புதன், 2 மே, 2012

பெற்றோர்களே ஜாக்கிரதை


10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு பரீட்சைகள் முடிந்து, மாணவர்கள் லீவை அனுபவித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் பெற்றோர்களின் வயிற்றில் ஒரு இனம் தெரியாத வேதனை அல்லது கவலை இருந்து கொண்டிருக்கும்.

காரணம், தங்கள் வாரிசுகளை இனி என்ன படிப்பில் சேர்க்கலாம் என்பதுதான். இன்றுள்ள கல்வி வாய்ப்புகள் இன்றைய பெற்றோர்கள் படிக்கும்போது இல்லை. அதனால் அவர்களுக்கு அதிக குழப்பம் ஏற்படவில்லை. ஆனால் இன்றுள்ள படிப்புகளை முழுமையாக யாரும் அறிந்திருப்பது கடினம். இன்றைய இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள்? அதனால் அவர்கள் வாழ்க்கை நன்றாக அமையுமா? என்கிற கேள்விகள் ஒவ்வொரு தகப்பனையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருப்பவர்களுக்கு கவலை கொஞ்சம் குறைவு. மார்க்கைப் பொருத்து ஏதாவதொரு கோர்சில் சேர்த்து விட்டால் இரண்டு வருடத்திற்கு கவலை இல்லை என்று பொதுவாக எல்லோரும் நினைப்பார்கள்.ஆனால் பொறுப்புள்ள பெற்றோர்கள் அப்படி இருக்கக் கூடாது. பையனோ, பெண்ணோ, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய முழுத் திட்டமும் இப்போதே தயார் பண்ணிக்கொள்ளவேண்டும்.

வாரிசுகளின் ஆசாபாசங்கள், குடும்ப பொருளாதாரம், வாரிசுகளின் திறமை இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்படவேண்டும். திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானதாக இருக்கவேண்டும். எதிர்பார்த்த மார்க்குகள் கிடைக்காவிடில் மாற்றுத்திட்டம் என்ன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்ட வாரிசுகளின் முழு ஈடுபாடு அவசியம். அவர்கள் தங்கள் பெற்றோர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி தங்கள் எதிர்காலப் படிப்பைப் பற்றிய கனவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் கவனக் குறைவாக இருந்தால் பல அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. என் உறவினர் பையன் தான் விரும்பும் படிப்பில் பணம் கொடுத்துச் சேர்த்தவில்லை என்பதால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகாத மாதிரி பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்.

13 கருத்துகள்:

 1. இப்போதையப் பெற்றோருக்கு இது கடுமையான காலம் என்றுதான் சொல்லணும்.

  எங்க காலத்துலே ப்ரொஃபஷனல் கோர்ஸ் தவிர மற்றவைகளில் பிள்ளைகள் காலேஜில் சேர்ந்து ஒரு டிகிரி வாங்கினால் போதுமுன்னுதான் இருந்தாங்க.

  தற்போதைய பிள்ளைகளின் கனவுகள் ரொம்பவே அதிகமோன்னு கூட எனக்குத் தோணுது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் எங்கே தவறு செய்கிறோம் என்று எனக்கு சரியாகப் புலப்படமாட்டேன் என்கிறது. ஆனால் இன்று நம் கருத்துகள் பல தவறாக இருக்கின்றன. இளைய சமுதாயத்தினரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

   நீக்கு
 2. மிகச் சரியான நேரத்தில் தேவையான
  எச்சரிக்கைப் பதிவைத் தந்துள்ளீர்கள்
  பிள்ளைகளைவிட பெற்றோர்கள் தெளிவாக
  இருக்கவேண்டிய நேரமிது
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. இளைய சமுதாயத்தினர் இப்பொழுது தான் அவர்களுக்கு வேண்டியதைப் படிக்கிறார்கள். நாம தான் அப்பா அம்மா சொன்னதைப் படித்தோம்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு
  //தான் விரும்பும் படிப்பில் பணம் கொடுத்துச் சேர்த்தவில்லை என்பதால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்//
  நானு முயற்சி செய்துள்ளேன்.... இன்றும் நான் ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை என்று
  நினைக்கும் போது..............................

  பதிலளிநீக்கு
 5. மிகவும் தேவையான பகிர்வு. இன்றைய கடுமையான போட்டியில் பல பிள்ளைகளுக்கு டென்ஷன் அதிகமே.....

  பதிலளிநீக்கு
 6. இப்போதெல்லாம் குழந்தைகளை மேல் படிப்புக்கு சேர்ப்பது எது ராணுவ திட்டம் தீட்டுவது போல ஆகிவிட்டதே? காலக்கோடுமை சார்.

  பதிலளிநீக்கு
 7. //துளசி கோபால்May 1, 2012 04:34 PM
  இப்போதையப் பெற்றோருக்கு இது கடுமையான காலம் என்றுதான் சொல்லணும்.//

  ரிப்பீட்ட்டு..

  (எவ்வளவு பணம் செலவழித்தாவது) விரும்புபவற்றை வாங்கிக் கொடுப்பதும், விரும்பிய கோர்ஸில் படிக்கவைப்பதும், விரும்பிய கம்பெனியில்/நாட்டில் வேலைக்குச் சேர்த்துவிடுவதும், விரும்பியவரைத் திருமணம் செய்துவைப்பது... எல்லாமே பெற்றோரின் கட்டாயக்கடமைகள் என்பது இன்றைய இளையதலைமுறையின் நம்பிக்கை!!

  இதற்குப் பெற்றோரும் ஒருவகையில் காரணம் என்பதும் மறுப்பதற்கில்லை!!

  பதிலளிநீக்கு
 8. தற்காலத்திய பிள்ளைகள் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் என்று தெரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதே புரிவதில்லை. எங்கோ ஒன்றிரண்டு பேர் வேண்டுமானால் முனைப்பாய் இருக்கலாம். பெற்றோர்களே அவர்களது சக்திக்கேற்ப பிள்ளைகளுக்கு வழி காட்டுவது தவறில்லை என்பதே என் கருத்து.

  பதிலளிநீக்கு
 9. இந்த நேரத்தில் தேவையான அறிவுரைகள் கூறும் அவசியமான பதிவு. நன்றி அய்யா

  பதிலளிநீக்கு