செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கூகுள் பிளாக்கர் அலம்பல்கள்?


கூகுள்காரன் URL மாற்றம் கொண்டு வந்தாலும் வந்தான் அடித்தது பதிவர்களுக்கு யோகம். எதைப் பற்றி எழுதுவது என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாகப் போய்விட்டது.

சும்மா அதைப் பற்றி எழுதினாலும் பரவாயில்லை, உங்கள் பிளாக்கில் தமிழ்மணம் தெரியவில்லையா, இப்படிப் பண்ணுங்கள், வேற திரட்டி தெரியலயா.அப்படிப் பண்ணுங்கள் என்று தொழில்நுட்ப பதிவர்கள் பண்ணும் அலம்பல்கள் இருக்கே, அதுதான் மனிதனைப் பாடாய்ப் படுத்துகின்றன.

இதில் ஒரு அரை டஜன் மாற்றங்களை என் பதிவில் புகுத்திப் பார்த்து என் பிளாக் வீணாய்ப் போயிற்று. இதற்கு நானேதான் முழுக்காரணம். மற்றவர்களைக் குறை கூறக்கூடாது.

இதனால் எல்லோருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தால் கட்டாயம் நல்ல காலம் பிறக்கும் என்பதே.


20 கருத்துகள்:

  1. ஐயா தாங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் சில திறமையான பதிவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    http://www.bloggernanban.com/2012/02/blog-post.html இந்தப் பதிவர் தந்த நுட்பம் வேலை செய்கிறது.

    எனது வலையில் இந்த சிக்கல் முழுவதும் தீர்ந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.
      தமிழ்மணம் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்று அறிய ஆவலாய் இருக்கிறேன்.
      மற்றவைகளில் முதலிலிருந்தே ஏதும் பிரச்சினை இருக்கவில்லை.

      நீக்கு
    2. @பழனி.கந்தசாமி

      ஐயா! தமிழ்மணத்தில் சமர்ப்பிப்பது மட்டும் சரி செய்ய முடியவில்லை. ஒரு முறை சமர்ப்பித்துவிட்டால் எல்லா முகவரிகளிலும் ஓட்டுபட்டை வேலை செய்கிறது.

      மற்ற திரட்டியிலும் பிரச்சனை உள்ளது. நீங்கள் .in என்று முடியும் முகவரியை சமர்பிக்கலாம். ஆனால் மற்ற முகவரிகளில் உள்ளவர்களுக்கு புதிதாக சமர்ப்பிக்க சொல்லும்.

      நீக்கு
    3. தமிழ்மணம் திரட்டி வேலை செய்கிறது. நன்றி அப்துல் பசீத்.

      நீக்கு
  2. //இதனால் எல்லோருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தால் கட்டாயம் நல்ல காலம் பிறக்கும் என்பதே.//

    பொறுமை அவசியம் தேவை. வேண்டுமென்றால், அதுவரை பதிவுகளை வெளியிடாமல் வைத்திருக்கலாம். அல்லது திரட்டிகள் பற்றி கவலைக் கொள்ளக் கூடாது. அரைகுறை தொழிநுட்ப அறிவை வைத்துக் கொண்டு அடிக்கடி மாற்றும் வேலையில் ஈடுபட்டால் தேவையில்லா இழப்பு ஏற்படும்.

    ஒரு யோசனை.. நாமே இன்னொரு பிளாக்கை உருவாக்கி வைத்துக் கொண்டால், அதை இந்த மாதிரி சமயத்தில் சோதனைக்கு மட்டும் பயன்படுத்தலாம். எனக்கும் இந்த யோசனை இப்பொழுதான் வந்தது. நீங்களும் முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐடியா நல்லா இருக்குங்க. ஒரு சம்சாரத்தை வச்சு மேய்க்கறதே பெரும்பாடா இருக்கு. இன்னொண்ணுமா? என்னால முடியாதுங்க.

      நீக்கு
  3. இப்போது உங்களுடையதும் தமிழ்மணத்தில் வெளியாகிவிட்டதே!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நண்பரே. ஓட்டுப் போட முடிகிறதா என்று பார்த்துச்சொல்ல முடியுமா?

      நீக்கு
  4. பொறுமை காத்தல் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே! (ஆக பிளாக்கர் புணணியத்தில் உங்களுக்கும் ஒரு பதிவு தேறிவிட்டது???)

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்! நீங்கள் சொல்வது சரிதான். தலைவலிக்கு மருந்து சொல்வது போல ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. நானும் அப்படித்தான் செஞ்சிகிட்டு இருக்கேன்..

    பொறுமை கூகுலை விட பெரியது...

    பதிலளிநீக்கு
  7. //எதைப் பற்றி எழுதுவது என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாகப் போய்விட்டது.//

    ஹா..ஹா..ஹா.. உண்மைதான் ஐயா! நேற்று பதிவிடும் எண்ணமே இல்லை. யதார்த்தமாக அதன் தீர்வை பார்த்ததால் பதிவிட்டேன்.

    இந்த மாற்றத்தினால் தான் மூன்று பதிவுகள் தேறியது.

    :) :) :)

    பதிலளிநீக்கு
  8. முற்றிலும் உண்மை தான் ஐயா.இந்த மாற்றங்களால் தலைமுடியைப் பிய்த்துக்கொள்ள வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. ஐயா, வெர்சடைல் ப்ளாகர் என்னும் விருதினை உங்களுக்கு வழங்குவதில் பெருமைப் படுகிறேன். இது குறித்த விளக்கங்களை நாளை (8-2-2012ல்) மாலை என் பதிவில் எழுதுகிறேன். விருதினை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இந்த ப்லாக் பக்கம் வந்ததிலிருந்து என் தலயில் கணிசமாய் குறைந்து விட்டது!
    (வெளியில் தான்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதானுங்க. இத்தனைக்கும் இந்த பிளாக்குகளுக்கும் நம் நிஜ வாழ்க்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. உண்மையிலேயே இது ஒரு மாய உலகம்தான். இதைத்தான் பெரியவர்கள் மாயையில் சிக்குவது என்று கூறியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

      நீக்கு
  11. உண்மை.......... உங்கள் மன ஆதங்கத்தை அழகா சொல்லி இருக்கீங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு