வியாழன், 28 ஜூன், 2012

நாட்டிய அரங்கேற்றங்கள்.

சமீபத்தில் இரண்டு நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தேன். நாட்டியம் ஒரு நுண்கலை. நுண்கலைகளுக்கென்றே சிலர் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இதில் ஆர்வம் மிகுந்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சங்கீதம்  (அரங்கேற்றம்) மாதிரி இது சாதாரண விஷயமில்லை.

மிகுந்த வசதி படைத்தவர்களுக்கே சாத்தியமாகக்கூடிய ஒரு விஷயம். ஏறக்குறைய ஒரு ஐந்து வருடம் ஒரு நல்ல குருவிடம் பயிற்சி பெறவேண்டும். அந்தக் குருவிற்கு கலை ஞானத்துடன் நல்ல லோகாதய அனுபவமும் வேண்டும். இல்லாவிட்டால் கற்றுக்கொண்ட கலை குடத்தினுள் விளக்காகப் போய்விடும்.

ஓரளவு நாட்டியம் கற்றுத் தேர்ந்தவுடன் அரங்கேற்றம் செய்யவேண்டும். அரங்கேற்றம் நடத்துவது என்பது ஒரு கல்யாணம் நடத்துவது போலத்தான். அந்த அளவு சிரமங்களும் செலவுகளும் பிடிக்கும். ஒரு சில லட்சங்கள் ஆகும்.


முதலில் ஒரு குளிரூட்ட வசதி உள்ள ஹால் வேண்டும். ஒளி, ஒலிக்கருவிகள், போட்டோ, விடியோ எடுக்க ஸ்பெஷலிஸ்ட்டுகள், அரங்கு அலங்காரம், விளம்பரம், இன்விடேஷன், நடன மணிகளைப் பற்றி ஒரு விளக்க அட்டை, நடன மணிக்கு உடைகள், அலங்காரம் செய்பவர், குரு, பக்க வாத்தியம், அவர்களுக்கு சம்பாவனை, தலைமை தாங்க ஒரு பெரிய மனிதர், அரங்கேற்றம் முடிந்த பிறகு விருந்து, இப்படி ஏகப்பட்ட வேலைகள்.

தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று வருபவர்களை வரவேற்று அரங்கேற்றத்தை நடத்தி முடித்தால் பெரிய விடுதலையாக இருக்கும். ஆனாலும் அந்தப் பெண்ணின் கல்யாணம் முடியும் வரையிலும் இதைப்பற்றியே பெருமை பேசிக்கொண்டிருக்கலாம்.

அரங்கேற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் அதற்கப்புறம் நிகழ்ச்சிகள் செய்வது அபூர்வம். அதை முழுநேர தொழிலாக ஏற்றுக்கொள்பவர்கள் பெரும்பாலும் இல்லை.

ஆனாலும் இதற்காக அந்தப்பெண்ணும் அவர்கள் குடும்பத்தாரும் படும் பாடு இருக்கிறதே அது ஒரு சரித்திரக் காவியம்!18 கருத்துகள்:

 1. நீங்கள் அரங்கேற்றம் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை. நான் அனுபவித்திருக்கிறேன். நீங்கள் சொன்னதில் ஒரே ஒரு கருத்தோடு முரண்படுகிறேன்.. // ஆனால் சங்கீதம் மாதிரி இது சாதாரண் விஷயமில்லை// முறையாக பயின்று மேடை ஏறுவதில் சங்கீதத்திற்கான உழைப்பு இதற்க்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.. அதிலும் பெற்றோராக அரங்கேற்ற அனுபவத்தினால் சொல்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை மன்னிக்கவேண்டும். சங்கீதத்திற்கான உழைப்பும், சாதகனுக்கு வேண்டிய வைராக்கியமும் நாட்டித்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. நான் சொல்ல விரும்பியது நாட்டிய அரங்கேற்றம் போல் சங்கீத அரங்கேற்றத்திற்கு அவ்வளவு ஏற்பாடுகள் வேண்டியதில்லை என்ற கருத்தைத்தான்.

   நீக்கு
  2. தவறுதலாக புரிந்து கொண்டது நான் தான். நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. நான் தான் கேட்கவேண்டும்.. என்னை மன்னியுங்கள்.

   நீக்கு
 2. சந்தேகம் ஏன்? சரித்திரக் காவியமே தான்.

  நீங்க சொன்ன அத்தனையும் அடங்கிய நம்ம பதிவர் வீட்டு விசேஷம் இங்கே இருக்கு பாருங்க.

  http://thulasidhalam.blogspot.co.nz/2009/12/blog-post_26.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன். (ரொம்ப,ரொம்ப, லேட் கமென்ட். அட்டகாசமான கவரேஜ்.)
   எனக்கு அவ்வளவு விரிவா எழுதப் பொறுமை கம்மி.

   நீக்கு
 3. நாட்டியம் என்பது கடினமான ஒன்றுதான் எல்லோரும் அதில் தங்கள் திறமைகளை காட்டிட முடியாது முழுநேர முயற்சியும் அர்ப்பணிப்பும் அதற்குத் தேவை ஐயா.......

  அண்மையில் நிர்மாணய என்ற நாட்டியக் கலை பற்றி தெரிந்து கொண்டேன் அதில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன..........

  பதிலளிநீக்கு
 4. அரங்கேற்றம் என்பது மிகுந்த பொருள் செலவு மிக்கதே! இக் காலத்தில் வசதி உள்ளவர்கள்
  மட்டுமே செய்ய முடியும்

  த ம ஓ 2

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் நினைதைப் பற்றிய அருமையான பகிர்வு. நாட்டியம் இசை பற்றிய போதுமான அறிவு எனக்கு இல்லை என்றாலும் அரங்கேற்ற செலவு அதிகம் ஆகும் என்பதை அறிந்து கொண்டேன்


  படித்துப் பாருங்கள்

  காவி நிறத்தில் ஒரு காதல்

  seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html

  பதிலளிநீக்கு
 6. நான் ஐந்து நிமிடத்தில் ஏற்றப்படும் அரங்கேற்றம் என்று நினைத்து வந்தேன்! பாலச்சந்தர் படம் பார்த்தால் வந்த கோளாறு! இது மதுரைக் கோளாறு நல்ல கோளாறு!!

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் அதற்கு நாட்டியம் சொல்லிக்கொடுத்து அரங்கேற்றம் செய்வேன் என்று ஒரு சபதம் எடுத்துக்கொள்ளுங்களேன். சேமித்த காசைத் தொலைக்க அருமையான வழி. இப்படிப்பட்ட வழிகளை யாரும் உங்களுக்கு காட்டமாட்டார்கள்.

   நீக்கு
 8. நாட்டிய அரங்கேற்றம் மட்டும் அல்ல ஐயா
  நாட்டியமயில் நிகழ்வு ஒன்று இடையில் உள்ளது
  அதற்குள்ளேயே மனம் சோர்ந்துவிடும் இது ஒரு
  அனுபவக் கருத்து .நாட்டிய அரங்கேற்றத்தைப் பற்றி
  சொல்லவே வேண்டாம் இந்த விசயத்தில் நீங்கள்
  சொல்வதே முற்று முழுதான உண்மை!..மிக்க நன்றி ஐயா
  பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி. அது என்ன நாட்டியமயில் நிகழ்ச்சி? நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. சிறிது விளக்கமுடியுமா?

   நீக்கு
 9. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. அரங்கேற்றம் நடத்தினால் போதும் என்று பெற்றோர்கள் படுத்தும் பாடு... அப்பப்பா...
  எல்லாம் பந்தாவுக்காக செய்யப்படும் காரியந்தான்...

  பதிலளிநீக்கு
 10. சரியாகச்சொன்னீர்கள்.

  வாரம்தோறும் அரங்கேற்றங்கள்தான்.

  அப்புறம் தொடர்வோர் எத்தனை பேர் ?

  பதிலளிநீக்கு
 11. உண்மையில் எனக்குள்ளும் சிறு வயதில் இது பற்றி ஆசை இருந்தது ஐயா..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  பதிலளிநீக்கு