எங்கள் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த நான்கு பூனைக்குட்டிகள் எங்கு போயின என்று தெரியாமல் வருந்திக்கொண்டிருந்தேன் அல்லவா. இப்போது கிடைத்த ஒரு நல்ல செய்தி.
எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஏழெட்டு வீடுகள் தள்ளி, ஒரு வீட்டில் ஒரு முஸ்லிம் பாய் கோழி மற்றும் மட்டன் பிரியாணிகள் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பார்சல் மட்டும்தான். பல இடங்களில் விற்பனை மையங்கள் உள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்கார அம்மா அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார்கள்.
நேற்று அவர்கள் சொன்ன தகவல். இந்த காணாமல் போன நான்கு பூனைக்குட்டிகளும் அந்த பிரியாணி கடையில்தான் இருக்கின்றனவாம். என் மாப்பிள்ளையும் அந்த வழியாகப் போகும்போது இவைகளைக் கண்டிருக்கிறார். நான் இன்னும் நேரில் பார்க்கவில்லை. ஆகவே, இந்த பூனைக்குட்டிகள் நல்ல வசதியான இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
தாய்ப் பூனை வேகாத இறைச்சிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குட்டிப்பூனைகளுக்கு பிரியாணியே கிடைப்பது ஆண்டவன் திருவிளையாடலே.
இந்த சம்பவத்தில் ஒரு அதிசயம் என்னவென்றால், முதலில் மூன்று குட்டிகள்தான் காணாமல் போயின. அவை பிரியாணிக் கடைக்குப் போய்விட்டன என்று இப்போது தெரிகிறது. அடுத்த நாள் காணாமல் போன ஒரு பூனைக்குட்டியும் எப்படி சரியாக அந்தப் பிரியாணிக் கடைக்கே சென்று மற்ற குட்டிகளுடன் சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்! ஒரு சமயம் அந்த மூன்று குட்டிகளில் ஒன்று திரும்பி வந்து, நல்ல இடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லி, இந்த நாலாவது குட்டியையும் கூட்டிக்கொண்டு போயிருக்குமோ?
இப்போது என் மனதை வாட்டும் விஷயம் என்னவென்றால், இந்த தாய்ப்பூனை தினமும் மூன்று வேளை எங்கள் வீட்டிற்கு வந்து தன் குட்டிகளைத் தேடுகிறது. அதன் குட்டிகள் பிரியாணிக்கடையில் வசதியாக இருக்கின்றன என்ற செய்தியை அதற்குப் புரிய வைப்பது எப்படி? யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும். ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?

இந்த குசும்பு நிறைய பேருக்கு புரியாது! ஆம்! அது கொங்கு நாட்டு [அ]சிங்கங்களுக்கு மட்டும் தான் புரியும்.
பதிலளிநீக்குஉள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி தெரிவது; அவருக்கு பல மொழிகள் தெரியும்! தெரியாதது அல்லது இதை பிரித்து மேய்ந்தால் தெரிவது; அதை, நான் சொல்லமாட்டேன்!
[[யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும். ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?]]
அப்பிராணியா தமாஷா நீங்க எழுதினதை பலர் வந்து திசை திருப்புவார்கள்; கவனம் தேவை; புரியும் என்று நினைக்கிறேன்!
பதிலளிநீக்கு[[ஒரு முஸ்லிம் பாய் பலவிதமான பிரியாணிகள் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பார்சல் மட்டும்தான். பல இடங்களில் விற்பனை மையங்கள் உள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்கார அம்மா அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார்கள்.
நேற்று அவர்கள் சொன்ன தகவல். இந்த காணாமல் போன நான்கு பூனைக்குட்டிகளும் அந்த பிரியாணி கடையில்தான் இருக்கின்றனவாம்.]]
ஐயையோ, பூனைகளையும் பிரியாணி பண்ணீடுவாங்கன்னு அர்த்தம் வருதோ? இதோ இப்ப மாத்தீடறேன்.
நீக்குமாத்தீட்டேன்.
நீக்குதாயின் உதவி இல்லாமல் குட்டிகள் தானே இடம் மாறியது ஆச்சர்யம். ஆனாலும் பத்திரமாக இருப்பது சந்தோஷம். தாய்க்கு குட்டிகள் இருப்பிடம் தெரியாமல் இருக்காது. இங்கு வந்து தேடுகிறது என்று நினைத்துக் கொள்கிறோம். அங்கு சென்று கேட்டால் தாய் அங்கு வந்து குட்டிகளுடன் சேர்ந்திருப்பதை அறியக் கூடும்!
பதிலளிநீக்கு//இந்த குசும்பு நிறைய பேருக்கு புரியாது! ஆம்!//
இதில் என்ன குசும்பு என்று நிஜமாகவே எனக்குப் புரியவில்லை.
எனக்கும்தான்.
நீக்குபூனைகள் எங்கிருந்தாலும் வாழ்க!
பதிலளிநீக்குஇப்பவும் புரியவில்லையா?
பதிலளிநீக்குநீங்க கொங்கு நாட்டு தங்கம்?
[[யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும். ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?]]
:)))))))))
பதிலளிநீக்குRegards,
Dondu N. Raghavan
உங்கள் பூனைக் குட்டிகள் இருக்கும் இடம் வேறயா !!!...
பதிலளிநீக்குநான் என்னமோ உங்க எல்லோருக்காவும் கஸ்ரப்பட்டு
சமைச்சு வச்ச "நவராத்திரி கொலு மண்டபத்தில" இருந்த
என் வீட்டு விருந்து ஒட்டு மொத்தமா காலியாகி இருக்கும்
என்று ஏங்கிப் போனேன் ஐயா ....பூனைப் பாசை எங்கள்
ஆதிராவுக்கு கட்டாயம் தெரிச்சிருக்கும் ஐயா :) கேட்டுப் பாருங்க :)))
எப்படியோ நல்ல சேதி சொன்னதுக்கு நன்றி.
பதிலளிநீக்குகாணோமுன்னதும் மனம் பதைபதைப்பா இருந்துச்சு. அம்மாவைக் கூட்டிக்கிட்டுப்போய் அங்கே விட்டுருங்க.
காணாமல் போன பூனைக்குட்டிகள் வசதியான இடத்தில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. தாய்ப்பூனையை (முடிந்தால்) தூக்கிக்கொண்டு போய் அதன் குட்டிகளுடன் விட்டுவிடலாம்.
பதிலளிநீக்குஓரு வழியா கதை முடிஞ்சது.
பதிலளிநீக்குபூனை பாஷைதானே?............நம்ம "காலம்" - கோவி.வி. கண்ணன் அவர்களுக்கு தெரியுமே!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?///
பதிலளிநீக்குஸ்.... அபா.....
அப்புறம் சொல்லுங்க ஐயா...
சொகமா?
:-)
'எங்கிருந்தாலும் வாழ்க!' :-)))
பதிலளிநீக்குஇப்ப சந்தோஷம் தானே ஐயா,.....
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்த் நம்பூதிரி ஒருவருக்கு பூனைப் பாஷை தெரியும் அவர் ஸ்கைப் ஐடிய தாரன் பேசுங்கோ....:)
எஸ் கேப்
''..யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும்...''
பதிலளிநீக்குஎன்ன ஒரு அருமையான கேள்வி. நானும் கோசிக்கிறேன் எப்படி இவைகளைச் சேர்க்கலாம் என்று. ஒரு தடவை குட்டிகள் இருக்கும் இடத்திற்கு தாயைக் கூட்டிக் கொண்டு போகலாம் பின்னர் நீங்கள் தடுத்தாலும் அது தானாகவே கோய் விடும். இது எனது சிந்தனை. சுவையான பதிவு.
நன்றி.ஐயா.
வேதா. இலங்காதிலகம்.
பூனை நாங்கள் வளர்க்கும் பூனை இல்லை. எங்கள் வீட்டு வட்டாரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் அநாமத்து பூனை. அதைப் பிடிக்கப்போய் அது பிராண்டி வைத்து அதனால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இயற்கை விட்ட வழியில் நடக்கட்டும்.
நீக்குநவராத்திரி காலம், வீட்டிலேயே 'சைவச் சாப்பாட்டு' ; பிரியாணி அது இது என்று எழுதி எங்கள் வயிற்றெரிச்சலைச் சம்பாதிக்கிறீர்கள் . சரி சரி குட்டிப் பூனைகளாவது எங்கு போவது என்று தெரிந்த வைத்திருக்கின்றன .
பதிலளிநீக்குபூனைக் குட்டிகள் அம்மாவின் துணையில்லாமல் இருக்க முடியாது என்ற காலம் வரை அவை தன்னிச்சையாக எங்கும் போகாது, பாதுகாப்பு கருதி அம்மா அவ்வப்போது அவற்றின் இடத்தை மாற்றிக் கொண்டேயிருந்தாலும், அவள் சொல்லாமல் எங்கேயும் அவை போகாது. அவ்வாறு போகின்றன என்றால் அவை வாழக் கற்றுக் கொண்டுவிட்டன என்று அர்த்தம், மிருங்கங்களில் அதற்க்கு மேல் பந்த பாசம் எல்லாம் கட், நம்மை மாதிரி கொள்ளு எள்ளு பேரன் வரைக்கும் தொடராது. தாய்ப் பூனை இன்னமும் தேடுவதாக நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அவள் விருப்பமின்றி யாரோ கொண்டு போய் விட்டிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. தற்போது அவளை தனது குட்டிகளுடன் சேர்த்து வைக்கவும் முடியாது, ஏனெனில் மற்றவர்கள் கை குட்டிகளின் மேல் பட்டுவிட்டால் அவற்றை முகர்ந்து பார்த்து நீ ஏன் பிள்ளையே இல்லை என்று தாய்ப் பூனை ரிஜெக்ட் செய்து விடுவாள். அதனால ஒன்னும் பண்ண முடியாது மனசை தேத்திக்குங்க சார்!!
பதிலளிநீக்குபூனை சைக்காலஜியை நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் கூறுவது உண்மை.
நீக்குஆமாம். அந்தக் கடையில் பிரியாணி நல்லா டேஸ்டா இருக்குமா? இதுக்கும் என்று நினைக்கிறன்!
பதிலளிநீக்கு//ஆமாம். அந்தக் கடையில் பிரியாணி நல்லா டேஸ்டா இருக்குமா? இருக்கும் என்று நினைக்கிறன்!//
நீக்கு1. அந்தக் கடை பிரியாணி நான் சாப்பிடுவதில்லை.
2. நீங்கள் வரும்போது வாங்கிக்கொடுக்கிறேன். சாப்பிட்டுவிட்டு உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.
3. இப்படியெல்லாம் உள்குத்து போடவேண்டியதில்லை. நேரடியாகவே பூனை பிரியாணி எப்படியிருக்கும் என்று கேட்கலாமே? உங்களுக்கு அந்த பிரியாணியையே போடச்சொல்லுகிறேன்.
அரசாங்கம் எலிக்கறி சாப்பிட சொல்லும்போது பூனைக்கறி சாப்பிட்டா எஎன்ன?
பதிலளிநீக்குஅதிர்ஷ்டம் இருந்தா பூனையுடன் [பூனை வயிற்றில்] எலி பிரியாணியும் சேர்த்தே கிடைக்கும்.
நமக்கு எப்படி கோழி பிரியாணி உயிரோ அது மாதிரி பூனைக்கு எலி!
நேர்ல வாங்க, உங்களைக் கவனிக்கவேண்டிய வகையில் கவனிச்சுக்கிறேன்.
நீக்கு