வெள்ளி, 5 அக்டோபர், 2012

நான் வெட்கப்படுகிறேன்?


என்னுடைய போன பதிவின் தலைப்பு கொஞ்சம் கொஞ்சம் என்ன, மிக அதிகமாகவே விரசமாக அமைந்து விட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். பதிவை போஸ்ட் பண்ணுவதற்கு சில விநாடிகளுக்கு முன்தான் இந்த தலைப்பை வைத்தேன்.

நான் முதலில் வைத்திருந்த தலைப்பு "இளம் பெண்களின் கொலைகள்" என்பதாகும். இப்படி தலைப்பு வைத்தால் பார்வையாளர்கள் அதிகம் வரமாட்டார்கள், அதனால் கொஞ்சம் *********, என்ன சொல்வது என்று தெரியவில்லை,  வைத்துவிட்டேன். எதிர் பார்த்த மாதிரி அநேகம் பேர் பார்வையிட்டார்கள். அருமைத் தம்பி, பழமை பேசி கூட கேட்டுவிட்டார்.


அண்ணா வணக்கம். கடையில நெம்பக் கூட்டமுங்களா??!

வாங்க, தம்பி. கடைல கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டம். இத்தனை கூட்டத்தை நான் என் பதிவுலக வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. பதிவு போட்ட 24 மணி நேரத்தில் 1735 பார்வையாளர்களும் 26 பின்னூட்டங்களும் சேர்ந்துள்ளன. பெரிய கம்பெனிக்காரன் எல்லாம் நல்ல விளம்பர   வாசகங்களுக்கு ஏன் அவ்வளவு பணத்தை வாரி இறைக்கறான்னு இப்ப நான் நல்லா புரிஞ்சிகிட்டேன்.

சரக்கு எப்படியிருந்தாலும் வெளிப்பூச்சு நல்லா இருந்தா வித்துப் போயிடும் அப்படீங்கறது தெள்ளத்தெளிவா புரியுது. ஆனா இந்த உத்தியை இனி நான் பயன்படுத்த மாட்டேன். எனக்கு இந்த விளம்பரம் வேண்டாம்.
நண்பர் இக்பால் செல்வன் எழுதிய பின்னூட்டமும் அதற்கு நான் கொடுத்த விளக்கத்தையும் பாருங்கள்.


இந்தப் பதிவுக்கும், அதன் தலைப்புக்கும் நான் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன் ...

இந்தப் பதிவு பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருந்தால் ஏன் பிரச்சனை என்ற தொனியில் எழுதியது முறையான ஒன்றல்ல ..

ஆண்கள் தான் மேற்சொன்ன பிரச்சனைகள் / குற்றங்களை செய்பவர்களாக இருக்கின்றார்கள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே .. அத்தோடு சமூக சுதந்திரம், விழிப்புணர்வு, அந்நியர்களோடு பழகும் விதங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையும், பெண்களை சுகிக்கவும், கசக்கி எறியவும் ஆண்களுக்கு கற்றுத் தந்த சமூகக் கோணலாகவே இச்சம்பவங்களை நான் பார்க்கின்றேன். நன்றிகள் !உங்களுடைய தார்மீகக் கோபம் மிகவும் நியாயமானதே. பதிவின் தலைப்பு பெண்களை மட்டும் குற்றவாளிகள் போல் சித்தரிக்கிறது. இது நியாயமல்ல. அதற்காக பெண்கள் சமுதாயத்திடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் இந்தப் பதிவிற்கு "இளம் பெண்களின் கொலைகள்" என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். பதிவிடுவதற்கு சில விநாடிகளுக்கு முன்தான் அதிகமான வாசகர்களை ஈர்க்கலாமென்ற எண்ணத்தில் தலைப்பை மாற்றினேன். அதற்கு காலம் கடந்து வருந்தி என்ன பயன்?

என்னுடைய அடுத்த பதிவில் இந்தக் கண்டனத்திற்கு என்னுடைய விளக்கம் அல்லது சமாதானம் அல்லது பாவமன்னிப்பு - ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளவும் - காணலாம்.


கடைசியாக,  பதிவின் தலைப்பை மாற்றிவிட்டேன்.

இந்த தலைப்பு யாருடைய மனதைப் புண்படுத்தியிருந்தாலும், குறிப்பாக பெண்கள் சமுதாயத்திடம், நான் எனது மனப்பூர்வமான வருத்தத்தை  தெரிவித்துக் கொள்கிறேன்.

35 கருத்துகள்:

 1. இந்த தலைப்பு வைத்ததில் ஒரு Hidden Agenda உண்டு. அதைப் பின்னொரு நாளில் எழுதுகிறேன். இப்போது சொன்னால் அதற்கு இன்னொரு மன்னிப்புப் பதிவு போடவேண்டி வரும்?

  பதிலளிநீக்கு
 2. தலைப்பு வைப்பது உங்கள் உரிமை ஐயா ! ஆனால் தலைப்பும், பதிவும் பெண்களே குற்றவாளிகள் என்ற தொனியில் வந்திருந்தமையால் எனது விசனத்தை பதிவு செய்தேன். சிறியவனின் கருத்தை ஏற்றுக் கொண்டு சரி செய்துக் கொண்டமைக்கு மிக்க மிக்க நன்றிகள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் செய்தாலும் தவற்றை சுட்டிக்காட்ட எல்லோருக்கும் உரிமை உண்டு. எனக்கு அந்த தலைப்பில் உடன்பாடு இல்லாமல்தான் வைத்தேன். இப்படி சீப்பான வழிகளில் விளம்பரம் தேடுவது அநாகரிகம் என்ற எண்ணம் மனதிற்குள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. பதிவுலகம் எதை அதிகம் விரும்புகிறது என்று கணிக்க விரும்பினேன். என் நோக்கம் நிறைவேறியது.

   நீக்கு
  2. நல்லா சமாளிகுகிறீங்க சார்!

   சரவணன்

   நீக்கு
  3. எத்தனை மாணவர்களை சமாளித்திருக்கிறேன்? இதை சமாளிக்க முடியாதா?

   நீக்கு
 3. :)))
  இரண்டு குறள்கள் நினைவுக்கு வந்தன. ஒன்று 'எண்ணித்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துணிந்த பின் செய்த காரியம்தான். பதிவுலக மக்களின் ஈர்ப்பு எதன்பால் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக்கொள்ள செய்த காரியம்தான் இது.பதிவுலகில் நிலைத்து நிற்க பல வேடங்கள் போட வேண்டியிருக்கிறது.

   நீக்கு
  2. இந்தப் பதிவுக்கு வந்த பார்வையாளர்கள் 2100 பேர். இதில் எனக்குப் பெருமை ஒன்றுமில்லை. மனிதர்களின் ஆழ்மனதின் வக்கிரங்களைத்தான் காட்டுகிறது.

   நீக்கு
 4. சார், அப்படி என்னதான் தலைப்பு வைத்தீர்கள்? திரும்பவும் மாற்றிவிட்டீர்களே? என்ன தலைப்பு என்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும்போல் இருக்கிறது! வேறு எந்த வேலையும் ஓடவில்லை. அதனால் பழைய தலைப்பை இங்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே, ப்ளீஸ்! மேலும், இப்படியெல்லாம் தலைப்பு வைப்பது தவறு என்று பிறருக்கு அறிவுறுத்தும்படியும் இருக்கும் அல்லவா?

  துளசி டீச்சர் ஒரு அட்டகாசமான தலைப்பு வைத்திருந்தார். 'கட்டில் மெத்தை விஷயத்தில் ஒத்துழைக்க மறுத்த வீட்டுக்காரர்!' என்று. பதிவு, தனது கட்டிலை எடுத்துச்செல்லாமல் ஒத்திப்போட்டுவரும் அவர்களது ஹவுஸ் ஓனர் பற்றியது. தலைப்பில் இருந்த குறும்பு ரசிக்க வைத்தது. இதைபோல 'அடி கள்ளி! சொல்லவே இல்லையே!' என்ற தலைப்பு சப்பாத்திக் கள்ளிச் செடிகள் வளர்ப்பு குறித்த பதிவுக்கு.

  எதுக்கு இதைச்சொல்றேன்னா, ஒருவேளை நீங்க வச்ச தலைப்பும் இந்த மாதிரி 'குறும்பு' ரகமாக இருந்திருக்குமோ என்னவோ... அப்படி இருந்தால் மாற்றியிருக்க வேணாம் சார் என்று சொல்லத்தான்.

  சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்பு ரகம் அல்ல. கொஞ்சம் விரசமானதுதான். இங்கே வேண்டாமே.

   நீக்கு
  2. Dear Mr.saravanan,
   anal.. after reading ur comment.. i laughed lyk anything...

   நீக்கு
  3. நீங்க சொல்லாட்டி என்ன? இருக்கவே இருக்கு கூகுளாண்டவரின் வெப்கேஷ் சேவை! (http://webcache.googleusercontent.com/search?q=cache:http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_4.html ). அங்க போய் பார்த்தப்பரம் 'பூ... இவ்வளவுதானா' என்று சப்பென்று ஆகிவிட்டது சார்! 'கொலைகள்' என்ற வார்த்தைக்குப் பதில் "கா** **கள்" என்பது அப்படி ஒன்றும் ஆபாசமாகத் தெரியவில்லை! இதற்குப்போய் இவ்வளவு சாத்துப்படி கொடுத்து மன்னிப்பெல்லாம் கேட்கவைத்தது ரொம்ப ஓவர்! இவர்களெல்லாம் என்ன வாழ்க்கையில் தந்தி பேப்பரே படிக்காதவர்களாமா?!

   சரவணன்

   நீக்கு
  4. நீங்க நிஜமாகவே கில்லாடிதான் போங்க. இந்த மாதிரி வழி இருக்குன்னு எனக்கு இப்பத்தான் தெரிகிறது.

   என்ன பண்றதுங்க, நிஜ வாழ்க்கையில் என்னென்னமோ வேஷம் போடறோம், அதுல கொஞ்சம் இங்கேயும் போட்டுட்டாப் போகுது. அதில இன்னொரு விசேஷம் பாருங்க. ஒரு பொண்ணு முந்தி பிந்தி தெரியாதவன்கிட்ட சோரம் போகிறாள். அது முகத்தைச் சுளிக்கவைக்கவில்லை. இந்த தலைப்பு முகத்தை சுளிக்கவச்சுட்டுதாம். என்ன ஒரு முரண்நகை பாருங்கள்.

   நீக்கு
 5. ////ஆனா இந்த உத்தியை இனி நான் பயன்படுத்த மாட்டேன். எனக்கு இந்த விளம்பரம் வேண்டாம்.////

  மிக்க சரியான முடிவு ஜயா வரவேற்கின்றேன்

  பதிலளிநீக்கு
 6. ஐயா, நீங்க வைத்த தலைப்பில் தப்பாக எதுவும் எனக்குத் தோன்றவில்லை. நான் கூட ஒரு மொக்கை பதிவு போட்டேன், 'பெண்கள் எப்போது முழு திருப்தியடைகிறார்கள்" என்று. எனக்கு வந்த ஆங்கில ஜோக்கிற்கு தமிழில் இதை விட பொருத்தமான மொழி பெயர்ப்பு எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், இது தவறான எதிர்ப்பார்ப்பை இது ஏற்ப்படுத்தி விடும் என்று அடைப்பில், "சத்தியமாய் இது 18+ இல்லை" என்றும் போட்டுவிட்டேன். அனாலும் கூட்டம் ஜெ..ஜெ... என்று அலை மோதியது. [புதிய பதிவருக்கே இந்த கதின்னா பார்த்துக்கோங்க.] நான் உசிரை குடுத்து போட்ட பதிவுக்குக் கூட இதில் பத்தில் ஒரு பங்கு கூட்டம் கூட வரவில்லை. நீங்கள் வைத்த தலைப்பால் பலர் வந்தாலும், நீங்கள் சொன்ன நல்ல கருத்து அத்தனை பேருக்கும் போய்ச் சேர்ந்ததல்லவா, அதனால் அதில் தப்பேயில்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

  அடுத்து, பெண்கள் மேல் தான் தப்பு இருக்கிறது என்று உங்கள் பதிவு சொல்வதாக ஒரு குற்றச் சாட்டு. இதையும் நான் மறுக்கிறேன். வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்றால் மட்டும் தான் அந்தப் பெண் அப்பாவி. வீட்டில் சொல்லாமல் வா, தனியாக வேறு ஊருக்கு டூர் போகலாம், அங்கே ரூம் போட்டு தங்கலாம் என்று ஒருத்தன் கூப்பிடுகிறான், அதற்க்கு வயதுக்கு வந்த ஒரு பெண் ஒப்புக் கொண்டு போகிறாள் என்றால் அவளுக்கு புத்தி எங்கே போனது. அதற்க்கு இசையலாமா? கூபிடுறவன் கூப்பிடத்தான் செய்வான், அவளுக்கு புத்தி எங்கே போனது? அவள் என்ன ஒண்ணுமே தெரியாத விரல் சப்பிக் கொண்டிருக்கும் பாப்பாவா? இந்த சூழ்நிலையில் தவறு ஒப்புக் கொண்ட அந்த பெண் மீதுதான். நீங்கள் எழுதியது சரிதான். இது என் கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் உங்கள் மாதிரி நினைத்துதான் அந்தப் பதிவைப் போட்டேன். "சீலை முள் மீது விழுந்தாலும், முள் சீலை மீது விழுந்தாலும் கிழிவது என்னமோ சீலைதான்" என்கிற பழமொழி மாதிரி, பெண்கள்தான் பல விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஆனாலும் என் அனுபவத்தில் நான் கண்டது என்னவென்றால், இந்த பெண்மைக் காவலர்கள் என்று ஒரு குரூப் இருக்கிறது. அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், அந்தப் பெண்ணை அவன் கூப்பிட்டதுதான் தப்பு என்பார்கள். எதுக்கு கூப்பிடுகிறான் என்று அவளுக்குத் தெரியாது, யதார்த்தமாக நம்பி அவள் போனாள் என்பார்கள்.

   அவன் யார்? எந்த ஊர்? அவன் குணம் என்ன? ஒன்றும் தெரியாது. முகநூலில் பழக்கம், அவன் வெளியூருக்குக் கூப்பிட்டால் எதற்கு கூப்பிடுகிறான் என்று தெரியாமல் போனேன் என்று 25 வயது பெண் சொன்னால், அதற்கு ஜால்ரா போடுவதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. இதை ஒருவன் சுட்டிக்காட்டினால், உடனே இவன் பெண்மையை, பெண்களை அவமதிக்கிறான், இவன் ஆணாதிக்க வெறி பிடித்தவன் என்று குற்றம் சாட்டுவார்கள். அவன் கூட நாலு பொம்பளைகளும் சேர்ந்து கொள்வார்கள்.

   இதுதான் உலகம். வயசான காலத்தில் இந்தக் கெழவனுக்கு எதுக்கு இந்த குசும்பு என்றும் சொல்வார்கள். எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. நல்லதுக்கு காலம் இல்லை. அவ்வளவுதான். "அடே, வெளிக்குப் போகும்போது வெள்ளரிக்காயைத் திங்காதே என்றால், நான் தொட்டுக்கிட்டு திம்பேன், நீ யார் அதைக் கேட்பதற்கு" என்று கேட்கும் காலம் இது. சாக்கடையில் கல்லைப் போடக்கூடாது ஜெயதேவ்.

   நீக்கு
 7. ஆயிரம் இருந்தாலும் பெரிய மனுஷன், பெரிய மனுஷந்தான்யா!

  பதிலளிநீக்கு
 8. உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு ஐயா

  பதிலளிநீக்கு

 9. செய்வதைச் செய்துவிட்டு, ”விளக்கம் அல்லது சமாதானம் அல்லது பாவமன்னிப்பு” என்று ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டால் போகுது, அவ்வளவுதானே. அதுக்கு ஏன் இவ்ளோ ஃபீலிங்? :-))))

  உங்கள் சென்ற பதிவின் கருத்தில் உண்மை இருப்பது உண்மையே. ஆனால், தலைப்பு முகஞ்சுளிக்க வைத்தது. மேலும், இந்த வலைப்பூவில் இது முதல் முறையுமல்ல என்று நினைவு.

  "சீலை முள் மீது விழுந்தாலும், முள் சீலை மீது விழுந்தாலும் கிழிவது என்னமோ சீலைதான்"
  கிழிபடுவது சீலைதான், ஆனால் கிழிக்கும் முள்ளையும் சேர்த்து உடைத்து நொறுக்கும் வலிமையுடையதாக சீலை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கிழிபடுவது சீலைதான், ஆனால் கிழிக்கும் முள்ளையும் சேர்த்து உடைத்து நொறுக்கும் வலிமையுடையதாக சீலை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.//

   பெண்கள் சமுதாயம் தங்களை அப்படி வலிமையானதாக மாற்றிக் கொள்வதற்காகத்தான் இத்தகைய பதிவுகள்.

   நீக்கு
  2. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடற மாட்டை பாடிக்கறக்கவேண்டும். பதிவுலக மக்களின் ரசனை மாறியிருக்கிறதா என்று பார்த்தேன். அன்று ("நான் படித்த காமரசப்புத்தகம்") நான் பதிவு போட்ட காலத்தை விட மோசமாகத்தான் இருக்கிறது. அதற்கு நான் ஒரு மன்னிப்பு பதிவு போட்டது ஒரு சில நல்ல உள்ளங்களுக்காகத்தான். இப்போதும் வருத்தம் தெரிவிப்பதுவும் அதற்காகவேதான். அதை என்னுடைய பலவீனம் என்று கருதவேண்டாம். மன்னிப்பு கேட்பதற்கு அதிக மனவலிமை வேண்டும் என்று உங்களுக்கும் தெரியும்.

   பதிவின் உட்கருத்தைக் கவனியுங்கள்.பெண்களைப் போகப்பொருளாக கருதும் மனப்பான்மை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இந்த மனப்பான்மைக்கு பெண்களும் உடன்படுவது விநோதமே! நான் எழுதிய சம்பவங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

   நீக்கு
  3. \\மன்னிப்பு கேட்பதற்கு அதிக மனவலிமை வேண்டும் என்று உங்களுக்கும் தெரியும்.\\ 100% Correct.

   \\இந்த மனப்பான்மைக்கு பெண்களும் உடன்படுவது விநோதமே!\\

   கொஞ்ச நாள் முன்னாடி ஒரு கல்யாண மன்னன் ஓரிரு வருடங்களில் 35 க்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கதை செய்தித் தாள்களில் வந்தது. அவன் சொன்ன கால இடை வெளியைப் பார்த்தால் ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கும் ஒருத்தியை வீழ்தியிருக்கிறான். ஏமாந்தவர்கள் எல்லோரும், பணக்கார வெட்டுப் பெண்கள், பெரிய பெரிய மென்பொருள் நிறுவனங்களில் மதத்திற்கு ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பவர்கள், ஏமாற்றியவன் மூஞ்சியைப் பார்த்தால் படித்தவன் போலக் கூடத் தெரியவில்லை. மணமகனைத் தேர்ந்தெடுக்கும்போது, உன் வீட்டில் இருந்து நூறு பேர் என் இருந்து நூறு பேர் வரட்டும் என்று கூட இவர்கள் யாரும் கேட்கவில்லை, அவனுடன் ஒரே ஒருத்தன் தான் எல்லா இடத்துக்கும் போயிருக்கிறான். அது கூட போகட்டும், உன்னுடைய நிறுவனத்தின் போன் நம்பர் குடு, உன் இ-மெயில் ஐ.டி குடு என்று கேட்டிருந்தால் கூட அவன் சாயம் வெளுத்திருக்கும். அவன் எல்லா திருமணத்திலும் யாரையும் புகைப் படம் எடுக்க விடவில்லை, கல்யாணம் முடிந்து முதலிரவை படமெடுத்து சி.டி. போட்டு விற்று விட்டிருக்கிறான், அவர்கள் போட்டிருந்த நகைகளை இரவோடு இரவாக கழட்டிக் கொண்டு கம்பி நீட்டியிருக்கிறான். இத்தனை நடந்த பின்னரும் நான்கு பெண்கள் அவனுடன்தான் வாழ்வேன், என்று அடம் பிடிக்கிறார்களாம், எங்கே போய் முட்டிக் கொள்ள? இவனைப் போலவே இன்னும் பத்து பதினைந்து பேர் வெளியில் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார்களாம். ஒரு புடவையைக் கூட லேசில் தேர்ந்தெடுக்காமல் கூட வந்தவர்களையும் கடைக்காரனையும் அழவிடும் இவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் இப்படி அவசரப் பட்டு இருக்கிறார்கள்? இதை என்ன வென்று சொல்வது? ஏமாளித் தனமா, பேராசையா, முட்டாள் தனமா?

   நீக்கு
  4. இந்த லட்சணத்தில் பெண்கள் இருக்கிறார்கள்.

   நீக்கு
 10. அன்புள்ள ஐயா.....என் இனிய வணக்கம்.நான் உங்கள் அத்தனை தலைப்பின் கிழ் உள்ள அத்தனை விசயத்தையும் படித்தேன்.உங்களின் நகைச்சுவை உணர்வை என்னால் உணர முடிகிறது.நான் கோவை வந்து நான்கு வருடம் ஆகிறது.நான் இதை இத்தனை நாள் படிக்காமல் இருந்ததை நினைத்து வருந்துகிறேன்.நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.அங்கு நேரம் கிடைக்கும் பொது இந்தமாதிரி பதிப்புகளை படிப்பது என் வழக்கம்.நான் உங்களிடம் படிக்காமல் போய்விட்டோமே என்ற கவலை உள்ளது என் மனதில்.நேரம் கிடைக்கும் பொது உங்களை சந்தித்து பேசலாம் என்று நினைக்குறேன்.உங்களுடன் பழகும் ஒரு வாய்ப்பை தருமாறு வேண்டிகிறேன்.என்னை பற்றிய முழு விவரத்தையும் உங்களுக்கு என் ஈமெயில் முலமாக அனுப்பிகிறேன்.உங்கள் ஈமெயில் முகவரி நீங்கள் குறிப்பிடவில்லை எனவே என் ஈமெயில் முகவரியை தருகிறேன்.என்னை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிகிறேன்.என் ஈமெயில் முகவரி senthilfoa@gmail.com

  பதிலளிநீக்கு
 11. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
  தெய்வம் ஏதுமில்லை
  நடந்ததையே நினைத்திருந்தால்
  அமைதி என்றுமில்லை
  - பாடல்: கண்ணதாசன் ( படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)

  பதிலளிநீக்கு
 12. ///ஒரு பொண்ணு முந்தி பிந்தி தெரியாதவன்கிட்ட சோரம் போகிறாள்.///

  உங்க பதிவுகள்/பதில்கள் படித்தால்...ஞானம் வருகிறது...

  ஒரு 11.30 மணி காட்சி மலையாளப் படத்திற்கு டைட்டில்....யார் வேண்டுமானுலும் உப்யோகப்படுதிக்கொள்ளலாம்...

  முந்தி பிந்தி தெரியாதவன் கிட்ட முந்தி விரித்த மூதேவி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த டைட்டிலுக்கு எனக்குத்தான் முன்னுரிமை. யாராவது என் அனுமதியின்றி உபயோகித்தால் கேஸ் போடுவேன். இதுலயாச்சும் ரெண்டு காசு வருமா பார்க்கலாம்?

   நீக்கு
 13. நேர்மையும் நெஞ்சில் உரமும் உங்களிடம் உள்ளது!

  பதிலளிநீக்கு
 14. ''...நான்கு பெண்கள் அவனுடன்தான் வாழ்வேன், என்று அடம் பிடிக்கிறார்களாம்,...'''
  ஒரு வேளை கொலை செய்யத் தான் இப்படி அடம் பிடிக்கிறார்களோ?....
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 15. \\ஒரு வேளை கொலை செய்யத் தான் இப்படி அடம் பிடிக்கிறார்களோ?....\\"எங்க கூட வாழப் போற இல்லை, அதை விட வேற என்ன பணிஷ்மெண்டு உனக்கு இருக்கபோவுது..........".என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.

  இப்படியும் கூட இருக்கிறார்கள்.
  http://kavipriyanletters.blogspot.com/2011/11/blog-post_07.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனித மனத்தின் வக்கிரங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

   நீக்கு