சனி, 13 ஆகஸ்ட், 2011

விசேஷங்களுக்கு நாள் குறித்தல்
ஒரு நல்ல நாள் பாத்து பொண்ணூட்டுக்காரங்கஒரு பத்து இருபது பேரு மாப்பிள்ள ஊட்டுக்குவருவாங்க. மாப்பிள்ள ஊட்டுல ஒருஜோசியரைப்புடிச்சு வச்சிருப்பாங்க. எல்லோரும்குசலம் விசாரிச்சு முடிஞ்சவுடன் எல்லாவிசேஷங்களுக்கும் நாள் குறிப்பாங்க. மொதல்லே நல்லவார்த்தை(நிச்சயம்) பேச நாள்குறிப்பாங்க. இது கொஞ்சம் கவனமாப்பண்ணோணுங்க. ஏன்னா, நல்ல வார்த்தை பேசி முடிச்சாச்சுன்னாரெண்டு ஊட்டுக்காரங்களும் அப்புறம் ஊர்ல எதாச்சும் கெட்டதுநடந்தாப் போகப்படாதுங்க. அதனாலெ கல்யாணத்துக்கு பத்துஇருபது நாளக்கி முன்னாலதான் நிச்சயம் வைப்பாங்க.
அப்பறம் உப்பு,ஜவுளி வாங்கறதுக்கு நாள், மங்கிலியம்செய்யக்கொடுக்கிறதுக்கு நாள், பத்திரிக்கை அடிக்க நாள்,முகூர்த்தம் வைக்கறதுக்கு, மறு சரடு போடறதுக்கு,பொண்ணளைக்கறதுக்கு, அப்படீன்னு எல்லாத்துக்கும் நாள்குறிப்பாங்க. அப்பவே கல்யாணப்பத்திரிக்கையையும்எளுதிடுவாருங்க. இந்தப்பத்திரிக்கைய ஒரு காகிதத்துலயும், மற்றஎல்லா வெவரங்களையும் ஜோசியரு இன்னோரு காகிதத்துலயும்எளுதி, அதுகளுக்கு இன்னோரு நகல் எடுத்து, நாலு காகிதத்துலயும்நாலு மூலைலயும் மஞ்சத்தடவி மாப்பிள்ள ஊட்டுக்காரங்களுக்குஒரு செட், பொண்ணூட்டுக்காரங்களுக்கு ஒரு செட்டுண்ணுகுடுப்பாருங்க.
அப்பறம் எல்லாரும் விருந்து சாப்புடுவாங்க. ரெண்டு ஊட்லயும்சாப்புட்டு முடிச்சாத்தான் கல்யாணம் பேசி முடிச்சதா கணக்குங்க.இப்படி ரெண்டு ஊட்லயும் சாப்பிட்டு முடிச்சாச்சுன்னா அப்பறம்ஒருத்தரும் பேச்சு மாறக்கூடாதுங்க. மாறவும் மாட்டாங்க.
இதுல இருந்து கல்யாணக்காரியங்களெ ரெண்டுஊட்டுக்காரங்களும் சேந்துதான் செய்யோணுமுங்க. சில பேருநிச்சியம் முடிஞ்ச பொறகுதான் பத்திரிக்கை அடிக்கோணும்பாங்க.நாயமும் அதுதானுங்க. ஆனா பல சமயம் அழைப்புக்கு நாள்பத்தாதுன்னு மொதல்லயே பத்திரிக்க அடிக்க கொடுப்பாங்க.ஆளுக்கு எத்தன பத்திரிக்கை, ரெண்டு ஊட்டு அளைப்புன்னுபோடறதா, இல்ல தனித்தனியா அளைக்கிறதா போடறதாஅப்படீங்கறதெல்லாம் அன்னிக்கே முடிவு பண்ணீக்குவாங்க.தனித்தனியா அடிக்கறதுன்னா அவங்கவங்க அவங்களுக்குப் புடிச்சபிரஸ்ல கொடுத்துக்குவாங்க. ரெண்டு ஊட்டு அளைப்புன்னா,எந்தப்பிரஸ்ல அடிக்கறதுன்னு ரோசன பண்ணுவாங்க. அப்பறம்நல்லதா ஒரு பிரஸ் முடிவு பண்ணுவாங்க. நல்ல நாள்லெ அந்தபிரஸ்ஸுக்கு ரெண்டு பேரும் போயி பத்திரிக்கை அடிக்ககொடுப்பாங்க.
பத்திரிக்கை அடிச்சு முடிஞ்சாச்சுன்னுதெரிஞ்சதுக்கப்பறம் ரெண்டு ஊட்டுக்காரங்களும்போய் பத்திரிக்கைகளை வாங்குவாங்க. அப்பறம்பொண்ணூட்டுக்காரங்களும், மாப்பிள்ளஊட்டுக்காரங்களும், தனித்தனியா அவங்கவங்ககொலதெய்வத்து கோயிலுக்குப்போயி, மொதபத்திரிக்கை சாமிக்கு வெச்சுஎல்லாக்காரியங்களும் நல்லபடியா நடக்கோணும் சாமீன்னுகும்பிட்டுட்டு வருவாங்க.
நெருங்கின சொந்தங்களத்தான் நிச்சியத்துக்கு கூப்பிடுவாங்க.நிச்சியம் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் கல்யாணத்துக்குகூப்பிடுவாங்க. இது மிந்திக்காலத்து மொறமை. இப்ப சொந்தபந்தங்களெல்லாம் பெருகிப்போயிட்டதுனால நிச்சியம், உப்பு,ஜவுளி, பட்டினிச்சீரு, கண்ணாலம் எல்லாத்துக்குமா சேர்த்திஒண்ணாவே கூப்பிட்டுருவாங்க. அததற்குன்னு ஒவ்வொரு வட்டம்இருக்குதுங்க. எல்லாத்தையும் எல்லா விசேஷங்களுக்கும்அளைக்க மாட்டாங்க. ரொம்ப நெருங்கின சொந்தத்தைத் தான்எல்லா விசேஷத்துக்கும் கூப்பிடறதுங்க. மத்தவங்களைகண்ணாலத்துக்கு மட்டும்தான் கூப்பிடுவாங்க.
இதுல கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்படுமுங்க. “என்னைகல்யாணத்துக்கு மட்டும்தான் கூப்பிட்டிருக்கா, நிச்சியத்துக்குகூப்பிடல, அவளுக்கு மகத்துவம் கூடிப்போச்சு, நம்மள எல்லாம்ஒரு மனுசனா அவ கண்ணுக்குத்தெரியுமா இப்படி பேச்சு வரும்.கல்யாணக்காரங்க இதெல்லாம் கண்டும் காணாத மாதிரிதான்நடந்துக்கோணும். நேர்ல கேட்டா, ஏதாச்சும் சால்ஜாப்பு சொல்லிசமாளிக்கவேண்டியதுதான். இப்படி அளப்புக்கொடுத்துட்டுஇருக்கறப்போ நிச்சியம் பண்ற நாளு வந்துடும்.
நிச்சியம் எப்படிப்பண்ணுவாங்கன்னு அடுத்த பதிவுலபாக்கலாமுங்களா? 

2 கருத்துகள்: