வெள்ளி, 3 ஜூலை, 2015

இவரைத் தெரிகிறதா?


இது ஒரு மடத்தனமான கேள்வி என்று சின்னப்பிள்ளை கூடச் சொல்லும். இன்றைய தேதியில் இவரைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவரை சந்தித்து அளவளாவி என் வீட்டிற்குக் கூட்டி வந்து, பிறகு ஒரு கோவிலுக்குப் போய் வந்தேன் என்றால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன் என் ஒரு பதிவில் இவர் இட்ட பின்னூட்டத்தில், தான் ஜூன் மாத இறுதியில் கோவைக்கு வரவிருப்பதாக ஒரு குறிப்பு காட்டியிருந்தார். நான் அப்படி நீங்கள் கோவை வரும்போது எனக்கு தவறாமல் தகவல் கொடுக்கவேண்டும். நாம் இருவரும் சந்திக்கலாம் என்று கூறியிருந்தேன்.

அதன்படி அவருடைய அண்ணன் மகள் கல்யாணம் 26-6-2015ல் கோவையில் ஒரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. அதற்கு அவசியம் வாருங்கள் என்று செய்தி அனுப்பியிருந்தார். அதன்படியே அந்த மண்டபத்தில் சென்று சந்தித்தேன்.

ஒரிரு நாளில் உங்களை, உங்கள் சௌகரியத்தை அனுசரித்து மருதமலை அழைத்துச் செல்கிறேன், முதலில் ஊட்டி போய்வரலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அங்கு இப்போது மழைக் காலமாதலால் அங்கு போய் அந்த ஊரை ரசிக்க முடியாது. ஆதலால் மருதமலைக்குப் போக முடிவு செய்தேன். அப்படியே 30-6-2015 அன்று அவரை, அவருடைய அண்ணார் வீட்டில் போய் அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து ஒரு காப்பி குடித்து விட்டு மருதமலை போய் வந்தோம்.


பின்பு அன்னபூர்ணாவில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அவரை அவருடைய அண்ணார் வீட்டில் விட்டு விட்டு வந்தேன். அவருடைய மகளும் மகனும் கோவையில் அவருடைய அண்ணார் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கில்லர்ஜி கோவைக்காரர்தான்.

20 கருத்துகள்:

  1. கில்லர்ஜியை பதிவர் சந்திப்பில் சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு இனியவர்

    பதிலளிநீக்கு
  2. நேற்று அவரிடம் உங்களை சந்தித்த போது புகைப்படம் எதுவும் எடுக்கவில்லையா...? என்று பேசினேன்... இதோ இன்று பதிவு... வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. கில்லர் ஜி உங்க ஊர்க்காரராய் ஆக்கிக் கொள்ளுங்கள் ,எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை !
    இப்போ தெரிய வேண்டியது ,இரண்டு பேரும் சேர்ந்து செய்த சதி ஆலோசனை செய்த விபரம் தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சதி பண்ண முடியும்? துபாய் பாலைவனத்தை சைட் போட்டு விக்கலாமா என்று பிளான் போட்டோம். தெரிஞ்சா துபாய்க்காரன் தலையை வெட்டுவானாமே? நமக்கெதுக்கு வம்புன்னு விட்டுட்டோம். நீங்க வேணா முயற்சி பண்ணுங்களேன்?

      நீக்கு
    2. தமிழ் மணத்தில் முதலிடம் பிடிக்க நீங்கள் இருவரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்,கடந்த வருடம் (7.7.14) நான் தொட்ட இடத்தை பிடிக்க நானும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் .இன்னும் மூன்றே நாட்கள்தான் பாக்கி , உங்களுக்கு ஏதாவது ஐடியா வந்திருந்தால் எனக்கும் சொல்லுங்களேன் :)

      நீக்கு
    3. ஒரு புளியமரம் தேடிக்கொண்டு இருக்கிறேன. முதல் ரேங்க் கிடைக்காவிட்டால் அதில் போய் தூக்குப் போட்டுக் கொள்ளப் போகிறேன்.

      நீக்கு
    4. நமக்குள் என்ன ஒரு பொருத்தம் ,நான் எடுத்த முடிவையே நீங்களும் எடுத்து இருக்கிறீர்கள் .அதுக்காக நான் ஒரு முருங்கை மரத்தை செலக்ட் செய்தாகி விட்டது:)

      நீக்கு
    5. ஆனாலும் நீங்க கில்லாடிதான். முருங்கை மரத்தில் தொங்க ஆரம்பித்தவுடனே அந்தக் கிளை சடசடவென்று முறிந்து உயிருக்கு ஒரு சேதாரமும் ஏற்படாது.

      நீக்கு
  4. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களை, நான் மதுரை வலைப் பதிவர்கள் மாநாட்டில் சந்தித்ததுதான். உங்கள் இருவரது சந்திப்பு பற்றிய பதிவினைப் படித்ததும் மிக்க மகிழ்ச்சி உண்டானது. கில்லர்ஜி வெளிப்படையானவர்; ஏன் முன்புபோல் தன்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் எழுதுவதில்லை என்று கேட்டவர்.

    பதிலளிநீக்கு
  5. அடி சக்கை..!

    நல்ல சந்திப்புதான்.

    பதிவர்களை சந்திக்கும்போது சந்தோஷப்படும் உங்கள் மன நிலை எனக்குப் பிடித்திருக்கிறது.

    God Bless You

    பதிலளிநீக்கு
  6. இவரைத் தெரியாதவர் யாரு ஐயா! கில்லர்ஜி அவர்கள் உங்களைச் சந்தித்த விவரம் எல்லாம் அவர் ஃபோன் கார்ட் போட்ட வுடன் அழைத்துச் சொன்னார் ஐயா! நாங்களும் அவருடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்...நாங்கள் கேட்க நினைத்ததை பகவானே கேட்டுவிட்டார்....

    பதிலளிநீக்கு
  7. தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களும், நீங்களும் சந்தித்ததை ஒரு ‘மினி’ பதிவர் சந்திப்பு என எடுத்துக்கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  8. ஆஹா... கில்லர்ஜி அண்ணாவும் ஐயாவும் மருதமலை பயணம்...
    அருமை... அருமையான சந்திப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
  9. முதலில் கில்லர்ஜி கோயமுத்தூர்காரர் என்று ஒப்புக் கொள்வாரா. ? தேவகோட்டை கில்லர்ஜி என்றுதானே அறிமுகம். கில்லர்ஜியை மதுரையில் சந்தித்தேன். சுவாரசியமானவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயமுத்தூர்ல அவரோட அண்ணன் 30 வருடமா இருக்காரி. சொந்தமா வீடு வாங்கியிருக்காரு. அவரோட பொண்ணுக்கு இங்கதான் கல்யாணம் நடத்தினாரு. கில்லர்ஜியும் இங்க வீடு வாங்கியிருக்கார். அவரோட பெண்ணும் பையனும் இங்கதான் படிக்கறாங்க. அவர் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்காவிட்டாலும் அவரு கோயமுத்தூர்க்காரர் தானே?

      நீக்கு
  10. கோவக்காரராக இல்லாமல் கோவைக்காரராக இருப்பது மகிழ்ச்சி ஸார்! இனிய சந்திப்புகள்.

    பதிலளிநீக்கு
  11. மீசைக்கார நண்பருக்குப் பாசம் அதிகம்
    தற்சமயம் இந்தியாவிற்கு வந்த பிறகு இரு முறை அலைபேசி வாயிலாக பேசியுள்ளோம்
    புதுக்கோட்டையில் ஒரு சந்திப்பிற்கு த் தயாராகிவருகிறோம்
    மீசைக்கார நண்பதை நேரில் சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  12. இனிய சந்திப்பு பற்றி தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. இந்தியா வந்தபின் வலைப்பூ நண்பர்களுடன் பேசியுள்ளார். எங்களுடனும் பேசினார். நண்பர்களை அரவணைத்துச் செல்லும் அவரை அனைவரும் விரும்புவர்.கரந்தை ஜெயக்குமார் கூறியது போல அவரைச் சந்திக்கும் நாளை எதிர்நோக்குகிறோம் புதுக்கோட்டையிலோ, தஞ்சையிலோ.
    புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    பதிலளிநீக்கு