செவ்வாய், 22 நவம்பர், 2016

நல்லா காதுல பூச்சுத்தறாங்கையா

                               Image result for 2000 ரூபாய் நோட்டு

இன்று ஒரு பதிவில் படித்தது.

இன்று டாக் ஆப் த டவுன் என்னவென்றால் அந்த 2000 ரூபாய் நோட்டை திருப்பினால் மங்கள்யான் செயற்கைக் கோள் தெரிகிறது. அதை குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி செல்பேசியில் பார்த்தால் அதில் மோடி பேசுவது நேரடியாக ஒளிபரப்பாகிறது.


ஆனால் அந்தப் பதிவில் அந்த "ஆப்" என்னவென்று கொடுக்கவில்லை. நான் கூகுளில் தேடிப்பார்த்தேன். அப்படி எந்த "ஆப்" ம் இல்லை. இது சுத்தமான     காதில் பூச்சுற்றும் வேலை என்று நினைக்கிறேன். எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்காங்க என்று தெரியவில்லை.


12 கருத்துகள்:

 1. ஏதோ aapபும் கொடுத்திருந்தார்கள். நான் முயற்சி செய்யவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு கேட்க அதில் ஒன்றுமில்லை. சுலபமாக வேறு இடங்களில் கேட்கலாம்! தண்ணீரில் 2000 ரூபாய் நோட்டைப் போட்டால் சாயம் போகிறது என்றாராம் எதிர்வக்கீல் உச்சநீதிமன்றத்தில். நீங்கள் ஏன் அதை தண்ணீரில் போடுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் உ.நீ நீதிபதி!

  இன்னும் சில வாட்சாப் செய்திகளில் அதை சார்ஜரில் போடுவது போலவும், ஒளிர்வது போலவும், ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் உள்ளே இருக்கும் சிறு 'சிப்'பை எடுக்கலாம் என்பது போல எல்லாம் பகிர்வுகள். மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்!!! கஷ்டங்களையும் நகைச்சுவையாகப் பார்க்கப் பழகி இருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைத்தான் அன்றே வள்ளுவர் "இடுக்கண் வருங்கால் நகுக" என்று சொன்னார் போலும்.

   நீக்கு
 2. பொழுது போகாமல் ஏதாவது கட்டி விடுவதுதான் இன்றைய பொழுதுபோக்கு ஐயா.

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் எத்தனை 2000 ரூபாய் நோட்டு வைத்து இருக்கிறீர்கள். எவ்வ்ளவு நோட்டுகள் மாற்றினீர்கள்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு இருபதாயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என் வீட்டில் உள்ளது. ஒரு இரண்டாயிரம் ரூபாயை மளிகைக் கடைக்குக் கொடுத்தோம். மீதி நோட்டுகளை என்றாவது ஒரு நாள் உபயோகிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி பத்திரமாக வைத்துள்ளோம்.

   நண்பர் நடனசபாபதி சொல்வது போல் ரோஸ்மில்க் செய்து குடிக்கும் எண்ணம் இல்லை.

   நீக்கு
 4. பூ விலை இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது. ஒரு முழம் மல்லிகையோ அல்லது ஜாதிப்பூவோ வாங்க ரூ. 2000 கொடுக்கும்படியாக ஆனாலும் ஆகலாம்.

  அதனால் நல்லா காதுல பூச்சுத்தட்டும்.

  பூவாவது கிடைத்தவரை நமக்கு இலாபமாக இருக்ககூடும். :)

  பதிலளிநீக்கு
 5. ஐயா! இந்த 200 ரூபாய் தாளை வைத்து எத்தனையோ வேடிக்கையான தகவல்கள் வந்துள்ளன. எனக்கு WhatsApp வந்த ஒரு நகைச்சுவை தகவல் இதோ.
  //ரோஸ் மில்க் செய்முறை:
  1.பாலை நன்கு காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  2.காய்ச்சிய பாலில் புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டை சிறிது நேரம் முக்கி வைக்கவும்.
  சூடானா சுவையான ரோஸ் மில்க் ரெடி!!//

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைத்தான் வள்ளுவர் "துன்பம் வருங்கால் நகுக" என்று கூறினார் போலும்.

   நீக்கு
 6. வாட்ஸப்ல வர்ற பல செய்திகளை நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கணும். எல்லோரும் சொல்றதைப் பார்த்தால், 2000 ரூ நோட்டை ஜாக்கிரதையாத்தான் திருப்பணும் போலிருக்கு. ரொம்ப மெல்லிசா இருக்காமே!

  பதிலளிநீக்கு
 7. நான் பொதுவாக எந்தச் செய்தியையும் எளிதில் நம்பமாட்டேன் கந்தசாமி ஐயாவும் அதுபோல்தான் . ஏதோசிலருக்கு கற்பனை கலந்த பொழுது போக்கு

  பதிலளிநீக்கு