செவ்வாய், 8 மே, 2012

புதிதாக கல்யாணம் செய்பவர்களுக்கு


கல்யாணம் செய்யப்போகும் ஆண்களுக்கு மட்டும். பெண்களுக்கான குறிப்புகளை தாய்க்குலப் பதிவர்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கல்யாணம் செய்பவர்கள் இரு வகைப்படுவர். முதல் வகை தாய் தகப்பன் பேச்சைக்கேட்டு நடப்பவர்கள். இரண்டாம் வகை தாங்களே தங்களுக்குத் தலைவன் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்தப் பதிவிலுள்ளவைகள் முதல் வகைக்கு மட்டும். இரண்டாம் வகைக்கு எந்த ஆலோசனைகளும் தேவையில்லை. அவர்களே ராஜா, அவர்களே மந்திரி.

அம்மாவின் முந்தானையை இன்னும் விடாத ஆண்மக்கள் முதலில் அதை விடவும். இரண்டாவது நீங்கள் ஒரு ஆண்மகன் என்பதை மறக்காமலிருக்கவேண்டும்.

உங்களுக்குத் துணை தேடும்போது உங்கள் குடும்பத்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கும். உங்கள் அம்மாவிற்கு அவர்களுக்குத் துணையாக, குடும்பப் பொறுப்புகளை (அதாவது வேலைகளை) ஏற்றுக்கொள்ளும் ஒரு மருமகள் தேவை. உங்கள் தந்தைக்கு தன் மகனை ஒரு பொறுப்புள்ளவனாக மாற்றக்கூடியவளாக யாராக இருந்தாலும் சரி, அது போதும். உங்களுக்கு ஒரு சினிமா நடிகை அளவில் அழகுள்ள ஒருத்தி வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகளில் நடுத்தர மக்களிடையே நடப்பது என்னவென்றால், கொஞ்சம் வசதியுள்ள பெண்ணைப்பெற்றவன் நமக்கு கைக்கடக்கமாக ஒரு மாப்பிள்ளை வேண்டுமென்று புரோக்கரிடம் சொல்லி வைத்திருப்பான். அந்த புரோக்கர் வந்து உங்க அம்மாவைச் சரிக்கட்டி கல்யாணத்தை முடிவு செய்து விடுவான். நீங்கள் பொறியில் அகப்பட்ட எலிமாதிரி சிக்கிக் கொள்வீர்கள். இதற்கு மாற்றே கிடையாது.

கல்யாணம் முடிந்து மறுவீடு சம்பிதாயங்கள் முடிகிற வரை எல்லாம் இன்ப மயம்தான். அதற்குப் பிறகுதான் விதி வேலை செய்யும். வளைகாப்பு, தலைப்பிரசவம் முடிந்து தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்த பின்தான் இருக்கிறது உங்கள் வேதனையெல்லாம். ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று உங்களை வருந்த வைக்கும் அனுபவங்கள் நிறைய ஏற்படும்.

நீங்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் குடும்பம் சீராக ஓடும். இல்லாவிட்டால் சமீப காலங்களில் கோவில் திருவிழாக்களில் தேர்கள் சாய்கின்ற மாதிரி உங்கள் வாழ்க்கையும் சாய்ந்துவிடும்.

ஆகவே கல்யாணம் செய்யப்போகும் இளைஞர்களே, இவைகளெல்லாவற்றையும் யோசித்து முடிவு செய்யுங்கள்.

32 கருத்துகள்:

  1. 13 வருஷத்திற்கு முன்னாலே இந்த பதிவை போட்டுயிருக்க கூடாதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப இந்த பிளாக் எல்லாம் இல்லியே சாமி!!!! என்னால முடிஞ்ச மட்டும் நேர்ல பாத்தவங்க கிட்ட எல்லாம் சொல்லீட்டுதான் இருந்தேன். ஆனா ஒரு பய கூட கேட்டுக்கிடலயே. இப்ப எல்லோரும் வந்து வருத்தப்படறாங்க, என்ன செய்ய முடியும்?

      நீக்கு
    2. ஐயாவுக்கே முப்பது வருசத்துக்கு முன்னாடி யாரும் சொல்லலையாம்! ஏனுங்க சரிதானே?

      நீக்கு
  2. என்ன கந்தசாமி ஐயா, பொசுக்குனு முடித்து விட்டீர்கள். இது முன்னுரை மாதிரித்தான் இருக்கு.

    ஆகவே, இதை, கீழே கொடுத்துள்ளதை சாம்பல், புளி, தேங்காய் மட்டை போட்டு நன்றாக விளக்கவும்!
    ///குழந்தையையும் வீட்டுக்கு அழைத்த பின்தான் இருக்கிறது உங்கள் வேதனையெல்லாம். ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று உங்களை வருந்த வைக்கும் அனுபவங்கள் நிறைய ஏற்படும்.///

    பதிலளிநீக்கு
  3. போங்க சார்..
    எல்லாம் முடிஞ்சபின் , அறிவுரை சொல்வதே, உங்கள் வேலையாக போயிற்று...!!
    :-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிலயும் அனுபவம் வந்த பிறகுதானே அறிவுரை சொல்ல முடியும்?

      நீக்கு
  4. யதார்த்தமான பதிவு.திருமணம் என்பது ஒரு மாளிகைப் போன்றது.வெளியில் உள்ளவன் உள்ளே செல்ல ஆசைப்படுகின்றான்.உள்ளே சென்றவன் வெளியில் எப்ப ஓடலாம் என்று நினைக்கின்றான் என்ற அனுபவ மொழிதான் நினைவுக்கு வருகின்றது. எல்லாரையும் எல்லா நேரத்திலும் திருப்பதி படுத்த முடியாது. நீ நீயாக இரு என்பதே எப்பொழுதும் சரி.துன்பப்பறவைகள் உன் தலைமேல் வட்டமடிப்பதை தவிர்க்க முடியாது.ஆனால் உன் தலை மேல் கூடு கட்டாமல் தவிர்க்க முடியும் என்ற கண்ணதாசனின் கவிதைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் தவிர்க்க முடியாதவை என்பதைத்தான் இப்படி கொங்கு குசும்போடு சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  5. நான் இரண்டாம் வகை...போயிடறேன் சாமி

    பதிலளிநீக்கு
  6. ஐயா நீங்கள் சொல்வது அனைத்து வீட்டிலும் நடக்க கூடியது தான்

    ஆனால் அதை அனுசரித்து(அது அம்மாவாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி) போக வேண்டும் என்பது என்கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பல சமயங்களில் சுயமாக சிந்திக்கத் தவறிவிடுகிறோம். அந்த சிந்தனையைத் தூண்டுவதற்கான முயற்சியே இது.

      நீக்கு
  7. நீங்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் குடும்பம் சீராக ஓடும். இல்லாவிட்டால் சமீப காலங்களில் கோவில் திருவிழாக்களில் தேர்கள் சாய்கின்ற மாதிரி உங்கள் வாழ்க்கையும் சாய்ந்துவிடும்.

    சிறப்பான சிந்தனைப் பகிர்வு ..

    பதிலளிநீக்கு
  8. எப்பேர்பட்ட அறிவாளியையும் ஒரு மூணு முடிச்சு முட்டாளாக்கி விடும் !

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமையாய் உள்ளது. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. இம் ...முதலிலேயே தெரிந்தும் செயல்படாமலேயே பாசத்தைக் காட்டி அமுக்கிட்டாங்களே அனுபவிக்க வேண்டியதுதான் அது என்ன 'ஒரு பய கூட கேட்டுக்கிடலயே' கொஞ்சம் மரியாதையா வார்த்தை போட்டிருக்கலாமே கனி இருக்கக் காய் தேடுவது. கைதான் சிலருக்குப் பிடிக்கும் .உங்களுடம் நான் காய் விட்டுட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணம் ஆகற மட்டும் எல்லாரையும் பயகன்னு கூப்பிடறது எங்கூரு வழக்கமுங்க. அந்த வழக்கத்தில சொல்லிப்பிட்டனுங்க, மன்னிச்சு திரும்பவும் பழம் உட்டிருங்க.

      நீக்கு
  11. //ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று உங்களை வருந்த வைக்கும்//

    அப்ப நீங்களும் 'சேம் பிளட்' தானா? ஆமா, தெரியாமதான் கேக்குறேன். கல்யாணம் ஆன எல்லா ஆண்களுக்கும் இப்படிதான் தான் தோணுமா? அப்படி என்றால் 'லைப் ரொம்ப சூப்பரா' போய் கிட்டு இருக்கு என சொல்லும் ஆண்கள் எல்லாம் பொய்யர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலறுந்த நரி கதை தெரியும்னு நினைக்கிறேன். தெரியலைன்னா சொல்லுங்க. அதுக்கு ஒரு பதிவ தேத்தீரலாம்.

      நீக்கு
  12. எனக்கு தேவையான பதிவுதான். கேட்டுக்கிறேன். அப்புறம் ஒரு சந்தேகம்

    புதிதாக திருமணம் செய்து கொள்பவர்களுக்கு என்று சொல்லி இருக்கிறீர்களே? அப்படியானால் அடிக்கடி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தனி அறிவுரை இருக்கிறதா? ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயித்தங்களுக்கு அறிவுரை கூற எனக்குத் தகுதி இல்லைங்க.

      நீக்கு
  13. பயனுள்ள பதிவு..
    அப்படியே விவாகரத்து எப்படி ஈஸியா வாங்குறதுங்கிறதையும் தெரிஞ்சுக்கிறது நல்லது...
    உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

    பதிலளிநீக்கு
  14. தலைப்பைப் பார்த்து ஓடிப் போயிட்டன் நம்மளுக்கு இதெல்லாம் ஒத்துவராதுப்பா....நாம இன்னும்............வரல்ல....ஹா..ஹா..ஹாஆ

    பதிலளிநீக்கு
  15. எனக்கே எனக்காக எழுதியது போல இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  16. எவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருந்தாலும், இந்த விஷயத்தைப் பொருத்தவரை நடக்குறது தான் நடக்கும்.

    "நீங்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் குடும்பம் சீராக ஓடும். "
    இதெல்லாம் பேச்சு வழக்கிற்கு நல்லா இருக்கும்.

    காட்டுக்குள்ள போறதுன்னு ஆயிடுச்சு...அதற்கு பிறகு சிங்கம் வந்தால் என்ன புலி வந்தால் என்ன ? எல்லாவற்றையும் பாத்துக்கலாம்னு ஒரு தைரியத்துல தான் சார் இறங்கனும்...: )

    பதிலளிநீக்கு
  17. விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையும்,தட்டிக் கொடுத்து,கட்டிக் காக்கும்
    குணமும் இருவர்மாட்டும் இருக்குமானால் தொல்லை ஏதும்
    வாராது இது நான் கண்ட, கொண்ட அனுபவம்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு