வியாழன், 29 மார்ச், 2012

அக்கிரமம், அநியாயம்!


இன்றைய செய்தித்தாள்களில் நமது இந்தய ராணுவ முதன்மை தளபதி வி.கே.சிங் பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதம் பத்திரிக்கைகளுக்கு கசிந்து வெளியாகி உள்ளது. கடிதத்தின் சாராம்சம், இந்திய ராணுவத்திலிருக்கும் குறைபாடுகள்.

முதலில் இந்தக் கடிதம் எப்படி கசிந்தது? தலைமை ராணுவ அதிகாரி ராணுவ ரகசியங்களை காப்பாற்றுவது இந்த லட்சணத்தில்தானா?

இரண்டாவது. இந்த ஆள்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி. இந்த ஆளை நம்பித்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஆளின் வேலையே ராணுவத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது. இந்த ஆளே ராணுவத்தின் நடைமுறைகள் சரியில்லை என்று சொன்னால் எனக்கு முதலில் தோன்றும் கேள்வி என்னவென்றால், இந்த ஆள் இத்தனை நாள் சம்பளம் வாங்கிக்கொண்டு என்ன பிடுங்கிக்கொண்டு இருந்தான்? என்பதுதான்.

அடுத்த கேள்வி. இவனை கண்காணிக்கும் மந்திரி என்ன ***** கொண்டு இருந்தார்?

9 கருத்துகள்:

  1. இதையெல்லாம் விட கொடுமை அந்த அமைச்சர் சொல்வது தான்! "அவர் இந்த ஊழலை ஏற்கனவே என்னிடம் சொன்னார். ஆனால் எழுத்து பூர்வமாக சொல்லவில்லை. அதனால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்கிறார்! புகார் எழுத்து பூர்வமாக வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வதற்கு அமைச்சர் எதற்கு? அந்த பதவியில் ஒரு குமாஸ்தாவை வைக்கலாமே! செலவாவது குறையும்!

    பதிலளிநீக்கு
  2. \\\அடுத்த கேள்வி. இவனை கண்காணிக்கும் மந்திரி என்ன ***** கொண்டு இருந்தார்?\\\ லேப்டாப்பில் படம்? பார்த்துக்கொண்டிருந்திருப்பார்....

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா...
    உறைக்கும் படி கேள்வி கேட்டிருந்தீங்க.

    பொதுவாகவே தமது கடமையைச் சரிவரச் செய்யத் தெரியாதோர் தான் இறுதியில் இப்படி பல்டி அடிக்கும் மொழி பேசுவார்கள். அதற்கு உதாரணமாக இந்த இராணுவ அதிகாரியும் உள்ளார்.

    பதிலளிநீக்கு
  4. அடப் பாவிப்பயல்.......... ஒருவேல கவட்டுக்குள்ள கையவச்சிக்கொண்டு படுத்திருப்பாரோ...

    பதிலளிநீக்கு
  5. சார் ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் அடி மடியிலேயே கை வைக்க ஆரம்பிச்சுட்டானுங்க... இது எங்கே போயி முடியுமோ?

    பதிலளிநீக்கு
  6. ஓய்வு பெறும் முன் எல்லா இராணுவ தளபதிகளும் இராணுவத்தில் இன்ன இன்ன குறைகள் உள்ளன. அதை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கடுதாசி கொடுப்பது வழக்கம். கசிவு புதுசு. இராணுவ தளபதிகளின் பதவி காலம் குறைவு. சில பேர் சில மாதங்கள் தான் இருக்காங்க. மந்திரி வேணா பல ஆண்டுகளாக ஒரே துறையில் இருக்க முடியும். இராணுவத்தில் நடக்கும் தில்லுமுல்லு நமக்கு தெரிவதில்லை அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதவிக்காலம் குறைவாக இருக்கலாம். இவர் எவ்வளவு காலம் பதவியில் இருந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு குறைந்த காலம் இருந்திருந்தாலும் ராணுவத்தின் நிலையை விவரித்து, என்னென்ன மாறுதல்கள் தேவை என்று ஒரு அறிக்கை தயார் செய்து மந்திரியிடம் கொடுத்திருந்தால் பிறகு மந்திரிகள் பார்த்துக்கொள்ளுகிறார்கள். அதை விடுத்து கடைசி காலத்தில் ஒரு லெட்டர் எழுதி, அதை கசிய விடுவது பதவித் துரோகம்.

      இவருக்கு பிறந்த தேதியை மாற்றி இன்னும் ஒரு வருடம் பதவியில் வைத்திருந்தால் இந்த லெட்டரை எழுதியிருப்பாரா?

      நீக்கு
  7. இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடித்து இருந்தாலும் ஓய்வு பெறும் போது இராணுவத்தில் இன்ன இன்ன குறைகள் உள்ளன. அதை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கடுதாசி கொடுத்து இருப்பார். ஓய்வு பெறும் எல்லா இராணுவ தளபதிகளும் கொடுப்பது வழக்கம். இது ஒரு எச்சரிக்கை மாதிரி. இராணுவத்துக்கு பணம் செலவு பண்றத குறைக்காதிங்க என்பதும் இதில் உள்ள ஒரு கருத்து. கடுதாசியை கசிய விட்டவர்கள் அமைச்சரவையின் அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக கூட இருக்கலாம் இல்லையா? இராணுவ தளபதிக்கும் அரசுக்கும் பிரச்சனை இருப்பதால் அவரை குற்றம் சொல்லுவது ஏற்கமுடியாதது.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு