வியாழன், 24 மே, 2012

தமிழ் மணம் ரேங்க் எனும் மாயை


                                                                Tamil Blogs Traffic Ranking

மாயை என்றால் ஏதோ மாயாஜாலம் என்றுதான் பலருடைய எண்ணம். தெரிவது போல் இருந்து மறைவது ஒரு விதத்தில் மாயாஜாலம்தான். ஆனால் நாம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு வினாடிக்கும் மாறுவதை நாம் உணருவதில்லை. அதனால் அது மாயை என்று நமக்குத் தெரிவதில்லை.

உதாரணத்திற்கு நம் தமிழ்மணம் தர வரிசை எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அது தினம் தினம் அல்லது வாரந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய பதிவின் தமிழ்மணத் தர வரிசை எண்ணை மேலே கொடுத்திருக்கிறேன். போன வருடம் இது 48 ஆக இருந்தது. இன்று அது 23 ஆக மாறியிருக்கிறது. தர வரிசை எண் குறையக் குறைய அதன் மதிப்பு கூடுகிறதென்று சொல்லுகிறார்கள். எனக்கென்னமோ அதனால் என்ன மதிப்பு கூடிவிட்டது என்று உணர முடியவில்லை.

சிலர் இந்த மாயைக்காக அதிக முயற்சி எடுத்துக் கொள்ளுகிறார்கள். நாடும் அந்த மாயைக்கு உட்பட்டவன்தான். ஆனால் இதனால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் விளங்க மாட்டேனென்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் பதிவுலகத்தைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. அப்படித் தெரிந்தவர்கள் கூட இந்த தமிழ்மணத் தரவரிசையைப் பற்றி அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

அப்டிப்பட்ட ஒன்றுக்குமே உதவாத ஒன்றைப் பற்றி நான் எவ்வளவு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. இனி அதைப் பற்றி அதிக சிந்தனையும் அதற்காக அதிக உழைப்பும் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. அது அர்த்தமற்றது.


14 கருத்துகள்:

 1. //பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. அது அர்த்தமற்றது//.
  நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் தரவரிசையில் முன்னேற மனம் முயல்வதை தடுக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் முரளிதரன். நானே அந்த சபலத்திற்கு ஆளாகி உள்ளேன். இந்தப் பதிவு எனக்காகவேதான்.

   நீக்கு
 2. நண்பரே
  தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நானும் ஆரம்ப காலத்தில
  அப்படித்தான் இருந்தேன். என்னுடைய தரவரிசை மூன்று மாதங்களுக்கு
  முன் 12 வரை குறைந்திருந்தது கூகுல் செய்த மாற்றத்தால் நான் என்
  வலையை டொமினியாக,( pulavarkural.info)மாற்றினேன், அதன்பிறகு
  ஏனோ படிப்படியாக ஏறி இன்று 39 என்ற நிலையில் உள்ளது நாளை
  நாற்பதைத் தாண்டி மேலேயும் செல்லலாம்!

  தொடர்ந்து எழுதுகிறேன்! மறு மொழிகளும் 30 முதல் 40 வரை வந்து
  கொண்டுதான் உள்ளன இப்படியாக, என்ன காரணம் என்பதை தமிழ் மணம்
  விளக்கினால் நலமாக இருக்கும். பலர் எழுதாமல் இரு்ந்தாலும், வாரம்
  ஒன்றிரண்டு எழுதினாலும் அவர்களது தரவரிசை அப்படியே இருப்பதும்
  வியப்பே! என்ன நடக்கிறது? தரவரிசை எப்படி அமைக்கப் படுகிறது
  என்பதை , உடன் தமிழ் மணம் அவசியம் விளக்க வேண்டும் என்பதே
  என் வேண்டுகோளாகும் செய்யுமா.....!?

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. //அப்டிப்பட்ட ஒன்றுக்குமே உதவாத ஒன்றைப் பற்றி நான் எவ்வளவு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.//

  இதுதான் மாயை!!!!!!!

  நான் எங்கே இருக்கேன்னு பார்க்கறதில்லை. ஆனால் நான்(நானும்) அங்கே எங்கேயாவது இருக்கிறேன், இருப்பேன் என்பதுதான் முக்கியம்!!!!!

  பதிலளிநீக்கு
 4. "நாம் பெற்ற இன்பம் பெருக வையகம்" நாம் மனதில் தோன்றிய நல்ல செய்திகளை நமது வலைதளங்களில் போட்டு மகிழ்கின்றோம். அதனை மற்றவர்களும் படித்து பயன் பெறட்டும் என்பது அனைவருக்கும் மனதில் தோன்றும்.ஆனால் அது புகழ் அடைய வேண்டும் என்ற ஒரு வெறியாக மாறிவிடக் கூடாது. தமிழ்மணம் மனதில் இருப்பதே மிகவும் சிறந்தது. அது அனைவரிடமும் உள்ளது.
  இது'மாயாஜாலம்' தமிழ்மணம் அல்ல. தர வரிசை தந்து தம்பட்டம் போடும் தமிழ்மணம் அல்ல.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா,
  இப்போ தான் சூப்பரா கண்டு பிடித்திருக்கிறீங்க.
  இது எனக்கு எப்பவோ தெரியும்...அதனால தான் என் ப்ளாக்கிற்கே ட்ரேங் இல்லை..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 6. தன்னை உணர்ந்தவன் ஞானியாவான்...- யாரோ!

  பதிலளிநீக்கு
 7. சிறந்த பதிவு. நாம் ரேங்கில் இருக்கிறோமோ இல்லையோ அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. நான் எண்ணும் எண்ணங்களை மனத்துக்குள்ளேயே பூட்டி வைக்காமல் உள்ளக் குமுறள்களை கொட்டி விட இணையம் அருமையான சாதனமாக இருக்கிறது. அதனால் தான் இதற்கென்று அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ நமது ஓய்வு நேரத்தில் இணையத்துக்காக ஒதுக்குவதும்.

  பதிலளிநீக்கு
 8. உண்மைதான்...ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுத உட்காரும்போது என் ரேங்க் 974...இதை பற்றி எனக்கு முதலில் அவ்வளவு அறிவு இல்லை...என் பாட்டுக்கு எழுதி கொண்டிருந்தேன். பார்த்தால் 578 ஆகி இருந்தது...ஒரு craze வர ஆரம்பித்தது....456 வந்த போது நான் சோர்ந்து போனேன்....'no, stop பண்ணு அகிலா' என்றது மனது.....விட்டுட்டேன்....இப்போ 298 இல்....
  தலை சுத்துது.....ஒத்துக் கொள்கிறேன் இது மாயைதான்.....

  பதிலளிநீக்கு
 9. பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது.
  அது அர்த்தமற்றது. அர்த்தமுள்ள அனுபவ வரிகள்..

  பதிலளிநீக்கு
 10. நானும் அடிக்கடி இப்படி நினைப்பேன்.ஆனால் மீண்டும் மாயையின் வலையில் வீழ்ந்து விடுவேன்!

  பதிலளிநீக்கு
 11. பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. அது அர்த்தமற்றது.

  உண்மை... அருமையாக சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. சென்னைப்பித்தன் அவர்களுக்கு,

  உங்கள் வலைப்பக்கத்தை திறக்கவே முடிவதில்லை. பேஜ் லோட் ஆவதில்லை. என்ன குழப்பமோ?

  பழனி.கந்தசாமி ஐயா,

  உங்கள் வீட்டில் வந்து அவருக்குதாக்கீது விடுவதற்கு மன்னிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுக்காச்சியும் எங்க ஊட்டுக்கு வந்தாப் போதுமுங்க. ஒரு வாய் காப்பித்தண்ணி கொடுக்கமாட்டமுங்களா?

   நீக்கு