இரண்டு தினங்களுக்கு
முன் நிகழ்ந்த
ஒரு நிகழ்ச்சி.
நான் வசிக்கும்
தெருவில் பாதாளச்
சாக்கடை பதிப்பதற்காக
குழிகள் தோண்டியுள்ளார்கள்.
தோண்டின மண்
பூராவும் ஒரு
புறம் குவித்து
வைத்துள்ளார்கள். மண்
குவிக்காத பக்கம்
ஒரு ஐந்து
அடி அகலம்
மட்டுமே உள்ளது. அதில்
நடக்கும் மக்களும்
இரு சக்கர
வாகனங்களும் போய்
வந்து கொண்டிருந்தன.
நான் காலை
7 மணிக்கு நடைப்பயிற்சி
போய்விட்டு வரும்போது
ஒரு கார்க்காரன்
படு வேகமாக
அந்த இடைவெளியில்
சென்றான். நான்
அதிசயப்பட்டேன். இதில்
கார் செல்ல
முடியாதே, இவன்
என்ன செய்யப்போகிறான்
என்று பார்த்துக்கொண்டே
வந்தேன். கொஞ்ச
தூரம் போன
பிறகு மேலே
செல்வதற்கு வழி
இல்லை. குறுக்கே
சிமென்ட் மூட்டைகள்
அடுக்கி வைத்திருந்தார்கள்.
அந்த கார்
டிரைவர் இறங்கி
பாதியாக இருந்த
ஒரு சிமென்ட்
மூட்டையைத் தூக்கி
வீசினான். அது
சாக்கடைத் தண்ணீரீல்
விழுந்தது. அதைத்
திரும்ப தூக்கப்
போனவன், ஹூம், இது
சர்க்கார் சிமென்ட்டுதானே
என்று சொல்லிவிட்டு
அதை அப்படியே
விட்டு விட்டான்.
நான் அப்போது
அந்த இடத்திற்கு
வந்து விட்டேன்.
நான் அவனைப்
பார்த்து சொன்னேன்.
சர்க்கார் சொத்தாயிருந்தால்
அதை என்ன
வேண்டுமானாலும் செய்யலாமா,
அதை எடுத்து
தரையில் போடு
என்று சொன்னேன்.
அவன் அதைக்கேட்க
நீ யார்
என்றான். நான்
இந்த வீதியில்
குடியிருப்பவன் என்று
சொன்னேன். அதற்கு
அவன் கண்ட
மேனிக்கு சத்தம்
போட ஆரம்பித்தான்.
நீ எங்கே
வேண்டுமானாலும் யாரிடம்
வேண்டுமானாலும் போய்க்கொள்,
எனக்கு கவலையில்லை
என்று தாறு
மாறாகப் பேச
ஆரம்பித்தான். அப்போதுதான்
கவனித்தேன், அவன்
ஏகத்திற்கும் குடித்திருக்கிறான்
என்று தெரிந்தது.
இனி இவனிடம்
பேசுவதில் எந்தப்
பயனும் இல்லை
என்று நான்
அந்த இடத்தை
விட்டு வந்து
விட்டேன். இதில்
ஒரு முக்கியமான
விஷயம் என்னவென்றால்,
அந்த இடத்திற்குப்
பக்கத்தில் இருக்கும்
வீட்டிலுள்ளவர்கள் எல்லாம்
அவரவர்கள் வீட்டு
வாசலில் நின்ற
கொண்டு வேடிக்கை
பார்த்தார்களே தவிர
ஒருவராவது எனக்குத்
துணையாக அவனைத்
தட்டிக் கேட்க
வரவில்லை. இத்தனைக்கும்
அவர்கள் அனைவரும்
எனக்கு நன்றாகப்
பரிச்சயம் ஆனவர்களே.
ஒரே தெருவில்
பல ஆண்டுகளாக
குடியிருப்பவர்கள்தாம்.
இதிலிருந்து நான்
கற்றுக்கொண்ட பாடம்
என்னவென்றால் ஆபத்துக்
காலங்களில் அக்கம்
பக்கம் இருப்பவர்கள்
உதவுவார்கள் என்ற
எண்ணம் தவறு
என்பதுதான். பக்த்து
வீட்டில் கொலை
நடந்தாலும் கூட
கதவைப் பலமாக
சாத்திக்கொள்வார்களே தவிர
உதவிக்கு யாரும்
வரமாட்டார்கள்.
இந்தப் பதிவைப்
படிக்கும் அன்பர்களே,
இந்த நீதியை
மனதில் கொள்ளவும்.
நீங்கள் கூறுவது உண்மைதான். நகரங்களில் ‘அடுத்தவன் எப்படிப்போனால் என்ன’ என்ற எண்ணம் தான் எல்லோரிடமும். அதனால் தான் கொலைகளும் கொள்ளைகளும் அதிகமாக நிகரங்களில் நடக்கிறது. அந்த வகையில் கிராமங்கள் தேவலாம். ஏதேனும் சிறிய சப்தம் கேட்டால் கூட ஊரே திரண்டு வந்து விடும்.
பதிலளிநீக்குகரெக்ட்டுங்க.
நீக்குஇவ்வளவு நாளாச்சா உங்களுக்கு, இது தெரிவதற்கு? இந்த கலாச்சாரம் FLAT தான் இருக்கும்..கொஞ்சம்,கொஞ்சமாக பாக்கி நகர்புறங்களுக்கும் பரவி விட்டது.
பதிலளிநீக்குரோட்டுல சிமெண்ட் மூட்டைய போட்டுட்டு போற காண்ட்ராக்டரை என்ன சொல்வது?
பதிலளிநீக்குநிஜம்தான். இதனாலேயே தட்டிக்கேட்பதெல்லாம் வீண்வேலை என்று தோன்றும். இதிலே நகரம், கிராமம் என்றெல்லாம் பெரிய வித்தியாசமுமில்லை இப்போது.
பதிலளிநீக்குகிராமமா இருந்த தவிடுபொடி தான் ..!
பதிலளிநீக்குகாலம் கெட்டுப் போச்சு ...
பதிலளிநீக்குஉண்மைய சொல்லிருக்கீங்க
பதிலளிநீக்குபக்கத்துவீட்டுக்காரன் அல்ல சொந்த மாமன் மச்சான் கூட வரமாட்டான்
வருந்த வைக்கிற நிகழ்வு!
பதிலளிநீக்குதாங்கள் கூறுவது சரிதான்.
பதிலளிநீக்குஉண்மைதான்.....சமூகம் என்பதில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்ன செய்வது..:(
பதிலளிநீக்குமே தின வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
வருந்த வைக்கிற நிகழ்வு!
பதிலளிநீக்குஆபத்துக் காலங்களில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் தவறு என்பதுதான். பக்த்து வீட்டில் கொலை நடந்தாலும் கூட கதவைப் பலமாக சாத்திக்கொள்வார்களே தவிர உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.
பதிலளிநீக்குநீதி போதனை பயனுள்ளது
நீங்கள் செய்தது சரியான செயல். இப்படி தான் செய்ய வேண்டும்.
பதிலளிநீக்குஅடுத்த முறை தவறு செய்தவன் சற்று சிந்திப்பான்.
ஒரு முறை எனக்கும் இப்படி நேர்த்தது. எக்மோர் ரயில் பிளாட்பார்மில் ரயிலில் இருந்த படியே ஒருவன் எச்சில் துப்பினான்.
நான் அவனை அவன் உறவினர் முன்பே, இதுவே உன் வீடு கூடமாய் இருந்தால் செய்வாயா என்று சத்தம் போட்டேன்.
நிச்சயம் அடுத்த முறை எச்சில் துப்பும் போது அவன் மனம் தடுக்கும்.
நல்லவர்கள் ஒதுங்கி போவதால் மட்டுமே அநீதி எழுகிறது.
சொல்ல வேண்டும்.