செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டு யோசிக்க வைக்கும் செய்திகள்.


ஒன்று.

திருநெல்வேலி ஆலங்குளம் அருகே ஒரு காரும் லாரியும் மோதினதில் எட்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு பேர் சீரியசாக இருக்கிறார்கள். மிகவும் பரிதாபமான செய்தி. படிப்பதற்கே கஷ்டமாக இருந்தது.

இந்தக் கஷ்டம், பரிதாபம் இவைகளை விட்டுவிட்டு செய்தியை அலசினால் தெரியக்கூடிய கருத்துகள்.
  
  1. ஒரு குடும்பத்தினர் பணத்தை மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இன்னொரு உறவினர் வந்த வாடகைக் காரில் ஏறியிருக்கிறார்கள். கார் சக்திக்கு மீறிய அதிக பாரத்தை ஏற்றியிருக்கிறது.
  2.   கார் கொண்டு வந்த உறவினர், எல்லோரும் ஏறினால் இட நெருக்கடி ஏற்படும் என்று சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
  3.   கார் டிரைவர் 22 வயதுப் பையன். அவன் இப்படி அதிக பாரம் ஏற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவில்லை.
  4.   கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும், காரில் அதிக பாரம் இருக்கும்போது காரை ஓட்டுவதும் வளைப்பதுவும் எவ்வளவு கடினம் என்று.
  5.   டிரைவருக்கு இரவு சீக்கிரம் ஊர் போய்ச் சேரவேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். ஆகவே வேகமாக காரை ஓட்டியிருக்கிறார்.
  6.   அதிக பாரத்தினாலும், அதிக வேகத்தினாலும் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வண்டிக்கு இடம் கொடுக்க முடியவில்லை.
  7.   லாரிக்காரனும் அதே மாதிரி வளவில் இடம் கொடுக்காமல் வந்திருக்கலாம்.
  8.   விபத்து நடந்துவிட்டது. 8 உயிர்கள் நஷ்டம். எத்தனை அழுது புரண்டாலும் உயிர்கள் மீளப்போவதில்லை.

காரில் போகும்போது சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர் ஓட்டினாலும் கூட செல்பவர்கள் கண்காணிப்பாக இருந்து செயல்படவேண்டும். அதிக வேகம் போகும்போது டிரைவரை கண்டிக்கவேண்டும். அதற்கு தைரியம் இல்லாவிடில் காரில் போகக்கூடாது. அதிக பாரம் ஏற்றுவதில் கண்டிப்பு வேண்டும். தயவு தாட்சண்யம் கூடாது. விபத்து ஏற்பட்டபின் வருத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை.

இரண்டு.

வேளச்சேரியில் மனித உரிமைக் கழகத்தினரை பொது மக்கள் நன்றாக மட்டம் தட்டியிருக்கிறார்கள். எப்போதும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. திருட்டுக் கொடுத்தவனுக்கு ஒன்றும் சொய்ய மாட்டார்கள். திருடனைப் பிடித்து தண்டித்தால் இவர்களுக்கு உடனே மனித நேய உணர்வு பொங்கிக்கொண்டு வரும்.

கொலை நடந்துவிட்டால் கொலையுண்டவனின் குடும்பத்தைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். கொலைகாரனுக்காக பரிந்து பேசிப் போராட்டம் நடத்துவார்கள். இவர்களை எல்லாம் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைக்கவேண்டும்.

11 கருத்துகள்:

 1. முதலாவது செய்தியில் நீங்கள் சொல்பது சரியான கருத்து. இன்னொரு கொடுமை இருபத்தி நாலு மணிநேரமும் அந்த டிரைவர் வண்டி ஓட்டுவார். ஒரே நாளில் தமிழகத்தின் பல ஊர்களுக்கு போய் வர பலர் நினைப்பது ஒரு காரணம். ஒரே நாள் என்றால் வாடகை கம்மி என்ற மனோநிலை. நாங்கள் ஒரு முறை சென்றபோது அந்த ட்ராவல்ஸ் வண்டி டிரைவர் தூங்கி வழிந்தபடி வண்டி ஒட்டியதை பார்த்து நடுங்கிவிட்டேன்!

  இரண்டாவது தவறு என்று நினைக்கிறேன் சார். இது போன்ற என்கவுண்டர்களை ஊக்குவிப்பது நல்லதில்லை. சட்டம் தண்டிப்பதில் ஊனமாக இருக்கிறது என்பது உண்மையே. அதற்காக, போலீசே தண்டனை வழங்குவது என்று ஆரம்பித்துவிட்டால் சந்தேகப்படும் எல்லோரையும் 'போட்டு தள்ளும்' மனோபாவத்திற்கு வழி வகுத்துவிடும்.

  பதிலளிநீக்கு
 2. கருத்துக்கு நன்றி, பந்து. இரண்டாவது கருத்தில் என் நிலையில் தவறு இருக்கலாம். காலம்தான் நல்ல தெளிவைக் கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. வருத்தம் தந்த விஷயம் முதலாவது.... எத்தனை உயிர்ச்சேதம்.....

  பதிலளிநீக்கு
 4. எந்த செயலை செய்வதெற்கு முன்னும், ஒரே ஒரு நொடி யோசித்தால், மாபெரும் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

  மனித உரிமை அமைப்புகளை முழுவதும் குறை கூறி விட முடியாது. நன்றி சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முற்றும் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சில குறைகள் இருக்கின்றன.

   நீக்கு
 5. ///கொலைகாரனுக்காக பரிந்து பேசிப் போராட்டம் நடத்துவார்கள். இவர்களை எல்லாம் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைக்கவேண்டும்.///

  அந்த நாளும் வந்திடாதோ....

  பதிலளிநீக்கு
 6. எப்போதும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. திருட்டுக் கொடுத்தவனுக்கு ஒன்றும் சொய்ய மாட்டார்கள்.

  காலம்தான் நல்ல தெளிவைக் கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. தங்களின் முதற்கருத்தில் அனைவருக்கும் ஏற்புடையதாகவே இருக்கும். ஆனால், இரண்டாம் கருத்திற்கு மனம் ஒப்பவில்லை. 5 கொள்ளையர்களையும் ஒரே நேரத்தில் கொன்றிருப்பது திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கின்றது. இவர்களின் பிண்ணனியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கவே செய்கின்றது. தமிழக காவலர்கள் இவர்களில் ஒருவரைக் கூட உயிருடன் பிடிக்க லாயக்கில்லாதவர்கள் எனும் கூற்றினை என் போன்றவர்கள் நம்பவே மாட்டார்கள். கொள்ளையர்களுக்கு தண்டனை கொடுக்கலாம்; ஆனால் உயிரினை எடுப்பது என்பது.... இவர்களின் மீது கொலை / கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் இல்லை. சில இலட்சங்களை கொள்ளை அடித்ததற்காக இவர்கள் கொலையினை நாம் நியாயப்படுத்தினால், பல கோடிகளை கொள்ளையடித்துள்ள, கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்ற, இனி கொள்ளையடிக்கபோகின்ற அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, தனியார் துறை முதலாளிகளை...என பற்பல இத்யாதிகளை என்கவுண்டரில் கொல்லவும் நாம் ஆமோதிக்கவே வேண்டும். இது என் தாழ்மையான கருத்து.

  பதிலளிநீக்கு