சனி, 16 மார்ச், 2013

திசை திருப்பப்படும் மாணவர்கள்

இந்தப் பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களையும் படிக்கவும். அவை பதிவை விட மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன.


1965 ம் வருடம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் திரளான மாணவர்கள் பங்கேற்ற போராட்டம் அது. பின்னணியாக இருந்து இந்தப் போராட்டத்தை வழி நடத்தியவர்கள் அரசியல்வாதிகள்.

அன்றைய முதல் அமைச்சர் நிலைமையைத் தவறாக கையாண்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களில் ஓரிரண்டு பேரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் மாணவர்களல்ல. மாணவர்களின் பெயரில் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தார்கள்.

எது எப்படியோ, இந்தப் போராட்டத்தினாலும் அடுத்து ஓரிரண்டு ஆண்டுகளில் தொடர்ந்த இன்னொரு போராட்டத்தினாலும், அடுத்து வந்த தேர்தலில், அந்த முதலமைச்சரின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதுவரை தேர்தலையே சந்தித்திராத கட்சி ஆட்சிக்கு வந்தது. இது வரலாறு.

இந்த வரலாற்றின் மூலம் அரசியல் கட்சிகள் கற்றுக்கொண்டது என்னவென்றால் மாணவர்களை வைத்து நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. மாணவர்களுக்கு இது புரியாது. அவர்கள் தூண்டுதலுக்கு அடிமையாவார்கள். மாணவர்களுக்குள் சரியான ஒருவனைப் பிடித்து அவனுக்கு பல ஆசைகளைக் காட்டி, அவன் மூலமாக போராட்டத்தை நடத்துவது என்பது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இதை எப்படி தீர்ப்பது என்று ஒருவருக்கும் தெளிவான கருத்து இல்லை. ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் அமெரிக்கா ஏன் தீர்மானம் கொண்டு வருகிறது என்பதை மாணவர்களும் மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். அதை இந்தியா ஆதரிப்பதினால் ஈழத்தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றும் யோசிக்கவேண்டும்.

அதை விட்டு விட்டு வேறு ஏதோ அரசியல் காரணங்களுக்காக இந்த மாணவர் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார்கள். மாணவ சமுதாயத்தை இந்த மாயையிலிருந்து யார் காப்பாற்றுவார்களோ, தெரியவில்லை.

ஒரு முன்னாள் ஆசிரியன்.
__________________________________________________________________________

17-3-2013 பின் சேர்க்கை:


மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.


____________________________________________________________________________________________________


இதையும் படியுங்கள் அன்பர்களே:

http://vivasaayi.blogspot.in/2013/03/blog-post_18.html

45 கருத்துகள்:


  1. தகமைகள் அற்ற தலமைகள், சூழ்நிலைக்கு ஏற்றதுப்போல் செயல்லாற்றும் திறன் இல்லை. தம் பதவிகளும், புகழுமே குறிகோள். பாவம் அப்பாவி மாணவர்கள்

    பதிலளிநீக்கு
  2. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை வச்சுதான் ஆட்சியையே புடிச்சானுங்க, ஹிந்தி தெரியாத தமிழன் ஆண்டி. ஆட்சிக்கு வந்தவன் பிள்ளை குட்டியோட சுக போகமா இருக்கான்.

    பதிலளிநீக்கு
  3. முதலில் உங்களுக்கு மாணவர்களின் கோரிக்கைகள் பற்றிய அடிப்படைப் புரிதலே இல்லை.

    *** அதை இந்தியா ஆதரிப்பதினால் ஈழத்தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா ****

    கண்டிப்பாகத் தீராது என்பதுதான் மாணவர்களின் நிலைபாடே! அதனால்தான் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை அவர்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறார்கள். சுதந்திரமான, சர்வதேச நீதி விசாரனை வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. மேலும் ஈழ + புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனிநாடு குறித்துப் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்பதும் அவர்களது அடுத்த கோரிக்கை.

    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈழப்பிரச்சினை பற்றிய என் புரிதல் மிகமிக மேலோட்டமானது. எனக்கு அந்தப் பிரச்சினையில் ஈடுபாடு இல்லை.

      மாணவர்கள் போராடுகிறார்கள் என்பது மட்டுமே எனக்குப் புரிந்த ஒன்று. எதற்காகப் போராடுகிறார்கள் என்று தெரியாது.

      ஆனால் மாணவர்கள் இந்த மாதிரி காரணங்களுக்காக அரசியல் கட்சிகளின் பகடைக் காய்களாக செயல்படுகிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குப் புரிந்த விஷயம். இத்தகைய போராட்டங்களினால் அரசியல் கட்சிகளுக்குத்தான் லாபமே தவிர மாணவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பது என் அனுபவம்.

      நீக்கு
    2. // மாணவர்கள் போராடுகிறார்கள் என்பது மட்டுமே எனக்குப் புரிந்த ஒன்று. எதற்காகப் போராடுகிறார்கள் என்று தெரியாது.
      ஆனால் மாணவர்கள் இந்த மாதிரி காரணங்களுக்காக அரசியல் கட்சிகளின் பகடைக் காய்களாக செயல்படுகிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குப் புரிந்த விஷயம்.//

      தற்போது நடக்கும் மாணவர் போராட்டத்தினால் இலங்கை தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறதே, அதன் பயனாக (அனைவரும் குற்றம் சாட்டும்) திமுக தலைவர் கருணாநிதியும் கூட "இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை" என்று கூறியுள்ளாரே, அது கூடவா ஐயா உங்களுக்கு புரியவில்லை?

      தயவுசெய்து தன் எழுச்சியாக போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.

      நீக்கு
    3. கருணாநிதி சொல்வதின் எட்பொருள் எனக்கு நன்றாகப் புரிகிறது. உங்களுக்குத்தான் புரியவில்லை. மந்திர சபையிலிருந்து விலகுவோம் என்றா சொல்கிறார்? "நீடிப்பதில் அர்த்தமில்லை" என்கிறார். இது சினிமா வசனம். அவர் விலகமாட்டார்.

      தன் எழுச்சியாகவோ, அரசியல்வதிகளின் சூழ்ச்சியாலோ மாணவர்கள் போராட்டத்தினால் எள்ளவும் பயன் ஏற்படாது. போறுத்திருந்து பார்க்கவும்.

      இதையும் படியுங்கள்:


      Premraj Thangavel commented on your status.
      Premraj wrote: "One of the main reasons why the Opposition has failed to capitalise on the government’s political difficulties which are legion, gain some traction and eat into the SLFP’s vote bank is the prevalence of external threats to the country. The government’s support base consists mainly of nationalistic masses in semi-urban and rural areas, who account for about 85 per cent of the population and with their support the ruling party could trump the Opposition electorally or otherwise. The Eelam campaign in Tamil Nadu, New Delhi’s hostility, the LTTE’s Sri Lanka bashing overseas and the determined efforts by some western government to launch a war crimes probe pose formidable challenges to the UPFA coalition internationally, but paradoxically they are a blessing at home in that the government uses the hostile international campaign to retain public sympathy and win elections. The harder it gets bashed in Geneva, the more popular it becomes among its supporters at home! When the much publicised US-sponsored resolution against Sri Lanka is taken up shortly at the UNHRC sessions with India backing it, most Sri Lankans antipathetic to such duplicitous diplomatic moves which benefit only the LTTE and its backers in Tamil Nadu and elsewhere will forget their economic woes, sink their differences and rally round the government. This is the political reality whether one likes it or not. The Opposition predicts a breakaway of some disgruntled government bigwigs sooner or later, but the question is whether anyone currently savouring power would ever want to jump from a sailing ship to a schooner in the doldrums with a mutiny onboard. That would have been possible if the UNP had sorted out its internal problems and made a comeback as a robust political force holding out the promise of capturing power in the near future."

      நீக்கு
  4. மாணவர்களுக்கு அரசியல் அறிவு தேவைதான். ஆனால் படிக்கும்போது எந்த வித போராட்டத்திலும் பங்குகொண்டு படிப்பை வீணாக்கக் கூடாது. அரசியல் கட்சிகளும் தங்களது சுய இலாபத்திருக்கு மாணவர்களை பகடைக் காய்களாக உபயோகப்படுத்தக்கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.

    பதிலளிநீக்கு
  5. //மாணவர்களுக்கு அரசியல் அறிவு தேவைதான். ஆனால் படிக்கும்போது எந்த வித போராட்டத்திலும் பங்குகொண்டு படிப்பை வீணாக்கக் கூடாது. அரசியல் கட்சிகளும் தங்களது சுய இலாபத்திருக்கு மாணவர்களை பகடைக் காய்களாக உபயோகப்படுத்தக்கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.
    ழப்பிரச்சினை பற்றிய என் புரிதல் மிகமிக மேலோட்டமானது. எனக்கு அந்தப் பிரச்சினையில் ஈடுபாடு இல்லை.//

    //மாணவர்கள் போராடுகிறார்கள் என்பது மட்டுமே எனக்குப் புரிந்த ஒன்று. எதற்காகப் போராடுகிறார்கள் என்று தெரியாது.

    ஆனால் மாணவர்கள் இந்த மாதிரி காரணங்களுக்காக அரசியல் கட்சிகளின் பகடைக் காய்களாக செயல்படுகிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குப் புரிந்த விஷயம். இத்தகைய போராட்டங்களினால் அரசியல் கட்சிகளுக்குத்தான் லாபமே தவிர மாணவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பது என் அனுபவம்.//
    unmai.murrilum unmai
    kalakarthik

    பதிலளிநீக்கு
  6. ஐயா, ஒரு ஈழத்தமிழன் மிகுந்த வலியோடு எழுதுகின்றேன்.
    மாணவர்கள் எதற்காக போராடுகின்றார்கள் என்று தெரியாமலேயே கருத்து சொல்கின்றீர்களே? இது நியாயமா?
    தமிழ்நாட்டிலிருந்து வெறும் முப்பது கிலோமீட்டர் தூரத்தில் நடந்த ஒரு லட்சம் மக்களின் இனப்படுகொலை பற்றி எதுவுமே தெரியாமல் எனக்கு அந்த பிரச்சனையில் எந்த ஈடுபாடுமில்லை என்று சொல்வதற்கு எவ்வாறான ஈவிரக்கமற்ற மனம் இருக்கட்டும்.

    வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள தமிழன் அவர்களுக்கு, ஈழத்தமிழரின் நிலைக்கு நான் மிகுந்த அனுதாபப் படுகிறேன்.

      மாணவர்கள் போராட்டம், எதற்காகவாக இருந்தாலும், அது சரியல்ல என்பதுதான் எனது கருத்து. இன்னும் 15 நாளில் இவர்கள் போராட்டம் நின்றுவிடும். அப்புறம் யார் ஈழத்தமிழர்களுக்காகப் போராடப் போகிறார்கள்?

      இதுவரை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்காக என்ன செய்திருக்கிறார்கள்? ஈழத்தமிழர்களுக்கிடையேயே ஒற்றுமை இல்லாததினால்தான் பிரபாகரன் தோல்வியைத் தழுவினார்.

      ஈழத்தமிழர் பிரச்சினை என்னவென்று அவர்களுக்கே தெரியாதே? தமிழ்நாட்டில் வாழும் எங்களுக்கு என்ன தெரியும்? வாய் வார்த்தைகளினாலேயே தமிழ் ஈழம் வாங்கிவிடுவோம் என்று பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.

      இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலை நடந்தபோது என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள்?

      ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி வருடக்கணக்கில் பேசலாம். பலன் ஒன்றும் விளையப்போவதில்லை. ஈழத்தமிழர் பிரச்சினை அவர்களாகவே ஒரு நூற்றாண்டாக வளர்த்துக்கொண்ட பிரச்சினை. இதை யாரும் தீர்க்கமுடியாது.

      நீக்கு
    2. மிக சரி! இதனால் இங்கு எந்தவொரு மாற்றமும் வர போவதில்லை.!!

      நீக்கு

  7. // இலங்கைத் தமிழர் பிரச்சினை 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இதை எப்படி தீர்ப்பது என்று ஒருவருக்கும் தெளிவான கருத்து இல்லை. //

    சரியாகச் சொன்னீர்கள். இன்று போராட்டம் நடத்தும் மாணவர்கள் பலர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. வழக்கு வாய்தா என்று பின்னாளில் பெற்றோரோடு அலையும்போதுதான், இவர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகளின் சுயரூபம் தெரியவரும்.

    அடுத்தவன் வீட்டுப் பிள்ளைகளை உசுப்பேற்றி விடும்,எந்த அரசியல்வாதியும் தனது வீட்டுப் பிள்ளைகளை இதுமாதிரியான போராட்டங்களில் ப்ங்கேற்கச் சொல்லுவதில்லை.

    பதிலளிநீக்கு
  8. மாணவர் போராட்டமோ அலுலது வேறு யாருடைய போராட்டமோ, அதைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதற்கு முன்பு, எதற்காகப் போராடுகிறார்கள், என்ன கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்யும் குறைந்தபட்ச நேர்மையாவது இருக்க வேண்டும். 'என்ன போராட்ட்ம, எதற்காகப் போராட்டம் என்றெல்லாம் எதுவும் தெரியாது, தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை, ஆனால் அதைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதற்கு மட்டும் முதல் ஆளாக நிற்பேன் என்றால் உங்களது கருத்துகள் எள்ள்ளவும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல. இலவசமாக பிளாகர் இருக்கிறது என்பதற்காக கைக்கு வந்ததையெல்லாம் எழுதுவது என்பது இதுதான்.

    உங்களைப் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதும் மாணவர்களின் நோக்கங்களில் ஒன்று என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்!

    இன்னொன்று 1965-ல் இந்தியை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மேல் எனக்கு மிகுந்த நன்றி உள்ளது. அவர்களால்தான் இரண்டு தலைமுறைகள் கட்டாய இந்தி என்னும் அவமானத்திலிருந்து தப்பியிருக்கின்றன.

    பை த வே; இன்னும் சிலர் முட்டி மோதி பிராத்மிக், பிரவீன், ராஷ்ட்ரபாஷா என்று வலியப் போய் மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றால் பைசா பிரயோசனம் இல்லை. அதிலும் இந்த வாரம் நடந்த பிரவீனோ என்னவோ ரொம்பக் கஷ்டம் என்று சிலர் கண்ணீர் விட்டதை என்ன சொல்ல?! இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி மாநிலங்களிலேயே ஏன் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கோடிக்கணக்கில் வேலை கேட்டுக் காத்திருப்போர் பட்டியல் இருக்கிறது?!

    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தி படிக்காததால் தமிழ் நாட்டு மக்ளுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். நான் அனுபவித்திருக்கிறேன். அது முடிந்து போன சமாச்சாரம்.

      இப்போது மாணவர்கள் போராட்டம் நடத்தும் பிரச்சினை இன்றைக்கு முளைத்த பிரச்சினையா? மாணவர்களுக்கும் அந்தப் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? படிப்பதை விட்டுவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன சாதிக்கப்போகிறார்கள்? இன்னும் 15 நாளில் மாணவர்கள் அவர்கள் வேலையைப் பார்க்கப்போய்விடுவார்கள். அதற்குள் இந்த தமிழீழம் வாங்கிவிடுவீர்களா? அப்படி வாங்கினால் ரொம்ப சந்தோஷம்.

      என்னைப்போன்றவர்களுக்கு விழிப்பு ஊட்டுவது தேவையில்லை. அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்கள் தாங்கள் யாருடைய பகடைக் காய்களாக உருட்டப்படுகிறார்கள் என்று புரிந்து கொண்டால் போதும்.

      என்னுடைய கருத்து பொருட்படுத்தப்பட வேண்டியதுதானா, அல்லவா என்று காலம் சொல்லும். உங்களுக்கு அந்த வீண்வேலை எதற்கு?

      நீக்கு
  9. மாணவர்கள் தவறான வழியில் நடத்தி செல்லபடுகிறார்கள். படிக்க வைக்கும் பெற்றோருக்கு தெரியும் அதன் வலி. மாணவர்கள் போராட்ட நிதி எங்கே இருந்து வருகிறது என தெரியாதா? இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை அழித்து விட்டு தற்போது தமிழகம் நோக்கி வருகிறது அந்த படை.

    தெளிவாக நிதானமாக அருமையாக யதார்த்தை பதிவு செய்து உள்ளீர். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. மாணவர்கள் கோரிக்கை ஒரு பார்வை

    1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

    சரி நிறைவேற்ற வேண்டாம்,அப்புறம் என்ன நடக்க போகுது

    2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

    சரி, அதை என்ன செய்ய சொல்றீங்க. பிரபாகரன் குட்டி குட்டி குழந்தைகளுக்கு எல்லாம் கழுத்துல சயனைடு கட்டி அனுப்பிய போது என்ன செய்தீங்க?? அது என்ன கணக்குல வருது


    3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

    எந்த தமீழ மக்களுக்கு?

    மலையக தமிழ் மக்களுக்காகவா? ( இவங்க ஒரு விதத்தில் நமக்கு சொந்தகாரங்க)
    புலிகளால் அடித்து விரட்டபட்ட இஸ்லாமிய தமிழர்கள்
    கிழக்கு மகாண தமிழர்கள்
    கொழும்பு வாழ் தமிழர்கள்
    வடக்கு தமிழர்கள்

    இதில் ஒருத்தனுக்கு அடுத்தவனை பிடிக்காது. எந்த தமிழன் என்று தெளிவாக சொல்லவும்


    4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

    ஆமாம் துண்டித்த பின் என்ன் ஆக போவுது?

    5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

    இந்தியா மட்டும் பொருளாதார தடை விதித்தால் ஒன்றும் ஆக போவதில்லை. முதலில் இலங்கையில் ஏற்றுமதி இறக்குமதி பத்தி தெரிந்து கொள்ளுங்கள்

    6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

    காமேடி

    7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
    இதுவும் காமேடி

    8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.


    9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

    எந்த மாணவர் வருமான வரி கட்டுகிறார். ஏதோ இவங்க கோடி கோடிய கொடுத்தது போல சொல்றாங்க

    பதிலளிநீக்கு
  11. பழனி அண்ணா, இப்போது நடந்துவரும் நாடக போராட்டங்களை நீங்கள் மட்டுமதான் சரியான கண் கொண்டு பார்த்திருக்கிறீர்கள். வெளிநாடுவாழ் இலங்கை தமிழர்கள் இலங்கையில் அமைதி ஏற்பட்டால் தங்களின் அகதிபாஸ் ரத்தாகி தங்களின் சொகுசு வாழ்க்கை பறிபோய்விடும் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஈழம் என்ற வார்த்தை நெருப்பை அணையவிடாமல் ஊதி ஊதி எறிக்கின்றனர். ஒருவேளைக் கஞ்சி இப்போதைக்கு கிடைத்தால் பசியாற போதுமென நாங்கள் இருக்கும் போது பிரியாணியும் பீடாவும் கொடு என அவர்களை வெறியேற்றி கஞ்சிக்கும் வேட்டு வைத்து அதைக்காட்டி தங்கள் அகதி பாஸை ரினிவல் செய்து கொள்ள குரல் கொடுப்பவர்களை விட சிங்களவன் தரும் ஒரு குவளை தண்ணீரே இப்போதைக்கு எம்மக்களுக்கு சிறந்தது. அண்ணா, ஒன்னு யோசிங்கள். இப்போது நடக்கும் போராட்டங்கள் இங்கிருக்கும் மக்களுக்கு நன்மை தருமா தீமை தருமா என நீங்களே சொல்லுங்கள். ஏற்கனவே எரியும் தீயில் இவர்கள் சுய நல எண்ணையை ஊற்றுகிரார்கள். முள்ளிவாய்காலில் நாங்கள் உயிருக்கு போராடிய போது இன்றைக்கு போராட்டம் நடத்தும் மாணவர்கள் எங்கே போனார்கள்? ஆக இன்னும் கொஞ்சம் ஊன்றி ஆராய்ந்தால் இந்த மாணவர்களில் உள்ள விலைபோனவர்களையும், இதை தூண்டிவிட்டு அதன்மூலம் ஒரு பெரிய ஆதாயத்தை நோக்கி காத்திருப்பவர்களையும் பிடித்து விடலாம். அய்யா, ஈழம் வேண்டும் என இங்கிருப்பவர்கள் யாரும் கேட்கவில்லை. தூதன் வருவன் மாரி பெய்யும் என்ற கற்பனையில் நாங்களினி வாழ இயலாது. எங்களுக்கினி தேவை மீள் வாழ்க்கையும் நிம்மதியுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைஞர் அன்று இதையேதான் சொன்னார்.மீடியாக்கள் இன்றுவரை நக்கல் செய்கிறதே.

      நீக்கு
    2. @யாழ் தினேஷ்,
      உங்களுக்காகவா போராட்டம் நடக்குது. கோரிக்கையில் ஒன்றை கவனிச்சிங்களா உங்க மீது பொருளாதார தடை கொண்டுவர வேண்டும். உங்க மீது பொருளாதார தடை கொண்டுவரபட்டால் துன்பபடபோவது நீங்களே தவிர நாங்கலல்ல.உங்களை வைச்சு தான் இங்கே அரசியலே ஓடுது. இப்போ கொஞ்ச காலமா உங்க ஊரில் சுமூக நிலமை ஏற்படுகிறதல்லவா அது தான் இங்கே பிரச்சனையே.

      நீக்கு
  12. உங்கள் காலத்து மாணவர்கள் போல் இன்றைய மாணவர்கள் இல்லை.இது தகவல் யுகம். எதையும் ஆராய முடியும்.பத்திரிகளைப்படித்துவிட்டு அதையே உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற காலம் அல்ல இது.உண்மையும் பொய்யும் , எதிர்க்கருத்துக்களும் சாதகமான கருத்துக்களும் அத்தோடும் உண்மையும் இன்றைக்கு கிடைக்கக்ககூடியதாயிருக்கிறது.இன்றைக்கு எதையும் இலகுவில் தூண்டிவிட முடியாது.

    இரண்டு பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளலாம். இணையத்தோடு உறவாடுகிற இளைய தலைமுறை புரிந்து கொள்வது.
    ஒன்று ஊழல்.
    இரண்டாவது ஈழத்தில் நிகழ்ந்த அநியாயம்.
    இரண்டும் மறுக்கப்படமுடியாத உண்மைகள்.
    போராடத்தூண்டும் உண்மைகள்.
    அதனால் போராடுகிறார்கள். போராடட்டும்.உங்கள் குடும்பத்தை நன்றாக வைத்திருப்பதற்காக நீங்கள் வாழ்க்கையில் போராடுவீர்கள். அதை யாரும் தூண்டிவிடுவதில்லை.
    அதில் நீங்கள் தோல்வியுறலாம்.என் குடும்பத்துக்கு ஒரு வேளை கஞ்சியாவது ஊற்றவேண்டும் ... இதுதான் நோக்கம்.

    அதுப்போலத்தான் தமிழகமாணவர்கள் போராடுகிறார்கள். தமிழீழம் கிடைக்காமல் இருக்கலலாம் ஆனால் அது, கேட்பதற்கு நாதியற்றவர்கள் ஈழத்தமிழர்கள்.அடித்தாலும் மிதித்தாலும் தாங்கிக்கொண்டிருக்கவேண்டியவர்கள் என்ற இலங்கை அரசின் நினைப்பை மாற்ற உதவத்தான் செய்யும் கஞ்சி ஊத்துவது போல.
    தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றுவிட்டார்கள் சிறீலங்காக்காரர்கள்..
    மாணவர்களை அப்படிச்சொல்லமுடியாது.
    உலகெங்கும் மாணவர்கள் பொதுவானவர்கள். அவர்களுக்கென்று சுயலாப நோக்கம் இல்லாதவர்கள்.

    அவர்கள் போராடும் வரை போராடட்டும் விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. மாணவர்கள் போராட்டம் வலிமை மிக்கது! இதுவரை இல்லா கவனம் இப்போது ஈழப்பிரச்சனையில் குவிந்துள்ளது! ஆனால் இதில் சில அரசியல் கட்சிகள் லாபம் பார்ப்பதுதான் வேதனை!

    பதிலளிநீக்கு
  14. வண்டிகளில் பூட்டப்படும் குதிரைகளுக்கு கண்களின் இருபுறமும் திரை போட்டிருப்பார்கள். எதற்கு என்றால் போகும் திசையைத்தவிர பக்கவாட்டில் நடப்பவை அதன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக. அது மாதிரிதான் நானும் மாணவர்கள் போராட்டம் தவறு என்பதை மட்டும் முன்னிறுத்தி இந்தப் பதிவை எழுதினேன். அவர்கள் போராட்டம் எதைக்குறித்ததாக இருந்தாலும் தவறுதான். அவர்கள் படிக்க வந்தவர்கள். அவர்களை முன்னிறுத்தி அரசியல்வாதிகளும் ஈழத்தமிழர் அனுதாபிகள் என்று தங்களை முன்னிலைப்படுத்த விரும்புபவர்களும் அவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

    ஏன் இவர்கள் எல்லாம் நேரடியாக போராடலாமே? மாட்டார்கள். இவர்கள் போராடினால் ஜெயில், போலீஸ் கேஸ், கோர்ட்டு, வழக்கு என்று ஆகாவிடும். மாணவர்கள் போராடினால் அப்படியல்ல. இந்த்ப போராட்டம் முடிந்ததும் அவர்கள் செய்ததெல்லாம் மறந்து மன்னிக்கப்பட்டுவிடும். இதை நன்கு புரிந்த அரசியல் கட்சிகள் எப்பொழுதும் மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்த தயங்குவதில்லை.

    இன்னும் இரண்டு வாரம் கழித்து பாருங்கள். இந்தப் போராட்டங்களின் சுவடே தெரியாது. என்னைக் குறை கூறுபவர்கள் எனக்கு ஈழப் பிரச்சினை பற்றியோ, மாணவர்களின் கோரிக்கைகள் பற்றியோ தெரியாது என்று கூறினால் கூறட்டும். பல மாணவர் போராட்டங்களை நேரில் சந்தித்த ஆசிரியன் என்ற முறையில்தான் என் கருத்துகளை முன் வைத்துள்ளேன். மாணவர் போராட்டம் அரசியல்வாதிகளின் ஆதாயம், மாணவர்களின் நஷ்டம்.

    பதிலளிநீக்கு
  15. அய்யா நீங்கள் ஒரு பொறுப்பு மிக்க ஆசிரியராய் பாச மிகு தந்தையாய் மாணவர்களுக்கு அறிவுரை கூறி இருக்கிறீர்கள் ஆனால் மற்றொரு கூட்டமோ மாணவர்களை உசுப்பி விட்டு இலாபமடைய பார்க்கிறார்கள்.யாழ் தினேஷ் சொல்வது போல் எங்கே அகதி பாஸ் ரத்தாகி சொகுசு வாழ்க்கைக்கு பங்கம் வந்து விடுமோ என்று ஊதி அணையாமல் எரிய விடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோணத்தில் நான் இதுவரை சிந்தித்ததே இல்லை. யோசிக்கும்போதுதான் இதில் உள்ள நிதரிசனம் புரிகிறது.

      நீக்கு
    2. ஈழ போரட்டமே வெள்ளாள சாதி போராட்டமே , அகதி வாழ்க்கைக்காக அப்பாவிகளை பலி கொடுத்த போராட்டமே ஈழ போராட்டம்

      நீக்கு
    3. நிதர்சனமான உண்மை

      நீக்கு
  16. தானும் தின்னான் தள்ளியும் படான் ....

    பதிலளிநீக்கு
  17. ராம்நாட் - கோமுட்டி வற்றல்
    உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
    பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்
    கோயம்பத்தூர்- ஆரஞ்சு சாதம்
    அதிராம்பட்டினம்- வெள்ளரிக்கா துவையல்
    ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்
    சென்னை-நெல், அவல், மனோரஞ்சிதப்பூ
    பண்டாரவாடை- கொள்ளு சாதம்
    கடையநல்லூர்-இடிச்சபுளி
    பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்
    நாகூர்- தயிர் சாதம்
    இராஜபாளையம் - கொயயாப்பழம், குள்ளக்கத்திரி வத்தல்
    அடியக்காமங்கலம் - கோதுமை சாதம்
    மதுரை -இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை
    கல்லிடைக்குறிச்சி -அப்பளம், சரவணன்-மீனாட்சி
    மேலப்பாளையம்-டிகிரி காபி
    சாத்தூர் - சேவு,சாமியார்கோட்டம் பாக்கு
    கீழக்கரை - புளியோதரை, வென்பொங்கல் தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
    பாபநாசம்- கார்லிக் நான்
    பொள்ளாச்சி - இளநீர், வெண்டைக்கா பாயாசம்
    மணப்பாறை - முருக்கு, மண்டைப்பனியாரம்
    ப்ரானூர் பார்டர் - சிக்கன், சின்ன மாம்பழம்
    நாமக்கல் - முட்டை, பல்பு மீன் வருவல்
    காரைக்குடி - உப்புக்கண்டம் , தேங்காய் சட்னி
    விருதுநகர் - புரோட்டா , பன்னீர் பஜ்ஜு
    வெள்ளியணை - அதிரசம்
    திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
    நெய்வேலி - முந்திரி
    மன்னார்குடி - பன்னீர்சீவல்
    மேச்சேரி - ஆடு, கணக்கு மட்டை
    திருநெல்வேலி- மல்லிகைப்பூ, கவிதை
    குற்றாலம்- ரசமலாய்
    மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
    வேலூர் - வாத்துக்கறி , தார் டின்
    சேலம் - வெடிச்ச மாம்பழம்
    ஊத்துகுளி - வெண்ணெய், சோன்பப்டி
    ராசிபுரம் - நெய், வெளக்கமாறு
    முதலூர் - மஸ்கோத் அல்வா
    ஊட்டி - டீ வர்க்கி
    திருச்சி - பெரியபூந்தி, கொளுத்தி மீன் சூப்
    காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா

    பதிலளிநீக்கு
  18. நகைச்சுவையா எழுதிறாரு. இந்த இடுகையும் அவர் நகைச்சுவை திறனை வளர்கத்தான். இதுக்கு (இடுகைக்கு) போயி மறுப்பும் ஆதரித்தும் பின்னூட்டம் போட்டுக்கிட்டு. போயி பிள்ளை குட்டிங்க இருந்தா அவங்களை கவனிங்கப்பா. நாளைக்கு நமக்கு அவங்க தான் கஞ்சி ஊத்துவாங்க.

    -பழனியப்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, விலை மதிப்பற்ற அறிவுரை. எல்லோரும் கடைப்பிடிங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.

      நீக்கு

  19. /மாணவர்கள் இந்த மாதிரி காரணங்களுக்காக அரசியல் கட்சிகளின் பகடைக் காய்களாக செயல்படுகிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குப் புரிந்த விஷயம். இத்தகைய போராட்டங்களினால் அரசியல் கட்சிகளுக்குத்தான் லாபமே தவிர மாணவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பது என் அனுபவம்/

    /மாணவர்கள் போராட்டம் தவறு என்பதை மட்டும் முன்னிறுத்தி இந்தப் பதிவை எழுதினேன். அவர்கள் போராட்டம் எதைக்குறித்ததாக இருந்தாலும் தவறுதான். அவர்கள் படிக்க வந்தவர்கள்.
    மாணவர் போராட்டம் அரசியல்வாதிகளின் ஆதாயம், மாணவர்களின் நஷ்டம்./

    உங்களது கருத்து/ஆதங்கங்கள் முற்றிலும் உண்மை. mob sense is a base emotion and easily provocable by others; but very difficult for the victims to realise. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக புரையோடிப்போயிருக்கும் இந்நோயை ஒரு இடுகையின் மூலம் ஈடு கட்ட இயலாது.இன்றைய அரசியல் வாதிகள் மக்களின் base emotion களை தூண்டி விட்டே தம் எண்ணங்களை சாதித்து கொள்ளும் வர்கமாகிவிட்டனர். There has virtually been an absolute scarcity of noble souls amongst politicians.
    Also, Possibly there is an erosion in the education syllabus especially in arts and science colleges that allows undue spare time for students to engage in non-educational activities. This needs a correction
    ஈழ மக்கள் அவல நிலை நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டும். முடிந்து விட்ட நிகழ்வுகட்கு தண்டனை தேடுவதை விட, நடக்க வேண்டிய புனரமைப்புகளில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும் என நினைக்கிறேன். பட்டுக்கோட்டையார் பாடிய "திருடனைப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " பாடல் போல் ஆட்சி புரிவோர் நல் மனம் கொண்டு இனிமேலும் ஈழ மக்கள் அடிப்படை நலமுடன் வாழ ஆவன செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, பாலா. என்னுடைய நிலையில் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள் என்று அறிய ஆறுதலாக இருக்கிறது.

      ஈழப்பிரச்சினை மிகவும் சிக்கலானது. அது பல ஆண்டு காலமாக வளர்ந்த ஒன்று. பிரபாகரன் இறந்த பிறகு ஈழ மக்களின் இன்றைய நிலை என்ன என்பது பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் குறைவு. இந்த நிலையில் அவர்களுக்கு என்ன செய்தால் நீடித்த நன்மை பயக்கும் என்பது தமிழ்நாட்டுல் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியாது. அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று வேஷம் போடும் வழக்கம் எனக்கில்லை. அதனால்தான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.

      ஆனால் மாணவர் போராட்டங்களை என்னுடைய ஆசிரியர் பணிக்காலங்களில் நிறைய சந்தித்திருக்கிறேன். இப்போது பாருங்கள், கல்லூரிகளை மூடிவிட்டார்களா, இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கல்லூரியை விட்டுப் போகமாட்டோம் என்று கூறிக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்குத் தெரியாமல் ஒவ்வொருவராய் வெளியேறிக்கொண்டு இருப்பார்கள்.உள்ளூரில் இருப்பவர்களை அவர்களின் பெற்றோர்கள் தூரத்திலிருக்கும் தங்கள் சொந்தக்காரர்களின் வீட்டுகளுக்கு அனுப்பி விடுவார்கள்.

      போராட்டம் நடத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தவுடனே,போலீஸ் வந்து இவர்களை இழுத்துக்கொண்டு போய் இரண்டு தட்டு தட்டிவிட்டு 100 கி.மீ. தள்ளிக்கொண்டு போய் விட்டு விடுவார்கள்.இவர்கள் திருட்டு ரயில் ஏறி வீட்டுக்கு வருவார்கள்.

      இதுதான் வழமையாக நடப்பது. இப்பொழுதும் அப்படியேதான் நடக்கும்.

      நீக்கு

  20. ஜெயமோகனின் பதில்தான் உங்களுக்கும்!


    http://www.jeyamohan.in/?p=35090

    அன்புள்ள ஜெ
    இன்று ஈழப்பிரச்சினைக்காகப் போராடும் மாணவர் கிளர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் எதையும் சற்று கவனித்த பிறகே கருத்துச் சொல்வீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் நான் இதைப்பற்றி அறிய விரும்புகிறேன்
    இப்போது போராடும் இந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினையின் உள்விவகாரங்கள் தெரியுமா? அங்கே உள்ள சகோதரச்சண்டைகளும் சாதியரசியலும் புரியுமா? இங்குள்ள அரசியல்வாதிகள் உருவாக்கும் ஒற்றைவரிகளை நம்பி இவர்கள் போராடுகிறார்கள் என்று தோன்றுகிறது
    ஸ்ரீனிவாசன்
    அன்புள்ள சீனிவாசன்
    எந்த மக்கள் போராட்டத்தையும் அது பிரச்சினையின் எல்லா ஊடுபாவுகளையும் கணக்கில் கொள்ளவில்லை என்று சொல்லி நிராகரிக்கமுயல்வதுபோல அபத்தம் வேறில்லை. ஆனால் நம்முடைய அறிவுஜீவிகள் எப்போதும் செய்வது அதையே. அண்ணா ஹசாரே போராட்டம் முதல் இது வரை.
    எந்த மக்கள்போராட்டமும் அதற்கான காரணங்களின் மிக எளிய வடிவையே முன்வைக்கமுடியும். அப்போதுதான் பெருவாரியான மக்களுக்கு அது புரியும். அவர்களை ஒருங்கிணைக்கமுடியும். மொத்த அரசியல் பொருளியல் சிக்கல்களையும் புரிந்தவர்கள்தான் போராடவேண்டுமென்றால் ஃபேஸ்புக் விவாதங்கள் மட்டுமே சாத்தியம்
    மாணவர்களின் இந்தப்போராட்டம் எந்த நிலையில் நிகழ்ந்தாலும் முடிந்தாலும் நல்ல விளைவுகளையே உருவாக்கும். இலங்கைத்தமிழர்களுடன் இந்தியத்தமிழர்களுக்குள்ள உணர்வுபூர்வமான உறவை இது அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும்
    குறைந்தபட்சம் இலங்கை அரசு மீது ஒரு ராஜதந்திர நிர்ப்பந்தம் நிகழவும் அதன் விளைவாக தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைக் கட்டுக்குள் வைக்கவும் அவர்களின் பொருளியல்மீட்பைப்பற்றி யோசிக்கச்செய்யவும் இது கட்டாயப்படுத்தலாம்
    அதெல்லாம் நிகழாது போனாலும்கூட ஒரு மானுடப்படுகொலை கண்டிக்கப்படாமல் போயிற்று, அதற்கு எதிர்வினைகளே எழாது போயிற்று என்ற பழியாவது இல்லாமல்போகும். ஆகவே எந்த வகையான எதிர்வினைகளும் நல்லவையே
    இந்த இயல்பான போராட்டத்தை வழக்கம்போல இந்திய எதிர்ப்புப்போராட்டமாகக் கொண்டுசெல்ல இங்கே நிதியூட்டப்பட்டு செயல்படும் குறுங்குழு அரசியல்வாதிகள் முயலக்கூடும். அதில் மாணவர்கள் விழிப்புடன் இருப்பார்கள் என நினைக்கிறேன். இல்லையேல் இதை முன்வைத்து அவர்கள் இன்னும் கொஞ்சம் நிதி பெற்றுக்கொள்வது தவிர ஒன்றும் நிகழாது
    இந்தியா என்பது பலநூறு சமூகக்குழுக்களின் வணிக அமைப்புகளின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த ஒரு பெரும் கட்டுமானம். அதில் நீதிக்கோ உரிமைக்கோ எந்த ஒரு தரப்பும் போராடித்தானாகவேண்டும்.எந்த ஜனநாயகப்போராட்டத்திற்கும் அதில் இடமுள்ளது. பயனும் உள்ளது.
    ஜெ

    பதிலளிநீக்கு
  21. மக்களே, இந்தப் பதிவையும் பாருங்கள்.
    http://srirangan62.wordpress.com/2013/03/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  22. இன்றைய (18-3-2013) தினத்தந்தி செய்தி.

    மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம்.

    முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்.

    கோவையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் ஆர் வெள்ளியங்கிரி, செயலாளர் என்கே.வேலு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது.

    இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் நமது சகோதர தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் வெதும்பச் செய்துள்ளது. அந்த உணர்வுகள்தான் மாணவ-மாணவிகளான உங்களுக்கும் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் படிப்பில் மட்டுமே முழு கவனமும் செலுத்தி மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும்போது இது போன்ற போராட்டங்களில் ஈடுபடவேண்டாம்.

    உங்களுக்காகவே வாழும் பெரியவர்களாகிய நாங்கள்இந்தப் பிரச்சினையை கவனித்துக் கொள்கிறோம்.தங்களுடைய சுயலாபத்திற்காக மாணவ சமுதாயத்தை தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் ராஜதந்திரவாதிகளை காவல் துறையில் அனுபவம் பெற்ற நாங்கள் நன்கு அறிவோம். எனவே மாணவர்கள் மாய வலையில் வீழ்ந்து விடாமல் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். மாணவர்கள் எதிர்காலத்தூண்கள் என்பதால், போராட்டத்தை கைவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துமாறு அரசியல்வாதிகளும் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு ஆர் வெள்ளியங்கிரி, என்.கே.வேலு ஆகியோர் தெரிவித்தனர்.

    பதிலளிநீக்கு
  23. சாதாரணமாகத் தமிழ்நாட்டில் அதிகமான இளைஞர்கள் மிகவிரைவாகவே கட்சிசார் அரசியலுக்குப் பலியாவதுண்டு.ஈழத்தில் இயக்கவாத மாயைக்குப் பலியாவது போன்று. இன்று, நடைபெறும் மாணவர் கலகமெல்லாம் இலங்கையிலுஞ்சரி இல்லைத் தமிழ் நாட்டிலுஞ்சரி ஏதோவொரு ஒத்திகைக்குப்பின்னெழுவதற்கானவொரு தயாரிப்பாகவே இனம் காணப்படவேண்டும்.இது ,தயாரிக்கப்பட்ட ஊக்கத்தின் கூறுகளாகவே அமுக்கங்கொள்கிறது.இதன் சூத்தரிதாரிகள் பல இரூபத்துள் எங்கும் நீக்கமற இருக்கின்றனர்.

    இவர்களாற் தயாரிக்கப்படும் அரசியலானதை எவரும் இலகுவில் புரியமுடியாதளவுக்கு மிக நேர்த்தியாக மக்களது பிரச்சனைகளுடன் பிணைந்து அந்நியவூக்கங்கள் நமது அரசியலோடெழுகிறது.அரேபியாவின் அரசியல் முரண்பாடானது எப்பவும்போலவே பரந்தபட்ட மக்களுக்கான சனநாயகத்தோடு சம்பந்தப்பட்டது.அதன் சாயலிலெழுந்த சேர்யா பொப்போவிச்சின்[Srđja Popović_Otpor! ] முகாமைத்துவப் புரட்சியானதற்கு அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகம் கொட்டும் தொகையானது வருடமொன்றுக்கு 700 பில்லியன் டொலர்களென்பது எவரும் அறியாத சூத்திரம் அல்ல!
    பொறுத்திருங்கள்!

    ஒவ்வொன்றாக முடிச்சுகள் தென் கிழக்காசியாவில் அவிழ்படப்போகிறது.

    இது, மகிந்தாவுக்கான எதிரான அரசியல்-கலகமல்ல!மாறாக,பிளவுப்பட்ட புவிகோள அரசியல்சார் பொருளாதார ஆதிக்கத்துக்கான இறுதிப்போர்.

    இதன் வடிவம் பல மாதிரிகளில் மையங்கொள்வதைப் புரிய மறுப்பது ஆபத்தானது.

    நமக்குள் அரசியல்-பொருளாதார மற்றும் இனஞ்சார் முரண்பாடுகள் பலாத்தகாரமாக ஊதிப்போய் இருக்கிறது.பிளவுப்பட்ட தலைமைகளது அராயகம், அரசில் ஆதிக்கமானது அதிகமான சந்தர்ப்பத்தில் மேற்குலக அரசியல் நலன்களுக்குத் தோதான நிலவரத்தது சூழலை இத்தகைய வலயங்களில் ஏற்படுத்துகிறது.

    தமக்குள் நிலவும் முரண்பாடுகளை முன்வைத்துப் பரந்துபட்ட மக்களது தலைமையில் எழும் போராட்டமெல்லாம் ஏதோவொரு வடிவில் அந்நியச்சக்திகளால் கையகப்படுத்தப்பட்டு இறுதியில் ,அவர்களது இலக்கை வென்றெடுக்கும் போராட்டங்களாக மக்களது தியாகமெல்லாம் மேற்குலகத் தேசங்களது நலனுக்காகவே மாற்றப்படுகிறது.

    கடந்த, கிழக்கைரோப்பியக் கலகம் மற்றும் சமீபத்து அரபேிய வசந்தமெல்லாம் இப்படியே போயின.

    இதன் ,இன்னொரு முகாம் தென்கிழக்காசியாவில் உச்சம் பெறுவதற்காகத் தென்னாசியப் பிராந்தியத்துள் பல வடிவத்துள் பரீட்சிக்கப்படுவதற்குத் தமிழ்பேசும் மக்களது ” இலங்கைக்குள் நிலவும் முரண்பாடுகள்-அவர்களது உரிமைசார்ந்த போராட்டமெல்லாம் “அவர்களது ,நலனுக்காகவெனப் பேசப்பட்டு யாருக்காகவோ அறுவடையாகும் தொடுப்பு அரசியலொன்று மிக நேர்த்தியவுருவாகிறது.

    இது, பெரும் மயக்கமானகாலம்.

    அவசரப்படும் ஒவ்வொரு தருணமும் நாம் அப்பாவிகளைச் சாக வைக்கும் அரசியலோடு நெருங்குகிறோம்.இதைத்தாம் இப்போதைக்கு மாணவர் கலகத்தின்மீதான பார்வையாகவும் வைக்கப்பட முடியும்.அமெரிக்கத் தீர்மானமெல்லாம் நமக்கான விடிவில்லை!

    ஈராக்கிலும் .அவ்கானித்தானிலும். சிரியாவிலும் இன்னும் உலகமெல்லாம் அமெரிக்கா கொன்றுபோடும் மக்கள்மீது காட்டாத கருணையை, நமக்குக் காட்டுவதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.இந்தியாவோ நம்மைக் கொன்று போட்டிருக்கும்போது அத்தேசத்தைப் போய் ஐ.நா.வில் ஈழத்துக்கான ஆதரவுக் கோரிக்கையை வைக்க வேண்டுமென்பது இந்தியாவின் ஆளும் வர்கத்தைப்பற்றியே அறியாத அரசியல் வேடிக்கையல்ல.அதுதாம் நுட்பமான சாணாக்கியம்.

    அதன் உள்ளீடு வடிவத்தின் வழியாகப் பொசிவது, இந்திய ஆளும்வர்க்க நலனுக்கே!புரிந்துகொள்வது அவரவர் அநுபவத்துக்கான தெரிவைப் பொறுத்தது.ஆனால் ,அப்பாவிகளை அண்மித்துப் போராடுங்கோ-இரத்தம் சிந்துங்கோ என்று தூண்டுவதற்கு எவருக்குத்தாம் உரிமை உண்டு?அது மெரிக்காவாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  24. 2:
    தமிழக மாணவர் கலகம் திறக்கும் அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!

    இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் பொலிசைப் பயன்படுத்துவதும் அதை அராஜகக் கும்பலாக்குவதும் தெரிந்ததே.எனினும் ,பொலிசின்மீது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பாத ஆளும் வர்க்கங்கள் , மெல்லச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை நுழைக்க விரும்புகிறது.

    இது, மேற்குலக உயர்ந்த ஜனநாயகத் தேசங்களிலேயே இப்போது விவாதத்துக்கு வருகிறது.இதைத் தொடர்வதற்காக உள் நாட்டில் கலவரங்களைச் செயற்கையாகச் செய்யத் தூண்டும் ஆளும் வர்க்கமானது ,இதற்காகக் கணிசமான மக்களையும் பலியாக்கி வருகிறது.அவர்களது உண்மையான பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தகைய தகவமைப்பைச் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களது கலகத்தின் வழி ,இத்தகையவொரு ஆபத்தை நாம் உணருகிறோம்.இது,தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடரும் கதைதாம்.இத்தகைய கலகத்தின்வழி இராணுவம் உள்ளகக் குடிசார் நிர்வாகத்துள் மெல்ல நுழையும்.

    நிரந்தரமாகவே, மக்களைக் கண்காணிக்கும் காவலரங்குகளை ஆங்காங்கே நிறுவிக்கொள்ளும்.இது,மக்களது இயல்பான வாழ்வைச் சிதைக்கும் பல புள்ளிகளைத் தொடும்.

    சட்டரீதியாக இராணுவத்தை, உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் நுழைத்துப் பொலிசினது செயற்பாடுகளைத் தனி இராணுவ நிலைக்கு உயர்த்தும் பொறியைப் புரிவதென்பதுதாம் இனிமேலான சனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்கும்.

    -ஶ்ரீரங்கன்

    பதிலளிநீக்கு
  25. ஐயா பழனி கந்தசாமி,
    உங்க பொறுப்புள்ள பதிவுக்கு நன்றி. 65 நடந்த மணவர் புரட்சி போல் மறுபடியும் என்று சிலர் உசுப்பு ஏந்தி எழுதினாங்க. நானும் 65இல் என்ன தான் புரட்சி நடந்தது என்று கோகிளில் போட்டு தேடி களைத்து விட்டேன். உங்களது பதிவு மூலம் 65 என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன்.
    தாங்கள் தமிழகத்தில் அரசியல் நடத்துவதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடக் கூடாது என்பதில் தான் தமிழகத்தில் பலர் அக்கறைபடுவதாகவே நான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. இலங்கை பிரச்சினை: அணைத்து கட்சி கூட்டம் தோல்வி!
    Written By வைகைமுரசு.காம் on 21 Mar 2013 | 21.3.13

    //ஆக மொத்தத்தில் வடபுல தலைவர்கள் இலங்கையையும், இராஜபக்ஷேவையும் இரு வேறு கருத்தின்றி ஆதரிக்கின்றனர்.தமிழக தமிழர்களின் உணர்வுகளை கூட மதிக்க இவர்கள் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.//

    பதிலளிநீக்கு
  27. மாணவர்கள் போராட்டமே அரசியல் பின்னணிக் கொண்டது தான் அதை திருமாவளவனே டீவியில் பேட்டிக் கொடுத்து வெட்டவெளிச்சமாக்கிவிட்டார். மாணவர்கள் போராட்டம் அனைத்து விஷயங்களுக்கும் இருந்தால் அவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது...என்று கருதலாம்....அவர்கள் இங்கிருக்கும் எந்த விலைவாசிப் போராட்டத்திற்கும் குரல் கொடுக்கவில்லை....சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை....பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல் எழுப்பவில்லை..டெல்லியில் நடந்தாலும் இங்கே பல வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தாலும் அதற்காக இவர்கள் போராட்டம் நடத்தவேயில்லை...

    இந்த போராட்டங்கள் எல்லாம் நாங்கள் படிக்கும் போதும் நடத்தியிருக்கிறோம்...ஒரு மாணவர் அரசியல் வாதியின் பிள்ளையாக இருப்பார் அவர் தான் இதற்கு தலைமை ஏற்பார்...அவர் பொருட்டே இது ''மாப்'' காட்ட நடத்தப்படும். இது கல்லூரிக்கு கல்லூரிக்கு ''மாப்'' காட்டுவதற்காகப் பரவும்.

    இப்போதுக் கூட உறவினர்களின் பிள்ளைகள் கல்லூரி மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர்கள் அப்படித்தான் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தனர்.

    ''அந்த காலேஜ் பண்ணுச்சு நாம பண்ண வேணாமா? அப்புறம் நம்ம காலேஜை சப்பை காலேஜ் என்று நினைக்க மாட்டார்களா? உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா? என்று திட்டி கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...வீட்டில் கூட திட்டினார்கள்...

    ஆனால் எதிர்பக்கம் ''எக்சாம் இருக்கிறது வீட்டில் திட்டுகிறார்கள்'' என்ற பதில் வந்துக் கொண்டிருந்தது.

    ஆனாலும் இவன்கள் விடுவதாயில்லை...மாறி மாறி போன் போட்டு அழைத்துக் கொண்டிருந்தனர். ஆக இது ஒன்றும் பெரிய விஷயமில்லை...இது மாதிரி எல்லாக் காலங்களிலும் நடந்தது..ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் மிக மோசமாகவே இருந்தது....

    அது மாணவர் பேரவையின் எதிரொளியாகவே இருந்தது. கல்லூரிக்குள் கட்சி நுழைந்ததால் அடிதடியானது...பலர் வாழ்க்கை இழந்த சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர். போலிஸ் கேஸ் என்றாகி இன்றும் அவர்கள் மீளமுடியாத சூழ்நிலையில் தான் இருக்கின்றனர். பலர் ரவுடித் தொழிலும் போய்விட்டனர். அதனால் தான் கல்லூரிக்குள் இருந்தப் பேரவைத் தேர்தலையே கல்லூரி நிர்வாகங்கள் தூக்கின.


    ஒழுங்காக நடத்திய கல்லூரிகளின் பேரவைத் தேர்தல்களையும் அந்தந்த கல்லூரிகள் ரத்து செய்தன. பேரவை என்பது கல்லூரி மாணவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டது. அது கல்லூரியில் நடக்கும் நிர்வாக அமைப்புகளை தட்டிக் கேட்க உரிமைக் குரல் கொடுக்க உருவாக்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் தவறு என்பதாகவே இந்த மாதிரி கட்சிகள் உள் நுழைந்ததால் மாறிப்போனது. மாணவர்கள் நடவடிக்கைகள். ஆகையால் கல்லூரித் தேர்தல்கள் தடை செய்யப்பட்டன. இது 1990 லேயே பச்சையப்பன் கல்லூரி முதன் முதலில் பேரவைத் தேர்தலை நிறுத்தியது. இதுதலைவாசல் என்ற படத்திலும் காண்பிக்கப்பட்டிருக்கும். அதில் வரும் காட்சிகள் அனைத்தும் நடந்தவையே!

    தொடரும்

    பதிலளிநீக்கு
  28. ..தொடர்ச்சி

    மாணவர்கள் என்றைக்கும் மாணவர்களாக இருக்கப் போவது இல்லை. அவர்களுக்கு அந்த வயதில் எதுவுமே ஒரு கிளர்ச்சியான விஷயங்களாகவே இருந்தது. இது மாணவர்களாக இருந்த எங்களுக்கும் அப்படித்தான். ஆக இதற்கு பெரிய உணர்ச்சிப் பூர்வமான முலாம் பூசுவது தேவையற்றது. இதற்கு பின்னாடி அரசியல் கட்சிகள் தூண்டுதல் இருப்பதை கட்சிக் காரர்களே வெட்கமில்லாமல் டீவியில் ஒத்துக் கொண்டது. மாணவர்களின் பெற்றோரைக் கலக்கமடையச் செய்தது.

    நாளைக்கு பைலை தூக்கி கிட்டு வேலைக்காக அலையப் போவது இந்த மாணவர்கள் தான். இந்தக் கட்சிக்காரர்கள் யாரும் அவர்களுக்கு வேலை வாங்கித் தரப்போவது இல்லை...இந்த தூண்டுதலுக்கு காரண மானவர்கள் யாரும் அந்த கல்லூரி மாணவர்களின் பீசை கொடுக்கப்போவது இல்லை. அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படும் போதும் யாரும் இதற்காக நன்றி நினைக்கப்போவது இல்லை. இவர்கள் துயர் துடைக்கப்போவது இல்லை.

    வேலைக்கிடைக்காமல், ''காக்காசு சம்பாதிக்க வக்கில்லாத துப்புக் கெட்டவன்'' என்று அனைவர் முன்னாடியும் திட்டு வாங்கப்போவது இந்த மாணவர்கள் தான். பெற்றோர்களின் கையை தினந்தோறும் எதிர்பார்த்து திட்டு வாங்கிக் கொண்டிருக்கப்போவதும் இந்த மாணவர்கள் தான். எதிர்த்த ஆளை உதாரணம் காட்டி அவன் ஒழுங்காப் படிச்சான் வேலைக்குப்போகிறான்...நீ ஸ்டிரைக் பண்ணே பொறுக்கித் தனம் பண்ணே...பெத்தவங்க காசை கறியாக்கினே..அதான் எங்க உயிரை வாங்கரே என்று பெற்றவர்களிடம் திட்டு வாங்கப்போவதும் இந்த மாணவர்கள் தான்.

    அன்று எந்த அரசியல் கட்சிக்காரனும் இவங்களுக்கு உதவப் போவது இல்லை. ஆனால் இதை எல்லாம் உணரக் கூடிய நிலையில் மாணவர்கள் இருந்தாலும்...சில பணக்கார, அரசியல்வாதி பிள்ளைகளின் சுயலாபத்துக்காக இதெல்லாம் தூண்டப்படுகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

    ஆனால் அவனுக்கு வேலை தேவையில்லை..சம்பாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை...சொத்து சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை..எல்லாம் ஏற்கனவே இருக்கிறது....

    ஆனால், நகை, நிலம் என் உடமைகளை அடகு வைத்து பையன் படிக்கட்டும்! என்று கல்லூரிக்கு தங்கள் தகுதிக்கு மீறிப் பணம் கட்டும் ஏழைக் குடும்பங்களின் நிலைமை...தன் பிள்ளை படித்துவிட்டு தனக்கு கால் வயித்து கஞ்சியாவது ஊத்தமாட்டானா? என்று ஏங்கி தன் உடைமைகளை விற்று படிக்க வைக்கும் ஏழைப் பெற்றோர்களை நினைக்கும் நிலையில் இந்த சுயநல அரசியல் வாதிகள் இல்லை. என்பது மட்டும் உண்மை.

    பதிலளிநீக்கு