வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கோடீஸ்வரன் ஆக வேண்டுமா?


முதலில் லட்சாதிபதி ஆவதற்கு வழி சொல்லிக் கொடுக்கிறேன். பிறகு நீங்களாகவே கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்.

அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளக்காரர்களாக இருந்தாலும் வரவிற்குள் செலவு செய்வதென்பது மிகவும் அவசியம். பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவதற்குக் காரணம் வரவுக்கு மீறி செலவு செய்வதுதான்.
இந்திய நாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகம். இதற்குக் காரணம் பல. அவைகளுக்கு சமீப காலத்தில் தீர்வு காண முடியாது. இருக்கும் நிலையில் என்ன செய்ய முடியும் என்றுதான் யோசிக்கவேண்டுமே தவிர, பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைப்பட்டால் நடக்குமா?

உங்களுக்கென்ன, நீங்கள் மேல்மட்ட வர்க்கத்தினர், உங்களுக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்கலாம். நானும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு வந்தவன்தான் என்று சொன்னால், உங்கள் காலம் வேறு, தற்போதைய காலம் வேறு என்று சொல்வார்கள். இது விதண்டாவாதம்தானே தவிர வேறு ஒன்றுமில்லை.
வரவு செலவுத் திட்டம், சிக்கனம், சேமிப்பு இந்த மூன்றும்தான் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படை. என்னால் முடியாது என்று சொல்பவர்களுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு முன்னேறுவோம் என்பவர்களுக்காக மட்டும்தான் இந்த ஆலோசனைகள்.

சபலங்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் இடம் கொடுக்கக்கூடாது. ஆடம்பரம் சாதாரண வாழ்க்கையில் தேவையில்லை. தங்கள் தகுதிக்கு மீறி எதையும் செய்யக்கூடாது. தங்கள் தகுதிக்கு ஏற்றது எது என்பது அவரவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அனில் அம்பானி 100 கோடி ரூபாயில் வீடு கட்டியிருக்கிறார் என்றால் நாம் அந்த மாதிரி ஆசைப்பட முடியுமா?

வீட்டுச் செலவுகளை சிக்கனமாகச் செய்ய பல யோசனைகளை நடைமுறைப் படுத்தலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியம் கெடாமல் குறைந்த செலவில் குடும்பத்தை நடத்தலாம். நல்ல அரிசி கிலோ 40 ரூபாய். அதே ரகத்தைச் சேர்ந்த குருணை அரிசி கிலோ 25 ரூபாய். கீரை வகைகள் உடம்புக்கு நலம் பயப்பவை. அதிக விலை கொடுத்து இங்கிலீஷ் காய்கறிகள் வாங்குவதை விட இது ஆரோக்கியமானது.
ராகி, சோளம், கம்பு ஆகியவை உடல் நலத்திற்கு ஏற்றவை. அரிசியை விட விலை குறைவு. ஓட்டலில் சாப்பிடுவதையும் சினிமா பார்ப்பதையும் நிறுத்தினால் எவ்வளவோ பணம் மிச்சமாகும். துணிமணிகள் ஆடம்பரமாகப் போடுவதால் எந்தப் பலனும் இல்லை. துணிகளை வீட்டிலேயே இஸ்திரி போட்டுக்கொள்ளலாம். இப்படி எவ்வளவோ வகைகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம்.

சம்பளக்காரர்கள் கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி. நீங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதியை மட்டும்தான் உங்கள் சம்பளம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குள்தான் உங்கள் வீட்டுச் செலவுகளையெல்லாம் செய்யவேண்டும். இது மிகவும் கஷ்டமான காரியம். இதுநாள் வரை முழு சம்பளத்தையும் செலவு செய்தே குடும்பத்தை நடத்த முடியவில்லை. பாதி சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று எல்லோரும் கேட்பீர்கள் என்பதை நான் அறிவேன்.
நீங்கள் வாழ்க்கையில் உண்மையாக முன்னேறவேண்டுமென்று நினைத்தால் இதைச் செய்தே ஆகவேண்டும். எப்படி செய்வது என்பதை அவரவர்கள் முடிவு செய்துகொள்ளவேண்டும்.

மீதி பாதி சம்பளத்தை பேங்கில் போட்டுவிடவேண்டும். அது நம் பணம் அல்ல என்று தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படி சேரும் பணத்தில் பாதி ஏதாவது அவசரச் செலவுகள் வரும்போது தீர்ந்துவிடும் மீது பாதிதான் சேமிப்பாக வளரும். இந்த கட்டுப்பாடான மனநிலை இல்லையென்றால் இப்போதுள்ள வாழ்க்கை முறைதான் உங்களுக்கு சாஸ்வதமாக அமையும்.  

14 கருத்துகள்:

 1. உங்கள் கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன் அய்யா..

  ஏன்னு கேளுங்களேன்?..

  போங்க சார்.. கேட்காம எப்படி நான் பதில் சொல்வது..

  :-)

  பதிலளிநீக்கு
 2. பாதி சம்பளத்தில் குடும்பம் நடத்துவது என்ன சாதாரண விசயமா சார்?..

  ஆகவே...இதை நான் கன்னாபின்னா என எதிர்கிறேன்....

  பதிலளிநீக்கு
 3. இதுதான் என் விளக்கம்..

  உதாரணம்...
  மாத வருமானம் : 20 ஆயிரம்
  மாதச்செலவு : 22 ஆயிரம்..

  செலவை மிச்சப்படுத்தி 20 ஆயிரத்தில் குடும்பத்தை ஓட்டுவதை விட.. மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்க முயற்சி செய்யலாமே...

  ஹிஹி

  முயற்சியுடையார் .. ஹிஹி.. நிசமா... முன்னேறுவார்... ஹிஹி

  சரி சார்... ஆணி அதிகம்.. அப்பால வரேன்...

  பதிலளிநீக்கு
 4. அருமையான அனுபவப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. என் இனிய வணக்கம்,
  நல்ல ஐடியாக்கல் சகோ..ஆனால், நான் இன்னும் மாணவன்தான்..பலருக்கும் இது பயனுள்ள தகவல் என்பதில் சந்தேகமில்லை.,நன்றி.

  பதிலளிநீக்கு
 6. முயற்சி செய்தால் நீங்கள் சொன்ன விஷயங்கள் நடக்கலாம்... தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை குறைத்தாலே பாதி செலவுகள் குறைந்துவிடும்....

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ! எளிமை என்றும் இனிமை
  என்ற தங்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
  இதை ஓரளவாவது அனைவரும் தங்களின் நடுத்தர வயதுக்
  காலங்களில் ஆவது பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. ஆசையே துன்பத்திற்கு காரணம். தாங்கள் சொல்லியிருப்பது உண்மை! அவசியம் அனைவரும் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் சீராக முன்னேறலாம். மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி.

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. ஆகவே என்னுடைய பழைய பதிவுகளை படிக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டேன்.

   நீக்கு
  2. ITHU THERIYAMAL NAAN ROMBA KASTAPPATUVITTEN, KASTAPPADUGIREN

   நீக்கு