ஞாயிறு, 27 மே, 2012

மொபைல் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.


இன்றைய நாளில் கம்ப்யூட்டரும் மொபைல் போனும் இல்லாதவர்களே இல்லை என்று ஆகிவிட்டது. இவைகளால் செலவு மட்டும்தான் என்று நினைப்பவரா நீங்கள். உங்கள் எண்ணம் தவறு. இவைகளின் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். இதோ அதற்கான உத்தி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
BT-664120 என்ற விலாசத்திலிருந்து எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்துள்ளது.

வந்த நாள் 18.05.2012 காலை 9.40 மணி.

அதை அப்படியே கீழே எழுதி அனுப்பியுள்ளேன்.

பொதுவாக இதுபோல எனக்கு அடிக்கடி செய்திகள் வருவதும் நான் அவற்றை உடனடியா DELETE செய்வதும் தான் வழக்கம்.

இதைப்பற்றி தங்கள் கருத்தினையும் ஒரு பதிவாக வெளியிட்டால் யாரும் ஏமாறாமல் விழிப்புணர்வு கொள்வார்கள்.

இதை நம்பி செயல்பட்ட என் அலுவலக நண்பர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் முன்பு பலவித தொல்லைகள் எற்பட்டன என்பது எனக்கும் ஓரளவு தெரியும்.

முழுமையாகத் தெரியாததால் நான் அதைப்பற்றி பதிவிடவில்லை.

இதோ அந்த வந்துள்ள குறுஞ்செய்தி:

URGENT-YOUR NUMBER HAS WON 1,000,000.00 IN COCO COLA UK 2012.

TO RECEIVE YOUR AWARD SEND YOUR NAME, ADDRESS, AGE, PHONE NUMBER TO

coladraw2012@gmail.com SENDER BT-664120 SENT 09:40:20 18-05-2012
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே கொடுத்துள்ளது திரு.வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள பின்னூட்ட செய்தி. இந்த மாதிரியான செய்திகள் உங்கள் பலருக்கும் வந்திருக்கலாம். பெரும்பாலானோர் இந்த மாதிரி செய்தியைப் பார்த்தவுடன் டெலீட் செய்து விடுவார்கள். நானும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தேன். இப்போது வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய செய்தியைப் பார்த்ததும் ஒரு யோசனை உதித்தது.


நம்ம ஜனங்கள் இருக்காங்களே, அவர்களுக்கு எத்தனை முறை பட்டாலும் திரும்பவும் அப்படியேதான் செய்வார்களே அன்றி, திருந்தவே மாட்டார்கள். பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் கோட்டை விடுபவர்களை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 


அதாவது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது உலக நியதி. அப்படியானால் நாம் ஏன் எப்போதும் ஏமாந்துகொண்டே இருக்கவேண்டும். அக்கரைக்குச் சென்றால் என்ன என்று தோன்றியது. என் திட்டத்தை இங்கே கொடுத்துள்ளேன். என் அனுமதியின்றி யாரும் இந்தத் திட்டத்தை உபயோகித்தால் நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்று அறியவும்.

தேவையான முதலீடு, ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் கனெக்ஷனும். அடுத்ததாக ஒரு நல்ல செல்போனும் அளவற்ற எஸ்.எம்.எஸ் உபயோகிக்கக் கூடிய ஒரு செல் கனெக்ஷனும். பதிவர்கள் அநேகரிடம் இந்த இரண்டு சௌகரியங்களும் ஏற்கனவே இருக்கும். அதற்காக இந்தத் தொழிலில் இறங்க வேண்டாம். ரிஸ்க் அதிகம். ஒரு பத்து வருடம் கம்பி எண்ணவேண்டிவரும். இதில் ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் (கம்பி எண்ணுவதில்) துணிந்து இறங்கலாம்.


ஒரு நல்ல கடிதம் தயார் செய்துகொள்ளவேண்டும். காசைக்கொடுத்தால் அதற்கு ஏகப்பட்ட பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடிதத்தில் எழுத வேண்டிய கருத்து பல விதமாக இருக்கலாம். சேம்பிளுக்கு ஒன்று இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்குப் புரிவதற்காக தமிழில் கொடுத்துள்ளேன். ஆனால் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடையீர்,


நான் பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் உயர் அதிகாரியாய்ப் பணிபுரிகிறேன். எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் எங்கள் பேங்க்கில் ஒரு மில்லியன் பவுண்ட் பணம் போட்டிருந்தார். அவர் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு இங்கு யாரும் வாரிசு இல்லை. அவர் தன் உயிலில் தன் பணம் முழுவதையும் ஒரு குணசாலியான தமிழருக்குக் கொடுத்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். எங்கள் விசாரணையில் நீங்கள் அதற்குப் பொருத்தமானவர் என்று கண்டு பிடித்தோம்.


நீங்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தால் உங்கள் முழு விலாசம், பேங்க் பெயர், கணக்கு எண், ஆகிய விபரங்களை உடனடியாக எனக்கு அனுப்பினால், உங்கள் கணக்கிற்கு மொத்தப் பணத்தையும் அனுப்பிவிடுகிறேன்.


அன்புள்ள,


#%$&%*&(*&()  
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கடிதத்தை கிடைக்கும் ஈமெயில் அட்ரசுக்கெல்லாம் அனுப்பவேண்டும். ஈமெயில் அட்ரஸ் விற்பதற்கு பலர் இருக்கிறார்கள். ஒரு பத்தாயிரம் பேருக்கு அனுப்பினால் ஒன்றிரண்டு பேர் பதில் போடுவார்கள். இந்த கடிதத்தையே சுருக்கி எஸ்.எம்.எஸ். ஆக ஒரு பத்தாயிரம் பேருடைய மொபைலுக்கு அனுப்பவேண்டும். மொபைல் நெம்பர்கள் மொபைல் கம்பெனிக்காரர்கள் கொஞ்சம் காசு கொடுத்தால் கொடுப்பார்கள். இதற்கும் சிலர் பதில் அனுப்புவார்கள். தூண்டிலில் மீன் சிக்கிவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.


இதற்கு மேல்தான் ஜாக்கிரதையாக டீல் செய்யவேண்டும். என்ன சொல்லவேண்டுமென்றால், இந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்ப பேங்க் கமிஷன் 50000 ரூபாய் ஆகும். அந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள பேங்கில் இன்ன ஊரிலுள்ள பேங்க்கில் இந்த அக்கவுன்ட் நெம்பரில் போடவும். உங்கள் பணத்தை உடனே உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும் என்று ஒரு மெயில் அனுப்பவும். இந்த மாதிரி ஒரு கணக்கு முன்பே ஆரம்பித்துக்கொள்ளவும்.


அந்த மடையன் பணத்தை நீங்கள் சொன்ன மாதிரி நீங்கள் சொன்ன பேங்க்கில் போட்டானென்றால் நல்ல கொழுத்த மீன் என்று புரிந்து கொள்ளவும். பிறகு, இன்னொரு மெயிலில் இந்திய ரிசர்வ் பேங்க்கிடம் கிளியரன்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதையும் இதே கணக்கில் கட்டவும் என்று சொல்லவும். அந்தப் பணமும் கணக்கில் கட்டப்பட்டு விட்டால் உடனே கட்டின பணத்தையெல்லாம் சுருட்டிக்கொள்ளவும். இதற்கு மேலும் ஆசைப்பட்டால் மாட்டிக்கொள்வோம்.


இதுவரை உபயோகித்த ஈமெயில் ஐடி, செல்போன் சிம், பேங்க் அக்கவுன்ட், எல்லாவற்றையும் சுத்தமாக அழிக்கவும். இன்டர்நெட்டை கேன்சல் செய்யவும். கம்ப்யூட்டரை காயலான் கடைக்குப் போடவும். வேறு ஊருக்குப் போய் செட்டில் ஆகி, திரும்பவும் இதே தொழிலை வேறு பெயர்களில் தொடரவும்.


அவ்வளவுதான். இதற்கு மேல் பேராசைப்பட்டீர்களோ, அப்புறம் கம்பிதான். ஜாக்கிரதை.

15 கருத்துகள்:

 1. பணம் சம்பாதிக்கற வழிய இப்படியா இலவசமா போட்டு ஓடைக்கிறது. புட்டு புட்டு வச்சிட்டீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" அதுதாங்க நம்ம கொள்கை. நம்மளுக்கும் நாலு பாலோயர்ஸ் வேண்டாமுங்களா?

   நீக்கு
 2. பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் கோட்டை விடுபவர்களை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

  தேவையான பதிவு அன்பரே.

  பதிலளிநீக்கு
 3. என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பதை அழகாகச் சொல்லி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. how to make money? உங்களுக்கு பயன்படும் தகவல்களுடன்..
  http://tamil-google.blogspot.in/

  பதிலளிநீக்கு
 5. ஹி ஹி, இதை செய்யுறதுக்கு கூடுதல் தகுதி நுனிநாக்கில் ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் பெண்ணாக இருத்தல் கூடுதல் நலம் ..

  பதிலளிநீக்கு
 6. அதன் விளைவுகளும் இலவசமாக கிடைக்கும் அப்படிதானே ஐயா .

  பதிலளிநீக்கு
 7. ஆகா.... விட மாட்டீங்க போல!!

  முகத்திரையைக் கிழித்ததற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. இது போல் மின்னஞ்சலிலும் நிறைய வருகிறது ஐயா.

  பதிலளிநீக்கு
 9. இந்த விசயத்திலும் சரி ஈமு விலும் சரி கவர்மென்ட் என்ன புடுங்கிட்டா இருக்கு? இதில் என்ன கொடுமைன்னா எனக்கு வாரத்திற்கு 20,30 மெயில் வருகிறது. கொஞ்சநாள் அனைத்தையும் அழித்து வந்தேன். அப்புறம் கண்டமேனிக்கு திட்டி பதில் அனுப்பினேன். பின்னர் சைபர் கிரைம் ல் எனக்கு வரும் மெயில் பற்றியும் அவர்கள் சொல்கிற படி நடந்து நான் அவர்களை பிடிக்க காவல்துறைக்கு உதவ தயாராக இருப்பதாக பலமுறை கடிதம் எழுதி விட்டேன். ம்ம்ம் இன்றும் 7 மெயில்களை அழித்துவிட்டுதான் உங்களுக்கு பதில் அனுப்பி கொண்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே, உங்கள் நிலை கண்டு வருந்துகிறேன். இந்த மாதிரி மெயில்களுக்குப் பதில் அனுப்பினால், உங்கள் மெயில் விலாசம் உண்மை என்று திருடர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே பதில் எதுவும் அனுப்பாமல் அவைகளை அழிப்பதுதான் உத்தமம்.

   நீக்கு
 10. ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்க புதிய வழி : http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/12/affiliate-marketing-jobs-in-tamil-nadu.html

  பதிலளிநீக்கு
 11. வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் கிளிக்சென்ஸ்
  உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி இணையத்தில் பணம் சம்பாதிக்க வாருங்கள் . எனக்கு தெரிந்த வழிகளை உங்களுக்கு சொல்கிறேன் .
  கிளிக்சென்ஸ் இது ஒரு விளம்பர நிறுவனம் .
  சுமார் 8 வருடங்களாக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிற திறமையான இணையதளம் .
  தனது உறுப்பினர்களுக்கு சரியாக பணத்தை கொடுத்துகொண்டிருக்கிறது .
  நீங்கள் கீழ் உள்ள வழி முறைகளை பின்பற்றினால் உங்கள் வீட்டிலிருந்து ஓய்வு நேரத்தில் அதிக பணத்தை பெறலாம் .
  மேலும் படிக்க
  http://homejob99.blogspot.in/2015/06/blog-post.html

  பதிலளிநீக்கு
 12. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

  பதிலளிநீக்கு