன்பும் வாத்சல்யமும் வைக்க முடிஞ்சது உங்களால.....எனக்கு எதானும் பிரச்சனைனு வந்தால் உங்க கிட்ட என்னால வெளிப்படையா எப்படி சொல்லிக்க முடியறது... உடனே நீங்களும் என் நன்மைக்காக மனப்பூர்வமாக கடவுளிடம் எப்படி பிரார்ர்த்தனுைபண்ண முடியறது.. இதெல்லாம் எதில் சேர்த்தி. ஆத்மார்த்தமான அன்பில் சேராதா..//

   அது என்னவோ எனக்கும் தெரியலே. ஜன்ம ஜன்மமாக ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள ஏதோ நெருங்கிய உறவினராக நாம் இருந்திருப்போமோ என்னவோ. உன்னிடம் பேசி என்னால் ஜெயிக்கவே முடியாது.....டா செல்லம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> ஹாப்பி (2)

   //எனக்கு மட்டுமில்லை உங்க நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரையுமே அன்பினால் அரவணைச்சுண்டு இருக்கேளே. முன்னா பார்க்கில் "சிலர்" சொல்லி இருக்காங்க... உங்களாலதான் உங்க ஆசிர்வாதத்தாலதான் அவங்களுக்கு நல்ல கல்யாண வாழ்க்கை சந்தோஷம்... வசதிகள் கிடைச்சிருக்குனு.. இதெல்லாம் ஆத்மார்த்தமான அன்பினால் இல்லைனு சொல்லுவீங்களா.... என்கிட்டயோ மத்தவங்க கிட்டயோ உங்களுக்கு எந்த வித எதிர்பார்ப்புமே கிடையாது....//

   நீ சொல்லியுள்ள எல்லாமே மிகவும் நியாயமாகத்தான் எனக்கும் தோன்றுகிறது. யாராக இருந்தால் என்னம்மா..... நம்முடன் நெருங்கிப்பழகிடும், எல்லோரும் செளக்யமாக, க்ஷேமமாக, சந்தோஷமாக, மன நிம்மதியுடன் இருக்கணும் என்றே எப்போதும் நான் என் மனதில் நினைப்பேன். அதுபோல எல்லோருக்காகவும் நான் பிரார்த்தனைகளும் செய்துகொள்வேன். அது என் வழக்கம்.

   ‘லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ என்றுதானே நம் முன்னோர்களாலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இதில் எனக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?

   உங்களில் பலரையும் நான் இன்னும் நேரில் பார்த்ததுகூட இல்லை. இனி என் வாழ்நாளுக்குள் பார்க்க முடியுமா என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாமல் உள்ளது.

   உன்னைப்போல இதுவரை சுமார் 50 பேர்கள் என்னிடம், மிகுந்த வாத்ஸல்யத்துடன் ஆத்மார்த்தமாகப் பழகியுள்ளார்கள். சுக துக்கங்கள் அனைத்தையும் என்னிடம் பகிர்ந்துகொண்டு, என் ஆசிகளையும், ஆறுதல்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர். எனக்கு இதெல்லாம் விலைமதிப்பற்ற மிகப்பெரிய சொத்து + பொக்கிஷங்கள் அல்லவா !

   நாளைக்கு எனக்கே ஏதாவது ஒன்று என்றாலும், முன்பின் பார்த்தறியாத நட்புக்களில் குறைந்தது 100 கண்களிலிருந்தாவது இரண்டு சொட்டுக் கண்ணீர் தானாகவே வெளிவரும் அல்லவா!

   நெருப்பு என்று சொல்வதால் வாய் வெந்துவிடாது. அதனால் நீ இதற்கெல்லாம் கவலைப்படாதே. உன் கல்யாணத்தைப் பார்க்க நான் எப்படியும் நேரில் ஆஜராகி விடுவேனாக்கும். :)))))

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> ஹாப்பி (3)

   //உங்க கருத்துக்கு மாறாக நிறைய எதிர் கருத்த பதிவு பண்ணிட்டேன் ஸாரி பெரிப்பா.. சின்ன பொண்ணு தானே இவளுக்கு தெரிந்தது இவ்வளவு தான்னு விட்டுடுங்கோ.....//

   விட மாட்டேன் எங்கட சின்னப் பொண்ணான உன்னை.

   முன்பு என் பிள்ளைகளும், இப்போது என் பேரக்குழந்தைகளும் என் முதுகில் குத்திக்கொண்டே இருப்பார்கள். அது வலிக்கவே வலிக்காது. ஓர் தனி சுகமாகவும், உடம்புக்கு இதமாகவும் இருக்கும்.

   அதுபோலத்தான் என் கருத்துக்கு மாறாக நீ இங்கு கொடுத்திருக்கும் நிறைய எதிர்கருத்துக்களும்.

   ’ஸாரி’யெல்லாம் எனக்கு வேண்டாம் .... நான் வேஷ்டி அல்லது பேண்ட் மட்டுமே அணிவது உண்டு. அதனால் அந்த உன் ஸாரியை நீயே கட்டிக்கொள்ளுடா, தங்கம். :)))))

   நீக்கு
 23. கிஷ்ணாஜி...நமஸ்தே... இங்க போட்டிருக்கும் பதிவு கொஞ்சம் ஹெவி ஸப்ஜெக்டா தோணிச்சி. தினசரி கமெண்டெல்லாம் படிச்சிட்டுதான் இருக்கேன். என்கருத்தை சொல்ல கொஞ்சம் தயக்கமா இருந்திச்சி. ஏன் தெரியுமா கமெண்ட் போட்டிருப்பவங்க எல்லாருமே உங்க கருத்துக்கு சப்போர்ட்டாதான் கருத்து சொல்லி இருக்காங்க. என் கருத்து அவர்களிலினுந்து மாறுபடுது. சொன்னா எங்க தப்பாயிடுமோன்னு நினைச்சேன். இப்ப நம்ம ஹாப்பி கமெண்ட்&உங்க ரிப்ளை கமெண்ட் பாத்ததும் கொஞ்சம் தைரியம் வந்திச்சி.

  இப்பவும் பெத்தவங்களை தங்களின் பாதுகாப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து கொள்ளும் மகன்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. ஒட்டு மொத்தமா அன்பு பாசம் எல்லாம் வெளி வேஷம் என்பதை என்னாலும் ஏத்துக்க முடியலை.. சில விதிவிலக்கானவர்களும் இருக்காங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco திங்கள், 7 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:10:00 IST

   //கிஷ்ணாஜி... நமஸ்தே...//

   வாங்கோ மேடம், வணக்கம். இங்கும் தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

   //இங்க போட்டிருக்கும் பதிவு கொஞ்சம் ஹெவி ஸப்ஜெக்டா தோணிச்சி. தினசரி கமெண்டெல்லாம் படிச்சிட்டுதான் இருக்கேன்.//

   அப்படியா ! மிக்க மகிழ்ச்சி மேடம்.

   //என்கருத்தை சொல்ல கொஞ்சம் தயக்கமா இருந்திச்சி. ஏன் தெரியுமா கமெண்ட் போட்டிருப்பவங்க எல்லாருமே உங்க கருத்துக்கு சப்போர்ட்டாதான் கருத்து சொல்லி இருக்காங்க. என் கருத்து அவர்களிலிருந்து மாறுபடுது. சொன்னா எங்க தப்பாயிடுமோன்னு நினைச்சேன்.//

   இதில் தயக்கமே வேண்டாம் மேடம். மாற்றுக்கருத்துகள் என்னாலும், இந்தப் பதிவினை வெளியிட்டுள்ள பெரியவராலும் எப்போதுமே வரவேற்கப்படும். மனம் திறந்து சொல்லலாம். அதில் தப்பேதும் இல்லை மேடம்.

   >>>>>

   நீக்கு
  2. கிஷ்ணாஜி >>>>> ஷாமைன் மேடம் (2)

   //இப்ப நம்ம ஹாப்பி கமெண்ட் & உங்க ரிப்ளை கமெண்ட் பாத்ததும் கொஞ்சம் தைரியம் வந்திச்சி.//

   நம்முடைய குட்டிப்பெண் ஹாப்பி பேசியுள்ளதைக் கேட்டதும், தங்களுக்கும் தைர்யம் வந்திடுச்சி என்பதைக் கேட்கவே எனக்கும் ஹாப்பியோ ஹாப்பியாக உள்ளது, மேடம்.

   அவள் எவ்வளவு புத்திசாலி ..... பாருங்கோ. சும்மா புகுந்து விளாசி இருக்கிறாள் ..... சிறிய வயதிலேயே மிகவும் சமத்துக்குட்டியாகவும் இருக்கிறாள்.

   //இப்பவும் பெத்தவங்களை தங்களின் பாதுகாப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து கொள்ளும் மகன்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.//

   நிச்சயமாக இருக்கிறார்கள். அதில் எனக்கும் சந்தேகமே ஏதும் இல்லை மேடம்.

   அதற்கு மிக நல்ல உதாரண புருஷராக இருப்பவர் தங்களின் அன்புக்கணவரைச் சொல்லலாம். 80++ வயதில் உள்ள தன் தாயார் + தகப்பனாரை தன்னுடன் வைத்து நல்ல முறையில் பராமரித்து வருகிறாரே ..... அவருக்கான முழு ஒத்துழைப்பையும் தாங்கள் தந்து வருகிறீர்களே.

   இதையெல்லாம் தாங்கள் என்னிடம் கொஞ்சமாக மட்டுமே சொல்லியிருப்பினும், உங்களை சமீபத்தில் சந்தித்துவிட்டு வந்த பதிவர் ஒருவர் வாயிலாகவும் கேட்டு அறிந்து எனக்குள் மிகவும் மகிழ்ந்துகொண்டேன்.

   தங்களின் இரண்டு மகன்களும், ஒரு மகளும், தங்களின் சொந்த தாத்தா பாட்டியுடன் சேர்ந்து, ஒரே வீட்டில் இருக்க எவ்வளவு பாக்யம் செய்துள்ளார்கள்!!

   எல்லாக்குழந்தைகளுக்கும் கிடைக்காததோர் அரிய பெரிய வாய்ப்பு இது என நான் அடித்துச் சொல்லுவேன்.

   >>>>>

   நீக்கு
  3. கிஷ்ணாஜி >>>>> ஷாமைன் மேடம் (3)

   //ஒட்டு மொத்தமா அன்பு பாசம் எல்லாம் வெளி வேஷம் என்பதை என்னாலும் ஏத்துக்க முடியலை.. //

   வெளி வேஷம் என்று நான் வெளிப்படையாகச் சொல்லியுள்ளது ஓர் யதார்த்தமான உண்மை. இருப்பினும் அதை எல்லோராலும், எல்லா நேரங்களிலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதாக, அதுவும் எழுத்து மூலமாகத் துணிந்து சொல்லவே முடியாது என்பது எனக்கும் நன்கு தெரியும்.

   //சில விதிவிலக்கானவர்களும் இருக்காங்க...//

   அப்படியும் சிலர் இருப்பார்களேயானால் எனக்கும் அதில் சந்தோஷமே.

   அவர்களால் மட்டுமே நாட்டில் இன்று எல்லோருக்கும் மழை பெய்து வருகிறது என நினைத்துக்கொள்கிறேன். :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் கிஷ்ணாஜி

   நீக்கு
 24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 25. இந்த பதிவே கொஞ்சம் சிக்கலா தோணுதே... அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காங்கனு நெனைப்புல இருக்குது... இங்க என்னடான்னா அன்பு பாசம்ங்கறதெல்லாமே.. போலித்தனமானது வெளி வேஷம்னு சொல்றாங்க. எத நம்புது..... எல்லாருடய பின்னூட்டங்களுமே பதிவுக்கு சாதகமா தான் இருக்குது.. ப்ராப்தம் அவங்க ஃபரெண்ட் வாழ்க்கைல நடந்த சம்பவம் சொல்லி மேற்படி கருத்த ஸப்போர்ட் பண்ணியிருக்காங்க. ஒருத்தர் செய்யும் காரியத்தை வைத்து எல்லாரையும் ஏன் தப்பானவங்களா நினைக்கணும்...

  முன்னா பார்க்குல பாட்டு நல்லா இருக்குதுன்னு ஒருவரி கமெண்ட் மட்டுமே போட்டு வரும் ஹாப்பி அவர்கள் கமெண்டுல தூள் கெளப்பி இருக்காங்க. பாக்கபோனா அவங்களுக்கு கிடைத்திர்க்கும் பதில் கமெண்ட் எல்லாமே சொதப்பலாதான் இருக்குது. அவங்க கேட்டிருக்கும்....சொல்லி இருக்கும் விஷயங்களுக்கு எஸ்....ஆர்....நோ... னு பதில் சொல்லாம வேறென்னமோ சொல்லி சமாளிச்சிருக்காங்க...

  என்கருத்தும் அன்பும் பாசமும் போலித்தனமோ பகட்டோ வெளி வேஷமோ கிடையாது என்பதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:08:00 IST

   வாங்கோ மீனா, வணக்கம்.

   //இந்த பதிவே கொஞ்சம் சிக்கலா தோணுதே...//

   வாழ்க்கை என்பதே பெண்களின் நீண்ட தலைமுடி போல சிக்கலும் சிடுக்கும் உள்ளவை மட்டுமே. அதற்கு அடிக்கடி ஷாம்பூ-சீயக்காய் போன்ற எதையாவது போட்டு நன்கு கழுவி, அலசி, தலைமுழுகிக் குளித்து, தினமும் நிறைய தேங்காய் எண்ணெயோ, நறுமணம் உள்ள ஹேர் ஆயில் போன்றவைகளோ போட்டு அழுத்தித் தடவி, அதன்பின் ஒருத்தி தலையை ஒருத்தி பிடித்துக்கொண்டு, நன்கு சிடுக்கெடுத்து வாரி, பின்னிப் பெடலெடுத்து, கொண்டை போட்டு நன்கு பராமரிக்கப்பட்டால் மட்டுமே பார்க்க அழகாக இருக்கும். அதனுடன் வாஸனைப் பூக்களையும் சரமாகச் சூடிக்கொண்டால் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும்.

   இவையெல்லாம் செய்யாது போனால், சிக்கும் சிடுக்குமாகி, ஈரும் பேனும் நிறைந்து, தலை முடியெல்லாம் அரிப்பெடுத்து சொரிந்து சொரிந்து புண்ணாகி, நாளடைவில் முடிகளெல்லாம் உதிர ஆரம்பித்துப் போய்விடும் அல்லவா !

   உன் போன்ற பெண்களின் தலை முடியிலேயே இத்தனை சிக்கலான விஷயங்கள் அடங்கியிருக்கும்போது, இந்தப் பதிவினில் கொஞ்சம் சிக்கல் இருப்பதாக உனக்குத் தோன்றுவதில் எனக்கு ஆச்சர்யமே இல்லைதான். :)

   >>>>>

   நீக்கு
  2. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (2)

   //அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காங்கனு நெனைப்புல இருக்குது...//

   பலரும் பலவற்றை இதுபோலச் சொல்லலாம் .... நாமும் அவற்றைப் படிக்கலாம். உன்னைப்போல + என்னைப்போல சிலர் அதனை நினைவிலும் வைத்துக்கொள்ளலாம்.

   அதனால் மட்டுமே அது அப்படியே உண்மையாகிவிடுமா என்ன?

   //இங்க என்னடான்னா அன்பு பாசம்ங்கறதெல்லாமே.. போலித்தனமானது வெளி வேஷம்னு சொல்றாங்க. எதை நம்புறது.....//

   ’கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விஜாரிப்பதே மெய்’ என்றும் யாரோ ஒருவர் சொல்லியிருக்காங்கோ. அதனால் உன் இஷ்டம்போல, உன் சொந்த அனுபவங்கள் அடிப்படையில், எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் நம்பலாம் அல்லது நம்பாமலும் இருக்கலாம். அது முழுக்க முழுக்க உன் சுதந்திரம் மட்டுமே.

   >>>>>

   நீக்கு
  3. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (3)

   //எல்லாருடய பின்னூட்டங்களுமே பதிவுக்கு சாதகமா தான் இருக்குது..//

   அதுபோல இல்லை. அதுபோல பதிவுக்கு சாதகமாக இருக்கணும் என்ற அவசியமும் ஏதும் இல்லை. சிலர் மிகவும் கஷ்டப்பட்டு தங்களின் மாற்றுக்கருத்துக்களையும் இங்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவைகளும் என்னால் வரவேற்கப்பட்டு பதிலும் அளிக்கப்பட்டுள்ளன.

   >>>>>

   நீக்கு
  4. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (4)

   //ப்ராப்தம் அவங்க ஃபரெண்ட் வாழ்க்கைல நடந்த சம்பவம் சொல்லி மேற்படி கருத்த ஸப்போர்ட் பண்ணியிருக்காங்க.//

   அவர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ள ஏதோவொரு கசப்பான அனுபவத்தினால், இதுபோல ஸப்போர்ட் செய்து எழுதியிருப்பதுபோல நமக்குத் தெரிகிறது.

   ஆனால் அதே ப்ராப்தம் அவர்களுக்கு அவர்களின் ஃப்ரெண்ட் மேலே உள்ள ஏதோவொரு பாசத்தினாலும், அன்பினாலும், அக்கறையினாலும் மட்டுமே இதுபோல எழுதத் தோன்றியுள்ளது என்பதையும் நாம் கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்.

   எனவே அந்த ஃப்ரெண்ட் மேல் அவர்களுக்குள்ள பாசமும் பிரியமும் அன்பும் போலியானது + வெளிவேஷம் மட்டுமே, என்று நாம் நினைக்க முடியாமலும் உள்ளது அல்லவா !

   >>>>>

   நீக்கு
  5. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (5)

   //ஒருத்தர் செய்யும் காரியத்தை வைத்து எல்லாரையும் ஏன் தப்பானவங்களா நினைக்கணும்...//

   உன் இன்றைய நிலையில் நீ சொல்லுவதும் ஒருவிதத்தில் கரெக்ட்டூதான்.

   நீ இப்போது பிறந்த வீட்டினில் இருக்கிறாய். இப்போது உன் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, தங்கை, அண்ணன் குழந்தைகள் மட்டுமல்லாமல், அடுத்தாத்து மாமி முதலியோரிடம் மிகவும் பாசமாகத்தான் இருந்து வருகிறாய்.

   இன்று கை நிறைய சம்பாதித்துக்கொடுக்கும் உன் தயவு குடும்பத்தாருக்கும், உன்னை நல்லபடியாக கல்யாணம் செய்துகொடுக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பினில் அவர்கள் தயவு உனக்கும் தற்சமயம் தேவையாக இருப்பதால், ஒருவருக்கொருவர் பாசமும் நேசமும் பொங்கி வழியத்தான் செய்யும்.

   இன்றைய நிலையில் இது மிகவும் இயற்கையே. நானும் மறுக்கவில்லை.

   >>>>>

   நீக்கு
  6. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (6)

   எனக்குத் தெரிந்தே பல பெற்றோர்கள், சம்பாதித்துக்கொடுக்கும் ’பொன் முட்டையிடும் வாத்து’ ஆகிய தங்கள் பெண்ணை 25 வயது முதல் 35 வயதுவரை திருமணம் செய்து கொடுக்கவே விரும்பாமல், அதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தேவையில்லாமல் குறுக்கே நின்று, ஏதாவது சாக்குப் போக்குகள் சொல்லி, பெண்ணின் திருமணத்தை தாமதம் செய்து வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

   பெண்களின் பக்குவமாக பருவமான 20 முதல் 25 வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?

   வெளியே தங்களின் உள் மன ஆசைகளை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள முடியாத தத்தளிப்பினில், இதுவரை பாசமாகவும் பொறுமையாகவும் இருந்துவரும் அந்தப் பெண்களுக்கே, தன் பிறந்த வீட்டினர் மீது வெறுப்பு வர ஆரம்பித்துவிடும் என்பதே இதில் உள்ள மறுக்க முடியாத உண்மையாகும்.

   அதுபோல ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்குச் சென்றபின், அங்குள்ள தன் கணவர் + தன் குழந்தைகள் மீதுதான் பாசமும் நேசமும் அதிகமாகிடுமே தவிர, ஏற்கனவே தன் பிறந்த வீட்டினர் மீது காட்டி வந்த பாசம் நேசம் என்பதெல்லாம் படிப்படியாகக் குறைந்தும், நாளடைவில் மறந்தும் போய்விடும்.

   இதுதான் உலகத்தில் ஆங்காங்கே நடைபெற்றுவரும் இயற்கை + உண்மை.

   இதில் ஒன்றும் தவறே கிடையாது என்பேன். இதெல்லாம் உனக்குப் போகப் போகத்தான் புரியவரும்.

   >>>>>

   நீக்கு
  7. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (7)

   //முன்னா பார்க்குல பாட்டு நல்லா இருக்குதுன்னு ஒருவரி கமெண்ட் மட்டுமே போட்டு வரும் ஹாப்பி அவர்கள் கமெண்டுல தூள் கெளப்பி இருக்காங்க.//

   அவள் ஒரு சொக்கத்தங்கமாக்கும். அவளை அவள் போக்கில் விட்டால், பக்கம் பக்கமாக எனக்குமேல் எழுதிக்கொண்டே இருப்பாள்.

   மிகவும் புத்திசாலிப் பெண்ணும் கூட. அழகு, அறிவு, ஆற்றல், ஆசை என அனைத்தும் ஒருங்கே அமைந்த, சொக்க வைக்கும் சுட்டிப் பெண்குட்டியாக்கும் அவள். :)

   >>>>>

   நீக்கு
  8. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (8)

   //பாக்கபோனா அவங்களுக்கு கிடைத்திருக்கும் பதில் கமெண்ட் எல்லாமே சொதப்பலாதான் இருக்குது. அவங்க கேட்டிருக்கும்.... சொல்லி இருக்கும் விஷயங்களுக்கு எஸ்....ஆர்....நோ... னு பதில் சொல்லாம வேறென்னமோ சொல்லி சமாளிச்சிருக்காங்க...//

   நாம் அன்பு செலுத்தி வரும், நமக்குப் பிடித்தமான, ஒரு குழந்தையுடன் நாம் விளையாடும் போது, அந்த விளையாட்டினில் அந்தக் குழந்தைக்கே இறுதி வெற்றி கிடைக்குமாறு, நாம் விட்டுக்கொடுத்து விளையாட வேண்டும்.

   அதுதான் அந்தக் குழந்தைக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அதனுடன் விளையாடும் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

   ஒருவருக்கு தர்மம் தெரிந்தால் மட்டும் போதாது. தர்ம சூஷ்மம் தெரிய வேண்டும். என்னுடைய பதில்களில் தர்ம சூஷ்மங்கள் மட்டுமே நிறைந்துள்ள என்பதை மீண்டும் மீண்டும் நீ என் பதில்களைப் படித்தால் மட்டுமே உன்னால் உணர முடியும்.

   தர்மத்திற்கும், தர்ம சூஷ்மத்திற்கு உள்ள வித்யாசங்களை நான் தனிப்பதிவாக எழுதி மட்டுமே உனக்குப் புரிய வைக்க இயலும். அதனால் அது இங்கு இப்போது வேண்டாம்.

   >>>>>

   நீக்கு
  9. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (9)

   //என்கருத்தும் ’அன்பும் பாசமும் போலித்தனமோ பகட்டோ வெளி வேஷமோ கிடையாது’ என்பதுதான்.//

   வெரி குட். மிக்க மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷம்.

   உன் அன்பான வருகைக்கும், சொல்ல வந்த கருத்துக்களை சொதப்பாமல் இங்கு நீ சொல்லி முடித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மீனா.

   -oOo-

   நீக்கு
 26. குருஜி..... நானு வந்துபிட்டேன்லா...
  மொதகா எங்கட குருஜி தா புதுசா
  பதிவுபோட்டிருக்காகனு நெனச்சிபோட்டன்...பொறவாலதா
  குருஜியோட கமெண்டயே ஒரு பதிவா வேற ஒரு பதிவரு போட்டிருக்காகனு வெளங்கி கிட்டன்...

  அதா " வெரசலா" வந்துபிட்டன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:35:00 IST

   //குருஜி..... நானு வந்துபிட்டேன்லா...//

   வா....ம்மா முருகு. செளக்யமா சந்தோஷமா இருக்கிறாயா? நீ இப்போது இங்கு, இந்தப்பதிவுக்கு வருவாய் என நான் கொஞ்சம்கூட நினைக்கவே இல்லை. உன்னைக் கண்டதும் உன் பாஷையில் எனக்குச் சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)

   //மொதகா எங்கட குருஜி தா புதுசா பதிவுபோட்டிருக்காகனு நெனச்சிபோட்டன்... பொறவாலதா குருஜியோட கமெண்டயே ஒரு பதிவா வேற ஒரு பதிவரு போட்டிருக்காகனு வெளங்கி கிட்டன்... அதா "வெரசலா" வந்துபிட்டன்...//

   எப்படியோ ஒருவழியாப் பாதை தெரிஞ்சுக்கிட்டு, மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு இங்கு பத்திரமாகத் தனியாக வந்து சேர்ந்துள்ளாயே ... அதுவே மிகப்பெரிய விஷயமாக்கும்.

   ’வெரசலா’ என்றால் 100 கமெண்ட்ஸ்களுக்குப் பிறகு என்று அர்த்தமா? :)

   நீக்கு
 27. அல்லா பேத்தோட கமெண்டு அல்லா படிச்சு போட்டேன்... நெறய பேருக குருஜியோட கருத்துதான் கரீட்டு...கரீட்டுனு.... குருஜிக்கு
  கொம்பு சீவி விட்டு போட்டாக
  ( குருஜி.....மாப்பு மாப்பு......
  வாயி நீளுது.....)

  முன்னா பார்க்கு சோட்டுகாரிகல்லா கோட வந்திருக்காங்க எனிக்கு புடிச்ச கமெண்டுனா ஹாப்பினு ஒருவங்க கமெண்டுதான்.... சரவெடிபோல சும்மா வெடிச்சு தூள் கெளப்பிட்டாக...

  இவுகலா குருஜி..... ஒங்கட புதுசு
  சோட்டுகாரவுகளா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:43:00 IST

   //அல்லா பேத்தோட கமெண்டு அல்லா படிச்சு போட்டேன்...//

   மிகவும் சந்தோஷம்....டா, முருகு.

   நெறய பேருக குருஜியோட கருத்துதான் கரீட்டு...கரீட்டுனு.... குருஜிக்கு கொம்பு சீவி விட்டு போட்டாக (குருஜி.....மாப்பு மாப்பு...... வாயி நீளுது.....)//

   அதனால் என்ன? வாய் நீளுவதுதான் எங்கட முருகுவுக்கு அழகோ அழகு ! அதுதான் எனக்கு முருகுவிடம் மிகவும் பிடித்த சமாசாரமே.

   //முன்னா பார்க்கு சோட்டுகாரிகல்லா கோட வந்திருக்காங்க.//

   அது எப்படியோ அவர்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு அடுத்தடுத்து வந்திருக்காங்கோ. எனக்கே ஆச்சர்யமாக உள்ளது, முருகு.

   சகட்டுமேனிக்கு எல்லோரையும் சோட்டுக்காரிகள் எனச் சொல்லி விட்டாயே முருகு. உன் பாஷையில் சோட்டுக்காரிகள் என்றால் ஃப்ரெண்ட்ஸ் என்பது அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ. கொம்புகளை நீட்டிக்கிட்டு உன்னை முட்டித்தள்ளிடப் போறாங்கோ, ஜாக்கிரதை, முருகு. :)

   //எனிக்கு புடிச்ச கமெண்டுனா ஹாப்பினு ஒருவங்க கமெண்டுதான்.... சரவெடிபோல சும்மா வெடிச்சு தூள் கெளப்பிட்டாக...//

   மிக்க மகிழ்ச்சி, முருகு.

   //இவுகலா குருஜி..... ஒங்கட புதுசு சோட்டுகாரவுகளா..//

   ஆமாம், முருகு. அவள் உன்னைவிடக் குட்டியூண்டு பெண். ஆனால் கன்னங்களில் குழிவிழும் சிரித்த முகத்துடன் கூடிய கொழுகொழு மொழுமொழுக் குழந்தை. அழகோ அழகுச் சிங்காரி. கெட்டிக்காரி. சமத்தோ சமத்து. உன்னைப்போலவே என்னிடம் மிகவும் பிரியமாகப் பழகி வருபவள், முருகு.

   அடுத்து அவளுக்கும், என் பிரார்த்தனைகளால் வெகு விரைவில் ’டும்...டும்...’ நடக்க உள்ளது. :)

   நீக்கு
 28. அந்த ஹாப்பி அவுகளுக்கு சரியான பதிலுக்கு சொல்ல ஏலாத சொதப்பிட்டீகளே குருஜி.....ஒங்கட வீட்டுக்காரம்மா.... ஒங்கட பெரியக்கா பத்திலாம் வெலா வாரியாக சொல்லிகினாகல்லா..... அவுகலா ஒங்கட மேல வச்சிருக்க அன்புக்கு இன்னா பேரு

  அது உண்மையான அன்புனு சொல்லிகிட ஏலாதா....எங்கட அல்லாபேத்துமேலயும் எங்கட குருஜி வச்சிருக்க அன்பு போலியான அன்பா? கெடயவே கெடியாது
  என்னியபத்தி எங்கட குருஜிக்கு ரொம்ப நல்லாவே வெளங்கி கிட ஏலும்லா.

  ஒங்கட சோட்டுக்காரியா ஆன பொறவாலதான் குருஜி நானு சந்தோசமா இருக்குறேன்..அதுக்கு முன்னாலலா எம்பூட்டு கஸ்டங்க......
  அவ்வை கெளவி சொல்லிகினாகல்லா
  கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை......னுபிட்டு

  அது அணு அணுவா அனுபவிச்சிருக்கேன்லா. நெதக்கும் நெல்லரிசி சோத்துக்கே அம்மிகிட்டால எம்பூட்டு அடம் பிடிச்சிருக்கேன்...

  இன்னிக்கு வெள்ள வெளேர்னு பாஸுமதி சோறே தெனத்துக்கும் கெடைக்குதுல்லா.. இதெல்லாம் ஏதோ மாய மந்திரத்தால கெடச்சதில்லா... எங்கட குருஜியோட அன்பாலயும்... மனப்பூர்வமான வேண்டுதலாலயும் குருஜியோட ஆசிர்வாதத்தாலயும்தான் கெடச்சுது
  அப்படிலாம் இருகையில அன்பு பாசம்லா எப்பூடிஜி போலித்தனமாவும் வெளி வேஷமாவும் இருந்துகிட ஏலும் ஏலவே ஏலாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:01:00 IST

   //அந்த ஹாப்பி அவுகளுக்கு சரியான பதிலுக்கு சொல்ல ஏலாத சொதப்பிட்டீகளே குருஜி.....//

   ஒரு குழந்தைக்கு நாம் உணவூட்டும் போது, நன்கு வெந்து குழைந்த சாதத்தை மேலும் மையாகப் பிசைந்து, வெந்த பருப்பும் சேர்த்து, நெய் ஊற்றி அதிக காரமில்லாத ரஸம் கொஞ்சம் ஊற்றி மேலும் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக ஆக்கி பொறுமையாக வாயில் ஊட்டிவிட வேண்டும். நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஸ்பூனில் ஆறிய வெந்நீர் தண்ணீரையும் அதன் வாயில் கொடுத்து அருந்தச்செய்ய வேண்டும்.

   அதைப்போலவே தான் நானும் (உன்னைப்போன்ற) எங்கட ஹாப்பிக் குழந்தைக்கு பதிலும் அளித்துள்ளேன். அதற்காக அதனை ஒரேயடியாக சொதப்பல் என எடுத்துக்கொள்ளக்கூடாது.

   //ஒங்கட வீட்டுக்காரம்மா.... ஒங்கட பெரியக்கா பத்திலாம் வெலா வாரியாக சொல்லிகினாகல்லா..... அவுகலா ஒங்கட மேல வச்சிருக்க அன்புக்கு இன்னா பேரு.//

   இதனை அன்பு, பிரியம், பாசம் என்றுதான் பொதுவாக உலகத்தார் சொல்லி வருகிறார்கள்.

   //அது உண்மையான அன்புனு சொல்லிகிட ஏலாதா....//

   பொதுவாக வெளியிலிருந்து பார்க்கும் பலராலும் அது உண்மையான அன்புன்னு சொல்லிக்கிட ஏலும்தான்.

   >>>>>

   நீக்கு
  2. குருஜி >>>>> முருகு (2)

   //எங்கட அல்லாபேத்துமேலயும் எங்கட குருஜி வச்சிருக்க அன்பு போலியான அன்பா? கெடயவே கெடியாது. என்னியபத்தி எங்கட குருஜிக்கு ரொம்ப நல்லாவே வெளங்கி கிட ஏலும்லா.

   ஒங்கட சோட்டுக்காரியா ஆன பொறவாலதான் குருஜி நானு சந்தோசமா இருக்குறேன்.. அதுக்கு முன்னாலலா எம்பூட்டு கஸ்டங்க...... அவ்வை கெளவி சொல்லிகினாகல்லா ‘கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை’.....ன்னுபிட்டு

   அது அணு அணுவா அனுபவிச்சிருக்கேன்லா. நெதக்கும் நெல்லரிசி சோத்துக்கே அம்மிகிட்டால எம்பூட்டு அடம் பிடிச்சிருக்கேன்...

   இன்னிக்கு வெள்ள வெளேர்னு பாஸுமதி சோறே தெனத்துக்கும் கெடைக்குதுல்லா.. இதெல்லாம் ஏதோ மாய மந்திரத்தால கெடச்சதில்லா... எங்கட குருஜியோட அன்பாலயும்... மனப்பூர்வமான வேண்டுதலாலயும் குருஜியோட ஆசிர்வாதத்தாலயும்தான் கெடச்சுது. அப்படிலாம் இருக்கையில அன்பு பாசம்லா எப்பூடிஜி போலித்தனமாவும் வெளி வேஷமாவும் இருந்துகிட ஏலும் ஏலவே ஏலாது//

   ஏதோ என் நட்புக்களாகிய உங்களுக்காக நான் எனக்குள், என் வழக்கப்படி ஸ்பெஷலாகப் பிரார்த்தனைகள் செய்துகொண்டதும், உங்களுக்கெல்லாம் ஆறுதலாக அவ்வப்போது பதில் அளித்து வந்ததும் உண்மைதான், ஒத்துக்கொள்கிறேன். என் பக்கம் அதில் எந்த போலித்தனமும், வெளிவேஷமும் இல்லைதான்.

   இருப்பினும் இதனையெல்லாம் உன்னைப் போன்ற சிலர் நினைவில் நிறுத்தி அவ்வப்போது நன்றியுடன் சொல்லிக்காட்டணும் என்றெல்லாம் நான் என்றும் எதிர்பார்ப்பதே கிடையாது.

   இதையெல்லாம் நன்கு நினைவு வைத்துக்கொண்டு. நீ இங்கு மறக்காமல் நன்றியுடன் எடுத்துச் சொல்வது, உன் நல்ல குணத்தையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது.

   என்னைப்போலவே நீயும் ’இளமையில் வறுமை’ என்ற கொடுமையை அனுபவிக்க நேர்ந்துள்ளதை நான் உன் வாயிலாகக் கேட்ட நேர்ந்ததாலேயே, உன் மீது எனக்கு ஓர் தனி அக்கறையே ஏற்பட்டது என்பதே உண்மை, முருகு.

   நீக்கு
 29. குருஜி... அல்லா பேரும் கமெண்டு போட்டிருக்காக " ஒங்கட ஆளு"
  வாரலியே...நீங்க அவுகளுக்கு லிங்க் அனுப்பலியா.. நாங்க ரெண்டு சண்டி குதுர களும் எம்பூட்டு முட்டிகிட்டிருக்கோம்
  இங்கூட்டும் அவுகளுக்கு வம்பிளுக்கலாமுனு நெனச்சேன்... வராம ஏமாத்தி போட்டாகளே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:05:00 IST

   //குருஜி... அல்லா பேரும் கமெண்டு போட்டிருக்காக " ஒங்கட ஆளு" வாரலியே... //

   இங்கு வருகைதந்து கமெண்ட்ஸ் போட்டிருக்கும் எல்லோருமே எங்கட ஆளுங்க தானே முருகு.

   //நீங்க அவுகளுக்கு லிங்க் அனுப்பலியா..//

   நான் எங்கட முருகுவைத் தவிர யாருக்குமே லிங்க் அனுப்புவதே இல்லையாக்கும். :)

   //நாங்க ரெண்டு சண்டிக் குதிரைகளும் எம்பூட்டு முட்டிகிட்டிருக்கோம். இங்கூட்டும் அவுகளுக்கு வம்பிளுக்கலாமுனு நெனச்சேன்... வராம ஏமாத்தி போட்டாகளே.//

   ஓஹோ...... உன்னை ஒருநாள் ’வாம்மா..... மின்னலு’ன்னு அன்புடன் அழைச்சாங்களே, அவங்களைச் சொல்கிறாயா? !!!!!

   அவர்களை நான் பார்த்தே வெகு நாட்கள் ஆகிப்போச்சு முருகு. எப்போதாவது மின்னல் போலத் தோன்றி உடனே மறைந்து ஓடி ஒளிந்து விடுகிறார்கள்.

   உன்னை மட்டுமல்ல, என்னையும் சேர்த்து எல்லோரையுமே ஏமாத்திப் போட்டாங்க. எங்கே இருக்காங்களோ, எப்படி இருக்காங்களோ, நம் நினைவெல்லாம் அவங்களுக்கு இப்போ இருக்கோ இல்லையோ .....

   ஆனால் நான் எப்போதுமே அவங்களையும், உன்னையும், மற்ற எல்லோரையும் அடிக்கடி நினைத்துக்கொள்வது உண்டு.

   நீக்கு
 30. குருஜி.... இங்கூட்டும் இம்பூட்டு பெரிசா ரிப்ளை கமெண்டுலா போடுறீகல்லா.. முன்னா பார்க் பழக்கத்தால் ஏன் வாரதில்ல.. முன்னாகூட புட்டுகிச்சா...
  மொதகலாம் நெறய கல்யாணம் கல்யாணம் கமெண்டு போட்டீக தானே. இப்ப இன்னாச்சி.. நானு அங்கிட்டு போயி இன்னா பாட்டுனால போடுறான்னு
  கண்டுகிடுவன்.. கமெண்டு போடறதில்ல..சோம்பேறிகள் தனம்தான். பாட்டெல்லாம் சூப்பராதான் போடுறாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:14:00 IST

   //குருஜி.... இங்கூட்டும் இம்பூட்டு பெரிசா ரிப்ளை கமெண்டுலா போடுறீகல்லா.. //

   உங்களையெல்லாம் இங்கு சேர்ந்தாற்போலப் பார்த்ததில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. அதனால் இங்கூட்டும் இம்பூட்டு பெரிசா ரிப்ளை கமெண்ட்ஸ் போடும்படியாக ஆகி விட்டது. :)

   //முன்னா பார்க் பழக்கத்தால் ஏன் வாரதில்ல..//

   உன்னைப்போன்ற ஜாலியான ஆட்கள், அங்கு இப்போதெல்லாம் வராததால் எனக்கும் அங்கு வரப் பிடிக்கவில்லை.

   //முன்னாகூட புட்டுகிச்சா...//

   உங்கட முன்னாவுக்கு ’புட்டுக்கிச்சா’ என என்னிடம்போய்க் கேட்டால் நான் எப்படி பதில் சொல்லமுடியும்? :) அவளிடமே நேரிடையாகக் கேட்டு இதனைத் தெரிந்துகொள்.

   //மொதகலாம் நெறய கல்யாணம் கல்யாணம் கமெண்டு போட்டீக தானே. இப்ப இன்னாச்சி..//

   முதலில் உங்கட அண்ணனுக்கு, அதன்பின் நம் சாரூஜிக்கு, அதன் பின் உனக்கு, அதன்பின் முன்னாவின் அக்காவுக்கு என வரிசையாக இந்த 2016-ம் ஆண்டிலேயே, இதுவரை நான்கு கல்யாணங்கள் அமர்க்களமாக நடந்து முடிஞ்சிருச்சு.

   இந்த ஒவ்வொரு கல்யாணங்களையும் உத்தேசித்து நானும் நிறைய கமெண்ட்ஸ் அங்கு போட்டுக் கொண்டு இருந்தேன். இனி அடுத்த கல்யாணம் நெருங்கி வந்தால், அதை என் கவனத்திற்கு அவர்கள் ஒருவேளை கொண்டு வருவார்களேயானால், மீண்டும் நான் போட்டாலும் போடுவேன்.

   //நானு அங்கிட்டு போயி இன்னா பாட்டுனால போடுறான்னு கண்டுகிடுவன்.. கமெண்டு போடறதில்ல..//

   நானும் இதில் இப்போதெல்லாம் உன்னைப்போலவேதான். சும்மா அவற்றைக் கண்டுகொள்வதோடு சரி. தடயம் பதிப்பதில்லை.

   //சோம்பேறிகள் தனம்தான்.//

   அதே ..... அதே !

   //பாட்டெல்லாம் சூப்பராதான் போடுறாங்க//

   அதெல்லாம் எது போட்டாலும், அவள் சூப்பராத்தான் போடுவாள். :)

   -=-=-=-

   உன் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான மழலை மொழியிலான இனிய பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.....டா, முருகு.

   பிரியமுள்ள குருஜி

   நீக்கு
 31. //இவ்விடம் தங்களின் வருகைக்கும், தங்களின் ஃப்ரெண்ட் ஒருத்தியின் சோகக் கதையினைப் பற்றி ஏதேதோ சில விஷயங்களைக்கூறி தாங்களும் வருத்தப்பட்டு, எங்களையும் வருத்தப்படச் செய்துள்ளதற்கும், என்னால் எப்படி நன்றி கூறிட முடியும்? வருத்தப்பட மட்டுமே முடிகிறது. :(//

  வெரி வெரி ஸாரி... யாரையும் வருத்த எண்ணமில்லை.. இந்த பதிவுக்கு இந்த தகவலைத்தான் சொல்ல முடிந்தது.
  வாழ்க்கை என்பது வியாபாரம் ...

  பதிலளிநீக்கு
 32. இந்தப் பதிவின் தொடர்ச்சியாக முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களால் ‘என் பதிவுத் தளத்தை வாடகைக்கு விடுகிறேன்.’ என்ற தலைப்பில் ஓர் புதுப்பதிவு இன்று 12.11.2016 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு இதோ:

  http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post_12.html

  இது இங்கு வருகை தந்துள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு