செவ்வாய், 16 அக்டோபர், 2012

என் கேள்விக்கு என்ன பதில்?


அன்புள்ள நண்பர்களே,

நமது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இரண்டு சாதாரண சம்பவங்களை இங்கே நான் விவரிக்கிறேன்.  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவைகளுக்கு என்ன முடிவு எடுப்பீர்கள் என்று யோசியுங்கள். (உங்களுக்கு வயது 70 ஐத் தாண்டி விட்டது என்று வைத்துக்கொள்வோம்.)

சம்பவம் ஒன்று:

நீங்கள் உங்கள் ஊரிலிருந்து டில்லிக்குப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நண்பர் டில்லியிலிருக்கும் தன் மகளுக்கு ஒரு விலை உயர்ந்த நகை ஒன்றைக் கொடுத்தனுப்புகிறார். அவருடைய மகள் நீங்கள் வரும் ரயில் அல்லது விமானத்திற்கே வந்து அந்த நகையை வாங்கிக்கொள்வாள், உங்களுக்கு சிரமம் வைக்கமாட்டாள் என்று உங்கள் நண்பர் உறுதி கூறுகிறார்.

பிரயாணத்தின்போது அந்த நகை வைத்திருந்த பெட்டி காணாமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நிலை என்ன?

சம்பவம் இரண்டு:

நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வந்து உங்களை அவர் வேலையாக ஒரு ஊருக்குப் போவதற்கு உங்களைத் துணைக்கு அழைக்கிறார். நீங்களும் சரியென்று போகிறீர்கள். போகும்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி உங்களுக்கு பலமான அடி பட்டு விடுகின்றது. உங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். உங்களை யார் கவனிப்பார்கள்? கண்டிப்பாக உங்கள் குடும்பத்தார்கள்தான். இந்த நிலையில் அவர்கள் என்ன சொல்வார்கள்?

தவிர, உங்கள் வைத்தியச்செலவு சில லட்சங்கள் ஆகிறது. இதை யார் கொடுப்பார்கள்?

இந்தக்கேள்விகளுக்கு எனக்கு விடை சொல்லத் தெரியவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? நன்றாக யோசியுங்கள்.

34 கருத்துகள்:

 1. கனகாலம் வெளிநாட்டில் இருப்பதால் என் சிந்தனைகள் மாறிவிட்டனவா தெரியவில்லை.

  (1 ) நகைப்பெட்டியை நீங்கள் சொந்தக் காசில் திருப்பி வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. நண்பருக்கு விபரியுங்கள். அவர் நம்பாவிட்டால் அவர் 'நண்பர்' என்ற சொல்லுக்கு அருகதையற்றவர்.

  (௨) நிச்சயமாகச் செலவு அவர்தான் விடவேண்டும்.
  >உங்களை யார் கவனிப்பார்கள்?
  உங்கள் குடும்பத்தார் கவனித்தாலும், அவர்களும் கவனிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி சக்திவேல். ஆனால் தமிழ்நாட்டின் நடைமுறையில் முதல் கேசில் கனத்த பகை வந்துவிடும். இரண்டாவது கேசில் அவரவர் குடும்பம்தான் செலவு செய்ய நேரிடும்.

   ஆகக்கூடி நீங்கள் சிலோனிலிருந்து சென்று சிட்னியில் வசிக்கிறீர்கள் என்று தெரிகிறது. எனக்கு சிலோன் தமிழில் கதைக்க கன விருப்பம் உண்டு.

   நீக்கு
  2. >ஆகக்கூடி நீங்கள் சிலோனிலிருந்து சென்று சிட்னியில் வசிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

   ஓம் ஐயா.

   ஓம் = ஆம் அன்று அறிவீர்கள்.

   சிலோன் தமிழிற்கும் திருநெல்வேலி , கோயம்புத்தூர் தமிழிற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. (பல வேற்றுமைகளும் உண்டு என்பது வேறு விடயம்) ;


   >>ஆனால் தமிழ்நாட்டின் நடைமுறையில் முதல் கேசில் கனத்த பகை வந்துவிடும்.இரண்டாவது கேசில் அவரவர் குடும்பம்தான் செலவு செய்ய நேரிடும்.

   யாழ்ப்பாணத்திலும் அல்லது முழு சிலோனிலும் இதேமாதிரித்தான்,
   யாழ்ப்பாணத்திலும் அல்லது முழு சிலோனிலும் இதேமாதிரித்தான்,

   நீக்கு
  3. நகை தொலைத்ததை மட்டும் நண்பர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அடிபட்ட சிகிச்சை செலவை நாம் தானே ஏற்கவேண்டும் சக்திவேல்? நகை தொலைந்தது நம் தவறு அல்ல எனில் விபத்தும் நண்பர் தவறல்லவே?

   நீக்கு
 2. எனக்குத் தோன்றுவது!.....

  காணாமல் போகும் நகைக்கு நாமும் பொறுப்பு ஏற்பதுதான் முறை. முதலிலேயே இதை யோசித்து / சொல்லி 'முடியாது' என்று சொன்னால் வரும் அதிருப்தி இதை விடக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும். அந்த வாய்ப்பு நமக்கு இருந்திருந்தும் 'பொறுப்பு' எடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

  இங்கும் 50-50 தான். விட்டுக் கொடுப்பதில் எப்பவுமே தவறில்லை! உதவினால் ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்ப்பதில் லாபமில்லை.

  பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நண்பர்களையும் அவர்தம் மனோநிலைகளையும் நமக்கு அடையாளம் காட்ட உதவலாம்!

  பதிலளிநீக்கு
 3. அன்பின் காரணமாக எப்போது பொறுப்பை ஏற்றுக் கொண்டோமோ அப்போதே நாம்தான் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்தரப்பில் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்களுடைய பண்பை பொறுத்தது. ( நாம் ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்து, அங்குள்ள விதிமுறைகளை ( Rules and regulations ) ரொம்பவும் சரியாக கடைபிடித்ததின் காரணமாக, ஓய்வு பெற்று விட்டாலும் இதுமாதிரியான எண்ணங்கள் நமக்கு வரத்தான் செய்கிறது )

  அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார்
  என்பும் உரியர், பிறர்க்கு. – திருக்குறள் 72

  பதிலளிநீக்கு
 4. முதல் சம்பவம் எனக்கே அனுபவம் உண்டு. அண்ணியிடம் ஒரு குறிப்பிட்ட பழங்கால நகை வாங்க பணம் கொடுத்துவிட்டு நியூஸி வந்தேன். கேட்ட பொருள் வாங்கியாச்சுன்னு ஃபோன் பண்ணிச் சொன்னாங்க. நான் ஊருக்குப்போகும்போது எடுத்துக்கலாம் என்ற எண்ணம். ஆனால்...விதி யாரைவிட்டது.

  அப்போ பார்த்து அண்ணன் ஆம்ஸ்டெர்டேமுன்னு ஒரு வேலையா வர்றார். கோபாலும் நியூஸியில் இருந்து ஜெர்மெனிக்குப் போறார். அண்ணன் அவர் வேலையை முடிச்சுட்டு ஜெர்மனிக்கு வர்றதா ப்ளான்.

  சொல்லச் சொல்ல கேக்காமல் கோபால், நீங்க அங்கே கொண்டு வந்துருங்க. நான் வரும்ப்பொது எடுத்துக்கறேன்ன் னு என் அண்ணனிடம் வற்புறுத்த, அவரும் சென்னையில் இருந்து நகையோடு ப்ளேன் ஏறிட்டார்.

  கோபாலுக்கு இங்கே நியூஸியில் கம்பெனியில் ஒரு தடங்கல்.ஜெர்மனி ட்ரிப் கேன்ஸல்.
  அண்ணன் மகள் அன்று சென்னையில் இருந்து யூ எஸ். (முதல்முறை) கிளம்புகிறாள். அவளுடன் ஃபோன் பேச அண்ணன் ஆம்ஸ்டர்டேம் ஏர்போர்ட்டில் ஃபோன்பூத்துக்குள் நுழைஞ்சு டயல் செய்ய ஃபோன் வேலை செய்யலை. பதற்றத்தில் அவர் தன் ப்ரீஃப் கேஸை போன்பூத்தில் விட்டுட்டு அடுத்த கதவில் இருக்கும் ஃபோன்பூத்தில் போய் பேசிக்கிட்டு இருக்கும்போது அவர் பெட்டி திருடு போயிருச்சு. எல்லாம் ரெண்டு மூணு நிமிசத்தில்.

  அவருடைய விஸா, பாஸ்போர்ட், அவர் தொடர்பு கொள்ள வேண்டிய காண்ட்டாக்ட் டீடெய்ல்ஸ் எல்லாம் போயே போச். அப்புறம் போலீஸ் கம்ப்ளெய்ன்ட் அது இதுன்னு ஏகப்பட்ட சமாச்சாரம். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வர்றதுக்கே முடியாமல் தவிப்பு. மறுநாள் 200 கிமீ தூரத்தில் ப்ரீப் கேஸ் கிடச்சதாம். போலீஸ் கொண்டு வந்து கொடுத்துச்சு. உள்ளே நகை & பணம் மட்டும் மிஸ்ஸிங்.

  அண்ணன் ஃபோனில் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டார். இதுவரை அண்ணிக்குக்கூட விஷயம் நாங்க சொல்லலை. நகை போனா போயிட்டுப்போகுது. நல்லபடியா வீடு திரும்புனாரேன்னு எங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 5. முதல் சம்பவத்திற்கு நகையை வாங்கிச் சென்ற நான்தான் பொறுப்பேற்கவேண்டும்.
  இரண்டாவது சம்பவத்திற்கு அவரது வேலையாக அழைத்துச்சென்ற நண்பர்தான் செலவிடவேண்டும். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா என்பது சந்தேகமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ரொம்பச் சிக்கலான பிரச்சினை, நடனசபாபதி. நம்மால் பொறுப்பு எடுக்கக் கூடிய அளவில் இருந்தால் சரி. நம் சக்திக்கு மீறியதாக இருந்தால்? ஆங்கிலத்தில் இரவல் வாங்கிய நெக்லஸ் என்று ஒரு பிரபல கதை உண்டு. அந்தக் கதை அநேகமாக எல்லோருக்கும் தெரியும். அது மாதிரி ஆகக் கூடாது அல்லவா?

   நீக்கு
 6. (உங்களுக்கு வயது 70 ஐத் தாண்டி விட்டது என்று வைத்துக்கொள்வோம்.)


  இலவசமாக ஆலோசனை சொல்ல இரண்டு சம்பவங்களிலும் நிறைய பேர் வருவார்கள்.. மனச்சுமையை இன்னும் கூடுதலாக்குவார்கள்...

  பதிலளிநீக்கு
 7. ஐயா, முதல் சம்பவத்திற்கு நம்முடைய கவனக்குறைவால் தான் நகை காணாமல் போகும் (இது திருட்டு அல்லது கொள்ளை அல்ல). அதனால் இதற்கு நாமும் நகைக்கான சொந்தக்காரரும் இருவருமே பொறுப்பாக வேண்டும்.

  இரண்டாவது சம்பவத்திற்கு முழுக்க முழுக்க நாமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். விபத்து என்பது நானும் என் நண்பரும் எதிர்பார்க்காமல் நடந்து விடும் ஒன்று. விபத்து நடக்குமென்று தெரிந்திருந்தால் என் நண்பர் மட்டுமே போயிருப்பார் (என்னை அழைக்காமல்). அவர் என்னை அழைத்து சென்ற ஒரே காரணத்திற்காக எனக்கான செலவையும் அவர் ஏற்கனும் என்று நினைப்பது சரியானதல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சிக்கலான சூழ்நிலைதான். நான் பலகாலம் இதைப்பற்றி யோசித்திருக்கிறேன். நண்பர்களுடன் விவாதித்துக் இருக்கிறேன். சரியான யோசனை சொல்ல யாராலும் முடியவில்லை.

   நீக்கு
 8. ஊரில் பஞ்சாயத்து பார்த்தது போல இருக்கிறது....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 9. /ஸ்ரீராம்.16 October 2012 6:00 AM

  எனக்குத் தோன்றுவது!.....

  காணாமல் போகும் நகைக்கு நாமும் பொறுப்பு ஏற்பதுதான் முறை. முதலிலேயே இதை யோசித்து / சொல்லி 'முடியாது' என்று சொன்னால் வரும் அதிருப்தி இதை விடக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும். அந்த வாய்ப்பு நமக்கு இருந்திருந்தும் 'பொறுப்பு' எடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

  இங்கும் 50-50 தான். விட்டுக் கொடுப்பதில் எப்பவுமே தவறில்லை! உதவினால் ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்ப்பதில் லாபமில்லை.

  பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நண்பர்களையும் அவர்தம் மனோநிலைகளையும் நமக்கு அடையாளம் காட்ட உதவலாம்! ///

  இதேதான் என்னோட ஸ்டேட்மென்டும்...

  பதிலளிநீக்கு
 10. எந்தவொரு செயலும் இறைவன் புறத்திலிருந்து வராமலில்லை ஆகவேதான் அது இறைவனின் ஏற்பாடுகளில் ஒன்று என சொல்லலாம்.

  முதலாவது சம்பவத்தின் போது திருடன் என்ற பட்டம் எமக்கே கொடுக்கப்படும்...
  இதில் கௌரவத்தைக் கொடுப்பவும் இழிவைக் கொடுப்பவனும் இறைவன் என்ற இறை நம்பிக்கை எம்மிடமிருந்தால் அச் சம்பவம் எம்மைப் பெரிதும் பாதிக்காது.

  இப்படிப்பட்ட செயலைச் செய்யவைத்த இறைவனே அதற்கான பதிலையும் அல்லது பிரதியீட்டையும் வைத்திருப்பான் அது என்றாவது ஒரு நாள் நம்மை வந்து சேர்ந்தே தீரும்..

  நம்பிக்கைதான் வாழ்க்கை

  பதிலளிநீக்கு
 11. இந்த கேள்விக்கான பதில் இடம் பொருள் உறவு மக்கள் பொறுத்து மாறும். ஒரு பதில் என கூற இயலாது என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 12. you should not undertake any thing that bring problem to you. either way you loose your friendship

  1 first case the person who gave the jewelry have a little doubt on you whether you compensate it or not
  2 second case also same. at the age of seventy the every person should expect that he may dismiss at any time so why should you undertake any thing unless you accompanied by some one

  பதிலளிநீக்கு
 13. டாக்டர் கந்தசாமி: உங்க நகைகளை யாருக்காவது அமெரிக்காவில் கொடுக்க வேண்டுமானால் என்னிடம் கொடுங்கள்! "சேர வேண்டிய இடத்தில்" பத்திரமா சேர்த்து விடுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு வேண்டியவர்கள் அனைவரும் கோயமுத்தூரைச் சுற்றி பத்து கி.மீ. க்குள்தான் இருக்கிறார்கள். காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு வெசையா நடந்தா மத்தியானச் சாப்பாட்டுக்கு அவங்க ஊட்டுக்குப் போயிடலாம். அதே மாதிரி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டால் பொழுது சாயறதுக்குள்ள வூடு வந்து சேந்திடலாம்.

   நீக்கு

 14. ஐயா, நியாயம் அநியாயம் என்றெல்லாம் எண்ணும் வயதல்லவா 70 தாண்டியது. பொறுப்பு ஏற்றுக் கொண்டுதானே நகையை சேர்ப்பிக்கும் முடிவு ஈடு செய்ய முடியாவிட்டால் தவணை கேட்கலாம். முடியாவிட்டால் நட்பை இழப்பதுடன் ஒரு வேளை அவப் பெயரையும் சுமக்க நேரிடும். இரண்டாவது கேள்விக்கு உடல் மனம் என்று எதிலும் எதுவும் செய்ய முடியாது. வேலை வெட்டி இல்லாமல் போய் எல்லோருக்கும் கஷ்டம் கொடுப்பதை குத்திக் காட்டப் படுவோம். தேவையா இது.?

  பதிலளிநீக்கு
 15. தீதும் , நன்றும் பிறரால் வருவது இல்லை நாமே ஏற்படுத்தி கொள்வது என்று கனியன் பூங்குற்றனார் சொன்னதாக படித்த ஞாபகம்.
  ஐயா தங்களுக்கு ஆருதல் சொல்ல தெரிய வில்லை மன்னிகவும்.

  பதிவை படிக்கு போது தோன்றிய எண்ணம் வடிவேல் எல்லாம் அவன் செயல் படத்தில் ஒரு டயலாக் வரும் அது தான் ஞாபகம் வந்துச்சு"என் கட்சிக்காரன் போன் "டயலாக் பேசி முடித்தவுடன் பக்கத்துல்ல ஒருத்தர் மாப்பிள்ள இவன் தான் எங்கையொ செமத்திய வாங்கிட்டு அடுத்தவன் வாங்குன மாறிபேசுரான் பாரு.ஐயா
  தாங்கள் இந்த சம்பவத்தில் மாட்டிகிட்டேங்களா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாட்டறதுக்கு முன்பாகவே ஜாக்கிரதையாக இருந்ததன் விளைவு ஒரு நல்ல நண்பனை இழந்தேன்.

   நீக்கு
 16. முதல் சம்பவத்தில் உண்மையான நண்பரின் நட்பை தெரிந்து கொள்ளலாம்...

  இரண்டாவது சம்பவத்தில் உண்மையான நண்பரின் குடும்பத்தையும் தெரிந்து கொள்ளலாம்...

  பதிலளிநீக்கு
 17. நம்மைவிட மற்றவர்கள் பணத்தில் உயர்ந்தவர்களாக இருந்தால் நாங்கள் தப்பிப்போம்.
  மற்றவர் செல்வத்தில் குறைந்தவர்களாக இருந்தால் நாங்கள்தான் பொறுக்கவேண்டி வரும் என நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 18. என்னை பொருத்தவரை நண்பரின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுப்பேன்.

  பதிலளிநீக்கு
 19. விலையுயர்ந்த பொருட்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்காமல் மறுத்து விடுவது நலம். ["நான் ஏற்கனவே ஒரு முறை ஒரு பொருளை இதே மாதிரி வாங்கி தொலைசிட்டேன்"-னு புருடா விடுங்க, அவரு பின்னங்கால் பிடரியில் அடிக்க நகையை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆயிடுவார்.] நண்பர்களுக்கு உதவுவதற்கு முன்னர் நம்முடைய சேப்டியும் முக்கியம். அப்படி மீறி உதவுவேன் என்றால் தொலைந்த நகையை நீங்க பணம்போட்டு வாங்கித் தான் தரனும்.

  விபத்து எதிர் பார்த்து நடப்பதல்ல. நண்பர் தன்னுடைய வேலைக்கு உங்களை அழைத்திருந்தால் அவர்தான் செலவை ஏத்துக்கணும். [ஆனா, நாட்டில் அப்படி சட்டம் இருக்கான்னு தெரியலை!!] நண்பர் செலவை ஏத்துகிட்டா ஆச்சு, இல்லாட்டி நம்ம உடம்பை நாமதான் காப்பாத்திக்கணும் செலவு ஆகுதே, உசிரு போனா போகட்டும்னு விட யாருக்கு மனசு வரும்??!! இதைத் தவிர்க்க பேருந்துகளில் சென்று விடுவது நலம். [விபத்துக்கு சான்ஸ் கம்மி, அப்படியே நடந்தாலும் செலவு நம்முடையது தான் குழப்பமே இருக்காது!!].

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சூழ்நிலைகள் விதிவசத்தால் ஏற்படுகின்றன என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

   நீக்கு
 20. அன்பின் கந்த சாமி அய்யா - இதற்கெல்லாம் தீர்வே கிடையாது - விதிப்படி நடக்கும். இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் - நல்வவாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப சரிங்க. அனைத்து சூழ்நிலைக்கும் பொருத்தமாக பொது தீர்வு சொல்லமுடியாது. இந்த மாதிரி சூழ்நிலை ஒருவருக்கு வந்தால் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வுக்காகத்தான் இந்தப் பதிவை எழுதினேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எந்தப் பிரச்சினைக்கும் ரெடிமேட் தீர்வுகள் இல்லையே!

   நீக்கு
 21. No second thoughts or second opinion on these two issues. You and only you have to bear the responsibility for the jewels and cost of the treatment. Because 'ennith thuniga karumam thuninthapin ennuvam enbadhu izhukkam' thus said valluvar. Before accepting the responsibility of carrying the jewels and before going with the friend you should have decided whether it is necessary and proceeded.

  பதிலளிநீக்கு