ஒரே தாய் தந்தைக்குப் பிறந்து ஒரே சூழ்நிலையில்,
ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட இரு சகோதரர்கள் ஒரே மாதிரி குணங்கள் உடையவர்களாக இருப்பதில்லை.
இது ஏன் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
சோதிடர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒருவன்
பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகள் அவனுடைய குணங்களையும் அவனுடைய செயல்பாடுகளையும்
கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள். அதனால்தான் கிரக நிலைகள் மாறும்போது அவனுடைய செயல்பாடுகளும்,
சுக துக்கங்களும் மாறுகின்றன என்றும் கூறுகிறார்கள். இதை சோதிடத்தின் மூலம் கணித்து
எதிர்காலப் பிரச்சினைகளைக் குறைக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த தத்துவம் விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாததாக
இருக்கலாம். ஆனால் விண்வெளியிலிருந்து வரும் கதிர் வீச்சுக்கள் மனிதனின் குணங்களை மாற்றுகின்றன
என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்த மாற்றம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக
இருப்பதில்லை என்பதையும் விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. ஆகவே சோதிடம் உண்மைதான் என்று
வாதாடுபவர்கள் இருக்கிறார்கள்.
மனிதர்களுக்குள் வேறுபாடுகள் ஏற்படுவதற்கு ஒவ்வொருவர்
பிறக்கும்போதும் இருந்த கிரக நிலைகள்தான் காரணம் என்று சோதிடர்கள் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.
ஆனால் விஞ்ஞானம் இதை ஒப்புக்கொள்வதில்லை. ஏன் என்று நாம் இப்போது ஆராயவேண்டாம்.
விஞ்ஞானிகள் என்னசொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஏன் மனிதர்களுக்குள் இந்த மாதிரி வேறுபாடுகள் இருக்கின்றன என்றால் ஒவ்வொருவரின் மரபணுக்களும்,
அவற்றின் மூலக்கூறுகளும் வேறுபடுகின்றன. இந்த மரபணுக்கள் பல தலைமுறைகளாக வாழையடி வாழையாக
வந்தவை என்பதை நினைவு கொள்ளவேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் பல தலைமுறைகளின் மரபணுக்களைக்
கொண்டுள்ளார்கள். எப்படி இரு மனிதர்களுக்கு விரல் ரேகைகள் ஒரே மாதிரி இருப்பதில்லையோ,
அதே மாதிரி இரண்டு மனிதர்களின் மரபணுக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
மனிதனின் உடல், மன வளர்ச்சியில் இந்த மரபணுக்கள்
மிகுந்த பங்கு ஆற்றுகின்றன. ஒரே அனுபவத்திலிருந்து இரு மனிதர்கள் இரு விதமான அனுபவங்களைப்
பெறுகிறார்கள். காரணம் இந்த மரபணுக்களிலுள்ள வித்தியாசங்களே. இப்படி வித்தியாசமான அனுபவங்களைப்
பெறுபவர்களின் புத்தியும் குணங்களும் வேறுபட்டுத்தானே இருக்கும். மனிதர்களின் குணங்கள்
இவ்வாறுதான் வேறுபடுகின்றன.
பெரும்பாலான மனிதர்களின் குணங்கள் நல்லவையாகவே இருக்கின்றன.
ஆனாலும் சிலரின் குணங்கள் மிகவும் மாறுபட்டு குடும்பம், சமூகம், நாடு இவைகளுக்கு கேடு
விளைவிக்கும் விதமாக அமைந்து விடுகின்றன.
ஏன் இவர்கள், மற்றவர்களைப் பார்த்து, அல்லது அவர்களின்
அறிவுரைகளைக் கேட்டு தங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற ஐயம் ஏற்படுவது இயற்கையே.
ஏன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?
மனுஷ மனம் ஒரு குரங்குநு சொல்றாங்களே ,அத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?
பதிலளிநீக்குமுதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா
மனிதனின் குணங்கள் பற்றிய அலசல் அருமை ஐயா.
பதிலளிநீக்குஇன்றைய சூழலில் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய
பதிலளிநீக்குபொருள் குறித்து பதிவிட்டமைக்கு நன்றி
ஆரம்பமே அமர்க்களம்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
//IlayaDhasan said...
பதிலளிநீக்குமனுஷ மனம் ஒரு குரங்குநு சொல்றாங்களே ,அத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?
முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா //
குரங்கு சும்மா இருந்து எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது சேஷ்டைகள் செய்து கொண்டேதான் இருக்கும். அதே மாதிரி மனிதனின் மனமும் சும்மாவே இருக்காது. பல எண்ணங்களுக்கு தாவிக்கொண்டே இருக்கும்.
அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று சொல்கிறோம்.
மன அலைகளின் அமர்க்களமான ஆரம்பம் அருமை.
பதிலளிநீக்குஅற்புதம் ஐயா! யார் எது சொல்கின்றார்கள் என்று எண்ணிப் பார்த்தால் நல்லதைச் செய்யவே முடியாது. எல்லோராலும் இவ்வாறான பதிவுகளைத் தரமுடியாது. உளவியல் சார்ந்த ஆக்கங்களை நான் மேலும் வரவேற்கின்றேன். ஏனென்றால், பலர் விடுகின்ற தவறுகளுக்கும் அந்த உளவியல்தான் காரணம். இதைப் புரிந்தவர்கள் கோபப்படுவதே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் பல அநுபவங்களைப் பெற்றிருக்கின்றேன். ஆனால், எதற்கும் கோபப்படுவதில்லை. ஏனென்றால், மனிதனைப் படித்திருக்கின்றோம் இல்லையா? நீங்கள் மனிதனை அழகாக பதிவுகள் மூலம் எடுத்துக் காட்டுகின்றீர்கள். யார் சொன்னார். எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உங்கள் சொந்த அறிவால் எண்ணிப் பாருங்கள் என்ற சோக்ரடிஸ் வார்த்தைகளுக்கு இணங்க உங்களைப் போன்றவர்களுடைய ஆக்கங்களை மொய்ப்பதற்கு என்னைப் போன்ற தேனீக்கள் உண்டு. உங்கள் வலையினுள் தாமதமாகவே நுழைந்துள்ளேன். ஆனால், தாராளமாகப் பெற்றுத் திரும்புகின்றேன் என் வலை வாசத்திற்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்குசந்திரகௌரி அவர்களுக்கு, உங்களுடைய விரிவான, ஆழ்ந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களின் ஊக்கமே எனக்கு இம்மாதிரி பதிவுகளை எழுத வைக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
அருமையான பதிவுக்கு நன்றி..!
பதிலளிநீக்குஅற்புதம் ஐயா! யார் எது சொல்கின்றார்கள் என்று எண்ணிப் பார்த்தால் நல்லதைச் செய்யவே முடியாது.என்னைப் பொறுத்தவரையில் பல அநுபவங்களைப் பெற்றிருக்கின்றேன். ஆனால், எதற்கும் கோபப்படுவதில்லை. ஏனென்றால், மனிதனைப் படித்திருக்கின்றோம்
பதிலளிநீக்கு