வெள்ளி, 1 ஜூன், 2012

விவாக ரத்து வாங்குவது எப்படி?


பத்து வழிகள் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு எது பொருந்துமோ அதை எடுத்துக்கொள்ளவும்.

1. விவாக ரத்து வாங்குவதற்கு முதல் தேவை நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். அதாவது முதல் கல்யாணம் முடிந்த பிறகு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். முதல் மனைவி தானாகவே விவாகரத்து வாங்கிக்கொண்டு போய்விடுவாள்.

2. நல்ல விவாக ரத்து வக்கீலைப் பிடித்து நண்பனாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் வரும் கேஸ்களிலிருந்து பல ஐடியாக்கள் கிடைக்கும்.

3. அவரும் ஏதாவது புது ஐடியா கொடுப்பார். அவரையே உங்கள் கேசுக்கும் வக்கீலாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. மனைவி ஷாப்பிங்க் போகவேண்டும் என்று சொல்லுகிறபோது தலைவலி தாங்க முடியவில்லை என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்ளவும். இப்படி நாலு தடவை செஞ்சா வக்கீல் நோட்டீஸ் தானாக வரும்.

5. ஆபீசிலிருந்து வீட்டுக்கு இரவு 10 மணிக்கு முன் வராதீர்கள். வந்தவுடன் ஒன்றும் பேசாமல் படுத்துக் கொள்ளவும்.

6. அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து வீட்டோடு வைத்துக் கொள்ளவும். ஒரு மாதத்தில் விவாக ரத்துக்கு நான் கேரன்டி.

7. ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு காலை 8 மணிக்கு வெளியில் சென்று விட்டு இரவு 10 மணிக்குத் திரும்பி வரவும். அன்று முழுவதும் வீட்டில் ஒன்றும் சாப்பிடக்கூடாது.

8. சாப்பிடும்போது ஏதாவது குறை சொல்லிக்கொண்டே சாப்பிடவும். குறிப்பாக எங்க அம்மா செய்யற மாதிரி இல்லை என்று அடிக்கடி சொல்லவும்.

9. மாமியார், மாமனாரைப் பற்றி அடிக்கடி மோசமாகப் பேசவும். செய்த சீர் வகைகளைப் பற்றி புகார் சொல்லவும். தலை தாபாவளிக்கு எடுத்த துணிகளைப் பற்றி மோசமாக கமென்ட் சொல்லவும்.

10. இவை ஒன்றும் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்றால் உங்கள் தலைவிதி அவ்வளவுதான் என்று திருப்திப் பட்டுக்கொள்ளவும்.

பி.கு. நான் 10 வது முறையைத்தான் கடைப்பிடிக்கிறேன்.

26 கருத்துகள்:

  1. அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களா? எனில் இம்மாதிரி ஒரு பதிவில் (நகைச்சுவைதான் என்றாலும் சென்டிமென்ட்) அவர்கள் புகைப்படம் வருவதை அவர்கள் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்பது உறுதியாக தெரியுமா? தெரியாதவர்கள் எனில் தயவு செய்து புகைப்படத்தை நீக்கி விடவும். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனானி அவர்களுக்கு,

      இந்தப்படம் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது. கூகிளில் பொதுவில் போடும் படங்களை யாரும் பயன்படுத்தலாம். மேலும் பதிவில் உள்ள கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவன அல்ல.

      இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் அந்தப் படத்தை உபயோகப் படுத்தினேன். மனது புண்படுபவர்கள் இத்தகைய படத்தை கூகுள் பொதுவில் கொடுத்திருக்கக் கூடாது அல்லவா?

      நீக்கு
    2. மறுபடியும் யோசித்தபோது அந்தப் படம் வேண்டாமே என்று பட்டது. வேறு படம் போட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  2. ஏன் இந்த கொலைவெறி.

    :)

    இதெல்லாம் ஒரு ஆண் பக்கம் இருந்து எழுதப்பட்டுள்ளது, ஒரு பெண் தனக்கு விவகரத்து வேண்டுமென்றால் என்வெல்லாம் செய்யலாம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவையை அனுபவியுங்கள். பெண்ணின் சார்பில் ஒரு பெண் பதிவர் எழுதினால்தான் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  3. //பி.கு. நான் 10 வது முறையைத்தான் கடைப்பிடிக்கிறேன்//

    இந்த வயசிலேயே இந்த லொள்ளு என்றால், அந்த வயதில்...பாவங்க உங்க மனைவி!

    பதிலளிநீக்கு
  4. சிவனே என்று இருப்பது லொள்ளு என்றால் நிஜமாக லொள்ளு பண்ணுபவர்களை (உதாரணத்திற்கு "நம்பள்கி") என்னவென்று சொல்லுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. //மறுபடியும் யோசித்தபோது அந்தப் படம் வேண்டாமே என்று பட்டது. வேறு படம் போட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.//

    நானும் சொல்லனும் என்று நினைத்தேன், உங்களுக்கு செல்வராகவன் - சோனியா அகர்வால் படம் கிடைக்கவில்லையா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீன்னு எதார்த்தமா நெனச்சுத்தானுங்க போட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, தப்பாப் போச்சுன்னு.

      நீக்கு
  6. ஒரு தடவை ...இரு தடவை ..இப்படி பத்து தடவை படிச்சுப் பார்த்தேன் ! பத்து தான் என் சாய்ஸ் ! இல்லாட்டி விழுந்துடுமே முதுகில் மொத்து !

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா ஹா ரொம்ப சிரிச்சு சிரிச்சுப் படிச்சேன்! இப்படி அடிக்கடி எடுத்துவிடுங்க கந்தசாமி சார்!

    பதிலளிநீக்கு
  8. நமக்கு இப்போ தேவையில்லாத பதிவுதான்..இருந்தாலும் வருமுன் காப்போம் மாதிரி...
    ஏழாவது நாங்க இப்பவே வீட்ல பண்ணிட்டிருக்கோம். கல்யாணமான உடனே பண்ணா நல்ல பலன் கொடுக்கும்னு நினைக்கிறேன். :-)
    நீங்க சொல்றதால் நம்புறேன் பத்து தான் பெஸ்ட்னு! :-)

    பதிலளிநீக்கு
  9. சார் நீங்க கொடுத்த ஐடியா எல்லாம் காமெடியா பார்த்தா காமெடியா இருக்கு. சீரியஸா பார்த்தா சீரியஸா இருக்கே... :)

    பதிலளிநீக்கு
  10. 1. தவிர எல்லாம் நடக்கு ஆனா பலன் இல்லை! அதனால 10. பாலோ பண்ணிட்டு இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  11. ண்ணோவ்.. தலைப்பு சரீயில்லீங்....

    விவாகரத்து வாங்க முயற்சித்து பல்பு வாங்குவது எப்படின்னு வைங்க.,

    நீங்க முயற்சி பண்ணி எதிலிமே செயிக்கலே., அப்புறம் என்ன எங்களுக்கு ஆலோசனை? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை, மற்றவங்களுக்கு இருக்கலாமில்லையா? அந்த ஆசைதான். ஏதோ நம்மாலானது, இரண்டு ஜன்மங்கள் கடைத்தேறட்டுமே என்ற பரந்த நோக்கம்தான்! :)))))

      நீக்கு
  12. பிரிந்து போவதற்கு ஐடியாவெல்லாம் அவகியம் இல்லை. சேர்ந்து வாழ்வதற்குத்தான் தற்போது ஆலோசனைக்ள் தேவைப்படுகிறது. அடுத்த பதிவில் அதைக் கொடுங்கள். :-)

    பதிலளிநீக்கு
  13. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    சூப்பர் டிப்ஸ்...செம..செம...

    பதிலளிநீக்கு
  14. ஐயா, இந்தப் படம் நல்லாயிருக்குங்க...
    யாரும் சொன்னாங்கன்னு இதையும்
    மாத்திப்புட வேணாமுங்கோ...

    (எப்புடி நம்ம கமெண்ட்?)

    பதிலளிநீக்கு
  15. அருமையான ஐடியா சார் ,உங்கள முதல்லேயே சந்திக்காம போய்டேன் கடவுளே !
    நன்றி ,நன்றி ,
    நட்புடன் ,
    கோவை சக்தி

    பதிலளிநீக்கு
  16. இதுக்கெல்லாம் அஞ்சி உடன் விவாகரத்து கொடுப்பவர்கள் கேனை மனைவிகளா?

    பதிலளிநீக்கு