செவ்வாய், 5 ஜூன், 2012

இறைவன் எங்கே இருக்கிறான்?


காலம் காலமாக கேட்கப்பட்டு புளித்துப் போன கேள்வி. இருந்தாலும் அவ்வப்போது புளி போட்டுத்தேய்த்து புதிது பண்ணிக்கொள்ளவேண்டும்.

இறைவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆராய்வதற்கு முன் இறைவன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது. சின்னவயதில் கடவுள் மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். நீ நல்லது செய்தால் உனக்கு சுகத்தைக் கொடுப்பார். தீமை செய்தால் கஷ்டத்தைக் கொடுப்பார் என்று பெரியவர்கள் சொல்லி சொல்லி, கடவுளைக் கணக்குப்பிள்ளை என்று நம்பி வந்தோம். பிற்காலத்தில் விவரம் தெரிந்த பிறகு, அவர் எல்லோருக்கும் கணக்கு வைப்பதில்லை, சாதாரண மனிதர்களுக்குத்தான் கணக்கு வைக்கிறார் என்று புரிந்தது.

அவர் கணக்கு வைத்துக்கொள்ள ஒரு பெரிய ஆபீசே நடத்துகிறார். சித்திரகுப்தன்தான் அதற்கு எக்சிக்யூடிவ் டைரக்டர். ஆனால் அவரும் வேலைப்பளு காரணமாக சிலரது கணக்குகளை விலக்கிவிட்டார். இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரிந்தது என்றால், சாதாரண மனிதர்களுக்கு விதித்துள்ள விதியான, நல்லது செய்தால் நல்லது விளையும், கெட்டது செய்தால் கெட்டது விளையும் என்ற விதி அநேகம் பேருக்கு விதிவிலக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் விஷயத்தில் அவர்கள் கெட்டதே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக மிக நன்றாக, சுகபோக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று யோசித்தபோதுதான் இந்த ஞானோதயம் ஏற்பட்டது. அதாவது அவர்களுக்கெல்லாம் சித்திர குப்தன் கணக்கு வைப்பதில்லை என்ற விஷயம். ஏனென்றால் அவர்களுக்கு கணக்கு வைக்க ஏகப்பட்ட குமாஸ்தாக்கள் தேவைப்பட்டன. ஏறக்குறைய ஒவ்வொருவருக்கும் ஒரு குமாஸ்தா தேவையாயிருந்தது. யமதர்மனிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொன்னபோது அவன் சிம்பிளாக இந்த வழியைச் சொன்னான். அதாவது அவர்களுக்கெல்லாம் கணக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

அப்படிப்பட்ட பாக்கியவான்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதல்லவா? சொல்லிவிடுகிறேன். அரசு சம்பத்தப்பட்ட அனைத்து நபர்களும் இந்த விதிவிலக்கின் கீழ் வருகிறார்கள். நம் நாட்டை எடுத்துக் கொண்டால், ஜனாதிபதியிலிருந்து ஊர் பேர் தெரியாத பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் வரை அரசு சம்பத்தப்பட்டவர்கள்தான். எம்.பி., எம்.எல்.ஏ., பஞ்சாயத்து மெம்பர், எல்லாரும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. வட்டம், மாவட்டம், எடுபிடிகள் இவர்களும் இவர்களுள் அடக்கம்.

இவர்களுக்கு இந்த விதி, அதாவது நல்லது, கெட்டது என்கிற விதி இல்லை. இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சித்திரகுப்தன் கணக்கு வைக்கமாட்டான். இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அவனுக்கு அவன் குடும்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கே நேரம் போதாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போது இதையெல்லாம் கவனிக்க எப்படி முடியும்? 

15 கருத்துகள்:

  1. புளி போட்டுத்தேய்த்து புதிது பண்ணிக்கொண்டு பார்த்தால் ரிஜக்ட்டட் செய்யமுடியாத நிதர்சன்ப் பகிர்வு !

    பதிலளிநீக்கு
  2. கணக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்ட
    அதிஷ்ட்ட சாலிகளை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. சார் சித்ர குப்தன் கதை சூப்பர் .
    உங்க கணக்க எடுத்து தூசி தட்டி பாக்கபோறார் .எச்சரிக்கை .
    அவர கொஞ்சம் தாஜா பண்ணி வைங்க .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம எல்லாம் "எக்செம்ப்ட்டட்" லிஸ்ட்ல சேர்ந்தவங்க. எங்களுக்கு கடக்கு நோட்டெல்லாம் இல்லைங்க.

      நீக்கு
  4. அப்படிப்பட்ட பாக்கியவான்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதல்லவா? // நல்லது செய்றவங்கள தான் சொல்லப் போறீங்க என்று எதிர் பார்த்தேன் நல்ல பகிருவு .

    பதிலளிநீக்கு
  5. http://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

    ஊழிற் பெருவலி யாவுள ? மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    திருவள்ளுவர்

    “ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”

    கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)

    இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் சென்ற வாரம் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். நமது பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எப்போது ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    http://jayabarathan.wordpress.com/is-there-a-fate/


    சி. ஜெயபாரதன்

    பதிலளிநீக்கு
  6. உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு சார்.

    //அவர்கள் விஷயத்தில் அவர்கள் கெட்டதே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக மிக நன்றாக, சுகபோக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்//

    (நீங்க கூட ஓய்வு பெற்ற அரசு அலுலவலர் தானே?) ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க. நானும் இப்போ நல்லாத்தான் இருக்கறனுங்க. கணக்கு இருந்தாத்தானே நல்லது கெட்டதுன்னு பாத்து பலன் கொடுக்க முடியும். அதான் நோட்டே போடலியே?

      நீக்கு
  8. Irrespective of your age, I see my father in you; however, my father is a serious person unlike you. I wish my father takes a leaf out of your book! Life is short and I strongly believe that my father has to learn a lesson or two from you. If time permits (I have lorry loads of friends at Kovai), I would love to meet with you, provided you have some free time to spare… I plan on visiting India in 2013 January.

    Long Live Dr. Kanthasaami; Please maintain the same composure; what I mean is NEVER EVER BECOME a நொந்த சாமி!மன்னிக்கணும், கொங்கு குசும்பு இல்லாமல் என்னால் முடியவில்லை! அதனால் தான், இந்த நொந்தசாமி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத பாருங்க நம்பள்கி, நமக்கு ப்ரீ டைமே கிடையாதுங்க. என் டைம் பூராவும் நான் கைக்காசு போட்டு வாங்கினதுங்க. அதுலதான் குளிக்கணும், சாப்பிடணும், தூங்கணும் (12 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன்), மற்ற இத்தியாதி காரியங்கள் எல்லாம் பார்க்கோணும். என் நிலமையைப் புரிஞ்சுக்கோங்க.

      ஏதோ நீங்க அமெரிக்காவிலிருந்து வர்றதால உங்களுக்காக ஒண்ணு அல்லது இரண்டு ............................................................................
      நாளை உங்களுக்காக ஒதுக்குகிறேன். எதுக்கும் சீக்கிரம் வந்துடுங்க. நம்ம மகா கனம் பொருந்திய எருமை வாகனனார் தொரத்திட்டு வந்து கொண்டிருக்கிறார். யார் ஜெயிக்கறீங்கன்னு பார்த்துடறேன்!!!!!

      நீக்கு
  9. ஐயா மன அமைதியை வைத்து நோக்கும் போது இறைவன் பாகுபாடு அற்று இருப்பதாகவே எனக்கு படுகின்றது. எங்கள் வீட்டில் அருகிலுள்ள சேரி மக்களுடன் பேருந்தில் பயணித்து வந்துள்ளேன். பெரிய வேலையில் வசதியில் இருக்கும் மனிதர்களை விட மன இறுக்கம் அற்று மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  10. Each parsons(soul) do the good and bad things, some time it's will replicate that life. otherwise it will continue to next born on your soul.
    each animals have soul.we will identify the animals and name but sidharkal also watching soul only.so the tell your past,present and future life.
    ( cithra gupta ) do all the souls, not for human only.

    பதிலளிநீக்கு