வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அதிக ஹிட்ஸ், ஓட்டுகள், பின்னூட்டங்கள் வேண்டுமா, இங்க வாங்கோ


இவங்க ரொம்ப நல்லா நடிப்பாங்க

என்னுடைய பதிவர்களுக்கு பத்து குறிப்புகள் என்ற பதிவிற்கு, பதிவுலக வரலாறு காணாத அளவில் அன்பும் ஆதரவும் கொட்டிக் கொடுத்த அனைவரது பாதார விந்தங்களுக்கும் அநேகம் கோடி நமஸ்காரங்கள். (இது எப்படி இருக்கு!)

இந்தப் பதிவில் எழுதிய குறிப்புகள் போதாதென்று சிலபல பதிவர்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தபடியால் அந்தக் குறையை நிவர்த்திக்கும் பொருட்டு இந்தப் பதிவை போடுகிறேன். இந்த உலகத்தில எப்பொழுதும் நல்லதுக்கு காலமில்லைன்னு பெரியவங்க சொன்னது ரொம்ப ரொம்ப உண்மை.
குறை தெரிவித்ததில் ஒரு சேம்பிள்:
//JOTHIG ஜோதிஜி said...
அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

அய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது) சொல்லிக்கொடுக்கோணும்//

சரீங்க, நீங்க சொல்றதுனால அதையும் போட்டுடறனுங்க. அதை ஏன் பாக்கி வைக்கோணும்? முட்ட நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதுக்கு?

என்ன, ரொம்பப் பேருக்கு உடம்பெரியும். எரியட்டுமே, நமக்கென்ன? அப்புறம் என்ன, நெறய, மைனஸ் ஓட்டு விழும். விழட்டுமே! நம்ம லெவலுக்கு பிளஸ், மைனஸ் எல்லாம் ஒண்ணுதானுங்களே?

அப்புறம் நான் வாத்தியாருங்க, வகுப்புல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் கிளாஸ் எடுப்பேன். ட்யூஷன் கிளாஸ் எல்லாம் வைக்கறது கிடையாது.

எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ. இப்ப பாடத்தை ஒழுங்கா கவனியுங்கோ.

1.   உங்கள் பதிவிற்கு, உலகத்தில் இதுவரை யாரும் வைக்காத, பெயர் வைக்கவேண்டும். முடிசூடா மொக்கை மன்னன், கும்மாலக்கிடி கும்மா, சுளுக்கு சுந்தரி, இப்படி நல்லதா ஒரு தலைப்பு தேர்ந்தெடுங்கள். அப்புறம் பதிவருக்கு ஒரு முகமூடி பெயர் வேண்டும். தெருநாய், குப்பைவண்டி, தெருப்பொறுக்கி, ரெட்டைவால் குரங்கு, இந்த மாதிரி பெயர் வைத்துக்கொள்ளுங்கள். உண்மைப் பெயருடன் போட்டோவையும் பதிவில் போடும் தவறை எக்காலத்திலும் செய்யாதீர்கள். அது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பாகும். பிளாக்கில் ஈமெயில் விவரத்தைக் கொடுக்காதீர்கள். அது நிச்சயமாக வீட்டுக்கு ஆட்டோவை வரவழைக்கும்.

2.   ஒரு அரை டஜன் சகாக்களை தயார் செய்யுங்கள். எல்லோரும் கம்ப்யூட்டரே கதி என்று இருப்பவர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு அரை டஜன் email ID தயார் செய்யவேண்டும். ஆக மொத்தம் 36 email ID தயார். இப்போ நீங்கள் பதிவு இடுவதற்கு தகுதி அடைந்து விட்டீர்கள்.

3.   பதிவின் தலைப்பு யாரும் கனவில் கூட நினைத்திராதபடி இருக்கவேண்டும். (உ-ம்) காதல் கன்னியுடன் இரவில் ஜாலி…… தலைப்பு, பார்த்தவுடன் பசங்களை அப்படியே சுண்டி இழுக்கவேண்டும். இதில் எந்த தவறும் கிடையாது. ஒரு கண்ணியமிக்க, பிரபல பதிவரே சமீபத்தில் இந்த மாதிரி தலைப்பு வைத்துத்தான் வாசகர்களை தன் பதிவின் பக்கம் இழுத்தார்.

4.   பதிவில் நடிகைகளின் நல்ல (?) போட்டோக்கள் நாலைந்து கட்டாயம் போடவேண்டும். பதிவின் மேட்டர் எப்படியிருந்தாலும் சரி. இதில் எந்தத் தவறும் கிடையாது. அழகை ஆராதிப்பதில் என்ன தவறு வந்து விடும்?  

இந்த மாதிரி பதிவுகளுக்குத்தான் மொக்கைப் பதிவுகள் என்ற பெயர். இந்தப் பதிவர்களுக்கு “மொக்கைப் பதிவர்கள்” என்ற அடை மொழி உண்டு. இந்தப் பெயர் வாங்குவது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை இந்தப் பட்டத்தை வாங்கிவிட்டால் ஆயுளுக்கும் உங்களை விடாது.

5.   பதிவு போட்டவுடன் ரன்னிங்க் ரேசில் சொல்வார்களே, அந்த மாதிரி  On your marks, get set, ready, start என்று சொல்ல ஒரு சங்கேத வார்த்தையை முதலிலேயே நண்பர்களுடன் பேசி வைத்துக்கொள்ளுங்கள். பதிவு போட்டவுடன் இந்த சங்கேத வார்த்தையை உங்கள் நண்பர்களுக்கு மெயில் செய்து விடுங்கள். பதிவுகள் பொதுவாக இரவு 11 மணிக்குத்தான் போடவேண்டும்.

6.   திட்டம் என்னவென்றால் இந்த சங்கேத வார்த்தை கிடைத்தவுடன் உங்கள் நண்பர்களெல்லாம் உங்கள் பதிவுக்கு வந்து ஒரு நிமிஷத்துக்கு ஒன்று என்ற ரேட்டில் அவர்களுடைய ஆறு ID யிலிருந்தும் சகட்டு மேனிக்கு பின்னூட்டங்கள் போடவேண்டியது. பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை. நீங்களும் இரவு முழுவதும் தூங்காமல் வந்த பின்னூட்டங்களுக்கெல்லாம் பதில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். விடிவதற்குள் எப்படியும் ஆயிரம் பின்னூட்டங்கள் தேத்தி விடவேண்டும்.

7.   விடிந்து ஆணி பிடுங்கப் போகும் இடத்தில் நண்பர்கள் எல்லாம் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுக்குப் போய் ஒவ்வொரு ஐ.டி.யிலும் ஹிட்ஸ் கொடுத்து விட்டு, ஓட்டும் போடவேண்டியது.

8.   ஒரு கம்ப்யூட்டரிலிருந்து ஒரு திரட்டியில் ஒரு முறைதான் ஓட்டுப் போட முடியும் என்பது பதிவுலகின் துர்ப்பாக்கியம். ஆகவே எங்கு புதிதாக கம்ப்யூட்டரைப் பார்த்தாலும் உடனே அதில் புகுந்து ஒரு ஓட்டைப் போட்டுவிடவேண்டும்.

9.   யாராவது ஒரு பதிவர், குறிப்பாக பெண் பதிவர்கள், ஒரு சின்ன விஷயத்தை யதார்த்தமாக எழுதியிருந்தாலும், அதில் நண்பர்கள் எல்லோரும் படையெடுத்து அந்த மேட்டரை ஊதி ஊதி பெரிசாக்கி, பூதாகாரமாகப் பண்ணி, அந்தப் பதிவர் ஊரை விட்டே ஓடும்படியாகச் செய்யவேண்டும்.

10. பிரபலமான பதிவர்களின் பதிவிற்குச் சென்று அவர்களை உசுப்பேற்றி அவர்கள் ஏமாந்து சொல்லும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு கும்மியடிக்கவேண்டும்.

கைவசம் இன்னும் நிறைய உத்திகள் இருக்கின்றன. இப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். இவைகளைக் கடைப்பிடித்து உங்கள் தளத்தை உலகப் பிரசித்தி பெற்ற தளமாக மாற்ற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாத்தியார் பேரைக் கெடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

டிஸ்கி: இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் எந்தக் குறிப்பும், யாரையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி யாராவது நினைத்தால் பொது நலம் கருதி அதை மறந்து விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

       
            இவங்க பெங்கால்ல ரொம்ப பிரபல பாடகி.
28 கருத்துகள்:

 1. நண்பர்களே, இந்த வரிசையில் இதுதான் கடைசிப் பதிவு. இனி போனால் வராது. ஆகவே இதில் சொல்லப்பட்ட விஷயங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத்தட்டும். மறக்காதீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. நடப்பதை அப்படியே நன்றாக போட்டு உடைத்துள்ளிர்கள்.

  பதிலளிநீக்கு
 3. பெண் பதிவர்களை துரத்துரதுதான் உங்க உத்தேசமா...

  பதிலளிநீக்கு
 4. ஒரு கண்ணியமிக்க, பிரபல பதிவரே சமீபத்தில் இந்த மாதிரி தலைப்பு வைத்துத்தான் வாசகர்களை தன் பதிவின் பக்கம் இழுத்தார்.//அப்படி ஒரு கணவான் இருக்காரா

  பதிலளிநீக்கு
 5. இது நல்ல ஹிட்ஸ் கிடைக்கும் போஸ்ட்தான்..ஆனா நீங்க வழக்கம் போல எழுதுவதே பெருமை.

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே என சொல்ல முடியாது, ஆனால் உண்மை.

  பதிலளிநீக்கு
 7. இதுவரை தேவரகசியமாக இருந்தவற்றை, ஏதோ கொஞ்சம் புரியவைப்பது போலத்தோன்றுகிறது. இருப்பினும் இந்த அகஜகா வேலைகள் செய்வதற்கும் ஒரு தனித்திறமை வேண்டுமே; அது நமக்கு இல்லையே. அதனால் என்ன? பேசாமல் விட்டு விடுவோம். vgk

  பதிலளிநீக்கு
 8. நானும் ரொம்ப நாளா..இம்மாதிரி பதிவுகள பார்த்து ஆச்சரிய பட்டுகிட்டு இருந்தேன்..என்னே..ஹிட்ஸ்..என்னே..பீன்னூட்டம் என்று..அந்த ரகசியம் ...வெளிக்கொணர்ந்து விட்டீர்கள்...குட்...இன்னொரு விஷயம்...டாக்டர்.பி.கந்தசாமிக்கு...இன்னொருமுகம் இருக்குன்னு..காட்டியமைதான் ஜோர்..ஓல்ட் இஸ்..கோல்ட் மட்டுமல்ல..போல்டு..சபாஷ்

  பதிலளிநீக்கு
 9. நல்ல பதிவு!

  // பதிவுகள் பொதுவாக இரவு 11 மணிக்குத்தான் போடவேண்டும் //

  ஏன் சார்? இது ஹிட்ஸ் ரகசியமா?

  பதிலளிநீக்கு
 10. // எங்கு புதிதாக கம்ப்யூட்டரைப் பார்த்தாலும் உடனே அதில் புகுந்து ஒரு ஓட்டைப் போட்டுவிடவேண்டும். //

  நல்ல ஐடியா!

  பதிலளிநீக்கு
 11. என்னமோ சொல்லி இருக்கீங்கபோல இருக்கே. ரைட்டு

  பதிலளிநீக்கு
 12. நான் இதுல எந்த வகைன்னு எனக்கே தெரியல ஹய்யோ..ஹய்யோ..:-))

  பதிலளிநீக்கு
 13. //F.NIHAZA said...
  பெண் பதிவர்களை துரத்துரதுதான் உங்க உத்தேசமா...//

  எனக்கு அப்படியெல்லாம் எண்ணமில்லீங்க. ஆனா அந்த மாதிரி நெறய நடந்திருக்குங்க.

  பதிலளிநீக்கு
 14. //ஜெய்லானி said...
  நான் இதுல எந்த வகைன்னு எனக்கே தெரியல ஹய்யோ..ஹய்யோ..:-))//

  தெரியாம இருக்கிறது பெரிய புண்ணியமுங்க.

  பதிலளிநீக்கு
 15. //Rathnavel said...
  நன்றி ஐயா.//

  இந்த டெக்னிக்கெல்லாம் நம்ம மாதிரி ஆளுங்களுக்குத் தேவையில்லைங்க. ஆனா "களவும் கற்று மற" அப்படீன்னு சொல்லியிருக்காங்க இல்லீங்களா, அதுக்காகத்தான் இந்த டெக்னிக்குகளும் தெரியும் என்பதற்காக போட்ட பதிவுதானுங்க இது.

  பதிலளிநீக்கு
 16. இது தப்பாட்டம். நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக்கிட்டே அனுமதி கேட்காமலே என்னோட பெயரை பயன்படுத்தி இன்றைக்கு ஏகப்பட்ட ஹிட்ஸ் சம்பாரிச்சு இருக்கீங்க. அதுல எனக்கும் பங்கு வேணுங்கோ. அப்புறம் முதலில் ஓரவஞ்சனையா ஒரு சின்னப்படத்தை என் பெயருக்கு அருகே போட்டு விட்டு கீழே மட்டும் இம்மாம் பெரிய பிரயோஜனமில்லா படம் எதுக்கு?

  உங்களோட டூ டூ டூ.

  பதிலளிநீக்கு
 17. எம் மனதில் வலையுலகம் குறித்து நினைத்த சந்தேகங்களையும்,கருத்துகளையும் எழுதியதிற்கு பாராட்டுகள். பெண்களின் காவலன் போல ஒரு பதிவு எழுதிவிட்டு,படு ஆபாசமாக,மறைமுக கேலி,டபுல் மீனிங் வாக்கியங்கள்,போன்றவற்றை வைத்து அதே பெண் பதிவர்”களை, குழு சேர்ந்து,பதிவு பின்னூட்டம் மூலம் கேவலப்படுத்தி வருவதையும் பார்த்து வருகிறேன்.நேர்மை நாகரிகம்,பெருந்தன்மை,பண்பாடு என்பது இந்த உயர்ந்த வலைப்பூ உலகில் இருக்கும் என ஆரம்பத்தில் நினைத்தேன்,அது இங்கு நாறிப்போய்தான் கிடக்கிறது.சரி,சரி மிச்ச டெக்கினிக்குகலையும் எழுதி அவ்ர்கள் வயிற்றெரிச்சலை முழுமையா கொட்டிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கி
  றேன்.

  பதிலளிநீக்கு
 18. //JOTHIG ஜோதிஜி said...
  இது தப்பாட்டம். நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக்கிட்டே அனுமதி கேட்காமலே என்னோட பெயரை பயன்படுத்தி இன்றைக்கு ஏகப்பட்ட ஹிட்ஸ் சம்பாரிச்சு இருக்கீங்க. அதுல எனக்கும் பங்கு வேணுங்கோ. அப்புறம் முதலில் ஓரவஞ்சனையா ஒரு சின்னப்படத்தை என் பெயருக்கு அருகே போட்டு விட்டு கீழே மட்டும் இம்மாம் பெரிய
  பிரயோஜனமில்லா படம் எதுக்கு?

  உங்களோட டூ டூ டூ.//


  இந்தப் பதிவும் பதிவிட்ட தளமும் உங்களுடையதே. எல்லாப் புகழும் ஜோதிஜிக்கே. அப்படியே இந்தத் தளத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான் ரிடைர்டு ஆகிக் கொள்கிறேன்.

  டூ எல்லாம் வேண்டாங்க, எலந்தை மிட்டாய் வாங்கிக் கொடுக்கறேன், சரிதானுங்களே.

  பதிலளிநீக்கு
 19. அருமையான பதிவு.
  கிண்டலுடன் சரியான அடி கொடுத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 20. //Dr.எம்.கே.முருகானந்தன் said...
  அருமையான பதிவு.
  கிண்டலுடன் சரியான அடி கொடுத்திருக்கிறீர்கள்.//

  பின்பு என்ன செய்வது டாக்டர், இவங்க பண்ணுகிற அழும்பு தாங்கமுடியலீங்க.

  பதிலளிநீக்கு
 21. ippadi elllam sonna thirunthuvanganu ninaikiringa. athu mudiyathunga. vantha puthusula niraiya porunga mutti mothi appuram nan oru mudivu eduthen.

  en kadan eluthuvathu. padippavarkal pidithal padikkattum. hits popular pathi ellam kavalai illai.

  பதிலளிநீக்கு
 22. பித்தனின் வாக்கு- அன்புள்ள நண்பருக்கு, இதனாலெல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நான் நெனைக்கலீங்க. நம்மளுக்கும் இந்த விசயங்களெல்லாம் தெரியும்னு காட்டறதுக்காகத்தான் இந்தப் பதிவு எழுதினேனுங்க.

  பதிலளிநீக்கு
 23. எங்க சார் இருந்தீங்க

  பதிலளிநீக்கு