பதிவுலக நண்பர்களே,
கீழே உள்ள விளம்பரத்தை ஒரு பதிவில் பார்த்தேன். மக்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குகிறார்கள் என்ற நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
வாரம் ஒரு முறை விளம்பர ஈமெயில் வருமாம். அதைப் படித்தால் பணம் தருவார்களாம். எவ்வளவு தெரியுமா? பிச்சைக்காசு 25 பைசா. பிச்சைக்காரன் கூட ஒரு ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. வருடம் 52 மெயில்கள். அதாவது 13 ரூபாய்கள். உங்கள் கணக்கில் 200 ரூபாய் சேர்ந்தால் பணம் கொடுப்பார்களாம். எத்தனை வருடத்தில் 200 ரூபாய் சேரும்? சுமார் 15 வருடங்கள். ஆக மொத்தம் நீங்கள் பதினைந்து வருடம் காத்திருந்தால் 200 ரூபாய் கிடைக்கும்.
இதைவிட காதில் பூ சுற்றும் வேலை ஏதாவது இருக்கிறதா? யோசியுங்கள் நண்பர்களே!!
ஈமெயில் படித்தால் பணம் தரும் rupeemail ல் இணைவது எப்படி?
இது உண்மை நண்பர்களே! இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்துகொண்டால் இத்தளத்தில் இருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாரம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளம்பர மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பார், அவற்றை திறந்து பார்த்தாலே உங்களது அக்கௌண்டில் அந்த விளம்பரத்துக்கான மதிப்பு எவ்வளவோ அவ்வளவு பணம் சேர்ந்திருக்கும். உங்களது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாலும் 2 ரூபாய் பணம் அளிக்கப்படுகிறது. மொத்தமாக ரூ.200 ஆனதும் நீங்கள் அந்த தொகையை டி.டி யாக பெறலாம். இலவசமாக உறுப்பினாராக இணைய கீழ் காணப்படும் படத்தை அழுத்தவும்.
அவ்வள்வு நேரம் அதிலுள்ள லிங்குகளை கிளிக்கினால் பண்ம் வருதோ இல்லையோ வைரஸ் , மால்வேர் எல்லாமே வரும் ..தேவையா இது ..நம்ம நேரத்தை வீனாக்கி கம்ப்யூவை ரிப்பேர் செய்யக்கூட அந்த காசு பத்தாது :-)))
பதிலளிநீக்குநல்லா சுத்துறாய்ங்கய்யா காதுல பூவை ஹய்யோ..ஹய்யோ...
இது போன்ற விளம்பரங்கள் புற்றீசல் போலக் கிளம்பிக்கொண்டிருக்கின்றன - ஏமாறத் தயாராக பல இளிச்சவாயன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்..!
பதிலளிநீக்குபடத்தை கிளிக் செய்தால் வொர்க் ஆகவில்லை நண்பரே
பதிலளிநீக்குபல ஏமாற்று வேலைகளுக்கான தகவல்கள் தினமும் வந்துகொண்டு தான் உள்ளன. நாம் உடனடியாக அவற்றை delete செய்துவிடுவதே புத்திசாலித்தனம்.
பதிலளிநீக்குஎப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு எங்கே கற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை....
பதிலளிநீக்குஐயா, ரொம்ப சூடா இருக்கீங்க போல.
பதிலளிநீக்குசார் நானும் இந்த மாதிரி ஒரு விளம்பரத்தை ஒரு வலைபக்கத்தில் பார்த்திருக்கேன், இதெல்லாம் அவங்க சம்பாரிக்க பயன்படுத்தும், மோசடி யுக்தி
பதிலளிநீக்குIthuthaan semai joke sir.
பதிலளிநீக்குநல்லாதான்யா சுத்துறாங்க பூவை ஆனா காதில் இல்லை பூவால் எங்களை மறைக்கிறார்கள்..!!!!? ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுவோருக்கு பஞ்சமில்லை...!!??
பதிலளிநீக்குகாதுல பூ. நேர விரயம்.
பதிலளிநீக்குபிச்சைகாரன விட கேவலமா இல்ல நினைக்கிறாங்க....
பதிலளிநீக்குஹி..ஹி.. பதிவை படித்துவிட்டு.........
பதிலளிநீக்குஎனக்கு, இதன்,மூலம் 4 BMW கார் கிடைத்திருக்கிறது.
விரைவில் 2 பங்களா , 3 மோட்டார் சைக்கிள், சின்னவீடு பெரியவீடு கிடைக்கப்போகிறது..ஆகவே உங்கள் நண்பர்களை, இந்த திட்டத்தில் சேர்த்துவிட்டால்.. 1 நண்பருக்கு, 10ரூ வீதம், உங்களுக்கு பணம் கிடைக்கும்னு”, யாராவது மெயில் அனுப்புவாங்க.. பாருங்களேன்...
:-)
பொதுவாக ஒரு மனிதனுக்கு என்னென்ன பலவீனங்கள் இருக்கிறதோ அதனை வைத்து காசு பார்ப்பவர்கள் பலர். நமது பலவீனங்களில் ஒன்று, எளிதாக பணம் சம்பாதிக்கும் எண்ணம். இதை வைத்து பலர் மோசடி செய்கிறார்கள். சீட்டுக் கம்பெனி, லாட்டரி, என்ற இந்த வரிசையில் இந்த ஈமெயில் மோசடி.
பதிலளிநீக்குஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். -எங்கேயோ படித்தது.
விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சார்!
ஏமாற்றுக்காரர்கள்... அவர்கள் பணம் சம்பாதிக்க நாம் அவர்களது மெயிலை திறந்து படிக்க வேண்டும்... இணையத்தில் இது போன்று நிறைய உண்டு.
பதிலளிநீக்குநண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
சே.குமார்
மனசு (http://vayalaan.blogspot.com)
எனது பதிவு தவறானது என சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு//பட்டாபட்டி.... said...
பதிலளிநீக்குஹி..ஹி.. பதிவை படித்துவிட்டு.........
எனக்கு, இதன்,மூலம் 4 BMW கார் கிடைத்திருக்கிறது.//
அடுத்த மாதம் சிங்கப்பூர் வருகிறேன். அப்போது ஊர் சுற்றிப் பார்க்க ஒரு கார், டிரைவருடன் வைத்திருக்கவும்.
//Raja's blog said...
பதிலளிநீக்குஎனது பதிவு தவறானது என சுட்டிக்காட்டியதற்கு நன்றி.//
நண்பரே, நன்றிக்கு நன்றி. பெரிதாக காயம் ஒன்றும் ஆகிவிடவில்லையே?!
ya it is true
பதிலளிநீக்கு