ஒரு நரி ஒரு நாள் ஒரு திராட்சைத்தோட்டம் வழியாகப் போய்ட்டு இருந்ததாம். அந்த திராட்சைத் தோட்டத்தில திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாக் காய்ச்சு தொங்கிட்டு இருந்ததாம். அதைப் பார்த்த நரிக்கு வாயில் எச்சில் ஊறினதாம். தோட்டத்திற்குள் எப்படியோ நுழைஞ்சு, அந்த திராட்சைக் கொலைகளைப் பறிக்க எம்பி, எம்பி (நம்ம எம்.பி. இல்லைங்க) குதிச்சுப் பார்த்ததாம். திராட்சைக் கொலையைப் பறிக்க முடியவில்லையாம். கொஞ்ச நேரம் கழித்து அது தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு போய்விட்டதாம்.
இந்தக் கதையைப் பொதுவாக ஒருவரைக் கேலி செய்வதற்காகச் சொல்வதுதான் வழக்கம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்தக்கதையின் உள்ளர்த்தம் விளங்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் குடும்பத்துடன் ஒரு சினிமா பார்க்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அன்று அந்தப் படத்திற்கு ஏகப்பட்ட கூட்டம். திருட்டு டிக்கெட்தான் கிடைக்கும். உங்கள் நாலு பேருக்கும் டிக்கெட்டுக்கே ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். பிறகு ஓட்டல் செலவு, ஆட்டோ எல்லாம் சேர்த்தால் உங்கள் பர்ஸ் போண்டியாகிவிடும். அந்த மாதம் குடும்ப வண்டியை ஓட்ட கடன் வாங்கவேண்டும். அதை எப்போது கட்ட முடியமோ தெரியாது. இந்த நிலையில் அந்தப் படம் வேண்டாம், பீச்சுக்குப் போய்விட்டு, சுண்டலைச் சாப்பிட்டு விட்டு பஸ்சில் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுப்பதுதான் சிறந்த முடிவு.
அப்போதுதான் நரி தத்துவம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த சினிமா புளிக்கும் என்று உங்கள் குடும்பம் ஒத்துக் கொண்டால் அது ஆரோக்கியமான குடும்பம். உங்களுக்கு மன வேதனை வராது. இல்லாமல் ஐயோ, இந்த சினிமா பார்க்க முடியவில்லையே என்று புலம்ப ஆரம்பித்தால் வீண் வருத்தம்தான் மிஞ்சும்.
சினிமா மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும். வெற்றியைக் கண்டு அதீத மகிழ்ச்சி அடைவதும், தோல்வியைக் கண்டு அதிகம் துவண்டு போவதும் வாழ்க்கைக்கு உகந்ததல்ல. அப்படி இருந்தீர்களென்றால் எப்போதும் நீங்கள் புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைத் தொலைத்தவராகி விடுவீர்கள்.
சர்வ மதப் பிரார்த்தனை ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.
"கடவுளே, இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய
மன வலிமையையும், இந்த இரண்டையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எனக்கு அருள்வாயாக".
இந்த வாழ்க்கை நமக்கு வாய்த்தது இறைவன் அருள். அதை மகிழ்ச்சியாக வாழத் தேவையான புத்தியையும் அவனே கொடுத்திருக்கிறான். அதைவிட்டு நான் புலம்பிக்கொண்டுதான் இருப்பேன் என்றால் அதறகான சுதந்திரத்தையும் அவனே கொடுத்திருக்கிறான். எப்படி வாழப்போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்.
///தோட்டத்திற்குள் எப்படியோ நுழைஞ்சு, அந்த திராட்சைக் கொலைகளைப் பறிக்க எம்பி, எம்பி (நம்ம எம்.பி. இல்லைங்க.///
பதிலளிநீக்குநான், இங்க தான் நம்ப டாக்டர் கந்தசாமி ஐயா நிக்கறார் அப்படின்னா; என்ன இருந்தாலும் கொங்கு குசும்பு உங்க கிட்ட போகாது; நான் நிக்கலை; இப்ப உக்காந்து கிட்டுதான் இருக்கேன் அப்படின்னு சொல்வீங்க! O.K! Accepted!!
அதெல்லாம் சரி...உங்க ஊர்ல எது ஐயா தண்ணி? அப்புறம் எப்படி?
///பீச்சுக்குப் போய்விட்டு, சுண்டலைச் சாப்பிட்டு விட்டு பஸ்சில் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுப்பதுதான் சிறந்த முடிவு///
பீச்ச கொங்கு நாட்டு தங்கங்கள் முன்ன பின்ன பார்த்து இருக்காங்களா?
என்ன, இப்படி சொல்லிப்புட்டீங்க. பீச்சுன்னா என்னங்க? மணல்தானுங்களே, எங்க ஊரு நொய்யல் ஆத்துல நாங்க பாக்காத மணலுங்களா, அள்ளாத மணலுங்களா?
நீக்குஇந்தக் கதையில் மறைந்திருக்கும் வாழ்க்கைத் தத்துவத்தை நன்கு விளக்கியுள்ளீர்கள். உண்மையில் இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்தான் என்று உதாரணத்தோடு விளக்கியது அருமை.
பதிலளிநீக்குஇதோ எனது தமிழ்மண வாக்கு -
"கடவுளே, இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய
பதிலளிநீக்குமன வலிமையையும், இந்த இரண்டையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எனக்கு அருள்வாயாக"
.எனக்குப் பிடித்த அருமையான பிரார்த்தனை
அனைவரும் அவசியம் மனதில் கொள்ளவேண்டிய
அருமையான கருத்தினை பதிவாக்கிக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நன்றி
Tha.ma 3
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு"கடவுளே, இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய
நீக்குமன வலிமையையும், இந்த இரண்டையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எனக்கு அருள்வாயாக".
விவேகம் நிறைந்த பகிர்வுகள்... பாராட்டுக்கள்..
ரைட்டு!!!! சலோ பீச்:-)
பதிலளிநீக்கு//அப்போதுதான் நரி தத்துவம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த சினிமா புளிக்கும் என்று உங்கள் குடும்பம் ஒத்துக் கொண்டால் அது ஆரோக்கியமான குடும்பம். உங்களுக்கு மன வேதனை வராது. இல்லாமல் ஐயோ, இந்த சினிமா பார்க்க முடியவில்லையே என்று புலம்ப ஆரம்பித்தால் வீண் வருத்தம்தான் மிஞ்சும்.//
பதிலளிநீக்குஇந்த கதை ரொம்ப பழசு .. 5 ரூ டீவீடி வாங்கி நாங்க 4 ஃபேமிலி பார்ப்போமே அதுவும் ஒரே நாள்ல 4 வீடு சுற்றி வந்துடும் ஹி...ஹி... :-)))
ஒரு சைபர உட்டுப்போட்டீங்களே! டிவிடி இப்ப 50 ரூபாய்ங்கோ.
நீக்குநாங்க எந்தக் காலத்துல சினிமாக் கொட்டாயிக்கு போயி சினிமாப் பார்த்தமுங்க. ஒரு உதாரணத்துக்குச் சொன்னனுங்க, அவ்வளவுதானுங்க.
//"கடவுளே, இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய
பதிலளிநீக்குமன வலிமையையும், இந்த இரண்டையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எனக்கு அருள்வாயாக".//
_()_ :-)
///நொய்யல் ஆத்துல நாங்க பாக்காத மணலுங்களா, அள்ளாத மணலுங்களா?///
பதிலளிநீக்குஅள்ளாத மணலுங்களா? --- அது சரி! நொய்யல் ஆறா? ஆறு இன்னமும் இருக்கா? அதுல சாயக் கழிவை கொட்டலைய?
சரி மண்ணை மட்டும் எதற்கு விடவேண்டும் என்று மண்ணின் மைந்தர்கள் வேலையை காட்டிவிட்டாகளா?
நீங்க ஊரை விட்டுப் போயி ரொம்ப நாளாச்சு போல இருக்கு. நொய்யலாத்த சீர்திருத்தறதுக்குன்னு ஒரு கமிட்டி வேலை செஞ்சு ஆற்றை அடையாளம் காட்டினாங்க. நம்ம சாயப் பட்டறைக்காரங்களுக்கு ரொம்ப சௌகரியமாப் போச்சு.
நீக்குஅருமையான தத்துவ விளக்கம்! நன்றி!
பதிலளிநீக்குகதை பழையது,கருத்து புதியது,வித்தியசமான கோணத்தில் சிந்திக்க செய்யும் பதிவு.கடவுளிடம் பிரார்த்திக்கும் வரிகள் நெகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்கு