திங்கள், 5 செப்டம்பர், 2011

என் பதிவுலக வயிற்றெரிச்சலும் ஆற்றாமையும்



இனிய உளவாக இன்னாத கூறுதல்
கனி இருப்ப காய் கவர்ந்தற்று – குறள் (100)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள் (784)

இந்த இரண்டு குறள்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோன்றுகின்றன அல்லவா? தெய்வப்புலவர் தம் நூலில் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைக் கூறியிருப்பாரா என்ற கேள்விக்கு தமிழ் அறிஞர்கள்தான் விடை கூற இயலும்.

தமிழ் அஞ்ஞானியான நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவரவர்களுக்கு பொருத்தமான குறளை அவரவர்கள் கடைப்பிடிக்கலாம் என்பதே. இக்கொள்கைப்படி இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போய்விட்டது. இதை மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். பொய்தான் இனிக்கும். கசப்பு மாத்திரைக்கு சர்க்கரைப்பூச்சு பூசி கொடுப்பதில்லையா என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கலாம். நான் அதை “பசப்பு” என்று கருதுகிறேன். “பசப்பு” பத்தினிகளின் குணமாகாது. ஆகவே இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போனது. அப்படியிருக்க மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சந்தோஷமாக  ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இது தவறு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. என்னுடைய போன பதிவில் “வயிற்றெரிச்சல்” என்பதற்குப் பதிலாக “ஆற்றாமை” என்று போட்டிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஆனால் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருக்காது. மேலும் என் பதிவுலக வாழ்வில் முதன் முறையாக தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் மைனஸ் ஓட்டுகளும் விழுந்திருக்காது. தவிர, அருமையான பல கருத்துக்கள் ஜனனமாகாமலேயே மரித்துப் போயிருக்கும். அதனால் பதிவுலகத்திற்கு எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?! ஆகவே எந்த ஒரு கெடுதலிலும் ஒரு நன்மை உண்டென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தக் கிழடுகளுக்கே எதையும் குறை கூறத்தான் தெரியும், இன்றைய இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதாவது அறிவுரைகள் கூறுகிறார்களா? என்று ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். அது மிகவும் நியாயமான கருத்து. அடுத்த பதிவு இந்த குறிப்புகள்தான். தயை கூர்ந்து பொறுத்திருங்கள்.

17 கருத்துகள்:

  1. அய்யா இப்பவும் சொல்றேன் உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு சரியா தெரியல!....ஏன்னா தமிழ் ஞானிகள்(!) மட்டுமே பதிவு எழுதனும்னா இங்க நிறைய பேரு தேறமாட்டாங்க (நான் உற்பட!)...முதன் முறையாக ஓட்டு பட்டை இருந்தும் ஓட்டு போடாமல் செல்கிறேன் வருத்தத்துடன்...நன்றி!

    பதிலளிநீக்கு
  2. //விக்கியுலகம் said...
    அய்யா இப்பவும் சொல்றேன் உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு சரியா தெரியல!....ஏன்னா தமிழ் ஞானிகள்(!) மட்டுமே பதிவு எழுதனும்னா இங்க நிறைய பேரு தேறமாட்டாங்க (நான் உட்பட!)...முதன் முறையாக ஓட்டு பட்டை இருந்தும் ஓட்டு போடாமல் செல்கிறேன் வருத்தத்துடன்...நன்றி!//

    அய்யா, எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்னால் முடிந்த மட்டில் குட்டையைக் குழப்பிவிட்டால் ஏதேனும் தெளிவு பிறக்காதா என்ற ஆதங்கம் மட்டுமே.

    தமிழில் பிழையில்லாமல் எழுத தமிழ் பண்டிதராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அடிப்படை தமிழ் ஆர்வம் மட்டும் இருந்தால் மட்டும் போதும். பிழைகளை தவிர்க்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
  3. ஐயா, அடுத்த ரவுண்டுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகள்! :-)

    பதிலளிநீக்கு
  4. அய்யா
    வண்க்கம்.சென்ற பதிவில் கூறியதும் நடைமுறையைத்தான் சொன்னீர்கள் அவ்வளவுதான்! கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. உங்க பதிவுக்கு நன்றிங்க...நான் முயற்சிக்கிறேன்...ஓட்டு போட்டுட்டேனுங்க...மீண்டும் நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  6. //மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்.//


    truly?

    பதிலளிநீக்கு
  7. சேட்டைக்காரன் said...
    //ஐயா, அடுத்த ரவுண்டுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகள்! :-)//

    அடுத்த ரவுண்டா! என்னவோ ஏதோ என்று நினைத்து ஒரே ‘கிக்’ ஆகிவிட்டது எனக்கு.

    அடுத்தப்பதிவு பற்றிச்சொல்லிருக்கிறீர்கள் என்பதைப் பிறகு தான் புரிந்து கொண்டேன்.

    தங்களைப்போலவே, தங்கள் பாணியிலேயே (பாணியிலேயே = தண்ணியிலேயே)

    ஐயாவுக்கு, அடுத்த ரவுண்டுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகளை நானும் கூறிக்கொள்கிறேன்.vgk

    பதிலளிநீக்கு
  8. வை.கோபாலகிருஷ்ணன் - எந்த ரவுண்டானாலும் ரெடியே!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள். தவறுகள் கண்டிப்பாக வீழ்ச்சி அல்ல.

    பதிலளிநீக்கு
  10. //வை.கோபாலகிருஷ்ணன் said...

    அடுத்த ரவுண்டா! என்னவோ ஏதோ என்று நினைத்து ஒரே ‘கிக்’ ஆகிவிட்டது எனக்கு.//

    வை.கோ.ஐயா!

    மருத்துவர் கந்தசாமி ஐயாவின் இடுகையில் ’கிக்’ பற்றியெல்லாம் பேசினால் மெய்யாலுமே ’கிக்’ கொடுத்து வெளியேற்றி விடுவார் என்று தெரியாதா எனக்கு? :-) (உங்கள் பாஷையில் சொன்னால் ’வழுவட்டை’ கூட ஐயாவின் இடுகையில் அத்தகைய ’ரவுண்டு’ குறித்துப் பேச மாட்டார்கள்).

    அவர் எங்களைக் கலாய்க்கிறார்; நாங்கள் அவரைக் கலாய்க்கிறோம். மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், ஐயாவின் மீதுள்ள அபிமானம் மாறுமா என்ன?

    இரண்டு ஐயாக்களுக்கும் மீண்டும் நன்றி! :-)

    பதிலளிநீக்கு
  11. நீங்களும் ஏதாவது சொல்லிகிட்டேதான் இருக்கீங்க ஆனா ஹி..ஹி.. :-)

    பதிலளிநீக்கு
  12. //ஜெய்லானி said...
    நீங்களும் ஏதாவது சொல்லிகிட்டேதான் இருக்கீங்க ஆனா ஹி..ஹி.. :-)//

    என்ன பண்றது ஜெய்லானி, எப்படியாச்சும் பொழுதப் புடிச்சுத் தள்ளணுமே? வீட்டுல இருக்கிறவங்க கிட்ட எதாச்சும் சொன்னா பூவாவுக்கு வேட்டு வந்துடும். இங்கதான் நம்மளுக்கு பூரண சுதந்தரமாச்சே. இது எப்படி இருக்கு? (ரஜனியின் அந்தக் காலத்து பஞ்ச்)

    பதிலளிநீக்கு
  13. //சேட்டைக்காரன் said.
    மெய்யாலுமே ’கிக்’ கொடுத்து//

    இந்த மாசம் சிங்கப்பூர் போறேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. வாங்கிட்டு வந்துடறேன்.
    வைகோ இதுக்கு சரிப்பட மாட்டார். சென்னையில இறங்குனதும் எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க போதும்.

    பதிலளிநீக்கு