வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அடுத்தவர்களுக்கு அறிவுரைகள் கூறுவது வீண்



மனிதர்களுடைய குணங்கள் அவர்களுடைய மரபணு தொகுப்பினால் ஆக்கப்பட்டவை என்று பார்த்தோம். இந்த குணங்களினால் சிலர் சமூகத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயல்கள் எந்நாளும் தீயவைகளையே கருவாகக் கொண்டிருக்கும். அவர்களுடைய தோழர்களும் இதே மாதிரியான குணங்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக் கிடையேதான் நெருக்கம் ஏற்படும். இது அவர்களின் மரபணுக்கள் ஏற்படுத்தும் குணங்கள்.

அவர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களைத் திருத்தும் நோக்கோடு கற்றவர்கள் கூறும் அறிவுரைகளை எந்நாளும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் மரபணுக்களின் குணம் அவர்களை இவ்வாறு ஆக்கியிருக்கிறது. நல்ல பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள்தான் முளைத்து, வளர்ந்து பலன் கொடுக்கும். கட்டாந்தரையில் விதைக்கும் விதைகள் முளைக்க மாட்டாது.

இவர்கள் கட்டாந்தரையைப் போன்றவர்கள். இவர்களைச் சீர்திருத்தம் செய்ய முயலுவது, கானல் நீரைப் பருக ஆசைப்படுவது போலத்தான் அமையும். சூழ்நிலை மாற்றங்களைச் சந்திக்க இவர்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதிர்மறையாகவே இருக்கும். பல குடும்பங்கள் கெட்டுப்போவதற்கு இவர்களின் இந்தக் குணங்களே காரணம்.

விதி அல்லது கர்மவினை என்பதை பலர் இவர்களின் நிலைக்குக் காரணமாகக் காட்டுவார்கள். சோதிடர்கள் அவர்களின் கிரக நிலை அவர்களை இப்படி ஆட்டுவிக்கிறது என்பார்கள். விஞ்ஞானிகள் அவர்களின் மரபணுக்கூறுதான் இதற்கு காரணம் என்பார்கள். எப்படியானாலும் அவர்களின் நிலை மாறப்போவதில்லை.

9 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது சரி ஐயா, சிலருக்கு நாம் என்ன நல்லது சொன்னாலும் ஏற்கமாடார்கள். அவர்களை மாற்றுவது கடினம். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. ஐயா உங்கள் எழுத்தை தொடர்ந்து படித்து வருபவன் நான். எண்ணத்திலும் எழுத்திலும் நடையிலும் நிறையவே மாற்றங்கள் காண்கிறேன். இந்த மாற்றங்கள் நன்றாகவே உள்ளது. நான் முன்பொரு முறை படித்தது நினைவுக்கு வருகிறது The best ADVICE is not to advise others.!

    பதிலளிநீக்கு
  3. உண்மை... இவன் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்பதுதான் பலரின் மனநிலை.

    பதிலளிநீக்கு
  4. //அவர்களுடைய தோழர்களும் இதே மாதிரியான குணங்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக் கிடையேதான் நெருக்கம் ஏற்படும். இது அவர்களின் மரபணுக்கள் ஏற்படுத்தும் குணங்கள்.//

    1000 சதம் உண்மைதான் . இனம் இனத்தோடுதான் சேருமுன்னு சும்மாவா பழமொழி சொன்னாங்க :-))

    பதிலளிநீக்கு
  5. //ஜெய்லானி said...
    1000 சதம் உண்மைதான் . இனம் இனத்தோடுதான் சேருமுன்னு சும்மாவா பழமொழி சொன்னாங்க :-))//

    பாய்ன்டைக் கரெக்டாப் புடிச்சிட்டீங்க ஜெய்லானி. இதை நான் எந்தப் புத்தகத்திலும் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கைப் பள்ளியில் கற்ற பாடம்.

    பதிலளிநீக்கு
  6. மிக வித்தியாசமான யதார்த்தங்கள் அருமை தொடர்கிறேன் ஐயா!
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  7. உண்மையை உரக்கச் சொல்லியிருக்கின்றீர்கள். சிலருடைய பழக்கவழக்கங்கள் திகைப்பில் ஆழ்த்தும். தாய், தந்தைக்கு இல்லாத குணம் இந்தப் பிள்ளைக்கு எப்படி வந்தது என்று சிந்தித்தால், அங்கு மரபணு ஆட்சி செய்வதை அறியக்கூடியதாக இருக்கும். இப்படியே ஆன்மீகமும் பகுத்தறிவுப் படும்பாடு. பகுத்தறிவு காரணத்தைப் போதிக்க, ஆன்மீகம் கண்மூடித்தனமான நம்பிக்கையைப் போதிக்க மனங்களிடையே வேறுபாடுகள் தளிர்க்கின்றன. எதனையும் காரண காரியங்கொண்டு சிந்திக்கும் போது புரிகின்ற பக்குவம் கொள்ளவேண்டும். ஆனால் அங்கும் மரபணு தடுத்துவிட்டால்........? தயவுசெய்து இவ்வாறான பதிவுகள் இடுகின்றபோது எனக்கு அழைப்புவிடுக்கத் தவறாதீர்கள். நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அப்படி இல்லை இல்லை. நீங்கள் கூறுவது தவறு. நேரம் வேண்டும். இது மிகவும் பொதுவான தான். அது கற்பிக்கும்

    பதிலளிநீக்கு