திங்கள், 29 அக்டோபர், 2012

முக்காத் துட்டுக்கு கருப்பட்டி வாங்கீட்டு வாடோய்!


அந்தக் காலத்தில இந்த சொல்லை அடிக்கடி கேட்கலாம். பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் சொல்லக் கூடிய வாக்கியம் இது.

இதனுடைய உட்பொருள் ஒரு உதாரணம் சொன்னால்தான் சரியாக விளங்கும். ஊர்ல செல்வாக்கான ஒருத்தர், அவருக்கு வேண்டாதவனைப் பற்றி ஏதோ திட்டி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எல்லா ஊர்களிலும் நாரதர்கள் இருப்பார்கள். அதில் ஒருத்தன் அந்த திட்டப்பட்டவனிடம் போய் வத்தி வைப்பான். அவனுக்கும் கோபம் வந்து இவனைப்பற்றி ஏதாவது மோசமாகச் சொல்லுவான். இந்த நாரதர் திரும்ப வந்து இவரிடம் ஒண்ணுக்கு ரெண்டாக பத்த வைப்பான்.

இத பாருங்க அவன் உங்க கையை வெட்டறேனுங்கறானுங்க என்பான். இவருக்கும் கோபம் வரும். அப்போது அவர் வழக்கமாகச் சொல்லும் வார்த்தை என்னவென்றால், ஊம், அவனுக்குப் பயந்துகிட்டு நான் எறும்புக் குழியிலதான் ஒளிஞ்சுக்கோணும், போயி முக்காத்துட்டுக்கு கருப்பட்டி வாங்கிட்டு வா, என்பார். கருப்பட்டி எதற்கென்றால், கருப்பட்டிய வாசல்ல போட்டா, அதைத்தேடி எறும்புகள் வரும், அப்போ எறும்புக்குழி எங்க இருக்குன்னு தெரியும், அதுல போயி ஒளிஞ்சுக்கப்போறேன் என்று பொருள். எறும்புக்குழிக்குள் மனிதன் ஒளிய முடியாதென்று நன்றாகத் தெரியும். ஆனாலும் ஒரு எகத்தாளத்திற்காக சொல்லும் வார்த்தை இது.

இந்த பீடிகை எதற்கென்றால், நான் இனிமேல் ஒரு பதிவு போட்டவுடன் முக்காத்துட்டுக்கு கருப்பட்டி வாங்கீட்டு வந்து வச்சுக்கப்போறேன். யாராச்சும் என் பதிவில அது சொத்தை இது சொத்தைன்னு போலீஸ்ல புகார் செஞ்சா, உடனே அந்த எறும்புக் குழிக்குள்ள போயி ஒளிஞ்சக்கப் போறேன். எல்லாப் பதிவர்களும் இப்படியே செய்யவும்.

பின்குறிப்பு: அந்தக் காலத்தில ரூபாய் அணா பைசாக்கள் புழக்கத்தில் இருந்தது பெரியவங்களுக்கு ஞாபகம் இருக்கும். அப்போ ஒரு துட்டு என்பது நாலு பைசா அதாவது இன்றைய இரண்டு நயா பைசாவுக்கு சமம். முக்காத்துட்டு என்பது மூன்று பைசா அதாவது காலணா. புழக்கத்தில் இருக்கும் மிகச்சிறிய நாணயம். அதுக்கே இரண்டு அச்சு வெல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பணம் என்பது நான்கு அணா, கால் ரூபாய். கோமணத்தில ஒரு பணம் இருந்தா கோழி கூவறப்ப பாட்டு வரும் என்பது அந்தக் காலத்து பழமொழி.

கணக்குப்புலிகளுக்கு: இந்தக் கணக்கை மனக்கணக்காகப் போடவேண்டும். பேப்பர், பேனா வைத்துப் போடக்கூடாது.

காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் கத்தரிக்காய் என்றால் காசுக்கு எத்தனை கத்தரிக்காய்?


24 கருத்துகள்:

  1. என் தாத்தனின் பொன்மொழி:
    அரைக்காசு கறிக்கும், அஞ்சாறு ம............M, அலையும் உலகமாடா இது...!

    ரத்த சொந்தமில்லை என் தாத்தன் கண்ணிமுத்து XXXXXXXXXXX பொன்மொழி...!

    பதிலளிநீக்கு
  2. முக்காத்துட்டு கருப்பட்டியில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
    நிகழ்கால நிகழ்வுடன் இதை இணைத்தவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பழைய நாட்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி.
    கணக்குக்கான விடை 11 கத்திரிக்காய்கள்.
    எங்கள் பக்கம் கத்தரிக்காயுக்கு பதில் வாழைக்காய் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நடனசபாபதி. தசம எண்களும் கால்குலேட்டரும் வந்த பிறகு மனக்கணக்கு என்பதே நம் சந்ததியினருக்கு மறந்து போய்விட்டது. இது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்.

      நீக்கு
  4. விடை 11. ஸாரி, மனக்கணக்கா முடியலை.

    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, சரவணன்.
      இந்தியர்கள், குறிப்பா தமிழர்கள் இந்த மனக்கணக்கில் ஸ்ட்ராங்கா இருந்ததால்தான் கம்ப்யூட்டர் துறையில் நம் ஆட்கள் பிரகாசிக்கிறார்கள்.

      நீக்கு
  5. பழைய ஞாபகம் வந்தது... வித்தியாசமான கலக்கல் பதிவு... tm4

    பதிலளிநீக்கு
  6. ஐயா,தாங்கள் சொல்லிதான் இந்த பழமொழி மற்றும் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?இன்னும் இது போல் வேறு பழமொழி இருந்தால் தெரிய படுத்துங்கள். நன்றி !

    பதிலளிநீக்கு
  7. ஹி ஹி ஹி....

    முனைவரே... கோயமுத்தூர் குசும்பு?

    #யப்பே, முக்காத் துட்டுக்கு கருப்பட்டி வாங்கீட்டு வாரும்வோய்...

    :-)

    பதிலளிநீக்கு
  8. பிரபலமான மனக்கண்க்கு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. \\யாராச்சும் என் பதிவில அது சொத்தை இது சொத்தைன்னு போலீஸ்ல புகார் செஞ்சா, உடனே அந்த எறும்புக் குழிக்குள்ள போயி ஒளிஞ்சக்கப் போறேன்.\\ ஐயா பாத்துக்குங்க, அம்மா பாத்துக்குங்க............ நானும் ரவுடிதான்............ நானும் ரவுடி தான்........... நானும் ரவுடி தான்...........

    பதிலளிநீக்கு
  10. ஐயோ நம்ம கணக்குல வீக்கு......
    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  11. http://www.boddunan.com/register.html?referrer=BN-SAGAYAMARY

    Sir above site you can write articles and earn money. Just try it out Sir. Thanks.

    பதிலளிநீக்கு
  12. முக்காத்துட்டு!

    இந்தக் கணக்கு எங்கம்மா அடிக்கடி சொன்ன கணக்கு! :)

    பதிலளிநீக்கு
  13. முக்காத்துட்டுக் கதை புதிது. சுவாரஸ்யமாய் இருக்கிறது. வலைச்சரம் பக்கம் வந்து 'எங்களுக்கு' ஆதரவு கொடுக்க வேண்டுகிறோம்!!

    பதிலளிநீக்கு
  14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  15. http://blogintamil.blogspot.in/2012/10/2.html
    வலைச்சரத்தில் தங்கள் வலைப்பூ பற்றி எங்கள் பார்வை.

    பதிலளிநீக்கு
  16. "முக்காத்துட்டு..." புதுமையாகவே இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  17. OH!...முக்காத்துட்டு! அருமை.
    ஒரு சொல் எத்தனை நளினம்,
    பகிடி, மிக ரசனை சார்.
    ரசித்தேன் நன்றி. பல நெருக்கடியில்
    இப்பக்கம் வரவில். ஆனால் வந்திட்டேனே!!!!
    மீண்டும் சந்திப்போம். வருவேன் ஐயா.
    இறை ஆசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  18. நாலேரிக்கா காசுக்கு 45 கத்திரிக்கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலேரிக்கா இல்லை. காலேரிக்கா. காலேரிக்கா காசுக்கு 45 கத்தரிக்கா என்றால் காசுக்கு எவ்வளவு கத்தரிக்கா என்பதுதான் கணக்கு. எங்கே கணக்கைப்போட்டு வெடயச்சொல்லு பாப்பம்.

      நீக்கு
    2. இல்லை, இல்லை, கணக்கு தப்பு. சரியான கணக்கு “காலேரிக்கா காசுக்கு நாலேரிக்கா கத்தரிக்கான்னா காசுக்கு எத்தனெ கத்தரிக்கா?” இதுக்கு வெடயச்சொல்லு.

      நீக்கு