விவசாயியின் பேராசைக்கு தூபம் போட்டதில் அரசுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டின், (ஏன், மொத்த இந்தியாவின் என்று கூட சொல்லலாம்) பெரிய சாபக்கேடு என்னவென்றால் “இலவசக் கலாச்சாரம்”. எல்லாம் இலவசம். டி.வி. இலவசம். கேஸ் அடுப்பு இலவசம். பெண்டாட்டி இலவசம் (இலவசக் கல்யாணம்), பொங்கல் சாமான்கள் இலவசம், தீபாவளிக்கு வேஷ்டி, சேலை இலவசம். இப்படியாக எல்லோரையும் பிச்சைக்காரர்களாக மாற்றியாயிற்று. இது போக அரசு வேலை வாய்ப்புத்திட்டம். காலையில் போய் பெயர் கொடுத்துவிட்டு மரத்தடியில் படுத்து தூங்கி எழுந்தால் நூறு ரூபாய் கூலி. கஷ்டப்பட்டு வேலை செய்பவன் முட்டாளாகிக்கொண்டு வருகிறான்.
இந்த வரிசையில் முதலில் வந்தது விவசாயிகளின் கிணறுகளுக்கு இலவச மின்சாரம். இதை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு விஞ்ஞான நிபுணர்களும் ஒரு காரணம். அதாவது ஆற்றுப்பாசன விவசாயிகளும், குளத்துப்பாசன விவசாயிகளும் தங்கள் நீர்த்தேவைக்காக செய்யும் நீர்த்தீர்வை செலவு சுமார் நூறு ரூபாய்கள் மட்டுமே. ஆனால் கிணற்றுப்பாசன விவசாயிகள் கிணறு வெட்ட, மோட்டார் பம்ப் செட் வாங்க, மின்சார இணைப்பு வாங்க என்றெல்லாம் அதிக முதலீடு செய்த பின்பும், தொடர் செலவாக மின்சார கட்டணம் ஆயிரக்கணக்கில் கட்டவேண்டியதாக இருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் கிணற்றுப்பாசன விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கிறதா என்றால் அது இல்லை. ஆகவே அவர்களுக்கு அரசு ஏதாவது வகையில் சலுகை காட்டவேண்டுமென்று போராட்டங்களும், கருத்துப் பரிவர்த்தனைகளும் நடந்ததன் விளைவாக, கிணற்றுப்பாசன விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
இங்குதான் ஆரம்பித்தது வினை. மின்சாரத்திற்கு காசு இல்லை என்று ஆனவுடன் நிலத்தடி நீர் உபயோகம் பன்மடங்காகப் பெருகியது. எவ்விதக்கட்டுப்பாடும் இல்லாமல் விவசாயிகள் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தனர். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குப் போனது. நிலத்தடி நீர், மக்களின் பொதுச்சொத்து என்கிற கருத்து யாருக்கும் இல்லாமற்போனது. யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்கிற மனப்பான்மையே எங்கும் நிலவியது. பல கிணறுகள் வறண்டு போயின. வளர்ந்து வரும் நகரத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு வேலைக்கு ஆட்களும் கிடைப்பது அரிதாகியது. அந்த விவசாயிகள் பலரும் “முட்டுக்கல்” விவசாயத்தைப் பண்ண ஆரம்பித்தார்கள். அதென்ன முட்டுக்கல் விவசாயம் என்கிறீர்களா, அதுதாங்க ரியல் எஸ்டேட் பிசினஸ். எல்லோரும் தங்கள் நிலங்களை புரோக்கர்களிடம் அக்ரீமென்ட் போட்டுவிட்டு, வந்த காசை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையை வளர விட்டால் உணவுப்பஞ்சம் வந்துவிடுமென்ற பயம் அரசுக்கு வந்தது. உள்நாட்டு வெளிநாட்டு நிபணர்களை வரவழைத்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து, ஊரிலுள்ள கிணறுகளை எல்லாம் சொகுசு காரில் சுற்றிக் காண்பித்தார்கள். அவன் ஊர்ல, அவன் கிணத்தைப் பார்த்ததே இல்லை. இந்தியாவுக்கு வந்துதான் கிணற்றைப் பார்க்கிறான்.
ஆனால் அவன் கெட்டிக்காரன். இந்த உண்மையை வெளியில் சொல்வானா? அவர்களும் தஸ்புஸ் என்று இங்கிலீசில் பேசிக்கொண்டு, நம்ம ஆளுகள் கிட்ட இருந்தே எல்லா விசயமும் தெரிஞ்சுகிட்டு, இங்கிலீசில் ஒரு பெரிய ரிப்போர்ட் கொடுத்தார்கள். அதில் “நீங்கள் பயப்படுகிறது முற்றிலும் சரி. இப்படியே விட்டால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாகப் போய்விடும். உள்ளூர் நிபுணர்களை வைத்து இன்னும் பல தகவல்களைத் திரட்டிக்கொண்டு எங்கள் ஊருக்கு வரச்சொல்லுங்கள். இந்த ஊர் வெய்யிலில் எங்களால் சரியான தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே நாங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்து சொல்லியனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டு அவர்களின் கன்சல்டேஷன் பணத்தை வாங்கிக்கொண்டு பறந்து போனார்கள்.
இப்படி பலநாட்டு நிபணர்களுக்கும் சொம்பு தூக்கி, நம் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தது என்னவென்றால்:
1. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அருகி வருகிறது.
2. அதற்கு உடனடியாக ஏதாவது செய்தேயாக வேண்டும்.
3. என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து சொல்ல உடனடியாக ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படவேண்டும்.
4. அவர்கள் உடனே பல வெளிநாட்டுகளுக்குச் சென்று ஆராய்ந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வரவேண்டும்.
5. இந்தக் குழுவிற்கு மாண்புமிகு வேளாண்அமைச்சர் தலைமை தாங்குவார்.
இப்படியாக பல அரசியல் கூத்துகள் நடந்து முடிந்த பிறகு, நம் உள்ளூர் நிபணர்கள் சில உத்திகளைக் கண்டுபிடித்தார்கள். முதலில் இந்த இலவச மின்சாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உண்மை புலப்பட்டது. அரசியல் ரீதியாக ஒன்றை இலவசம் என்று ஆக்கிய பிறகு அதற்கு காசு வாங்க ஆரம்பிப்பது அரசியல் தற்கொலைக்கு சமம். இதற்காக நம் நிபுணர்கள் ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார்கள். செருப்பு காலுக்குப் பத்தவில்லையா? காலை வெட்டு! இந்த ரீதியில் மின்சாரம் சப்ளை செய்வதைக் கட்டுப்படுத்தினார்கள். 24 மணி சப்ளை போய் 20 மணி, 16 மணி, 12 மணி, 8 மணி என்று படிப்படியாகக் குறைத்து தற்போது இரண்டு தவணைகளாக மொத்தம் 6 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படுகிறது. எதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் நம் மக்கள் அதற்கு பழகிக்கொள்ளுவார்கள் என்கிற உண்மை அரசியல்வாதிகளுக்குப் புரிந்து விட்டது.
பிறகு இஸ்ரேல் சென்று வந்த நம் நிபுணர் ஒருவர் “சொட்டு நீர்ப்பாசன முறையை” அறிமுகப்படுத்தினார். அப்போது நீர்ப்பாசன வல்லுநர்கள் எல்லோரும் “ஆஹா, நிலத்தடி நீர்ப் பிரச்சினை தீர்ந்துவிட்டது” என்று ஆர்ப்பரித்தார்கள். சில ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த முறையில் உள்ள சீர்கேடுகள் வெளிவர ஆரம்பித்தன. அதிக முதலீடு, தரமற்ற குழாய்கள், நம்நாட்டுக்கு உகந்த சரியான தொழில் நுட்பம் இல்லாமை, ஆகிய காரணங்களினால் இந்த சொட்டு நீர்ப்பாசன முறை எதிர்பார்த்த அளவு பலனைத் தரவில்லை. இப்போதும் பல விவசாயிகள் இந்த முறையை குறிப்பிட்ட சில பயிர்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு திராக்ஷை பயிர். இதற்கு இந்த முறை மிகவும் லாபகரமாக இருக்கிறது. தென்னைக்கு ஓரளவு பரவாயில்லை. ஆனால் மற்ற பயிர்களுக்குப் பொருந்தவில்லை. அரசு 50 சதம் மான்யம் கொடுத்தும் இந்த முறை பிரபலமாகவில்லை.
அருமையான பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
மனப்பூர்வ பாராட்டுக்கள்.
ரத்தனவேல் ஐயா,
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
இந்நேரத்திலேயே பதிவுகள் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களா? நீங்களும் நம்ம ஜாதிதான் (தூக்கம் வராத ஜாதி) போல இருக்கிறது.
முதலில் ஒரு வருத்தமான செய்தி. இன்று தான் தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இந்த காலை நேரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இன்று விடுமுறை என்பதால் தூக்கம் வராத ஜாதி போல சீக்கிரம் எழுந்து விடுகின்ற ஜாதியில் என்னையும் சேர்த்து உங்க சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் வழங்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது
பதிலளிநீக்குமேலே பேனரில் நீங்க சொல்லியுள்ள குசும்புத்தனமான வார்த்தைகளுக்கு கடும் கண்டனங்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.
இரண்டு ஓட்டுப்பட்டையின் வாயிலாகவும் ஓட்டளித்து விட்டேன். ஆனால் எனக்கு எதுவும் தராமலேயே என்னை ஓட்டளிக்க வைத்தமைக்கும் அடுத்த கண்டனம்.
நீங்க தாராபுரத்தான் மற்றும் ரத்னவேல் இந்த மூன்று அய்யாக்களையும் தொடக்கம் முதல் கூர்மையாக கவனித்துக் கொண்டு இருக்கின்றேன். வயதான காலத்தில் மூன்று பேரும் இந்த வலைபதிவுகளை வாசிக்கும் (உருப்படியாக)கூட்டணி என்ற மலர்க்கீரிடத்தை சூட்டுகின்றேன். உங்கள் கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதை பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்டக்குழு, முடிவு எடுக்கும் குழு, உருப்படாத குழு போன்றவற்றை கூட்டாமலேயே ஆலோசித்து பிறகு சொல்கின்றேன். அது வரைக்கும் அமைதி காக்கும் படி இந்த கூட்டத்தின் வாயிலாக தெரியப்படுத்துகின்றேன்.
பதிலளிநீக்குசொட்டு நீர் பாசனத்தை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
பதிலளிநீக்குசரி சரி உடனே இஸ்ரேலுக்கு ஒரு குழுவாக அரசாங்க பணத்தின் மூலம் செல்வோம்.
புதிய ரக விதைகள் வந்துள்ளது.
சரி சரி அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் போடுவோம்.
ஆயிரம் ஏக்கம் இரண்டாயிரம் ஏக்கரை ஒன்றாக சேர்த்து ஒரே பயிரை பயிர் செய்வோம்.
சரி சரி ஏதோவொரு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த நிலங்களை தாரை வார்ப்போம்.
எல்லாமே சரி தான்.
ஆனால் தஸ்சு புஸ்சுன்னு இங்கிலீஸ்காரன் பேசுற இங்கிலீஸ் பேசிக்கிட்டு, ஸ்டார் ஹோட்டல்ல மட்டும் உட்கார்ந்து கொண்டு கொடுக்கின்ற அறிக்கை.....
அய்யோ வெள்ளையாய் இருப்பவன் எப்போது பொய் சொல்ல மாட்டான்.
சரி சரி என்ன சாதித்தோம்?
என்ன இப்படி சொல்லீட்டிங்க.
அது தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தாச்சுல்ல.
அய்யோ அப்புறம்?
இப்ப ஒரு ரூபாயும் கொடுக்கத் தேவையில்லை.
அப்புறம்
கடைசியா என்னதான் சொல்ல வர்றீங்க.
பேசாம எல்லாத்தையும் 1947க்கு முன்னால் யார் கையில் நாடு இருந்துச்சோ அதே மாதிரி அவனுங்க கையில் கொடுத்துட்டு அரசியல்வாதிகளுக்கு அவனுங்க போடுற பிச்சையை நாம் வேடிக்கை பார்த்துட்டு பொத்திக்கிட்டு வெங்காயத்த கடுச்சு தின்னுட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தானே.
மனிதரில் இத்தனை நிறங்களா?
வேடிக்கை மனிதர்கள்.
என்னமோ போங்க. ஆனால் ரொம்ப நாளைக்குப் பிறகு இன்று உங்க பதிவுக்கு வர முடிந்தது. வெள்ளை பின்புலத்தில் பெரிய பெரிய எழுத்துக்கள்.
ரசித்து நிதானமாக படித்தேன்.
ஜோதிஜி,
பதிலளிநீக்குவாங்க. அப்படியே பூந்து வெளயாடிட்டீங்க. வயசான காலத்துல இது ஒண்ணுதான் (பதிவுகள்) ஏதோ பொழுதக் கழிக்க உதவுது.
உங்க ஆதரவு எண்ணைக்கும் இருக்கும் என்று நம்பிஇஇஇஇஇஇஇஇக் கொண்டு இருக்கிறோம்.
ஜோதிஜி,
பதிலளிநீக்கு//வெங்காயத்த கடுச்சு தின்னுட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தானே.//
வெங்காயம் விக்கிற வெலைல எங்க போயி கடிச்சிக்கிறது? பக்கத்துல வச்சுக்கிட்டு வெரல வேணும்னா கடிச்சுக்கலாம்!!!!
பெரும்பாலும் பலரின் புகைப்படத்தில் இருக்கும் முகத்திற்கும் மற்றபடி நேரிடையாக பார்க்கும் போதும் உருவ அமைப்பு வேறானதாக இருக்கும்.
பதிலளிநீக்குஆனால் நீங்க தான் அநியாயத்திற்கு நடிக்ர் சிவகுமார் போல இளமையாய் இருந்து கொண்டு வயசான காலத்தில் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துனீங்க?
அப்புறம் தினந்தோறும் சின்ன வெங்காயம் தான் சாப்பிடுகின்றேன்.
நிலத்தடி நீர்த் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாகும். விவசாய நிலங்கள் தரிசுநிலங்களாகிக் கொண்டிருப்பது ஒரு புறம்.. குடி நீரும் அருகி வருகிறது.
பதிலளிநீக்குஎமக்கான தீர்வுத் திட்டத்தினை நாங்களே கண்டு கொள்ளவேண்டும். அதுதான் சிறந்த பலனை தரும்.
மழை நீர் சேகரிப்பு மிக முக்கியமானது ...இதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும் ....நல்ல பதிவு சார் !
பதிலளிநீக்கு//JOTHIG ஜோதிஜி said...
பதிலளிநீக்குபெரும்பாலும் பலரின் புகைப்படத்தில் இருக்கும் முகத்திற்கும் மற்றபடி நேரிடையாக பார்க்கும் போதும் உருவ அமைப்பு வேறானதாக இருக்கும்.
ஆனால் நீங்க தான் அநியாயத்திற்கு நடிக்ர் சிவகுமார் போல இளமையாய் இருந்து கொண்டு வயசான காலத்தில் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துறீங்க?//
ஜோதிஜி-சின்ன வயசில இருந்து எனக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். அந்தக் காலத்து கோயமுத்தூர் க்ளைமேட் அப்படி. அதனாலயே தினமும் தலைக்குத் தண்ணீர் விட்டு குளிக்கமாட்டேன். மழையில் நனைந்துவிட்டால் போச்சு. ஒரு வாரம் தும்மலும் சளியும்தான்.
இப்பத்தான் கொஞ்சம் நல்லா இருக்கேன். தலைல ஐஸ் வச்சு என்னை பழய நிலைக்கு கொண்டு போயிடுவீங்க போல இருக்கு. நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்?????
//அப்புறம் தினந்தோறும் சின்ன வெங்காயம் தான் சாப்பிடுகின்றேன்.//
திருப்பூர் உங்களை அவ்வளவு பெரிய ஆளா பண்ணி வச்சிருக்குது!!!!!!!! திருப்பூர்ல தண்ணிக் கஷ்டமாமே? அப்ப குளியல் எல்லாம் பன்னீர்லயா?
உள்ளேன் ஐயா!!!!
பதிலளிநீக்கு