செவ்வாய், 2 அக்டோபர், 2012

லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதுவும் குற்றம்


மகாத்மா காந்தி நினைவுப் பதிவு

இந்த இரண்டும் குற்றமே இல்லை. போலீசில் மாட்டிக் கொள்வதுதான் குற்றம். நன்கு படித்த ஆசிரியர் சொல்லும் வார்த்தையா இது என்று பலரும் நினைக்கலாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இப்படி அடுக்கு மொழியில் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் நம் நாட்டின் நடைமுறையில், நான் மகாத்மா காந்தி மாதிரி சத்தியம் மட்டும்தான் பேசுவேன் என்று வாழும் தைரியம் எனக்கு இல்லை. ஒன்று மட்டும் என்னால் முடிந்தது. என் வாழ் நாளில் நான் எதற்கும் லஞ்சம் வாங்கியதில்லை. அப்படி வாய்ப்புள்ள வேலையில் நான் இருக்கவில்லை என்பதுதான் முழு உண்மை.

நான் பல இடங்களில் லஞ்சம் கொடுத்திருக்கிறேன். அதைப் பெரிய சாதனையாகவோ, கெட்டிக்காரத்தனமாகவோ நான் கருதவில்லை.   அதை நான் நியாயப் படுத்தவும் இல்லை.  என்னால் நேர்வழியில் சென்று அந்தக் காரியத்தை முடிக்க இயலவில்லை. அது என் கையாலாகத்தனம். அதை ஈடுகட்ட இந்த உபாயத்தைக் கையாண்டேன். அவ்வளவுதான்.

உதாரணத்திற்கு ஒரு காரியம். அந்தக்காலத்தில் கவர்ன்மென்ட் வேலை எதுவென்றாலும் அதற்குரிய பீஸை டிரஷரியில் கட்டி அந்த செலானைக் கொடுக்கவேண்டும். இந்த மாதிரி செலான் மூலம் பணம் கட்டியிருப்பவர்களுக்கு அதன் நடைமுறைகள் தெரியும்.

செலான் பாரம் வாங்குவதே ஒரு கலை. அதைப் பூர்த்தி செய்து உள்ளே கொடுத்தால் ஒரு மணி நேரம் கழித்து அதற்கு ஒரு நெம்பர் போட்டுக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுபோய் ஸ்டேட் பேங்கில் பணம் கட்டவேண்டும். ஏகப்பட்ட பேர் இருப்பார்கள். பணம் கட்டவே ஒரு மணி நேரம் ஆகும். பின் செலான் வர மாலை ஐந்து மணி ஆகும். கட்டாயம் ஒரு நாள் ஆகும்.

இந்த வேலையை முடித்துக்கொடுக்க புரோக்கர்கள் உண்டு. அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பணமும் கமிஷனும் கொடுத்துவிட்டு மறுநாள் போனால் செலான் ரெடியாக இருக்கும். இங்கு நான் சட்டப்பிரகாரம்தான் நடப்பேன் என்றால் வெட்டி அலைச்சல்தான் மிஞ்சும்.

ஆகவே என்னுடைய சுயநலத்திற்காக மனச்சாட்சிக்கு எதிராக செயல்பட்டிருக்கிறேன். இது சரியா இல்லை தவறா என்ற விவாதத்திற்கு முடிவே இருக்காது.

மகாத்மா காந்தியே இன்று உயிருடன் இருந்தாலும் நம் நாட்டின் தலைவிதியை மாற்ற அவரால் முடியாது என்பதுதான் உண்மை.

15 கருத்துகள்:

  1. நான் பல இடங்களில் லஞ்சம் கொடுத்திருக்கிறேன். அதைப் பெரிய சாதனையாகவோ, கெட்டிக்காரத்தனமாகவோ நான் கருதவில்லை. அதை நான் நியாயப் படுத்தவும் இல்லை. என்னால் நேர்வழியில் சென்று அந்தக் காரியத்தை முடிக்க இயலவில்லை. அது என் கையாலாகத்தனம். அதை ஈடுகட்ட இந்த உபாயத்தைக் கையாண்டேன். அவ்வளவுதான். /////

    ம்ம்ம்ம் இப்படி அவசியமான இடங்களில் லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்! உலகில் எல்லோரும் கெட்டவர்களாக இருக்கும் போது, நாம் மட்டும் நல்லவர்களாக இருந்து பயனில்லை சார்!

    அருமையான இடுகை!

    பதிலளிநீக்கு
  2. லஞ்சத்துக்கு ஒரு பண்பு உண்டு.அதைக் கொடுப்பவரும் வாங்குபவரும் ஏதாவது நியாயம் கற்பிக்க வைத்து விடும்.

    பதிலளிநீக்கு
  3. லஞ்சம் கொடுக்காமல் இருப்பது இந்தக் காலத்தில் ரொம்பக் கஷ்டம். வாங்காமலாவது இருக்கலாம். கோவணம் கட்டிய ஊரில் வேஷ்டி கட்டியவன் பைத்தியக் காரன் கதைதான்! ஆனால் இப்போது ஏகப் பட்ட சர்வீஸ்கள் வந்துள்ளன. எங்களுக்குச் சொல்லுங்கள் உங்கள் வேலையை நாங்கள் குறைந்த கட்டணத்தில் முடிக்கிறோம் என்றெல்லாம் நிறைய சேவைகள். நீங்கள் சொல்லியுள்ள சம்பவம் அந்த வகையில் சேர்ந்ததுதான்.

    பதிலளிநீக்கு
  4. /// என் வாழ் நாளில் நான் எதற்கும் லஞ்சம் வாங்கியதில்லை. அப்படி வாய்ப்புள்ள வேலையில் நான் இருக்கவில்லை என்பதுதான் முழு உண்மை. ///

    இதுவே போதுமே...

    லஞ்சம் என்பதே இப்போது இல்லை... பிரியமா தர்றது, அன்பா வாங்கிக்கிறது... லஞ்சம் என்பது 'அன்பளிப்பு' என்று மாறி பல வருடங்கள் ஆகி விட்டது சார்...

    நம்மை விட இந்த 'நவீன' கால குழந்தைகளிடம் கேட்டால் நிறைய யோசனைகளை கிடைக்கும்...!

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான். நாம் வேண்டுமானால் லஞ்சம் வாங்காமல் இருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் லஞ்சம் கொடுக்காமல் இருக்கமுடியாது.நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  6. Why blood? Same blood.........என் நிலையம் இதே தான். மாற்றம் என்பது எல்லா நிலைகளில் இருந்தும் வரவேண்டும் , காந்தி இருந்தப்போ தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை நாட்டுக்காக உடல்,பொருள் ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்தார்கள். தற்போது நிலைமை தலை கீழ். முதல் திருடன் நாட்டை ஆல்பவனாகத்தான் இருக்கிறான், அப்புறம் மக்கள் எப்படி இருப்பார்கள். அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி..........

    பதிலளிநீக்கு
  7. லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதுவும் குற்றம்


    மகாத்மா காந்தி நினைவுப் பதிவு ---!!!!1

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் அன்பரே நம் நாட்டின் நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

  9. எதற்கும் எங்கிருந்தோ தொடக்கம் வேண்டும். சில்லறை அலைச்சலுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் லஞ்சம் கொடுத்துவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் மனநிலையில் பலரும் இருக்கும்வரை ஆயிரம் மகாத்மாக்கள் வந்தாலும் திருத்த முடியாது. மகாத்மா வாழ்ந்து காண்பித்தார்.அதைத்தான் சத்திய சோதனை என்றார். இருக்கும் குறையை ஒப்புக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறது. சத்திய சோதனையின் முதல் படி....!

    பதிலளிநீக்கு
  10. நேரத்தை மிச்சப்படுத்த சிலசமயம் அப்படித்தான் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கமே இப்போது சேவை வரி (SERVICE TAX ) என்ற பெயரில் வசூல் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  11. லஞ்சம் என்று கூராதீர்கள் ஐயா.ஊக்க தொகை என்று கூரவும் அல்லது மேற்படி செலவுஎன்று வாஞ்சையுடன் கூறவும்.வேற என்ன செய்ய முடியும்.லஞ்சம் குடுக்காமல் வேலை முடிய வேண்டுமென்றால் ஒன்று அதிகாரத்தில் இருக்க வேண்டும் அல்லது பண பலத் தில் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகார துஷ்பிரயோகம், பணத்தால் ஆளை வாங்குவது அல்லது அடியாள் செட் பண்ணுவது எல்லாமே லஞ்சத்தினுள் அடக்கம்தானே?

      நீக்கு
  12. எனக்கு வயது 33 திருப்பூரை சேர்ந்தவன்....
    அன்பளிப்பு, ஊக்கத்துகை, வெகுமதி என்ன பேர் வச்சாலும் லஞ்சம் லஞ்சம்தான்
    என் வாழ்நாளில் நினைவு தெரிந்து நான் யாருக்கும் எதற்க்கும் லஞ்சம் கொடுத்ததே இல்லை...
    லஞ்சம் கேட்ட ஒரு எஸ்.ஐ இரண்டு போலிஸ் இரண்டு விஏஓ ஒரு வருவாய் ஆய்வாளர் (இறந்து விட்டார்)லஞ்சஒழிப்பு துறையில் மாட்ட வைத்து வழக்கு நடந்து வருகிறது.

    பதிலளிநீக்கு