வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

சுத்தம் சோறு போடுமா?



நாம் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போது கற்றுக் கொடுக்கப்பட்ட வாக்கியம் இது. சுத்தமாக இருக்கவேண்டும் என்பது நமது கலாசாரத்தில் ஒன்றிப்போன ஒரு குணம்.

தினமும் குளிக்கவேண்டும். சுத்தமான ஆடைகளை அணியவேண்டும். சாப்பிடும் முன்பும், பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். இத்தியாதிகள். கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ, இவைகளை நாம் அறிவோம்.

சமீபத்தில் ஒரு விசேஷத்திற்குப் போய் காலை டிபன் சாப்பிட்டேன். நான் இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடுவது என்றால் அரை வயிறு மட்டுமே சாப்பிடுவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டுவிட்டு வந்தேன். இதைத் தவிர வெளியில் வேறு ஒன்றும் சாப்பிடவில்லை. அன்றெல்லாம் ஒன்றும் தொந்திரவு இல்லை. மறு நாள் காலையிலிருந்தே நெஞ்சுப் பகுதியில் ஒரு மாதிரி இருந்தது. சரிதான், மிருத்யுவின் ஓலை வந்துவிட்டது போல் இருக்கிறது, பரவாயில்லை, அதனால் என்ன ? நாமதான் ரெடியாகத்தானே இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். மாலையில் இரண்டு தடவை லூஸ் மோஷன் போயிற்று. கை, கால்கள் எல்லாம் சோர்ந்து விட்டன.

மாலை 7 மணிக்கே படுத்துவிட்டேன். அப்படியே துங்கி விட்டேன். சுமார் 9 மணி வாக்கில் விழிப்பு வந்துவிட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னை அறியாமல் வயிற்றுப் போக்கு ஆகியிருக்கிறது. உடனடியாக எழுந்து பாத்ரூம் சென்று துணி மாற்றிவிட்டு அசுத்தமான துணிகளை அலசி, பாத்ரூமைக் கழுவி, என்னையும் கழுவி எல்லாம் முடிக்க அரை மணி நேரம் ஆயிற்று. மனைவியும் ஒத்தாசைக்கு வந்தாள். நான் நிஜமாகவே கொடுத்து வைத்தவன்.

வயதான காலத்தில் ஒருவனுக்கு இந்த நிலை வரக்கூடாது. வந்தால் அதை விடக் கேவலமான சூழ்நிலை ஒன்றும் இல்லை. ஏனென்றால் இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் நலம் விசாரிக்கும் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் தொடுக்கும் கண்டனக்கணைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு வந்திருக்கும் வியாதியை விட அந்தக் கண்டனங்கள்தான் அதிகம் வருத்தத்தைத் தரக்கூடியவை. “வயதான காலத்தில் கண்டதையும் தின்றுவிட்டு இப்படிப் பண்ணினால் யாரால் பார்த்துக் கொள்ள முடியும்?”
இதுதான் மிகவும் அன்பான கண்டனம். இந்த ரீதியில் சுருதி படிப்படியாக ஏறும். வேறு வழியில்லாமல் இந்தக் கண்டனங்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும்.

பிறகு என் டாக்டர் மகள் கொடுத்த மருந்துகளினால், வேறு தொந்திரவு இல்லாமல் நலமானேன். இதனால் நான் கற்ற படிப்பினை என்னவென்றால், இனிமேற்கொண்டு விசேஷங்களுக்குப் போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை, அவசியம் போகவேண்டுமானால், போய் தலையைக் காட்டிவிட்டு எதுவும் சாப்பிடாமல் வந்து விட வேண்டும். ஒன்றும் சாப்பிடாமல் வந்தால் உறவினர்களின் கண்டனம் இருக்கிறதே, அவை இன்னும் மோசம். அதைக் கேட்பதை விட போகாமல் இருப்பதே உத்தமம்.

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்என்று ஒரு சினிமாவில் ரங்காராவ் பாடியிருக்கிறார். அந்த உணவு தற்காலத்தில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பாருங்கள்.

எவ்வளவு பேர் கல்யாண மண்டப சமையல் அறையைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அடுத்த முறை போனால் அவசியம் சென்று பாருங்கள். பல உண்மைகள் புரியும். எனக்குப் பட்ட சில விஷயங்களை மட்டும் இங்கே எழுதுகிறேன்.

  1.   சமையலுக்கு எந்தக் காயையும் கழுவும் வழக்கம் இல்லை. காலிபிளவர், முள்ளங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலிய காய்களுக்கு எவ்வளவு பூச்சி மருந்துகள் அடிக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் அப்புறம் ஆயுளுக்கும் அந்தக் காய்களை சாப்பிடமாட்டீர்கள்.
  2.   மளிகை சாமான்களை அப்படியே பாத்திரங்களில் போடுவார்கள். குப்பை ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கும் வழக்கம் இல்லை.
  3.   மிளகாய்த்தூள், சாம்பார்ப் பொடி, மஞ்சட்பொடி, மல்லிப்பொடி இவைகள் கடைகளில் வாங்கப்பட்டு அப்படியே உபயோகிக்கப்படும்.
  4.   சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் தண்ணீருக்கு எந்த மரியாதையும் இல்லை.
  5.   அங்கு வேலை செய்யும் ஆள்காரர்களில் 90 சதம் பேர் குளிக்காமல், அழுக்கு ஆடைகளுடன் பீடி குடித்துக் கொண்டு இருப்பார்கள். பல சமயங்களில் பீடித்துண்டு காய்கறிகளில் இருக்கும்.
  6.   சாமான்கள் லிஸ்ட்டில் இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணை எழுதியிருப்பார்கள். அது இந்த ஆட்கள் தலைக்குத் தேய்ப்பதற்காகத்தான். அவர்கள் தலைக்கு எண்ணை அடுத்த கல்யாணத்தில்தான்.
  7.   மாஸ்டர் குக்குகளின் மேல் துண்டை அடுப்பில் போட்டாலும் எரியாமல் அப்படியே இருக்கும்.
  8.   இந்த ஆட்கள் பாத்ரூம் போய் விட்டு வந்து அப்படியே வேலை பார்ப்பார்கள்.
  9.   காயகறிகளை வெறும் தரையில் கொட்டித்தான் வெட்டுவார்கள்.
  10. சப்பாத்தி தேய்ப்பது கழுவாத டைனிங்க் டேபிளின் மேல்தான்.
  11. தோசை சுடும் இரும்புக்கல்லை கழுவும் வழக்கமே இல்லை.
  12. சுட்ட எண்ணை, சுடாத எண்ணை என்கிற வேறுபாடுகள் எல்லாம் சமையல்காரர்களுக்கு இல்லை.

இன்னும் பல கொடுமைகள் உள்ளன. விசேஷம் நடத்துபவர்கள் அஜினோ மோட்டோ போடக்கூடாது என்று சொன்னால் சமையல்காரர் அதை லிஸ்ட்டில் எழுதமாட்டார். ஆனால் தனியே வாங்கி வந்து சமையலில் சேர்ப்பார். ஜிலேபிக்கு குங்குமப்பூ வாங்கிக்கொடுத்தால் அதை திருடுபவர்கள்தான் அதிகம்.

இதையெல்லாம் பார்த்தும் விசேஷங்களில் சாப்பிட வேண்டுமானால் தனி மனோதைரியம் வேண்டும். அதைத் தவிர அந்த உணவை ஜீரணம் பண்ணக்கூடிய உடல்நிலையும் வேண்டும். எனக்கு இந்த இரண்டும் காலியாகி விட்டன.

இந்த தர்ம சங்கடத்திலிருந்து விடுபட சரியான வழிமுறைகளை யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் பதிவர்கள், தங்களுக்குத் தெரிந்த யோசனைகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


24 கருத்துகள்:

  1. நான் இன்னிக்கு விரதம்.. பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன். சாதாரணமா எங்கேயும் போகமாட்டேன், உங்க வீட்டு விசேஷம் அப்படின்றதாலே வந்தேன்னு ஒரு போடு போடுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்த மொத ஒரம்பறய உட்ருவமா? நல்லா கவனிப்போமில்ல ! மூஞ்சி, கை, கால் எல்லாம் கழுவிட்டு வாங்க, இலை போட்டு வச்சிருக்கு.

      நீக்கு
  2. Naan eppodhume veliyil engume saappiduvadhillai. Mukkiyamaaga kalyaana veettil saappidave maatten. Avasiyamaanaal 2 banana. That's all. Viratham adhu idhu endru edhaavadhu sollithaan samaalippadhu vazhakkam.

    பதிலளிநீக்கு
  3. சாப்டாச்சுன்னு சொல்லி எஸ்கேப் ஆகிருங்க...

    பதிலளிநீக்கு
  4. Sir

    I feel sorry for you.

    See the lighter side.

    When we were babies - no teeth,no hair(for some), cannot walk with two legs, we drool, we wet cloths etc.

    when we get old - the cycle repeats.

    Hope, He takes me before the full cycle.

    Take care.

    பதிலளிநீக்கு
  5. ஒரு கப் காபியோ அல்லது ஒரு கப் பாயாசத்துடன் வந்துவிடலாமே. " மெடிக்கல் ட்ரீட் மென்டில் இருக்கிறேன் கட்டாயபடுத்தாதீர்கள்" என்று சொல்லிவிடுங்கள்.

    //// 7. மாஸ்டர் குக்குகளின் மேல் துண்டை அடுப்பில் போட்டாலும் எரியாமல்அப்படியே இருக்கும்./////


    நல்ல ரசனைதான் போங்க......

    இந்த நக்கல் மட்டும் குறையாது சாமீ!

    பதிலளிநீக்கு
  6. இப்படியான குடும்ப வைபவ சமையல் அன்றல்ல ! உணவு விடுதிகளில் கூட சுத்தம் குறைவே!
    மேலை நாடுகள் உட்பட!!!
    உங்களை அழைத்த பகுதியில் மிகமுக்கியமானவர் காதில் 2 நாள் வயிற்றுப் பிரச்சனை ,முடிந்தால் காப்பி ஒன்று போதுமென ,வைபவம் முடிந்தவுடன் புறப்பட முற்படவும். அல்லது சாப்பாட்டு வேளைக்கு மண்டபத்துக்கு வெளியே வந்து விட்டு, பின் சாப்பிட்ட கூட்டத்துள் அமர்ந்து விடுங்கள்.
    அத்துடன் முடிந்தால் இந்தப் பட்டியலிட்ட அசுத்த விடயங்களை அச்சிட்டு சமையல் செய்பவருக்கு அனுப்பிவிடவும்.

    பதிலளிநீக்கு
  7. சார் வணக்கம் ,
    வயதாகிவிட்டால் கல்யாண சாப்பாடு சிலருக்கு ஒத்துக்காது .அதுக்காக எல்லா கல்யாண சமையல் நீங்க சொல்ற மாதிரி சமைப்பார்கள் என்று தோணவில்லை .கல்யாணவீட்டில் சமைக்கும்போது கல்யாண வீட்டுகாரங்க மேல்பார்வைக்கு கண்டிப்பா நிப்பாங்க .கல்யாணத்தில் முக்கிய செலவே சாப்பாட்டு செலவு தான் அதை ஒரு கல்யாண வீட்டுக்காரன் எவ்வளவு பார்த்து பார்த்து பண்ணுவாங்க என்பது தங்களுக்கு தெரியும் .விருந்தோம்பல் தான் நாம் கலாச்சாரம் .சார் .
    எங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்து தைரியமா சாப்பிடலாம் .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    பதிலளிநீக்கு
  8. சுத்தம் சோறு போடாமல் போகலாம். ஆனால் அசுத்தம் வியாதி தரும் , என்று அழகாக விளக்கியதற்கு நன்றி, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. //தினமும் குளிக்கவேண்டும். சுத்தமான ஆடைகளை அணியவேண்டும். சாப்பிடும் முன்பும், பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும்// இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் பொது இடத்தில் சிறு நீர், மல ஜலம் கழிப்பது. ஒரு ஆத்திர அவசத்துக்கு என்றால் கூட பரவாயில்லை. அரசாங்கம் செய்ய வேண்டிய முதல் வேலை ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதே. இந்தியாவை விட வறுமையில் வாடும் நாடுகளில் கூட சுத்தமும் சுகாதாரமும் இந்தியாவை விட 100 மடங்கு பேனப் படுகிறது. திறந்த சாக்கடைகள் நம் ஊரில் மட்டுமே உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டு தேசிய குணம் என்னவென்றால் நம் வீடு சுத்தமாக இருந்தால் போதும். பொது இடம் எப்படிப்போனால் எனக்கென்ன என்கிற மனப்பான்மைதான்.

      நீக்கு
  10. நேரே சாப்பிடும் இடத்திற்கு சென்று ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வெளியே போய் வாழைப்பழம் இருந்தால் ஒன்றை சாப்பிட்டு விட்டு பீடா இருந்தால் வாங்கிப்போட்டுக்கொண்டு அப்படியே வணக்கம் போட்டு விடைபெற்றுவிடுவேன்.:))

    ரொம்ப கட்டாயப்படுத்தினா கொஞ்சநேரம் கழித்துச் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்து சமாளித்துவிடுவேன். அப்புறம் நல்லவனுக்கு அடையாளம் சொல்லாம கிளம்புறது அதைச் செஞ்சுருவேன் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மனச்சாட்சி இருக்கிறதே, அதை ஒழித்தால்தான் எல்லாம் சரிப்படும்.

      நீக்கு
  11. கருத்திட்ட அனவருக்கும் நன்றி. நல்லது, கெட்டது இரண்டும் இணைந்ததுதான் வாழ்க்கை. அதை அதன் போக்கிலேயே அனுபவிப்போம்.

    பதிலளிநீக்கு
  12. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் மோசம்! கல்யாண சமையல் பற்றி எச்சரிக்கை செய்த பதிவு அருமை.
    தாங்கள் எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து பதிவிட்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  14. மிகவும் தர்மசங்கடமாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும், இது யாருக்கும் நேரக்கூடியதே, வயது வித்தியாசம் இன்றி.

    Mass cooking- அதாவது கல்யாண வீடு போன்ற மொத்த சமையல் நடைபெறும் இடங்களில் சுகாதாரம் பேணப்படுவது மிக மிகக் குறைவே.

    நீங்களாவது உள்ளூர்க்காரர், உடல்நலம், விரதம் என்று ஏதாவது காரணம் சொல்லித் தப்பித்து விடலாம். வெளியூர்க்காரர்களான நாங்கள் குறைந்த விடுமூறையில் ஊருக்கு வரும்போது, விடுமுறை நாட்களில் குழந்தைகள் மட்டுமாவது, இந்த மாதிரி கஷ்டப்படாமல் இருக்கட்டுமே என்று சில வீடுகளில், விசேஷங்களுக்குச் செல்லும்போது உணவு,பானங்களைத் தவிர்த்தால், உடனே “நீங்கல்லாம் ஃபாரின்காரங்க; இப்படித்தான் பந்தா காட்டுவீங்க” என்ற கமெண்டை ஒன்றிரண்டு பேரிடமாவது கேட்டே ஆகவேண்டி வருகீறது. ஆனால், பலரும் புரிந்துகொள்வதால் நிம்மதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதே. நானே அப்படி சொல்லியிருக்கிறேன். அந்த மாதிரி பாவங்களுக்குத்தான் இப்போது அனுபவிக்கிறேன்.

      நீக்கு
  15. பட்டால் தான் தெரியும்.படித்தால் மட்டும் வந்துமோ மனக் கட்டுப்பாடு. பிரசவ வைராக்கியம் என்பார்கள் .வயதாகிவிட்டால் நம்மால் முடிந்ததை முடியும்வரை அனுபவிக்க வேண்டும் என்ற நப்பாசை வருவது இயல்பு. அனுபவியுங்கள்.
    ஒரு தகப்பனும் மகனும் விருந்துக்கு செல்ல மகன் சொன்னான் 'அப்பா நான் இளம் வயது உடலைத் தேர்த்திக் கொள்ள சாப்பிட வேண்டும் நீங்கள் சாப்பிட்டு அனுபவித்து விட்டீர்களே எனக்கு சாப்பிட விட்டுக் கொடுங்கள்' என்று சொல்ல அதற்கு தகப்பன் சொன்னாராம் ' மகனே நீ நீண்ட நாள் வாழ்வை மற்றும் எனக்கு வயதாகிவிட்டது அதனால் நான் சாப்பிட நீ விட்டுக் கொடு என்றாராம்' . இது எப்படி இருக்கு!

    பதிலளிநீக்கு