செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எப்போ வருவானோ எந்தன் கலி தீர...

இது ஒரு கவிதை ( அப்படீன்னு நெனச்சுத்தான் எழுதியிருக்கிறேன். எனக்கும் கவிதைக்கும் காத தூரம். இருந்தாலும் நேற்று குளிக்கும்போது இந்தக் கவிதை உதயமாயிற்று. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருநோக்கில் இதைப் பதிவிடுகிறேன்)


விநாடிகள் நிமிடங்களாக

நிமிடங்கள் மணிகளாக

மணிகள் நாட்களாக

நாட்கள் வாரங்களாக

வாரங்கள் மாதங்களாக

மாதங்கள் வருடங்களாக

வயதோ கூடிக்கோண்டிருக்கிறது

வாழ்வோ குறுகிக்கொண்டிருக்கிறது

ஆனால்

அவனைத்தான் காணோம்

எப்போ வருவானோ

எந்தன் கலி தீர...


20 கருத்துகள்:

 1. நான் இது குறித்து எழுதியபோது இம்மாதிரிக் கவிதைகள் பிடிக்கவில்லை என்றொரு பின்னூட்டம் இருந்தது. இன்னொருவர் அப்படி நேர்ந்தால் அவர் ஒரு வாசகரை இழக்க வேண்டி வருமே எனும் தொனியில் எழ்ய்தியிருந்தார்.

  பதிலளிநீக்கு
 2. என் ஜூலை மாதப் பதிவு “எண்ணச்சிறகுகள்” படித்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான கவிதை ஐயா. தங்களின் கவிதை பயணம் தொடர விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. உங்கள் மகன் -அல்லது--மகளின் --”அம்மா திட்டினாங்களா?”தான் எனது கருத்தும்..எப்போ வரவேண்டும் --எதற்கு வரவேண்டும்----ஒவ்வொரு நிமிடம்மும் நமக்காகவே..அத்தனை நிமிடமும் ரசிக்க --ருசிக்க வாழ்ந்துவிடவேண்டும்--எப்பவேண்டுமானாலும் வரட்டும்--அதைப்பற்றி எனக்கென்ன--நமக்கென்ன கவலை--ஜமாயுங்கள் சாமி

  பதிலளிநீக்கு
 5. //எப்போ வருவானோ எந்தன் கலி தீர...//

  அதான் வந்துவிட்டாரே, நேற்று நீங்கள் பாத் ரூமில் குளிக்கும்போதே.

  அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அவன் வராமல், உங்களால் இதுபோன்ற அருமையானதொரு கவிதை தோன்றி, எழுதியிருக்க முடியாது.

  அவனை நாம் கண்ணால் காணமுடியாது.
  உணர மட்டுமே முடியும்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  தொடர்ந்து எழுதுங்கள். கவிதையா இல்லையா என்றெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 6. //எஸ்.ஆர்.சேகர் said...
  உங்கள் மகன் -அல்லது--மகளின் --”அம்மா திட்டினாங்களா?”தான் எனது கருத்தும்..எப்போ வரவேண்டும் --எதற்கு வரவேண்டும்----ஒவ்வொரு நிமிடம்மும் நமக்காகவே..அத்தனை நிமிடமும் ரசிக்க --ருசிக்க வாழ்ந்துவிடவேண்டும்--எப்பவேண்டுமானாலும் வரட்டும்--அதைப்பற்றி எனக்கென்ன--நமக்கென்ன கவலை--ஜமாயுங்கள் சாமி//

  ஆழ்ந்த இறை நம்பிக்கை இருக்கின்ற போதும் ஒரு வயது ஆனபிறகு இத்தகைய எண்ணங்கள் வரத்தான் செய்கின்றன. இதை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள். இளம் வயதுக்காரர்களுக்கு அது சரியாக இருக்கலாம்.

  ஆனால் நான் நினைப்பது - இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் முக்தியடைதல் நிச்சயம். அதை பயமில்லாமல், வேதனைப்படாமல் எதிர் கொள்ளும் மனத்திறனை வயதானவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடைய பிரதிபலிப்புதான் இந்தப் பதிவு.

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி, வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே.

  பதிலளிநீக்கு
 8. //G.M Balasubramaniam said...
  என் ஜூலை மாதப் பதிவு “எண்ணச்சிறகுகள்” படித்துப் பாருங்கள்.//

  பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

  உங்கள் அளவிற்கு எண்ணங்களை கவிதையாக வடிக்க எனக்குப் பொறுமையில்லை நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. //Rathnavel said...
  அருமையான கவிதை.//

  நன்றி, ரத்னவேல்.

  பதிலளிநீக்கு
 10. //வெங்கட் நாகராஜ் said...
  :)))))//

  நன்றி, நாகராஜ், எல்லோரும் நலம்தானே.

  பதிலளிநீக்கு
 11. //காந்தி பனங்கூர் said...
  அருமையான கவிதை ஐயா. தங்களின் கவிதை பயணம் தொடர விரும்புகிறேன்.//

  நன்றி, காந்தி. முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. என்னமோ பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க.. அப்பால வரேன் சார்வாள்!!!

  பதிலளிநீக்கு
 13. //பட்டாபட்டி.... said...
  என்னமோ பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க.. அப்பால வரேன் சார்வாள்!!!//

  நல்ல வாள் ஒண்ணு வாங்கி வையுங்க, உங்க ஊருக்கு வர்ரப்ப வாங்கிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. என் வருகைக்கு தான் இந்த காத்திருப்போ...?
  என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 15. //ரெவெரி said...
  என் வருகைக்கு தான் இந்த காத்திருப்போ...?
  என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...//

  வாங்க, வாங்க. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  பதிலளிநீக்கு
 16. அய்யா,

  காலாகாலத்தும் பயனளிக்கும்படி உங்களோட விவசாயம் சார்ந்த அனுபவங்களைக் கட்டுரையாக்கி தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கலாமே?

  பதிலளிநீக்கு