புதன், 24 அக்டோபர், 2012

ஆயுத பூஜையும் நானும்

ஒரு மாதமாகவே வீட்டில் என் இல்லத்தரசி பண்ணுகிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை. காலையில் எழுந்தவுடன் இன்றைக்கு உங்கள் புஸ்தகங்களை எல்லாம் எடுத்து தூசி தட்டி, அலமாரிக்கு வேறு ஷீட் போட்டு, புத்தகங்களைத் திரும்பவும் அடுக்கி வையுங்கள் என்று ஆர்டர். புஸதகங்களைத் திரும்பவும் அலமாரியில் வைப்பதானால் அவைகளை ஏன் வெளியே எடுக்கவேண்டும் என்பது என் வாதம். ஆனால் அந்த வாதம் எடுபடவில்லை.

தானும் சும்மா இருக்கமாட்டாள். வேலைக்காரியைப் பிடித்து வைத்துக் கொண்டு தினம் ஒரு ரூமாக கிளீன் பண்ணவும், மெத்தைகளை வெயிலில் போட்டு எடுக்கவும், பரணில் சிவனே என்று கிடந்த சாமான்களை இறக்கி, கழுவி, திரும்பவும் பரணில் வைக்கவுமாக ஏகப்பட்ட கந்தரகோளங்கள் செய்த வண்ணமாகவே இருந்தாள். என்னை மதியம் தூங்க விடவில்லை.

இவைகள் எல்லாம் இந்த ஆயுத பூஜைக்கான முஸ்தீபுகள். ஒரு வழியாக நேற்றுடன் ஆயுத பூஜை களேபரங்கள் முடிவுக்கு வந்தன. இனி பொங்கல் சமயத்தில் இந்த களேபரங்கள் மறுபடி ஆரம்பிக்கும்.

கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்துக்கள் மத்தியில் இந்த பண்டிகைகள் நீங்காத இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பொங்கல் விவசாயிகளின் நன்றித்திருவிழா. ஆயுத பூஜை நாம் செய்யும் தொழிலுக்குச் செய்யும் பூஜை. தீபாவளி புதுத் துணிகள் வாங்கி அணியவும், பலகாரங்கள் செய்து சாப்பிடவும், புது மாப்பிள்ளைகள் கல்யாணத்தில் விட்டுப்போன  சீர்வரிசைகளை மாமனாரிடமிருந்து பிடுங்கவும் ஏற்படுத்தப்பட்ட பண்டிகை.

எல்லாப் பண்டிகைகளும்,  நாம் தெய்வத்தை முன்னிலைப் படுத்தி கொண்டாடினாலும், நமக்கு அன்றாட இயந்திர வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுபட்ட விழாவாக அமைகிறது. இந்த மாறுதல் மனிதனுக்கு அவசியமாகிறது. ஆகவே சமூக ரீதியாக இத்தகைய விழாக்கள் பல நன்மைகள் தருகின்றன.

எங்கள் வீட்டிலும் இந்த விழாக்களைத் தவறாமல் கொண்டாடுகிறோம். எங்கள் வீட்டு ஆயுத பூஜை படங்கள் சில.



என் புத்தக அலமாரி - நானே கிளீன் செய்தது.


என்னுடைய வொர்க் டேபிள் அதாவது வேலை செய்யும் இடம். என்ன வேலை என்று கேட்கப்படாது. இருந்தாலும் சொல்லுகிறேன். படித்தல். என்னென்ன படிப்பேன் என்று கேட்கிறீர்களா? செய்தித்தாள்கள், கல்யாணப் பத்திரிகைகள், பேங்க் பாஸ் புத்தகங்கள், இவைகள்தான். ரிடைர்டு ஆன 78 வயசு இளைஞன் வேறென்ன படிக்கவேண்டும்?


எல்லோருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.


31 கருத்துகள்:

  1. [[ஒரு மாதமாகவே வீட்டில் என் இல்லத்தரசி பண்ணுகிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை.]]

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! நீங்க எப்படிப்பட்ட ஆளு உங்க போக்குவரத்து என்ன என்பதை என்னால் யூகிக்க முடியுது!?


    [[என்னென்ன படிப்பேன் என்று கேட்கிறீர்களா? செய்தித்தாள்கள், கல்யாணப் பத்திரிகைகள், பேங்க் பாஸ் புத்தகங்கள்]]

    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. Hello! மறந்துட்டேன்! தமிழ்மணத்தில் உங்க பதிவைக் காணோமே! இங்கு த.ம. தெரியவில்லை; அங்கு எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணம் நேற்றிலிருந்தே தகராறு பண்ணுகிறது. ஒரு சமயம் கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு ஆயுத பூஜை போடுகிறார்களோ என்னமோ?

      நீக்கு
  3. விழாக்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரி. தீபாவளி பற்றிச் சொல்லியிருப்பது புன்னகைக்க வைத்தது. சுத்தம் சோறு போடும்! சுத்தம் செய்வது ஒரு பதிவுக்கும் வழி வகுக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்டா பாயின்ட்டப் புடிச்சிட்டீங்க!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம்...
      [[சுத்தம் சோறு போடும்!]]
      சும்மா தமாஷ்! நம் முன்னோர்கள் வாய்க்கு வந்தபடி ஏதாவது சொல்லிவிட்டு போய்டுவாங்க...அதையே இப்ப சொன்னா எப்படி?

      இந்தியாவில் வேணா சுத்தம் சோறு போடும்! இங்கு அமெரிக்காவில் உழைச்சா தான் பூவா aka சோறு!

      நீக்கு
    3. ஆனா அங்கேயும் சுத்தமா உழைக்கணும், இல்லீங்களா? 8 மணி ஆபீசுக்கு 7.59 க்கு சீட்ல இருக்கணும். எங்கூர்ல 8 மணிக்கு வீட்டை விட்டு கெளம்பீட்டா போதும்.

      நீக்கு
  4. கருவிகள் வழிபாடு (தமிழாக்கம் சரிதானே!) பற்றிய பதிவு அருமை. அதுவும் அழகிய புகைப்படங்களுடன் விளக்கம் தந்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு பேராசிரியர் அவர்களிடம் பாடம் கேட்பதுபோல் இருந்தது! விழாக்கால வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. //அமெரிக்காவில் உழைச்சா தான் பூவா //

    It is so fortunate that Americans live to work !!!! The whole world is alive because of America. Without America, we have to die without food. You made my day.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் சூப்பர்ப்...

    விழாக்கால வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போல உங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு ஒரு பதிவு. தமிழ்நாட்டில் பெரும்பாலும் மெக்கானிக்குகள் ( குறிப்பாக பட்டறைகள் வைத்திருப்பவர்கள் ) அனைவரும் இந்த பண்டிகையை சமய வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடு கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    விழாக்கால வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. நாம் புழங்கும் , வசிக்கும் இடமெல்லாம் எப்போதும் சுத்தமாக இருந்தாலே மனதில் ஒரு உற்சாகம் இருக்குமே அதனை நீங்கள் அனுபவித்தது இல்லையா என்ன?
    அந்த உற்சாகம் வேண்டுமெனில் அவ்வப்போது சுத்தம் செய்யத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு நேர் எதிர்த்தான். எனக்கும் அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருக்கவேண்டும். பிள்ளைகள் இதற்க்கு நேர் எதிர். உங்களைப்போலவே சலித்துக்கொள்வார்கள். வயசான காலத்தில் நம்ம " பெண்டை" எடுக்க நமக்கென்று யாராவது இருப்பார்கள்தானே !

    பதிலளிநீக்கு
  9. ஐயா லேட்டாக நான் வந்த.தால் விசயதசமி வாழ்த்துகள்.என்னங்கையா இரண்டு கம்யூட்டர் வாங்கி பயன் படுத்த ஆரம்சிடீங்கலா !
    படம் 1,2ஆதாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்ப்யூட்டருக்குப் பக்கத்தில இருக்கிறது கருணாநிதி டி.வி. வொர்க் டேபிள்ல இருக்கிறது போட்டோ வியூயர். போட்டோக்களை லோட் பண்ணிவிட்டால் ஸ்லைடு ஷோவாக வந்து கொண்டே இருக்கும். போன வருடம் சிங்கப்பூர் போயிருந்தபோது வாங்கிவந்தேன்.

      ஒரு கம்ப்யூட்டர்ல குப்பை கொட்டினா போதாதுங்களா? ஆனா அதுல விண்டோஸ் 8 ஆபரேட்டிங்க் புரோக்ராமைப் போடப்போறேன். இப்போ விண் 8 ரிலீஸ் பிரிவியூ போட்டிருக்கிறேன்.

      நீக்கு
  10. விழாக்கால வாழ்த்துக்கள் அய்யா. ஆயுத பூஜையில் ஆயுதத்தையே காணோமே. ரெண்டு அருவாளையாவது வைத்துருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  11. அதுசரி 78 வயது இளைஞருக்கு எத்தனையோ வேலை இருக்கலாம் ஐயா...
    உங்க புத்தக அலமாரிய மட்டும் நல்லா கிளீன் பண்ணியிருக்கீங்க போல...

    பதிலளிநீக்கு
  12. இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.

    இப்படி வீட்டம்மா ஜரூரா சுத்தப்படுத்தலைன்னா தூசிதும்பு குவிஞ்சுபோயிரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான். ஆ, ஊன்னா நீங்க எல்லாரும் ஒண்ணா சேந்துக்குவீங்களே. நன்றி.

      நீக்கு
  13. தமிழ்மணத்தில் இந்த இடுகை இல்லை; எனவே உங்க பதிவை இன்னிக்கு காலையிலே நான் தான் தமிழ்மணத்தில் ஏத்தினேன்! இதுக்கு நன்றி என்று எல்லாம் சொல்லவேண்டாம்! சும்மா ஒரு கிளிக் தான்!

    [[இல்லத்தரசி பண்ணுகிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை.]]
    அரசிகளே அப்படித்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவில இருக்கற உங்க கமென்ட்டுகளைப் படித்தேன். அதைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்ச நாளா பதிவுலகம் ஸ்மூத்தா போய்ட்டு இருக்கேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இந்த வெவகாரத்தினால நல்லா சூடு பிடிச்சிருக்கு. அப்பப்போ இந்த மாதிரி ஏதாச்சும் நடந்தாத்தான் பதிவுலகம் விறுவிறுப்பா இருக்கும். நமக்கும் வேடிக்கை பாத்தாப்ல இருக்கும்.

      http://hollywoodraj.blogspot.in/2012/10/blog-post.html

      நீக்கு
  14. கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்துக்கள் மத்தியில் இந்த பண்டிகைகள் நீங்காத இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பொங்கல் விவசாயிகளின் நன்றித்திருவிழா. ஆயுத பூஜை நாம் செய்யும் தொழிலுக்குச் செய்யும் பூஜை. தீபாவளி புதுத் துணிகள் வாங்கி அணியவும், பலகாரங்கள் செய்து சாப்பிடவும், புது மாப்பிள்ளைகள் கல்யாணத்தில் விட்டுப்போன சீர்வரிசைகளை மாமனாரிடமிருந்து பிடுங்கவும் ஏற்படுத்தப்பட்ட பண்டிகை.//

    அருமையான கருத்து
    மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
    நீங்கள் அதிகம் உலவும்
    உங்கள் சிந்தனைப் பூங்கா மிக மிக அருமை
    படங்களுடன் பதிவு மனம் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  15. ஆயுத பூஜைக்கு உங்க வீட்டுக்கே வந்த சந்தோசம் சார் நன்றி. உங்க டேபிள் மேல புதுக் கழுதைய கட்டி போட்டிருக்கீங்க போலிருக்கே!!

    பதிலளிநீக்கு
  16. விஜயதசமி வாழ்த்துகள்.
    ரசனையான பகிர்வு.

    பதிலளிநீக்கு