பதிவர்களில் பல வகை இருக்கிறார்கள்.
பிரபல பதிவர்கள்: இவர்கள் என்ன பதிவிட்டாலும் ஜே போடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கறது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
மொக்கைப்பதிவர்கள்: இவர்கள் பதிவில் ஒரு விஷயமும் இருக்காது. ஆனால் முந்நூறு பின்னூட்டங்கள் கண்டிப்பாக போடப்படும்.
சாதாரணப் பதிவர்கள்: கோயில், குளங்கள், பஜ்ஜி, போண்டா, எங்க வீட்டுக் கல்யாணம் இவைகளைப் பற்றி எழுதுபவர்கள். பதிவுலகில் இவர்கள்தான் மெஜாரிட்டி.
நவயுகப் பதிவர்கள்: இவர்கள் அறிவு ஜீவிகள். சமூகத்தைச் சீர்திருத்தப் போகிறவர்கள். புதுப் புது தலைப்புகளில் பதிவு போடுவார்கள். ஆனால் அவ்வப்போது என் பதிவை இவன் திருடீட்டான், அவன் திருடீட்டான் என்று புலம்பல் பதிவுகளும் போடுவார்கள்.
காப்பி பேஸ்ட் பதிவர்கள்: இவர்கள் பாடுதான் இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் சொந்தமாக பதிவு எழுதி தங்கள் மூளையை வீணாக்க மாட்டார்கள். ஏனென்றால் அது இல்லை. ஆகவே அடுத்தவர்களின் பதிவை அப்படியே காப்பி செய்து தங்கள் பதிவில் பேஸ்ட் செய்து விடுவார்கள். இது நியாயமா, அநியாயமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்காக இவர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகம். மற்ற பதிவர்களெல்லாம் இவர்களை புழு, பூச்சியை விட கேவலமாகப் பேசுகிறார்கள்.
இந்த காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு உதவுவதற்காக நான் செய்த உத்தி என்னவென்றால், கீழே கண்ட அறிவிப்பை என் பதிவின் தலைப்பிலேயே கொடுத்து விட்டேன்.
இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக...தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம். எங்கிருந்து எடுத்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் இன்னொரு வருத்தமான செய்தி: இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுப் பட்டைகள் உண்டு.
ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.
இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போய் விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் எங்க ஊர்ல இருக்கிற புளிய மரத்தையெல்லாம் ரோட்டை அகலப்படுத்துகிறேன் என்று வெட்டிவிட்டார்கள். புளிய மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டால்தான் பேயான பிறகு அங்கேயே வசிக்கலாம்?
சக பதிவர்களிடமிருந்து நான் கேட்கும் உதவி என்னவென்றால், உங்கள் ஊரில் எங்காவது புளியமரம் தென்பட்டால் உடனே எனக்குத் தெரிவித்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் சேர இறைவனை வேண்டிக்கொள்வேன்.
பிரபல பதிவர்கள்: இவர்கள் என்ன பதிவிட்டாலும் ஜே போடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கறது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
மொக்கைப்பதிவர்கள்: இவர்கள் பதிவில் ஒரு விஷயமும் இருக்காது. ஆனால் முந்நூறு பின்னூட்டங்கள் கண்டிப்பாக போடப்படும்.
சாதாரணப் பதிவர்கள்: கோயில், குளங்கள், பஜ்ஜி, போண்டா, எங்க வீட்டுக் கல்யாணம் இவைகளைப் பற்றி எழுதுபவர்கள். பதிவுலகில் இவர்கள்தான் மெஜாரிட்டி.
நவயுகப் பதிவர்கள்: இவர்கள் அறிவு ஜீவிகள். சமூகத்தைச் சீர்திருத்தப் போகிறவர்கள். புதுப் புது தலைப்புகளில் பதிவு போடுவார்கள். ஆனால் அவ்வப்போது என் பதிவை இவன் திருடீட்டான், அவன் திருடீட்டான் என்று புலம்பல் பதிவுகளும் போடுவார்கள்.
காப்பி பேஸ்ட் பதிவர்கள்: இவர்கள் பாடுதான் இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் சொந்தமாக பதிவு எழுதி தங்கள் மூளையை வீணாக்க மாட்டார்கள். ஏனென்றால் அது இல்லை. ஆகவே அடுத்தவர்களின் பதிவை அப்படியே காப்பி செய்து தங்கள் பதிவில் பேஸ்ட் செய்து விடுவார்கள். இது நியாயமா, அநியாயமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்காக இவர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகம். மற்ற பதிவர்களெல்லாம் இவர்களை புழு, பூச்சியை விட கேவலமாகப் பேசுகிறார்கள்.
இந்த காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு உதவுவதற்காக நான் செய்த உத்தி என்னவென்றால், கீழே கண்ட அறிவிப்பை என் பதிவின் தலைப்பிலேயே கொடுத்து விட்டேன்.
இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக...தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம். எங்கிருந்து எடுத்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் இன்னொரு வருத்தமான செய்தி: இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுப் பட்டைகள் உண்டு.
ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.
இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போய் விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் எங்க ஊர்ல இருக்கிற புளிய மரத்தையெல்லாம் ரோட்டை அகலப்படுத்துகிறேன் என்று வெட்டிவிட்டார்கள். புளிய மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டால்தான் பேயான பிறகு அங்கேயே வசிக்கலாம்?
சக பதிவர்களிடமிருந்து நான் கேட்கும் உதவி என்னவென்றால், உங்கள் ஊரில் எங்காவது புளியமரம் தென்பட்டால் உடனே எனக்குத் தெரிவித்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் சேர இறைவனை வேண்டிக்கொள்வேன்.
நான் எந்த பிரிவுல வரேன்னு தெரியலையே
பதிலளிநீக்குநல்லா சொன்னீங்க ஐயா! நானும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவர் தான்! ஆனா சக பதிவர்களின் பதிவுகளை காப்பி அடிப்பதில்லை! செய்திகளை மட்டும் காப்பி அடிக்கிறேன்!
பதிலளிநீக்குவணக்கம் டாக்டர் , ரொம்ப விரக்தில இருப்பீங்க போல இருக்கே ...
பதிலளிநீக்கு///சாதாரணப் பதிவர்கள்: கோயில், குளங்கள், பஜ்ஜி, போண்டா, எங்க வீட்டுக் கல்யாணம் இவைகளைப் பற்றி எழுதுபவர்கள். பதிவுலகில் இவர்கள்தான் மெஜாரிட்டி.///
பதிலளிநீக்குநம்மளும் சாதா தாங்க....
பல வெகுஜனப்பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை வெளிநாட்டில் இருக்கிறவர்களும், அந்தப் பத்திரிகை வாங்காதவர்களும் வாசிக்கிற வாய்ப்பில்லை. எனவே, ஒரு வகையில் காப்பி & பேஸ்ட் செய்கிறவர்கள் உதவியே செய்கிறார்கள் ஐயா!
பதிலளிநீக்கு///ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.///
பதிலளிநீக்குஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ..உண்மைய ஒத்துகொண்டீர்களே....
பதிவர்களை வகைப் -படுத்திய- பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநல்லா காமெடி பண்றீங்க ...இப்பத்தானே கருத்துப்பெட்டி இணைச்சிருக்கீங்க ...இனி அடிக்கடி வருவேன் ...
பதிலளிநீக்குஎன்னோட ஒரு பதிவு ஒரு இடத்தில காபி பேஸ்ட் ஆகி இருந்துச்சி ..சத்தம் போடாமல் அங்கே போய் நன்றின்னு போட்டுட்டு வந்தேன் .
பதிலளிநீக்குஅதுவும் மிகப்பிரபலமான வெப்சைட் ..((அப்போ நானும் உருப்படியா ஏதோ எழுதி இருக்கேன் போல )) அவ்வ்வ்வ் :-))
ஐயோ,.. இது காமெடியான பதிவா இல்லை சீரியசான பதிவான்னு தெரியலையே,..
பதிலளிநீக்குசீரியசாகவும் பின்னூட்டம் போட முடியல,. காமெடியாகவும் போட பயமாயிருக்கு,..
இதில் நீங்கள் எந்த வகை சார்? நான் எந்த வகைன்னு சொல்லுங்களேன்?
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் மற்றும் சகபதிவர்கள் உபயோகத்துக்காக...தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம். எங்கிருந்து எடுத்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் இன்னொரு வருத்தமான செய்தி: இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுப் பட்டைகள் உண்டு.
பதிலளிநீக்குநான் கூட யாரும் எடுக்க கூடாதுன்னு இப்படி போட்டிருக்கீங்களோன்னு நெனச்சேன், ரொம்ப தைரியமா எழுதிருக்கீங்க,
வருத்தபடாதீங்க உங்க பதிவை திருட யாராவது கண்டிப்பாஇருப்பாங்க,
உங்கள் பதிவு திருடப்பட வாழ்த்துக்கள்.
அய்யா அவர்களுக்கு எழுதுவது என்னவென்றால்...
பதிலளிநீக்குபொதுவாக நம் மக்கள்கள் தன்னம்பிக்கை தரும் பதிவுகள்,சுய முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கட்டுரைகள்,பொருளாதர வளர்ச்சியயை மேம்படுத்துவதற்க்கான தொடர்கள்,மனோவியல் சித்திரத்தை அக்கு வேரு ஆணி வேராக பிரித்து எடுக்கும் படைப்புகள்,வறுமை ஒழிப்பு,வணிகம் மற்றும் மருத்துவம் போக,இப்போ நமீதா பக்கம் திரும்பி இருப்பது வேதனையே.
இதற்க்கு ஓட்டுகளும் பின்னூட்டங்களும் கனிசமாக கிடைப்பதால்,சினிமா பிரபலங்களைப் பற்றியே செய்தியாக எழுதுகிறார்கள்,சில சகோ பதிவர்கள்.
குழு மனிதர்களின் முன்னெடுப்பும், முயற்ச்சிகளும்தான் சமுதாயத்தை வெற்றி பாதையின் பக்கம் கொண்டு செல்கிறது என்பதற்க்கு, ப்ளாக் நண்பர்கள்தான் ஓர் உதாரணம்.
அவர்கள் மொக்கை பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டு நல் பதிவு எழுதாவர்கள் என்று நம்பூவமாக.
என்ன ஐயா இப்படி சொல்லிட்டீங்க. நா இருக்கேன்ய்யா உங்களுக்கு. தாராளமா நீங்க....
பதிலளிநீக்குஇது போல பரபரப்பான தலைப்பும், செய்தியும் போட்டாவது ஹிட்டானா சரி.
மேற்கூறிய ஐந்தில் நீங்கள் எந்த வகை என்று சொல்லவே இல்லையே ஐயா ))
பதிலளிநீக்கு//இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போய் விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் எங்க ஊர்ல இருக்கிற புளிய மரத்தையெல்லாம் ரோட்டை அகலப்படுத்துகிறேன் என்று வெட்டிவிட்டார்கள். புளிய மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டால்தான் பேயான பிறகு அங்கேயே வசிக்கலாம்?//
பதிலளிநீக்குகாப்பி பேஸ்டுக்கே தூக்கா? அய்யோ
பிரபல பதிவர்கள்: இவர்கள் என்ன பதிவிட்டாலும் ஜே போடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கறது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
பதிலளிநீக்குரொம்ப சரியா சொன்னீங்க
// பிரபல பதிவர்கள்: இவர்கள் என்ன பதிவிட்டாலும் ஜே போடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கறது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
பதிலளிநீக்குமொக்கைப்பதிவர்கள்: இவர்கள் பதிவில் ஒரு விஷயமும் இருக்காது. ஆனால் முந்நூறு பின்னூட்டங்கள் கண்டிப்பாக போடப்படும். //
உண்மையோ உண்மை!
ஐயா காட்டான் கொப்பி பேஸ் செய்யமாட்டான்யா அதுக்கு தலையில ஏதோ இருக்கோனுமாமே..
பதிலளிநீக்குகாட்டான் குழ போட்டான்..
Pu.maram Irukku; aanaa illai.
பதிலளிநீக்குயாராவது சீக்கிரம் காப்பி பேஸ்ட் பண்ணி, ஐயாவைக் காப்பாத்துங்கப்பா!
பதிலளிநீக்குசரமாரியா அடிச்சு விளையாடியிருக்கீங்களே!
ஆகா...எல்லாப் பதிவர்களையும் சேர்த்துப் போட்டுத் தாளிச்சிருக்கிறீங்களே.
பதிலளிநீக்கு/இது நியாயமா, அநியாயமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்காக இவர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகம். மற்ற பதிவர்களெல்லாம் இவர்களை புழு, பூச்சியை விட கேவலமாகப் பேசுகிறார்கள்./
பதிலளிநீக்குவணக்க்ம
நல்ல பதிவு.ஏறக்குறைய என் கருத்தும் இதுதான்.காப்பி அடிக்கும் போது நன்றி என்று ஒரு வார்த்தையும்,சுட்டி இணைப்பு கொடுத்து விட்டால நல்லது என்று கருகிறேன்.
நன்றி
ஐயாமார்களே, அம்மாமார்களே, எல்லோருக்கும் வணக்கமும் நன்றியும். ராத்திரிதான் பதிவப் போட்டுட்டு படுத்தேன். நான் ஒரு சாதாரணப் பதிவர்தானுங்க. விடிஞ்சு எந்திருச்சுப் பார்த்தா நான் ஒரு பிரபல பதிவர் ஆகிட்டனுங்க.
பதிலளிநீக்குஎன் ஆயுசில இத்தன பின்னூட்டம் பார்த்ததில்லீங்க. எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கிறனுங்க.
எப்படியாச்சும் எல்லாப் பதிவுகளுக்கும் வந்துடறனுங்க.
ஐயையோ, என்னங்க இது அநியாயம்? இப்பத்தான் பார்த்தனுங்க, தலைல ரெண்டு கொம்பு மொளச்சிருக்குதுங்க?
//நிரூபன் said...
பதிலளிநீக்குஆகா...எல்லாப் பதிவர்களையும் சேர்த்துப் போட்டுத் தாளிச்சிருக்கிறீங்களே.//
நிரூபன், உங்களை இதில் சேர்க்கலீங்க, நெஜமா!
//கந்தசாமி. said...
பதிலளிநீக்குமேற்கூறிய ஐந்தில் நீங்கள் எந்த வகை என்று சொல்லவே இல்லையே ஐயா ))//
தற்பெருமை கூடாதுங்க, Namesake-இதுக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு நெரியலீங்க.
இப்ப பாருங்க, நீங்க என் பேரையே காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கீங்க. இதுவரைக்கும் நான் என் வாயைத் தொறந்து எதாச்சும் சொல்லியிருக்கனுங்களா?
//நிரூபன் said...
பதிலளிநீக்குஆகா...எல்லாப் பதிவர்களையும் சேர்த்துப் போட்டுத் தாளிச்சிருக்கிறீங்களே.//
ஆனா நிரூபன், உங்க பதிவப் படிச்சுட்டுத்தான் இந்தப் பதிவ எழுதினேன். அதாவது தழுவல் அல்லது எதிர்வினை என்று சொல்லலாம். அதுக்கு உங்களுக்கு ஸ்பெசலா நன்றிங்க.
வேற எதாச்சும் செய்யோணும்னு அபிப்பிராயப்பட்டா சொல்லுங்க, செஞ்சுடறேன். காசா, பணமா? கூகுளாண்டவர் புண்ணியத்தில எல்லாமே இலவசம்தானுங்களே!
அய்யம்மாளின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅய்யா செம் ஃபார்ம்ல இருக்கறீங்க :)))))
பதிலளிநீக்குவலையுலக இளவல் வாழ்க வாழ்க !!
கட்டபொம்மனை துக்கில போட உதவிய புளிய மரங்களை கொல்வது தப்பா..சார்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நீங்க பிரபல பதிவர் ஆயிட்டதுக்கு. எதிர்காலத்தில நீங்க தான் பதிவுலகின் No. 1 பிரபல பதிவர் அப்பிடீன்னு பேரெடுக்க வாழ்த்துறேனுங்க.
பதிலளிநீக்குசார், எங்க வீட்டு முன்னாடி அரச மரம்தான் இருக்கு பரவாயில்லேன்ங்களா?...
பதிலளிநீக்குசும்மா தாஷுக்கு சொன்னதுங்க, நீங்கபாட்டுக்கு ஒரு முழம் கயித்த தோள்ல போட்டுகிட்டு வீட்டு பக்கம் வந்துடாதீங்க சார்..
அப்புறம் பின்னூட்டம் போட்டாச்சு + ஓட்டும் போட்டாச்சு. ஒங்கூர்பக்கமா வர்றச்ச ஒரு பார்ட்டி குடுத்துருங்க..
மற்றொரு வகையை விட்டுடீங்க!
பதிலளிநீக்குமாங்கு மாங்குன்னு எழுதுவோம்.ஒருத்தரும் படிக்கமாட்டாங்க. ஆனாலும் விடாம எழுதுவோம்.
அப்படி ஒரு கடமை உணர்ச்சி.(''யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறீங்க!'')
//நான் எந்த பிரிவுல வரேன்னு தெரியலையே?//
பதிலளிநீக்குNaanumthaan... Ha.. Ha...
பதிவ யாரும் திருடலன்னு தூக்கா , சும்மா காமடி பண்ணாதிங்க , நீங்களாவது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,( ஏத்தி உடறேன்னு நினைக்காதீங்க) ,,,,பதிவு திருடன் கண்டிப்பா உங்கபக்கம் வருவான்.................வாழ்த்துக்கள்.......!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குபதிவர்களைப்பற்றிய நல்ல திறனாய்வுடன் கூடிய ஆராய்ச்சிகள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஐயா, Copy, paste பண்றது தப்புன்னு சொல்றீங்களா இல்லை சரின்னு சொல்றீங்களா என்று தெரியல. இங்கு உள்ள வலைபதிவர்களில் சிலர் காபி பேஸ்ட் பண்றவங்களா தான் இருப்பாங்க.
பதிலளிநீக்குஅதனால் தப்பு இல்லீங்களே ஐயா, உங்களுடைய சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை, விஷயங்களை மற்றவர்களும் தெரிந்துக்கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு இன்று நான் இணையம் பக்கம் வரலைனா உங்க இந்த பதிவ கூட என்னால படிச்சிருக்க முடியாது. அதனால் நாளைக்கு யாரவது இந்த பதிவை காபி பண்ணி போட்டால் இன்று இணையம் பக்கம் வராதவர்கள் நாளை அவர்கள் பதிவின் மூலமாக உங்கள் கருத்துக்களை படிப்பார்கள். எதாவது தறாக எழுதியிருந்தால் மன்னியுங்கள்.
//ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். //
பதிலளிநீக்குஆகா!நமக்கு ஒரு கூட்டாளி சேர்ந்துட்டாங்க:)
நீங்க சொல்ற லிஸ்டல நான் இல்லாததும் ஒரு காரணமோ?
உங்களின் பதிவை பார்த்தேன் பாராட்டுகள் இப்படி உண்மையை கூறுகிறவர்கள் இந்த உலகில் இல்லை அது சரி நீங்க ஏன் புளிய மரத்துல தூக்கு போட்டுக்க வேண்டும் நீங்க திருட வில்லையே உண்மையைத்தான் சொல்லுகிறீர்கள் அது சரி உண்மையை சொன்னால்தான் இந்த உலகத்திற்கு பிடிக்காதே அதனால தானே உண்மையை தேடுகிற நம்புகிற கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களை வாழ வைப்போம் நீங்க எந்த தூக்கு போட்டுக்க வேண்டாம் .
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநல்ல சீரியசான விஷயங்களை நகைச்சுவையுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் ஐயா.
மிகவும் ரசித்தேன் அய்யா
பதிலளிநீக்குயார் என்ன சொன்னாலும் , இந்த காப்பி பேஸ்ட் பதிவர்கள் திருந்தபோவதில்லை, ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பதால் அவர்கள்தான் ராஜாக்கள்.
நாம் இணையத்தில் உலவும் போது தென்படும் முக்கிய விஷயங்களை காப்பி பேஸ்ட் செய்து நம்மை ஃபாலோ செய்பவர்களுக்கு தெரிவிப்பது ஒரு விதத்தில் நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கூற்றைப் போலத் தான். நன்றி.
பதிலளிநீக்கு//காந்தி பனங்கூர் said...
பதிலளிநீக்குஐயா, Copy, paste பண்றது தப்புன்னு சொல்றீங்களா இல்லை சரின்னு சொல்றீங்களா என்று தெரியல. இங்கு உள்ள வலைபதிவர்களில் சிலர் காபி பேஸ்ட் பண்றவங்களா தான் இருப்பாங்க.//
அப்பிடி சரி, தப்புன்னு வெட்டொண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லீரப்படாது தம்பி. சாலமன் பாப்பையா பட்டி மன்றத் தீர்ப்பு சொல்றதப் பார்த்திருக்கீங்க இல்லீங்களா? அந்த மாதிரி கழுவற மீன்ல நழுவற மீன் மாதிரித்தான் எழுதோணும். அவங்கவங்க தங்களுக்குப் புடிச்சமாதிரி அர்த்தம் பண்ணீக்கலாம்!
***ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.***
பதிலளிநீக்கு:))))
//மாலதி said...
பதிலளிநீக்குஉங்களின் பதிவை பார்த்தேன் பாராட்டுகள் இப்படி உண்மையை கூறுகிறவர்கள் இந்த உலகில் இல்லை அது சரி நீங்க ஏன் புளிய மரத்துல தூக்கு போட்டுக்க வேண்டும் நீங்க திருட வில்லையே உண்மையைத்தான் சொல்லுகிறீர்கள் அது சரி உண்மையை சொன்னால்தான் இந்த உலகத்திற்கு பிடிக்காதே அதனால தானே உண்மையை தேடுகிற நம்புகிற கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களை வாழ வைப்போம் நீங்க எந்த தூக்கு போட்டுக்க வேண்டாம் .//
ரொம்பக் கவலை வந்தா அப்படிச்சொல்றது உலக வழக்கம். அவ்வளவுதான் மாலதி. இந்த மாதிரி பிளாக் எழுதி இன்னும் எத்தனை பேர் உயிரை வாங்கவேண்டியிருக்குது? அதுக்குள்ள போயிடுவனா :)
புளியமரமா? அப்டின்னா...
பதிலளிநீக்குமரத்தையெல்லாம் தான் வெட்டி போட ஒரு கும்பல் இருக்கே... அது வெட்டி போட்டுடுச்சு...
ore kallula rendu maangaai.. sory puliyanga...
பதிலளிநீக்குnalla pakirvu..
nanri ayya..
You must have heard this quote: "Imitation is the best form of flattery". Accepted that no one copies and pastes your writings and therefore, you lament. But, then, how come there are scores of commentators who praise you here!!
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநல்ல சீரியசான விஷயங்களை நகைச்சுவையுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
நல்ல சிரிச்சேன் சார்! எழுத்து நடை நல்லா இருக்கு..
பதிலளிநீக்குஇது மாதிரி பதிவுகள் அதிகம் போட்டா, பதிவர்கள் அதனை காப்பி செய்து தங்கள் மனக்குறைவை நிவர்த்தி செய்வார்கள். :) :) :)
பாருங்க, Popular posts-ல இந்த பதிவு தான் முதல்ல...!
Abdul Basith அவர்களுக்கு,
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கு நன்றி.
ஆனா நம்ம ஜனங்க பாருங்க, ஒண்ணைச் செய்யாதீங்கன்னா அதைத் தான் மொதல்ல செய்வாங்க. ஒண்ணைச் செய்யுங்கன்னா, அதைச் செய்யமாட்டாங்க.
இங்கே எச்சில் துப்பாதீங்க அப்படீன்னு போட்டிருக்கிற எடமாப் பாத்து அங்கதான் துப்புவாங்க.
தமிழனோட அடையாளமே அதுவாகிப் போயிடுச்சு.
சார் சார், புளியமரம் வேணாம்சார், முறுங்கை மரம் ட்ரை பண்ணுங்க.....
பதிலளிநீக்கு>ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள்.
பதிலளிநீக்கு:-) ரசித்தேன்.
அய்யா வணக்கமுங்க...
பதிலளிநீக்குஎங்க ஊர்ல ஒதுக்கு புறமா ஒரு மாட்டு சாலை இருக்கும் அதுக்கு ஒரு கதவு பூட்டு இருக்கும் உள்ள இருக்கற பொருள எவனோ ஒருத்தன் திருடி ட்டு போயிருவான் நாங்களும் என்னடா பண்றதுன்னு யோசிச்சோம் கதவையும் பூட்டையும் எடுத்துட்டோம் அதுக்கப்பறம் திருட்டு போகலை நீங்க அதத்தா பண்ணி இருக்கிங்க
//veedu said...
பதிலளிநீக்குஅய்யா வணக்கமுங்க...
எங்க ஊர்ல ஒதுக்கு புறமா ஒரு மாட்டு சாலை இருக்கும் அதுக்கு ஒரு கதவு பூட்டு இருக்கும் உள்ள இருக்கற பொருள எவனோ ஒருத்தன் திருடி ட்டு போயிருவான் நாங்களும் என்னடா பண்றதுன்னு யோசிச்சோம் கதவையும் பூட்டையும் எடுத்துட்டோம் அதுக்கப்பறம் திருட்டு போகலை நீங்க அதத்தா பண்ணி இருக்கிங்க//
பெரும்பாலான ஜனங்களுடைய மனப்பான்மை இப்படித்தான் தம்பி. வருகைக்கு நன்றி.