வாலிப வயோதிக நண்பர்களே
உங்கள் திருமணம் நாட்படத் தள்ளிப்போகிறதா? கவலை வேண்டாம். நாங்கள் ஆரம்பிக்கப்போகும் திருமணக்கல்லூரியில் சேருங்கள். வெற்றி நிச்சயம்.
50 கல்யாணங்கள் வெற்றிகரமாகச் செய்து கொண்ட சூபர் ஸ்பெஷலிஸ்ட் புரொபசர் உங்களுக்கு வகுப்புகள் நடத்துவார். தற்போது அவர் கம்பி எண்ணிக்கொண்டிருந்தாலும் வகுப்புகள் எடுப்பதற்கு பரோலில் வருவார்.
பின் குறிப்பு; இது ஒரு நகைச்சுவைப் பதிவு. சீரியஸாக எடுத்துக்கொண்டு என் மீது பாயவேண்டாம்.
பின் குறிப்பு; இது ஒரு நகைச்சுவைப் பதிவு. சீரியஸாக எடுத்துக்கொண்டு என் மீது பாயவேண்டாம்.
உலகத்திலேயே மிகப் பெரிய சோகம் எது தெரியுமா? நகைச்சுவையை சீரியஸாக எடுத்துக் கொண்டு சொன்னவர் மீது பாய்வதுதான்.
பதிலளிநீக்குடாக்டர் கந்தசாமி ஐயா:
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், பல பதிவர்களுக்கு நகைச்சுவையை-கிண்டலை, உண்மையான பதிவுகளுடன் பிரிச்சுப் பார்க்கத் தெரியவில்லை. அவர்களை மன்னியுங்கள்...
இதுக்கு மேல் நான் என்ன சொல்வது!
பின் குறிப்பு; இது ஒரு நகைச்சுவைப் பதிவு. சீரியஸாக எடுத்துக்கொண்டு என் மீது பாயவேண்டாம்.
தமிழ்மனம் ஹிட்ஸ்க்காக இந்த தலைப்பும், மொக்கையும் பதிவிடப்பட்டுள்ளது. ஏன் இப்படி?
பதிலளிநீக்குதமிழ்மண ஹிட்ஸை வைத்து ஒரு வேளை காப்பி சாப்பிட முடியுமா? மொக்கை, மொக்கைதான். ஒத்துக்கொள்கிறேன். என்ன பண்றதுங்க, வெயில் காலமில்லையா, மூளை வறண்டு போயிடுதுங்க.
நீக்குவிளம்பரம் நல்லா இருக்கே?
பதிலளிநீக்குபின் குறிப்பு; இது ஒரு நகைச்சுவைப் பதிவு. சீரியஸாக எடுத்துக்கொண்டு என் மீது பாயவேண்டாம்.///
பதிலளிநீக்குவயிறு வலிக்க சிரிச்சேன். இந்த வரியைக் கண்டு. கொடுமையடா.
orupadiyana velai yedhum illaya?
பதிலளிநீக்குஏனுங்க இது உருப்படியான வேலையாத் தெரியலயா? எத்தனை பேர் காலாகாலத்துல கல்யாணம் ஆகாம கஷ்டப்படறாங்கன்னு தெரியுமுங்களா?
நீக்குயாருக்கு அந்த சோகம்? ஜோக் சொன்னவருக்குத் தானே?
பதிலளிநீக்குசரியாகக் கண்டுபிடித்த உங்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கோணுமே?
நீக்குபரோலில் வரும் போது சொல்லுங்கள்..போய் பார்க்கலாம்..(அறுபது வயதான) எனக்கும் (மறுபடியும்)
பதிலளிநீக்குதிருமண ஏற்பாடு நடக்கிறது.
பின் குறிப்பு: யாராவது சொந்தக் காரர்கள் என் மீது பாயப் போகிறார்களோ என்கிற பயத்தில் தான் அந்த இரண்டு பிராக்கெட்டும்..(ஏனென்றால் முதுகு என்னுடையது!)
சஷ்டியப்த பூர்த்தி கல்யாணத்திற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுங்க.
நீக்குஅது சரி
நீக்குமூவார் சார் அறுபதாம் கல்யாணத்துக்கு வந்தா ஆசீர்வாதம் வாங்கிட்டு போயிறலாம் இல்லையா. மொய் வைக்க வேண்டியதில்லையே
ஹா ஹா :D
பதிலளிநீக்குவாலிப வயோதிக நண்பர்களே...
பதிலளிநீக்குஇதை பார்த்தா...சிட்டு குருவி லேகியம் விக்கிறவங்க சொல்ற மாதிரி இருக்கே...
இதையும் ஆரம்பிச்சு விட்டீங்களா ?
நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் குறி வைத்துத் தாக்க வில்லையே.
பதிலளிநீக்குஅப்படி எல்லாம் ஒண்ணுமில்லீங்க. தாக்கோணும்னா நேராவே தாக்கிடுவேனுங்க.
நீக்குகீழே உள்ள லிங்கில் இருப்பது உண்மையா? உண்மை என்றால் எப்படி என்று சொல்லமுடியுமா? நீங்கள் ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் என்பதால் இந்த கேள்வி?
பதிலளிநீக்குஇங்கு அமெரிக்காவில் நிறைய இடங்களில் தமிழ்மணத்தில் உள்ள திரைமணம் பகுதியைப் பார்க்க முடிவதில்லை. அங்கு எப்படி? தெரிகிறதா?
http://win.ethiri.com/?p=1145
தமிழ்மணம் இங்கும் தெரியவில்லை.
நீக்குதென்னையில் கன்று முளைக்கும் அதிசயம். லிங்கில் சென்று பார்த்தேன். இயற்கையின் விநோதங்கள் பல வகையில் வெளிப்படுகின்றன. மரபியல் மாற்றங்களினால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். அவ்வப்போது நான்கு கால்களுடன் மனிதக் குழந்தை, ஆறு கால்களுடன் மாட்டுக்கன்று என்று பிறப்பதைக் கேள்விப்படுகிறோம். நீங்கள் மருத்துவத்துறையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நிறைய மரபணு மாற்றங்களைப் பார்த்திருப்பீர்கள்.
இந்த தென்னை மரம் பட்டுக்கோட்டை பக்கம் இருப்பதால் என்னால் சென்று பார்க்க முடியவில்லை. இதே போல் கோயமுத்தூர் பக்கம் ஒரு தென்னை மரத்தில் ஒரு பாளையில் ஆயிரக்கணக்கான குரும்பைகள் தோன்றின. ஆனால் அவை எல்லாம் இயற்கையின் வக்கிர வெளிப்பாடுகள்தான்.
ங்கு அமெரிக்காவில் நிறைய இடங்களில் தமிழ்மணத்தில் உள்ள திரைமணம் பகுதியைப் பார்க்க முடிவதில்லை. அங்கு எப்படி? தெரிகிறதா?
பதிலளிநீக்குஇங்கும் அதே நிலைதான். ஏதோ மாற்றம் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குநன்றி!
நீக்குதமிழனாகிய உங்களுக்கு "நன்றி" என்று சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. ஆகவே தமிழில் சொல்கிறேன் ஐயா உங்களுக்கு தேங்க்ஸ்!
தேங்க்ஸ்! ஐயா உங்களுக்கு தேங்க்ஸ்!!
நோ மென்சன் பிளீஸ் - இது பழசு.
நீக்குவெல்கம் - இது புதுசு.
ஹை - இது லேடஸ்ட்
ஹா ..ஹ ... ஹா.. ஹ... ரசித்தேன். சிரித்தேன். நன்றி சார் !
பதிலளிநீக்குஎப்படி லேடஸ்ட் நியூஸ் பாத்தீங்களா! :)
நீக்கு