இது ஒரு கற்பனை. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை.
நீங்கள் மில்லியனர் ஆக மிக சுலபமான வழி கண்டுபிடித்திருக்கிறோம். எல்லோரும் வாருங்கள். மில்லியனராகத் திரும்பிச்செல்லுங்கள்.
இப்படி ஒரு விளம்பரம் அன்று எங்கள் ஊரில் எல்லா சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்தது. அன்று மாலை 6 மணிக்கு அந்த ஊரிலுள்ள பெரிய மைதானத்தில் கூடும்படி அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மில்லியனராகும் ஆசை யாரை விடும். நானும் 5 மணிக்கே போய்விட்டேன். எல்லோருக்கும் ஒரு விண்ணப்ப படிவம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார்கள். அந்தப் படிவங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். மேல் விவரங்கள் உங்களுக்கு தபாலில் வரும் என்று சொல்லிவிட்டு ஆளுக்கு ஒரு சுண்டல் பாக்கெட் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
ஒரு வாரம் கழித்து ஒரு தபால் வந்தது. உங்கள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்தோம். மில்லியன் ரூபாய் என்பது உங்கள் தகுதிக்கு மிக அதிகம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனாலும் உங்கள் ஆசையைக் கெடுக்க நாங்கள் விரும்பவில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள யோசனை உங்களுக்குப் பிடித்திருந்தால் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தரணி புகழ் "ஊழல்" டி.வி. ஸ்டேஷனுக்கு நேரில் வரவும். அந்த லெட்டரில் இப்படி எழுதியிருந்தது.
உங்களுக்கு ஒரு நாள் டி.வி.யில் தோன்ற விருப்பமானால் அதில் நாங்கள் வைக்கும் போட்டியில் கலந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சிக்குப் பெயர் "உலகத்தில் பெரிய ஏமாளி யார்" என்பதாகும். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் உங்களை சில கேள்விகள் கேட்போம். உங்களுக்குத் தெரிந்த பதிலைச் சொல்லலாம். பதில் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சில கேள்விகள் கேட்ட பிறகு உங்களுக்கு பத்து லட்சம் அல்லது பதினைந்து லட்சம் பரிசு விழுந்திருக்கிறது என்று சொல்வோம். நீங்கள் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வந்து விடவேண்டும்.
வெளியில் வரும்போது உங்களுக்கு பிஸ்கெட்டும் டீயும் கொடுப்போம். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கவர் கொடுப்போம். அதை வீட்டுக்குப் போய் பிரித்துப் பார்க்கவும். வீட்டுக்கு வந்தவுடன் அந்தக்கவரில் பத்து லட்சம் செக் இருக்குமென்று நீங்கள் நினைத்தால் நீங்கள்தான் உலக மகா ஏமாளி. கவரில் 500 ரூபாய் நோட்டு ஒன்றும் கடிதம் ஒன்றும் இருக்கும். கடிதத்தில் நீங்கள் டி.வி.யில் அன்று நடித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு விட்டு அதற்கான சன்மானம் 500 ரூபாய் என்று எழுதியிருப்போம்.
சரி, என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று ஞாயிற்றுக்கிழமை டி.வி.ஸ்டேஷனுக்குப் போனேன். அங்கு என்னைப்போல் பலர் வந்திருந்தார்கள். என்னையும் சேர்த்து ஒரு மூன்று பேரை மட்டும் கூட்டிக்கொண்டு போய் கேட்கப்போகும் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் கொண்ட பேப்பர் ஒன்றைக் கொடுத்து, நன்றாக மனப்பாடம் செய்யச்சொன்னார்கள். மீதிப்பேர்களைக் கூட்டிக்கொண்டு போய் பார்வையாளர்களாக உட்கார வைத்தார்கள்.
பிறகு எங்களுக்கு ஒருவர் வந்து ரிகர்சல் நடத்தினார். பிறகு படம் பிடிக்கும் தளத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய் படம் பிடித்தார்கள். எனக்கு பத்து லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. பிறகு எங்களை வெளியில் அழைத்து வந்து பிஸ்கட், டீ கொடுக்கப்பட்டது. கூடவே ஒரு கவரும் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தேன். சரியாக ஒரு 500 ரூபாய்த்தாளும் நன்றிக்கடிதமும் இருந்தது. சரி, ஒரு நாள் பொழுது போயிற்று. டி.வி.யிலும் தோன்றியாயிற்று, ஞாயிற்றுக்கிழமை பொழுதும் போயிற்று என்று திருப்திப் பட்டுக்கொண்டு தூங்கிப்போனேன்.
உங்கள் ஊரிலும் இந்த மாதிரி ஆஃபர் வந்தால் விட்டு விடாதீர்கள்.
டிஸ்கி: இது முற்றிலும் என்னுடைய மூளையில் உதித்த ஒரு கற்பனைக் கதையே. இதைப்படித்து விட்டு எந்த டி.வி.யாவது இந்த மாதிரி புரொக்ராம் நடத்தினால் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன். ஏற்கனவே எந்த டி.வி.யாவது இப்படி ஒரு புரொக்ராம் நடத்திக் கொண்டிருந்தால் அதற்கும் இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சத்தியம் செய்கிறேன்.
புரிஞ்சி போச்சு! இப்படித்தான் ப்ரோக்ராம்கள் நடக்குதா?
பதிலளிநீக்குஆசை யாரை விட்டது! முதியோர்களுக்குத்தான் மிகவும் அதிகம்
நீக்கு"நானும் 5 மணிக்கே போய்விட்டேன்"
நம்ம ஆயுசு இனி கம்மிதானுங்களே. அதனாலதான் ஆசை ஜாஸ்திங்க.
நீக்குநாடகமே உலகம்!இதில் நாளும் நடப்பதைச் சொன்னீர் நன்று!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
சாமி சார்,
பதிலளிநீக்குசரியா தான் சொல்லியிருக்கீங்க,இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறவங்க எல்லாம் உங்க கதைப்படி தேர்வு செய்யப்படுவதில்லை என்றாலும், சம்பவங்கள் அதே,
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் கேபிள் டீ.வி ஆபரேட்டர் குடும்பம், அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் தான் ,எனக்கு தெரிஞ்ச கேபிள் டீவி ஆபரேட்டர் தம்பி முன்னர் பன் டிவி போட்டியில் கலந்துக்கொண்டான்,எப்படிடானு கேட்டதுக்கு அவனே சொன்னது,. அடுத்தது நிகழ்ச்சி ஸ்பான்சர்கள் சொல்லுகிற ஆட்கள் கலந்துக்கொள்வார்கள்,பரிசும் அவங்களுக்கு தான் :-))
டூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வீடுக்கொடுத்த கதையும் அதான், வீட்டின் விலையில் டிஸ்கவுண்ட் தான் கொடுத்தாங்க, வீடு வேண்டும்னா பணம் கொடுக்கணும் இல்லைனா,யாருக்காவது அந்த ஆபரைக்கொடுத்து விடலாம் அவ்வளோ தான். முழு வீடும் ஓசியில் கிடைக்காது :-))
பொது மக்கள் போன் செய்து, செய்தி அனுப்பி காசு இழப்பது தான் வாடிக்கை,அப்படியே யாரேனும் உள்ளப்போனாலும் முதல் சுற்றிலேயே தொறத்திவிடுவாங்க.
நான் கற்பனை செய்தது சரியாப்போச்சு.
நீக்குஇது கற்பனையாக இருந்தாலும் நடைமுறை உண்மையையை நயமாக உரைத்திருக்கிறது,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
எனக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்தது இப்போ புரியுது .
பதிலளிநீக்குBT-664120 என்ற விலாசத்திலிருந்து எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்துள்ளது.
பதிலளிநீக்குவந்த நாள் 18.05.2012 காலை 9.40 மணி.
அதை அப்படியே கீழே எழுதி அனுப்பியுள்ளேன்.
பொதுவாக இதுபோல எனக்கு அடிக்கடி செய்திகள் வருவதும் நான் அவற்றை உடனடியா DELETE செய்வதும் தான் வழக்கம்.
இதைப்பற்றி தங்கள் கருத்தினையும் ஒரு பதிவாக வெளியிட்டால் யாரும் ஏமாறாமல் விழிப்புணர்வு கொள்வார்கள்.
இதை நம்பி செயல்பட்ட என் அலுவலக நண்பர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் முன்பு பலவித தொல்லைகள் எற்பட்டன என்பது எனக்கும் ஓரளவு தெரியும்.
முழுமையாகத் தெரியாததால் நான் அதைப்பற்றி பதிவிடவில்லை.
இதோ அந்த வந்துள்ள குறுஞ்செய்தி:
URGENT-YOUR NUMBER HAS WON 1,000,000.00 IN COCO COLA UK 2012.
TO RECEIVE YOUR AWARD SEND YOUR NAME, ADDRESS, AGE, PHONE NUMBER TO
coladraw2012@gmail.com SENDER BT-664120 SENT 09:40:20 18-05-2012
ஐயோ ஐயா........நானும் ஓடோடி வந்தேன்...500 ரூபாவோட முடிச்சுட்டீங்களே
பதிலளிநீக்குஇதை விட ஒரு சூப்பர் ஐடியா கை வசம் இருக்கு..ஆயிரம் ரூபாய் கொடுங்க..ஒரு கோடியை அள்ளிகிட்டு போங்க, அடுத்த ஜன்மத்தில் என்று அறிக்கை ஒன்று விடுங்க! . நாங்க ஒரு அஃபிடவிட் தருவோம்..அதில் நீங்க கையெழுத்துப் போட்டு, ஒரு நோட்டரி பப்ளிக் கிட்ட சைன் வாங்கி கொடுங்க,ஆயிரம் ரூபாயோட! உங்களோட அடுத்த ஜன்மத்தில உங்க வீட்டுக் கதவை தட்டி பணம் கொட்டும். ஆனா, ஒரு கண்டிஷன்..அந்த நோட்டரி பப்ளிக் உங்களோட அடுத்த ஜன்ம சைனை அட்டெஸ்ட் பண்ணினா போறும் . முக்கியமான இன்னொரு விஷயம்,முதல்ல வர ஆயிரம் பேர்களுக்கு 5000 ரூ மதிப்புள்ள வெள்ளி குத்து விளக்கு early bird incentive வா கிடைக்கும் என்று அட்வர்டைஸ்மெண்ட் கொடுங்க..பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!
பதிலளிநீக்குஇன்னொரு சூப்பர் ஐடியா பண்ணி வச்சிருக்கனுங்க. அடுத்த பதிவப் பாருங்க. பார்ட்னர்ஷிப் சேர்த்துக் கொள்ளப்படும்.
நீக்கு