திங்கள், 3 டிசம்பர், 2012

எனக்கு கிடைத்த பட்டம்

http://www.nambalki.com/2012/11/1_27.html

மேலே கொடுத்துள்ள பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.
mubarak kuwait said...
பொதுவாக வெளிநாட்டில் வேலை பார்பவர்களை பார்த்து உள்ளூரில் இருப்பவர்கள் கேட்பதுதான், அதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை, இதை ஒரு சாதரணமானவர்கள் சொன்னால் விட்டு விடலாம், படித்த சிந்தனையாளர் திரு பழனி கந்தசாமி சொல்வது நகைப்பிற்குரியது மேலும் அவரின் பொறாமையை காட்டுகிறது, இந்திய மக்கள் வரிபனத்தில் படித்த உள்ளூர் டாக்டர்கள் எல்லாம் முழு சேவை நோக்கத்தோடுதான் வைத்தியம் செய்கிறார்களா? அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்பதற்கும் இவர்கள் தனியாக கிளினிக் நடத்தும் இடங்களும் வேறுபாடுகள் இல்லையா? மக்கள் வரிபனத்தில் படித்து விட்டு மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்கி கொண்டு முறையாக வைத்தியம் பார்காதவர்களை விட, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மேல், நாம் வெளிநாட்டில் இருந்தாலும் நம் வருமானத்தை நம் தாய் நாட்டிர்க்குதானே அனுப்பிகிறோம், நம் நாட்டிற்கு எவ்வளவு அந்நிய செலவாணியை கொடுக்கிறோம்.
அப்புறம் டாக்டர் அண்ணே. பப்பாளி இலை டெங்கு நோயை குனபடுதுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

22 கருத்துகள்:

  1. உங்கள் தகுதிக்கு இந்தப் பதிவு அவசியமா என்று சிலர் கேட்கலாம். அவசியமில்லைதான். இருந்தாலும் ஒரு நிந்தனைக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் அந்த நிந்தனையை ஏற்றுக்கொண்டதாகத்தான் பொருள். நான் அப்படி இருக்கமாட்டேன்.

    சாக்கடையில் கல் எறிந்தால் என்ன நடக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

    அடிபட்ட நாய் ஊளையிடும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் நான் அடித்த அடி அதன் மர்ம ஸ்தானத்தில் அடித்த அடி. வலி பொறுக்க முடியாது. அதனால் அது ஊளையிட்டே தீரும்.

    பதிலளிநீக்கு
  2. இன்னமுமா அந்தப் பிரச்சனை முடியவில்லை.....
    முதலிருந்து பிரச்சனையினை ஆராய ஆசையாக இருக்கிறது லிங்குகளில் சென்று பார்க்கிறேன்...

    அந்த பொறாமைப்படும் விஷயம் உண்மையிலே பொறாமைப்பட வேண்டியது தான் :))))

    பதிலளிநீக்கு
  3. தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில், மறப்போம்! மன்னிப்போம்!! என்று இதை இப்படியே விட்டுவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணமில்லாத நிந்தனையை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. மறுப்பு தெரிவிக்காவிட்டால் அந்த நிந்தனையை நானும் ஒப்புக்கொண்டதாக அல்லவா ஆகும்?

      நீக்கு
  4. Dear Sir

    Ultimately our peace is more important than anything else. If you feel, this type of action gives you, feel good about yourself go for it. If you fight with roaches, even you win the feeling may not be good. People watching you may find difficulties to differentiate you and roaches. Take care. Enjoy life. Be happy. What you think about yourself matters more.

    பதிலளிநீக்கு
  5. Just ignore those things.
    If you feel that he has hurt you by his comments.........jut ignore it.
    You can not be / should not be disturbed if you stronger inner.
    Don't do such closing your blog. You are possessing a lot of good followers.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் பின்னுட்டம் அளித்தற்க்கு அவர் கேள்வி கேட்டு விட்டார் ,நீங்களும் திருப்பி கேட்டு விட்டீர்கள் ,அது இருவரையும் காயப்படுத்தி விட்டது .என் மனதில் பட்டதை சொல்லுகிறேன் நல்ல கருத்துக்காக விவாதம் செய்யலாம் ! அவரவர் வலைத்தளத்தில் தம் கருத்தை எழுதி கொண்டு போகலாம் முடிவுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது .நல்ல உங்கள் நடையை தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
  7. பிரபல பதிவர் நீங்கள். இப்படியும் நிகழலாம்.

    ஏன் மூடுவிழா?
    ஏன் திறப்புவிழா?

    பதிலளிநீக்கு
  8. தூற்றுவார் தூற்றற்றும்
    போற்றுவார் போற்றட்டும்
    தொடருங்கள் ஐயா உங்கள் உயர்வான சிந்தனைகளை.
    வாழ்க வளர்க!
    சி சிற்சபேசன்
    நியூசிலாந்து

    பதிலளிநீக்கு
  9. முற்றிலுமாகப் புறக்கணியுங்கள் இது மாதிரி விஷயங்களை! நான் இப்போதுதான் சுவாரஸ்யமாக உங்கள் எழுத்துகளைப் படித்து வருகிறேன். நிறுத்த வேண்டாம். முகம் பார்க்கா நட்புகளில் மனம் புண்படாமல் எழுதுவதும் பகிர்வதும் அவசியமான ஒன்று. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. >எனக்கு "சிந்தனையாளர்" என்ற பட்டத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தியா எப்போது வருவார் என்று தெரிந்தால் என்னுடைய நன்றியை ஒரு விழா எடுத்து தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன்.

    தவிர என்னை ஒரு நகைச்சுவையாளர் என்று வேறு கூறியிருக்கிறார். இம்மாதிரி விருதுகள் வாங்க நான் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.


    ---

    ஐயா எனக்கு இவ்வளவு நாளும் இப்படி ஒரு ஆசை வந்ததில்லை. இப்ப வந்திட்டுது. எனக்கும் இப்படிப் பட்டங்கள்/விருதுகள் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  11. ஐயா, யார் எது பேசினாலும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம், இதோ எங்களிடம் பகிர்ந்துவிடீர்கள் இனி உங்களுடைய மனப்பாரம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். நிம்மதியாக இருக்கவும்.

    பதிலளிநீக்கு

  12. ஐயா, இன்னுமா இந்த பிரச்சனை முடியல..
    எதுவா இருந்தாலும் டிசம்பர் 21க்கு முன்னாடி பேசி முடிச்சுக்குங்க...
    :-)

    பதிலளிநீக்கு
  13. Hello Sir,
    Though I do not comment much on your blog, your are one of my favorite writer.
    Please continue writing.
    Narmi

    பதிலளிநீக்கு
  14. என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இருந்தாலும் தங்களின் வழக்கமான பதிவுகளை தொடருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  15. This is so typical for peole like you. Have some maturity to take things in right sense.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகமூடி அணிந்து வலம் வரும் பேடி, நீ எனக்கு அறிவுரை வழங்குகிறாய்?

      நீக்கு