வியாழன், 22 மார்ச், 2012

மிருத்யுஞ்ஜய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்

இந்த ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை பலர் படித்திருப்பீர்கள். இது ஒரு வேத மந்திரம்.

(நியாயமாக வேதம் படித்தவர்கள்தான் இந்த மந்திரத்தை ஜபிக்கவேண்டும். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல் நானும் என் பொல்லாச்சிறகை விரித்துள்ளேன். வேத பண்டிதர்கள் மன்னிப்பார்களாக.)

இதன் பொருள் :

நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண்ணனுமாகிய சிவபெருமானைப் போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுவோமாக. ஆன்ம நிலையிலிருந்து விலகாமல் இருப்போமாக.

இந்த மந்திரத்தின் முக்கிய சாராம்சம் என்னவென்றால் நம்முடைய மரணம் துன்பமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான். அதற்கு உதாரணமாக சொல்லப்பட்ட விஷயம் - வெள்ளரிச் செடியிலிருந்து நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு சிரமமில்லாமல் விடுபடுகிறதோ அப்படி என் ஆத்மாவும் இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும்.

இன்று காலை நடைப்பயிற்சி போய்விட்டு வரும்போது வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டு இருந்தார்கள். எதைப்பற்றி என்றால் மரணத்தைப் பற்றித்தான். அவர்களில் ஒருவர் சொன்னது. "நோய் நொடியில்லாமல் படுக்கையில் படுக்காமல் போய்ச்சேர்ந்து விட வேண்டும்."

என்ன ஒரு ஆசை பாருங்கள்! எனக்கு பணம் வேண்டும், பங்களா வேண்டும், கார் வேண்டும் என்றெல்லாம் அந்த மனுஷன் ஆசைப்படவில்லை. என்னுடைய மரணம் துன்பமில்லாமல் அமையவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான்.

எனக்கு அதைக்கேட்டவுடன் இந்த மிருத்யுஞ்ஜய மந்திர ஞாபகம்தான் வந்தது.  வேதகாலத்திலேயை வேத விற்பன்னர்கள் தங்களுடைய மரணம் துன்பமில்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். கலிகாலத்தில் ஆசைப்படுவது அதிசயமல்ல.

20 கருத்துகள்:

  1. வேதகாலத்திலேயே வேத விற்பன்னர்கள் தங்களுடைய மரணம் துன்பமில்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். கலிகாலத்தில் ஆசைப்படுவது அதிசயமல்ல.

    ஆச்சர்யமான உண்மை

    பதிலளிநீக்கு
  2. உண்மையில் சிந்திக்க வேண்டிய விசயம். சாகும் போது சுகமாக சாக எண்ணுபவர்கள் வாழும்போது மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருந்திருந்தாலே ஓரளவுக்கு போதும் என நினைக்கிறேன். ஆனால் இந்த ஞான உதயம் வயதான காலத்தில்தான் பெரும்பாலானோருக்கு வருகிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
  3. //"நோய் நொடியில்லாமல் படுக்கையில் படுக்காமல் போய்ச்சேர்ந்து விட வேண்டும்."

    என்ன ஒரு ஆசை பாருங்கள்! எனக்கு பணம் வேண்டும், பங்களா வேண்டும், கார் வேண்டும் என்றெல்லாம் அந்த மனுஷன் ஆசைப்படவில்லை. என்னுடைய மரணம் துன்பமில்லாமல் அமையவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான்.//

    இந்த அவர்களின் ஆசை நியாயமானதே. எல்லோருக்கும் அதுபோல சுகமான கஷ்டமில்லாத மரணம் கிட்டுவதில்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரணம் அவரவர் வினைப்படியே ஏற்படும். தன் பூர்வ ஜன்ம கர்மாவின் பயனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்பவனே கர்மயோகி.

      மேலும் இந்த ஜன்மாவிலும் கர்ம வினைகளைப் பெருக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதற்குத்தான் பிரசாத புத்தி வேண்டுமென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அப்படி வாழ்பவன் ஜனன மரணமற்ற பெருவாழ்வு பெறுவான்.

      நீக்கு
  4. //அதற்கு உதாரணமாக சொல்லப்பட்ட விஷயம் - வெள்ளரிச் செடியிலிருந்து நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு சிரமமில்லாமல் விடுபடுகிறதோ அப்படி என் ஆத்மாவும் இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும்.//
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. இந்த ஸ்லோகத்தை சொன்னால் மரண பயம் விலகும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வெள்ளரிப் பழ உவமை மிகவும் சிந்திக்கவைத்தது
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஐயா உங்கள் வலைத்தளத்தில் ஈமெயில் மூலம் சந்தாவை ஏற்படுத்தவும் .அதன் மூலம் உங்கள் பதிவை படிக்க ஏதுவாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. இந்த டெக்னிக்கை கற்உ நடைமுறைப்படுத்த சிறிது நாளாகும். பொறுத்தருள்க.

      நீக்கு
  8. அவங்க இரண்டு பேரும் வயசானவங்களா இருந்திருப்பாங்களே? வயசானவங்க பெரும்பாலும் அவங்க நினைப்பது மாதிரி தான் நினைப்பாங்க. மத்தவங்க எல்லாம் மரணம் கடினமா இருக்கவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள் :) அவர்கள் காசு அது இதுன்னு மற்றதை பற்றி அதிகம் நினைப்பவர்களாக இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் இந்தப் பேராசை இருக்கே!

    படுக்கையில் விழுந்தால்..... ஐயோ.... நினைக்கவே முடியலை:(

    யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போயிடணும் (என் அப்பாவைப்போல்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் உண்டான ஆசைதானே. என்ன, ஆண்டவனிடத்தில் முழு நம்பிக்கை வைத்து விட்டால் பிறகு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம்.

      நீக்கு
  10. என் மனைவிக்கு ஹிந்தி மற்றும் சமஸ்க்ரிதம் நன்கு தெரியும். சமஸ்க்ரிதத்தில் உள்ள எல்லா சாமிப் பாட்டுகளும் (ஸ்லோகங்கள் என்றும் சொல்லலாம்) மனப்பாடமாக் தெரியும்.

    இந்த ஜபம், மரண பயத்தைப் போக்கவும், மேலும் வந்த வினை குறைந்து விட உதவும். தமிழில் சொல்வதென்றால், கதிரவனைக் கண்ட பணி போல் விலகி விடும். அதற்கு சொல்வது தான் இந்த ம்ருத்யுஞ்ய ஜபம்.

    எனது பெற்றோர்களுக்காகவும், அவர்களது அம்மாவிறக்காகவும் என் மனைவி சொல்வார்கள்---அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால். இதை உரியவர்களே சொன்னால் பலன் அதிகம் என்றும் கேள்வி.

    சமஸ்க்ரிததில் "சப்தம்" தான் முக்கியம் என்பதாலும், தமிழில் எழுதினால் சத்தம் சரியாக இருக்காது என்பதாலும் சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் இடையே எழுதி உள்ளேன். இதையே தான் எனது பெற்றோர்களுக்கு நான் அனுப்பினேன்.

    அதை இங்கு தருகிறேன்:

    ஓம்! த்ரயம் Bha-gam யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்.
    ஓம்! zoom! zaha!
    (XXXX) nakshath-ray, (YYYY) raa-sow ஜாதஸ்ய, (ZZZZZ) நாம்ன்யாஹா
    ஓம்! ரோக்கான் மோச்சய! மோச்சய!
    ஆயுர் வர்தைய வர்தைய
    ஸஹ! zoom! ஓம்!
    ஊர்வாரு-gamiba bhandha-nath.
    ம்ருத்தியோர் mukshaya-maam-ம்ருதாத் (all as single word).

    legend.
    xxxx = உங்கள் நட்சத்திரம்
    yyyy = உங்கள் ராசி
    zzzz = உங்கள் பெயர்

    பின் குறிப்பு:
    நீங்கள் சொல்வதிர்க்கும் என் மனைவி சொல்வதற்கும் வித்யாசம் உள்ளது. இரண்டில் ஒன்று சரி. அது என்ன என்று எனக்குத் தெரியாது. அதில் எனக்கு துளியும் அக்கறை இல்லை. ஏனென்றால், இவைகளை நான் என்றும் நம்புவதில்லை.

    ஆனால், அதை நம்பும் நீங்கள் எது சரி என்று தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. பிரார்த்தனைகள் பல வகைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவைகளில் வார்த்தைகளை விட நம்பிக்கைதான் முக்கியம். நம் பிரச்சினைகளை ஆண்டவனிடம் சொல்லிவிட்டோம். அவன் கவனித்துக்கொள்வான் என்ற எண்ணம்தான் நமக்கு நிம்மதியையும் ஆறுதலையும் தருகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை மாதிரி எல்லோரும் இருந்தால் நல்லது! ஆனால், இல்லையே! தமிழ் நீச பாஷை, அதில் வேண்டினால் பலன் கிடைக்காது என்று தமிழர்கள் நினைப்பதால் தான் நான் இவ்வளவு விளக்கமாக, எப்படி "சப்தத்துடன்" சொல்ல வேண்டும் என்று எழுதினேன்----எனக்கு இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லாவிடினும்.

      இங்கு ஒரு முருகன் கோவில் உண்டு. பழனி மொட்டையாண்டி. அமெரிக்காவின் முதன் முதல் கோவில். மற்றொரு பெருமை முழுவதும் தமிழ்க் கோவில்-2002 வரை. சமஸ்க்ரிதம் மருந்துக்கு கூட கிடையாது.

      ஆனால், இப்ப வந்த IT-பசங்க (எல்லாம் சூத்திரப் பசங்க தான்; ஐயருங்க இந்த கோவிலுக்கு எப்போதும் வர மாட்டார்கள்), தமிழில் சொன்னால் பலன் கிடையாது, அதனால், சமஸ்க்ரிததில் மந்திரம் சொன்னால் தான் சாமிக்கு புரியும் என்று தமிழை ஒதுக்கி விட்டார்கள்.

      கொடுமை என்ன வென்றால், இவர்களில் யாரும் சென்னையை சேர்ந்தவர்களல்ல! எல்லோரும், தெக்க இருந்து வந்தவர்கள். எவ்வளவோ சொன்னேன், மொழிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்று. ஆனால், கேட்கவில்லை. தமிழில் சொன்னால் நல்லது நடக்காது என்ற மூடர்க்ளுடன் எப்படி பேசுவது.

      ப.ஜ.க. இந்து முன்னனி நன்னா வேலை செய்யுதுன்னா!

      இதை செய்தவர்கள் எல்லாம், சூத்திர ஜாதியினர் தான் (பிராமினர்களைத் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்களே!).

      என்ன நடக்கும் இனிமேல்!
      இப்ப இருக்கும் ஓதுவார் இந்தியாவிற்கு துரத்தப் படுவார். அங்க போய் "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்" என்று ஓத வேண்டியது தான்!

      கூடிய சீக்கிரம் எங்க ஊர் முருகன் "சுப்ரமண்யராக" மாறிவிடுவார்!

      நீக்கு
    2. கடவுளைப் பற்றியும் ஆன்மீகத்தைப் பற்றியும் அரைகுறை அறிவுள்ளவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். நன்றாக ஆன்மீகத்தை உணர்ந்து சிந்தித்து தெளிவு பெற்றவர்கள் யாரும் இந்த புறச் சடங்குகளைப் பற்றிக் கவலை கொள்ளமாட்டார்கள். உலகம் இப்படித்தான் என்று ஆறுதல் அடைய வேண்டியதுதான்.

      நீக்கு
  12. நன்றிங்க ஐயா நல்ல தகவல்கள் தெரிவித்தீர்கள் ஐயா,

    பதிலளிநீக்கு
  13. நான் அனைத்து வேதங்களையும் கற்றவன்.நான் பிராமணன் அல்ல.நான் அனைவருக்கும் சாதகமானவன்.நல்ல மணம் இருந்தால் எவருக்கு வேண்டுமானாலும் கற்பிக்கலாம்.இந்த மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் பலனை ஒரு நல்ல ஞானி மட்டுமே அறிவான்.ஒருவனின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரியும் பொழுது இந்த மந்திரத்தை சரியான தருனத்தில் செபித்தால் அவன் ஆத்மா சொர்கத்திர்கு செல்லும் என்பது ஐதீகம்.ஆனால், அவன் வீர மரணம் அடைய வேண்டும், அல்லது அவன் நல்ல தானம் மற்றும் தர்மம் செய்பவனாகஇருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு