வெள்ளி, 22 ஜூன், 2012

நான் வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள்

அன்றாட குடும்ப வாழ்க்கையில் வீட்டில் பலவிதமான சில்லறை ரிப்பேர் வேலைகள் வரும். ஒவ்வொன்றிற்கும் அந்தந்த ஆளைத் தேடிப்போய் அந்த ரிப்பேரைச் செய்து முடிப்பதென்றால் மிகுந்த பொருட்செலவும் நேர விரயமும் ஆகும். இந்த சில்லறை வேலைகளைச் செய்வது ஒன்றும் பெரிய இந்திரஜால வேலை இல்லை. இருந்தாலும் நிறையப் பேர் இந்த வேலைகளுக்கு ஆட்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். அந்த வேலைகளும் நிரந்தரமாக பெண்டிங்க் ஆகவே இருக்கும்.

அத்தகைய வேலைகளின் சேம்பிள்கள் சில.

எலெக்ட்ரிக் ப்யூஸ் போடுதல்.

ட்யூப் லைட் மாற்றுதல்.

லீக்காகும் பைப்புக்கு வாஷர் மாற்றுதல்.

கதவு, ஜன்னல்களில் கழண்டு போன ஸ்க்ரூவை மாட்டுதல்.

இப்படியான பல சில்லறை வேலைகளை அவ்வப்போது செய்து விட்டால் வீட்டு வேலைகள் சுலபமாக நடக்கும். இதற்கு வீட்டில் சில பொதுவான கருவிகள் வேண்டும். தவிர நம் வாழ்வில் பல காகிதங்களைப் பேண வேண்டியிருக்கிறது. இதற்கும் சில சாதனங்கள் தேவைப்படுகின்றன.

நான் வீட்டில் வைத்திருப்பவை:

1. ஸ்குரூ டிரைவர் - பல சைஸ்களில்.

2. கட்டிங்க் பிளையர்.

3. கரன்ட் டெஸ்டர்

4. ப்யூஸ் வயர் - 5 ஆம்ப்ஸ்

5. ஸ்பேனர்கள் - சைஸ் 5 முதல் 22 வரை

6. பைப் ரெஞ்ச்

7. எலெக்ட்ரிக் வயர்கள்

8. சுத்தி - பெரியது 1, சிறியது 1

9. ஸ்டேப்ளர் + பின்கள்

10. செல்லோ டேப் + டிஸ்பென்சர்

11. கோந்து

12. டபுள் பஞ்சிங்க் மிஷின்

13. இங்க் பேனா + இங்க்

14. பால் பாயின்ட் பேனாக்கள் - 25

15. மெக்கானிகல் + ஆர்டினரி பென்சில்கள்

16. அழி ரப்பர்

17 ரப்பர் பேண்டுகள்

18. குண்டூசி

19. ஜெம் கிளிப்புகள்

20. துண்டு காகிதங்கள் (பேட்)

21. பைண்டிங்க் நூல் + ஊசிகள்

22. கத்தரிக்கோல்

23. கத்திகள்

24. பைல்கள்

இது தவிர சில ஐட்டங்கள் நீங்கள் சாதாரணமாக கேள்விப்படாதவை.

1. பஞ்ச் ஹோல் கார்டு - பேப்பர்களை பஞ்ச் செய்து பைலில் போட்டால் கொஞ்ச நாளில் அந்த ஹோல் கிழிந்து விடும். இவ்வாறு ஏற்படுவதைத் தடுக்க ஹோல் கார்டு கடைகளில் கிடைக்கிறது. இது ஒரு சிறிய பிளாஸ்டிக் வாஷர். இதை அந்த ஹோல்களில் ஒட்டி விட்டால் அப்புறம் அந்த பேப்பர் கிழியாது.

2. மெக்கானிகல் பென்சில் ஷார்ப்பனர். அமெரிக்கா போன அன்பர்கள் பார்த்திருப்பார்கள். பென்சில் விளம்பரங்களில் வரும் பென்சில்கள் எப்படி அவ்வளவு கூராக சீவப்பட்டிருக்கிறது தெரியுமா? இந்த மாதிரி ஷார்ப்பனர்களால்தான். பென்சில் வைத்திருந்தால் அதன் முனை கூராக இருக்கவேண்டும்.

இவை எல்லாம் இல்லாவிட்டால் காலம் ஓடாதா என்று கேட்பவர்களுக்கு - எப்படியும் வாழலாம், ஆனால் இப்படித்தான் வாழ்வேன் என்பது ஒரு சில பைத்தியக்காரர்களின் ஆசை.

20 கருத்துகள்:

  1. வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை ஒரு தொகுப்பாக சொல்லி விட்டீர்கள். இவ்வளவும் இருந்தாலும் அந்தந்த வேலைகளை செய்ய சோம்பேறித்தனம் உள்ள நண்பர்களும் உள்ளார்கள். எனக்கு தெரிந்து அடிக்கடி செல்லும் ஒரு உறவினர் வீட்டில், நின்று போன சுவர் கடிகாரத்திற்கு "பேட்டரி செல் போட ஆள் வரணும்" என்று சொல்பவர்கள் கூட உண்டு சார் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சில சமயம் யோசிப்பதுண்டு. ராஷ்ட்ரபதி பவனுக்குப் போனபோது அங்கு எல்லா இடத்திலும், டாய்லெட் உட்பட, செக்யூரிடி காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது நினைத்தேன், ஜனாதிபதி டாய்லட் போய்விட்டு வரும்போது அவரே தன்னைச் சுத்தம் செய்து கொள்வாரா இல்லை செக்யூரிடி ஆட்கள் சுத்தம் செய்து விடுவார்களா? இந்த சந்தேகம் என்னை இன்னும் ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இதற்கு எப்படி விடை கண்டு பிடிப்பது என்று சொன்னீர்களானால் உங்களுக்கு புண்ணியமாப்போகும்!!!!!!!!!

      நீக்கு
  2. பையனோட குட்டி சைக்கிள்ள செய்யின் மாட்டிக்கிச்சி. அதை எடுக்க ஸ்பானர் வேணும். வீட்டில அதையெல்லாம் வாங்கி வைக்கனுமுன்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கிறப்பவே, உங்க பதிவு வருது. நல்ல உபயோகமான பதிவு. இந்த லிஸ்ட் அவசியமான ஒன்னும் கூட.......!

    பதிலளிநீக்கு
  3. நம்மூட்டுலே ஒரு டூல் பாக்ஸ் இருக்கு. இங்கெல்லாம் DIY தான் என்பதால் அநேகமா எல்லா வீடுகளிலும் இருக்குதான்.

    இந்தியவாசத்தில் இதுவும் எங்களோடு பயணமாச்சு. அங்கே என்னன்னா.... நம்மூட்டுக்கு ரிப்பேர் பார்க்க வரும் ப்ளம்பர், எலக்ட்ரீஷியன் எல்லாம் வெறுங்கையை வீசிக்கிட்டு வர்றாங்க:( அது என்ன பழக்கமோ!

    கோபாலின் டூல் பாக்ஸ்க்கு செம கிராக்கியால்லே போச்சு:-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்கு ஊர் பழக்க வழக்கங்கள் வித்தியாசப் படுகின்றன. ஆனாலும் இந்தியாவில் நம் ராஜா காலத்து கலாசாரத்தைக் கட்டிக்காப்போமுல்ல. பார்க்க முதல் கமென்ட்டுக்கு நான் சொல்லிய பதிலை.

      நீக்கு
  4. எல்லாரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டிய பொருட்களின் லிஸ்ட்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இங்கு ஒருவர் துளசி சொன்னது சரி; எல்லாப் பயலும் தமிழ் நாட்டுல கையை வீசிக்கிட்டு தான் வருவானுங்க! வந்து சார், உங்க கிட்ட பைப் ரெண்ச் இருக்கன்னு ஒருத்தன் கேட்டான்; அதுக்கு, அது இருந்தா நான் ஏன் உன்னை கூட்பிடறேன்; நானே குழாயை சரி செய்து விடுவேனே! அவன் கெட்ட கூலிக்கு, நான் ஒரு பைப் ரெண்ச் வாங்கி குழாயை சரி செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு அய்யா. கூடவே பல்புகள் சிலதும் வைத்துக் கொள்ளலாம். மேலும் சிறிய அளவு காரை வேலைகளையும் நாமே செய்து கொள்ளலாம். மிக்ஸிங் ரேஷியோ சரியாக இருந்தால் ஒரு பெரிய வேலை இல்லை. இதிப் போலவே பெயின்டிங்கும். அவர்களுக்கு இரண்டு நாள் என்றால் நமக்கு நாலு நாளானாலும் பரவாயில்லை. எதிர் காலத்தில் இது போன்ற வேலைகளுக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமமாகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்புகள் இல்லாமலா? லிஸ்ட்டை நீட்டினால் படிப்பவர்களுக்கு போர் அடிக்குமே என்று சுருக்கினேன்.

      நீக்கு
  7. ஒன்றை மறந்து விட்டீர்களே, ஸார்!
    நமக்கு ஒரு ’டூல் பாக்ஸ்’ வேண்டாமா? அதான் ’ஃபர்ஸ்ட் எய்ட்’ பாக்ஸ்!
    நாலு க்ரோஸின்,ஒரு விக்ஸ் டப்பா, ஐந்தாறு டைஜீன், டையோவால், நாலு அனாஸின்..கொஞ்சம் காட்டன்,அமிர்தாஞ்சனம்,விக்ஸ்,வாலினி....etc..etc...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆராரார், அது இல்லாமலா? மருந்து பாக்ஸ், டூர் போகும்போது காப்பி போட டம்ளர் ஹீட்டர், இத்தியாதிகள் நிறைய இருக்கு. பூட்டுகளே இரு அரை டஜன் இருக்கு. எல்லாத்தையும் லிஸ்ட் போட்டா பத்து பக்கம் வந்துடுமேன்னு சுருக்கமா கொடுத்தேன். ஸ்பேர் கண்ணாடிகளே நாலு இருக்கு. பொதுவாகவே என் குணம் எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்பேர் வைத்துக் கொள்வது. அதே மாதிரி உபயோகமில்லாதவைகளை அவ்வப்போது டிஸ்போஸ் பண்ணிவிடுவது.

      இதுக்காக நான் வாங்கும் அர்ச்சனைகளை தனிப்பதிவாகப் போடவேண்டும்.

      நீக்கு
  8. இப்படித்தான் வாழ்வேன் என்று திட்டமிட்ட வாழ்வு வியக்கவைக்கிறது,, பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. ஐயா நீங்கள் ஒரு பல்கலை கலைஞன்....:)

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சொல்வது மிக உண்மை. நிறைய பேருக்கு சின்னச்சின்ன வேலைகள்கூடத் தெரிவதில்லை.

    முன்பு இதுபோன்ற ஒன்றிரண்டு சில்லரை வேலைகளை நானே செய்வதுண்டு. இப்போ ஒருத்தரை அதுக்குன்னே கூட வச்சிருப்பதால், சோம்பல் வந்துவிட்டது. :-)))))


    //இதுக்காக நான் வாங்கும் அர்ச்சனைகளை தனிப்பதிவாகப் போடவேண்டும்//

    ஹி.. ஹி.. இங்கேயும் அதே கதைதான்!! எல்லாத்தையும் ஒழுங்கா அடுக்கி வச்சிருந்தா அர்ச்சனை, ஆலாபனையெல்லாம் ஏன் நடக்கப்போவுது? ஒழுகும் பைப்பைக் கழட்டி
    போட்டுவிட்டு ‘அந்த நாலாம் நம்பர் ஸ்பேனரை இங்கேதானே வச்சிருந்தேன், நீ பாத்தியா?’ன்னு கேட்டா, அர்ச்சனை என்ன, கச்சேரியே செய்யத்தோணும்!!

    ஏதோ ரிப்பேர் வேலைகளை ஒழுங்காச் செய்றதால, அர்ச்சனையோடு நிறுத்திக் கொள்கிறோம்!! :-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்ச்சனைகளைப் பெற்றுக்கொளவது ஆனந்தமாக இருப்பதால்தான் இவ்வளவு தைரியமாக எழுதுகிறோம்.

      நீக்கு
  11. பல வேலைகளை தன்னால் பார்க்க முடியும் என்பவர்க்கு மட்டுமே இத்தனையும் .பேனாக்கள் எதற்க்காக இத்தனை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேனாக்களை எங்க பார்த்தீங்க? வேற எந்தப் பதிவிலயோ என்னுடைய டெஸ்க் போட்டோ போட்டிருந்தேன், அதப்புடிச்சிட்டீங்க. ஒரு சீக்ரெட் சொல்றேன். யாருகிட்டயும் சொல்லிடாதீங்க.
      எல்லாம் காய்ஞ்சு போன பேனாக்கள். ஒண்ணும் எழுதாது. சும்மா ஸ்டைலுக்கு வச்சிருக்கேன்.

      "அறுக்க மாட்டாதவன் இடுப்பில ஆயிரத்தெட்டு அறுவாளாம்" அப்படீன்னு பழமொழி கேட்டிருப்பீங்க. அதேதான்.

      நீக்கு