வியாழன், 4 அக்டோபர், 2012

இளம்பெண்களின் கொலைகள்


கோவையில் கடந்த ஒரு வாரத்தில் நான்கு இளம் பெண்கள் அவர்களுடைய காதலர்கள் என்று சொல்லப்படுபவர்களினால் கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.  அதில் இரண்டு கொலையில் ஒரு தலைக் காதல் என்கிறார்கள். ஆனால் செய்தியைப் படிக்கும்போது, அந்தப் பெண் முதலில் காதலுக்கு உடந்தையாக இருந்துவிட்டு பின்னால் மனம் மாறியிருக்கிறாள்.

ஒரு சம்பவத்தில் சொந்த அத்தை மகளையே, அவளுடைய முறைப் பையன்  கொலை செய்த சம்பவமும் நடந்திருக்கிறது.

ஒரு சம்பவத்தில் பெண்ணின் தாய் தந்தை இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண் இங்கே ஒரு உறவினர் வீட்டில் இருந்து கொண்டு படித்துக்கொண்டு இருக்கிறது. இது என்ன குடும்பம் என்று புரியவில்லை.

நேற்று செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி. முகநூல் மூலம் அறிமுகமானவர்கள். ஒரு லீவு நாளில் வெளியூர் போகலாம் என்று அழைத்தானாம். இரு தோழிகள் இரண்டு முகநூல் நண்பர்களுடன் வெளியூர் போனார்களாம். அங்கு லாட்ஜில் ரூம் போட்டுத் தங்கினார்களாம். பிறகு என்ன நடக்கும் என்பதுதான் நன்கு தெரியுமே? இப்பொது அவர்கள் போட்டோவைக் காட்டி மிரட்டுகிறார்களாம். அப்படீன்னு போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள்.

பால் குடிக்கும் பாப்பா. ஒன்றுமே தெரியாது பாருங்கள். இவர்களையெல்லாம் எப்படித் திருத்த முடியும்?

இது தவிர, நகைக்காக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து தாக்குவதும் கொலை செய்வதும் பல இடங்களில் நடந்துள்ளன.

இவை எல்லாம் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான் என்று சந்தேகப்பட வைக்கின்றது.

இதற்கென்ன காரணம் என்று மக்கள் சிந்திக்கவேண்டும். காரணம் எதுவாக இருப்பினும், தற்காப்புக்காக மக்கள் தேவையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தற்காப்புக்கான வழிமுறைகள் தெரிந்திருந்தும் கடைப்பிடிப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை.

குழந்தைகளைப் பெறுவது என்பது பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகும். குழந்தைகள் தானாக வளர்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருப்பது தவறு. அவர்களின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, அவர்கள் போகும் பாதை சரியானதுதானா என்று கண்காணிக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்.

நகரங்களில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் புதிதாக வீட்டிற்கு வரும் நபர்களை வீட்டினுள் எக்காரணம் கொண்டும் விடக்கூடாது. அப்படி வருபவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்பார்கள். இதுதான் வழக்கமான உத்தி. தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பது என்பது நமது பண்பாடு. வந்தவர்கள் வாசலில் நிற்க, கதவை அப்படியே திறந்த நிலையில் விட்டுவிட்டு வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றால், புதிதாக வந்தவன் வீட்டிற்குள் நுழைந்து கதவை உட்பக்கம் தாட்பாள் போட்டுவிட்டு கொலை செய்கிறான்.

ஒருவன் வாசலில் நிற்கும்போது எப்படி வாசல் கதவை சாத்தி தாளிட்டுவிட்டுப் போவது என்பது நம் பெண்களிடம் இருக்கும் ஒரு குணம். இந்த குணத்தைப் பயன்படுத்தித்தான் பல திருட்டுகள் நடக்கின்றன. வீட்டிற்கு ஒரு இரும்பு கிரில் கேட் போட்டு யார் வந்து என்ன விசாரித்தாலும் அதைத் திறக்காமல்தான்  பதில் சொல்லி அனுப்பவேண்டும். தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதனால் பாவம் வந்தாலும் சரி என்று இருக்கவேண்டும்.

பெண்கள் காலை நேரத்தில் நடைப் பயிற்சி செய்வது இப்போது அதிகரித்துள்ளது. அப்போது ஒருவராகச் செல்லுதல் கூடாது. தவிர நகைகள் போட்டுக் கொண்டு போவதும் உசிதமல்ல. இன்று தங்கம் விற்கும் விலையில் ஒரிரு பவுன்கள் நகைகள் கூட ஆபத்தாக இருக்கின்றன.

ஆனால் பலமுறை பட்டாலும் மனிதனின் மனோபாவம் மாறுவதில்லை என்பது ஒரு சோகமான சூழ்நிலை.

31 கருத்துகள்:

  1. பொன்னகை வேண்டாம் இனி புன்னகையே போதும்
    என்று உலகில் வாழும் காலம் நெருங்கி விட்டது ஐயா .
    திருடர்கள் தொல்லை அவ்வளவு பெரும் தொல்லையாகி
    விட்டது என்பதே உண்மை .அருமையான ஆக்கம் மிக்க
    நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  2. ஐயா. இந்த வயதில் இந்த மாதிரி தலைப்புகளில் நீங்கள் எழுதலாமா என்று நீங்கள் கேட்கலாம்."திருநீற்றின் மகிமை" என்று பதிவு போட்டால் எத்தனை பேர் பதிவைப் படிப்பார்கள். மீனைப் பிடிக்க தூண்டிலில் ஒரு புழுவை வைக்கத்தானே வேண்டும். எப்படிப்பட்ட நல்ல விஷயமானாலும் தலைப்பை கவர்ச்சியாக வைக்கவேண்டும் என்பது பதிவுலக நடைமுறையாகிவிட்ட பிறகு நான் மட்டும் விதிவிலக்காக இருந்தால் கடையில் கல்லா கட்டவேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியமில்லை,,, உங்கள் பதிவு காலம் கடந்து நிற்கும்,,

      நீக்கு
    2. அண்ணா வணக்கம். கடையில நெம்பக் கூட்டமுங்களா??!

      நீக்கு
    3. வாங்க, தம்பி. கடைல கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டம். இத்தனை கூட்டத்தை நான் என் பதிவுலக வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. பதிவு போட்ட 24 மணி நேரத்தில் 1735 பார்வையாளர்களும் 26 பின்னூட்டங்களும் சேர்ந்துள்ளன. பெரிய கம்பெனிக்காரன் எல்லாம் விளம்பர நல்ல விறத்பர வாசகங்களுக்கு ஏன் அவ்வளவு பணத்தை வாரி இறைக்கறான்னு இப்ப நான் நல்லா புரிஞ்சிகிட்டேன்.

      சரக்கு எப்படியிருந்தாலும் வெளிப்பூச்சு நல்லா இருந்தா வித்துப் போயிடும் அப்படீங்கறது தெள்ளத்தெளிவா புரியுது. ஆனா இந்த உத்தியை இனி நான் பயன்படுத்த மாட்டேன். எனக்கு இந்த விளம்பரம் வேண்டாம்.

      நீக்கு
    4. அட, இப்படிச் சொல்லிப் போட்டிங்களே?!

      நீக்கு
  3. ஊரோடு ஒத்துவாழ்!

    காதலிப்பது தவறே இல்லை; இது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம்; ஆனால், ஒரு பெண்ணை காதலி என்று சொல்வது பக்கா காலித்தனம்.

    அதேமாதிரி, நாம் காதலித்த பெண், எததனை வருடங்கள் காதலித்தாலும், ஒரு நாள் உன்னைப் பிடிக்கவில்லை என்றால்...பிடிக்கவில்லை தான். அவள் வாழ்கையில் இருந்து ஒதுங்குவது தான் ஆணுக்கு அழகு; சட்டமும் கூட.

    யோசித்துப் பாருங்கள்; திருமணத்திற்கு அப்புறம் பிரிவதற்கு பதில், முன்பே பிரிவது எவ்வளவோ மேல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் இந்தக் காலத்து இளைஞர்களின் மன நிலை புரியவில்லை. இருவர் ஒருவருக்கொருவர் விரும்புவதுதான் காதல். பெண் விரும்பாவிட்டால் அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டுவது எது?

      நீக்கு
  4. கொஞ்ச காலம் முன்பு எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் இதே போல நண்பர்களுடன் 'சுற்றுப்பயணம்' வந்த செய்தி நினைவுக்கு வருகிறது! பத்திரிகைகளில் பெரும்பாலும் இது மாதிரிச் செய்திகள்தானே படிக்கிறோம்? இதற்காகத்தான் எங்கள் ப்ளாக்கில் சனிக்கிழமைதோறும் அந்த வாரம் கண்ணில் படும் பாசிட்டிவ் செய்திகளைத் தொகுத்துத் தருகிறோம்!

    பதிலளிநீக்கு
  5. //தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதனால் பாவம் வந்தாலும் சரி என்று இருக்கவேண்டும்.//
    தங்கள் கருத்து சரியே. இந்த காலத்தில் யார் நல்லவர் யார் கேட்டவர் எனத் தெரியாத நிலையில், தனியே இருக்கும்போது தண்ணீர் தர வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
  6. கலிகாலம்...அப்படின்னு சொல்றாங்க ..அது இது தானோ..

    பதிலளிநீக்கு
  7. உண்மை அய்யா உங்கள் மனசு துடிப்பது இங்கு அமெரிக்காவில் இருக்கும் எனக்கு நன்கு கேட்கிறது அய்யா .பெண்கள் புரிந்து நடக்க வேண்டும் .நல்ல பதிவு அய்யா

    பதிலளிநீக்கு

  8. எந்த பிரச்னையையும் பேசித் தான் தீர்க்க வேண்டும் !

    தீர்த்து விட்டால் வாழும் நாள் முழுவதும் பேச முடியாமல் போய் விடும் !!

    பதிலளிநீக்கு
  9. ஆனால் பலமுறை பட்டாலும் மனிதனின் மனோபாவம் மாறுவதில்லை என்பது ஒரு சோகமான சூழ்நிலை.
    >>
    நிதர்சனமான உன்மை.

    பதிலளிநீக்கு
  10. ....."ஐயா. இந்த வயதில் இந்த மாதிரி தலைப்புகளில் நீங்கள் எழுதலாமா என்று நீங்கள் கேட்கலாம்."திருநீற்றின் மகிமை" என்று பதிவு போட்டால் எத்தனை பேர் பதிவைப் படிப்பார்கள்"
    ....
    எங்கள் சமுதாயத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் ஐயா.
    பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

    http://www.puthiyaulakam.com

    பதிலளிநீக்கு
  11. //இதற்கென்ன காரணம் என்று மக்கள் சிந்திக்கவேண்டும். காரணம் எதுவாக இருப்பினும், தற்காப்புக்காக மக்கள் தேவையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தற்காப்புக்கான வழிமுறைகள் தெரிந்திருந்தும் கடைப்பிடிப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை.//

    தப்பு செய்தவனுக்கே தண்டனைகள் கிடைக்கும்..

    தவறுகளை செய்யாமல் இருப்பதே சிறந்த தற்காப்பு

    பதிலளிநீக்கு
  12. உண்மையான சம்பவங்களைத் தாங்கிய பதிவு ஐயா
    ஆனாலும் பெண்கள் விடயத்தில் அவர்களின் பொடுபோக்குத் தன்மையும் இக்கால நாகரீக மோகமும்தான் தவறான வழிகளில் அவர்களைக் கொண்டு செல்கின்றன என்பதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  13. ”தற்காத்து” என்றார் வள்ளுவர்.பெண்கள் அதை உணர்ந்து நடத்தல் வேண்டும்.த.ம.8

    பதிலளிநீக்கு
  14. வெறும் விளம்பரத்துக்காக அல்லாமல் நல்லெண்ணத்தில் தானே தலைப்பு வைத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தலைப்புல என்ன இருக்கு? நான் எழுதிடிறேன் இந்த 'திருநீற்றின் மகிமை' தலைப்பில்...

    பதிலளிநீக்கு
  16. கலிகாலம் என்றுதான் சொல்லவேண்டும்.

    முன்எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
    அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
    காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்..
    அது எப்பவுமே போதையான நிலவரம்..

    - பாடல்: சினேகன் (படம்: கழுகு)


    பதிலளிநீக்கு
  18. \\ஐயா. இந்த வயதில் இந்த மாதிரி தலைப்புகளில் நீங்கள் எழுதலாமா என்று நீங்கள் கேட்கலாம்."திருநீற்றின் மகிமை" என்று பதிவு போட்டால் எத்தனை பேர் பதிவைப் படிப்பார்கள்.\\ இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்தாலும் தங்களைப் பற்றி அறிந்தவர்கள் அனைவருக்குமே தெரியும், நிச்சயம் கசமுசா என்று உள்ளே எதுவும் இருக்காது, கண்ணியமான பதிவுதான் என்று. திருநீற்றின் மகிமையை விட பெண்ணின் மானத்தைக் காப்பது பற்றி கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இன்டர்நெட்டில் சாட் செய்தே வலையில் எப்படித்தான் வீழ்த்துகிறார்களோ தெரியவில்லை. என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் குறிப்பிட்ட சதவிகிதம் ஏமாந்து கொண்டே தான் இருக்கிறார்கள். உதவி கேட்டு வீட்டுக்கு வந்து கொள்ளையடிப்பதைப் பார்க்கும் போது, வர வர கொஞ்ச நஞ்சம் இருக்கும் உதவும் மனமும் மொத்தமாகவே மக்களிடமிருந்து காணாமல் போய் விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  19. கலிகாலம்...அப்படின்னு சொல்றாங்க ..அது இது தானோ..

    பதிலளிநீக்கு
  20. இந்தப் பதிவுக்கும், அதன் தலைப்புக்கும் நான் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன் ...

    இந்தப் பதிவு பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருந்தால் ஏன் பிரச்சனை என்ற தொனியில் எழுதியது முறையான ஒன்றல்ல ..

    ஆண்கள் தான் மேற்சொன்ன பிரச்சனைகள் / குற்றங்களை செய்பவர்களாக இருக்கின்றார்கள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே .. அத்தோடு சமூக சுதந்திரம், விழிப்புணர்வு, அந்நியர்களோடு பழகும் விதங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையும், பெண்களை சுகிக்கவும், கசக்கி எறியவும் ஆண்களுக்கு கற்றுத் தந்த சமூகக் கோணலாகவே இச்சம்பவங்களை நான் பார்க்கின்றேன். நன்றிகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய தார்மீகக் கோபம் மிகவும் நியாயமானதே. பதிவின் தலைப்பு பெண்களை மட்டும் குற்றவாளிகள் போல் சித்தரிக்கிறது. இது நியாயமல்ல. அதற்காக பெண்கள் சமுதாயத்திடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

      முதலில் இந்தப் பதிவிற்கு "இளம் பெண்களின் கொலைகள்" என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். பதிவிடுவதற்கு சில விநாடிகளுக்கு முன்தான் அதிகமான வாசகர்களை ஈர்க்கலாமென்ற எண்ணத்தில் தலைப்பை மாற்றினேன். அதற்கு காலம் கடந்து வருந்தி என்ன பயன்?

      என்னுடைய அடுத்த பதிவில் இந்தக் கண்டனத்திற்கு என்னுடைய விளக்கம் அல்லது சமாதானம் அல்லது பாவமன்னிப்பு - ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளவும் - காணலாம்.

      நீக்கு
  21. எல்லாம் திரைப்பட மோகத்தினால் வருவது,
    திரைப்படத்தில் காதலை தவிர மனிதனுக்கு முக்கியமான விசயம் வேறு இல்லை என்று திரும்ப திரும்ப
    இளைஞர்களை நம்மப வைக்கிறாரக்ள்,
    இவங்களும் நடப்பதைதான் காட்டுகிறோம் என்கின்றனர், அவங்களும் படத்தை பார்த்துதான் செய்தோம் என்கின்றனர், இப்படியே போனா பூனைக்கு யார்தான் மணி கட்டுவது,

    (கொசுறு) கோவை கணபதியில் நடந்த கழத்தறுப்பு சம்பவ குற்றவாளி எனது நண்பருடன் வேலை செய்த சிறுவனாம் எனக்கு நேற்றுதான் விசயமே தெரிந்தது,,,,

    பதிலளிநீக்கு
  22. >இருக்கிறது. இது என்ன குடும்பம் என்று புரியவில்லை.


    நக்கலை ரசித்தேன்

    பதிலளிநீக்கு