திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கொங்கு கல்யாணத்தில் பட்டினிச்சீர் செய்தல்



கல்யாணத்தன்னிக்குஅதாவது தாலிகட்டறதுக்கு முன்னத்து நாள் காலைலிருந்துமாப்பிள்ளையும் பொண்ணும் விரதம்இருக்கோணும்விரதம்னா ஒண்ணும்சாப்புடக்கூடாதுஇது எதுக்குன்னாபொண்ணுமாப்பிள்ளை ரெண்டு பேரும் அன்னிக்கு காலைலஇருந்து மறுச்சு நாளு முகூர்த்தம் முடியற மட்டும் வயித்தைஆரோக்கியமா வச்சுக்கோணும்அதுக்காகத்தான்.

அன்னிக்குப் பொளுதோட பட்டினித்தண்ணி ஊத்திபட்டினிச்சீர்செய்வாங்கஎல்லா முக்கிய சொந்தக்காரங்களும் வந்தபொறவுபையனைக்கூட்டிட்டு வந்து வாசல்ல ஒருமுக்காலியப் போட்டு அதுல உக்கார வைப்பாங்கஎந்த சீருசெய்யறதா இருந்தாலும் சீர்க்காரிதான் போய் பையனையோபொண்ணையோ கூட்டிட்டு வரணுமுங்கஅப்படி கூட்டிட்டுவர்றப்போ கையில தண்ணியோட ஒரு சொம்புஇருக்கணுமுங்க.

வாசல்ல முக்காலிலமாப்பிள்ளைப் பையனஉக்கார வச்சு.மொதல்லே மூணுதடவை தண்ணிசுத்திப்போடோணுமுங்க.தண்ணியெ சருகுச்சட்டின்னு ஒரு பாத்திரம் இருக்குமுங்க.அதுலதான் தண்ணிய கைல எடுத்து மூணு தரம் பையனைச்சுத்திப் போடணுமுங்கபொறவுஅந்தச் சருகுச் சட்டியிலபுதுசாச் சமைச்ச சோறு எடுத்துட்டுஅந்தச் சோத்தில ஒரு கைஎடுத்துட்டு பையன் தலையச்சுத்தி கீற போடணுங்கஇப்படிமூணு தபா போடணுங்கஅப்பறம் அந்த சருகுச் சட்டியைநல்லாக்கழுவி விட்டு இன்னும் கொஞ்சம் சோறுஎடுத்துக்கோணுமுங்கஇப்ப அந்த சோத்துக்குள்ள ஒருதணலைப்போட்டு சோத்தால மூடணுங்கபொறவு அந்தச்சோத்துல ஒரு கை எடுத்து பையன் தலைய சுத்தி கீளபோட்டுனனுங்கஇப்படி மூணு தபா செய்யோணுங்க.

அப்பறம் இன்னும் கொஞ்சம் சோறு எடுத்துட்டு அதுக்குள்ளகொஞ்சம் மஞ்சப்பொடியும் சுண்ணாம்பும் போட்டுகலக்கோணுங்கசோறு பூராவும் செகப்பா ஆயிடுமுங்கஅந்தச்சோத்தை கொஞ்சம் எடுத்து பையன் தலையைச்சுத்தி கீழபோட்டுடனுங்கஇப்படி மூணு தபா பண்ணோனுங்க.இதெல்லாம் பையனுக்கு ஒரு விதத்துல திருஷ்டிகளிக்கறதுக்குத்தானுங்க.

அப்புறம் பக்கத்துல குண்டாவுல தண்ணி கொண்டுவந்துவச்சிருப்பாங்கஅந்தக்காலத்தில பச்சத்தண்ணிதான்வைப்பாங்கஇப்போ எல்லாம் வெந்தண்ணி வைக்கிறாங்க.அந்தத் தண்ணியெ சருகுச்சட்டியில எடுத்து பையன் தலைலஊத்தி குளிப்பாட்டுவாங்கமொறைப் புள்ளைங்க பக்கத்துலநின்னு மஞ்சத்தண்ணி கலக்கு ஊத்துவாங்கநாசிவன்பக்கத்தில இருந்து பையனை நல்லா குளிப்பாட்டி உடுவானுங்க.

அப்பறம் ஒடம்ப எல்லாம் துண்டால தொடச்சுட்டு புது துணியமாமன் கொடுக்க மாப்புள்ளப் பையன் வாங்கீக்குவானுங்க.அப்பறம் மறைவாப்போயி புதுத்துணிகளைக் கட்டீட்டுவருவானுங்கஅப்பறம் கூட்டீட்டுப்போயி மண்டபத்துல சேருபோட்டு உக்கார வைப்பாங்கசேருக்கு முன்னால புள்ளாருபுடிச்சு வச்சுசாமி கும்பிடறதுக்கு வேண்டிய சாமானெல்லாம்வச்சிருப்பாங்க.
பையனுக்கு நெத்தில திண்ணீருசந்தனப்பொட்டுசெகப்புஎல்லாம் வச்சுதலைக்கு தலைப்பா கட்டி உடுவாங்க.இதுக்குத்தான் பேட்டா சீலைன்னு ஒண்ணு ஜவுளி வாங்கறஅன்னிக்கு வாங்கறதுங்கஅப்பறம் புள்ளாருக்கு சாம்பிராணிகாட்டிகப்பூரம் பத்திவச்சு தீபாராதனை காட்டி சாமிகும்பிடுவாங்கஎல்லாரும் சாமி கும்பிட்டுக்கிட்டு திண்ணீருவச்சுக்குவாங்கமாப்பிள்ளைப் பையனும் கும்பிட்டுக்குவானுங்க.

அப்பறம்தான் முக்கியமான வேலை இருக்குதுங்கமாப்புள்ளப்பையன் எல்லார்கிட்டவும் கும்பிடு வாங்கோணுமுங்க.முக்கியமா மாமங்காரங்கஅப்பறம் பெரியவங்கஎல்லாத்தையும் கலத்தொட்டு கும்பிடுவானுங்கஅப்படிக்கும்பிடறவங்க எல்லாம் பணம் வச்சுக்கொடுக்கோணுமுங்க.தாய்மாமன்தான் நெறயக் கொடுக்கோணுமுங்கஇப்படிகொடுக்கற பணத்தையெல்லாம் முய்க்கணக்கு நோட்டுல எழுதிவைக்கோணுமுங்கநாளைக்கு அவங்க ஊட்டுல ஒருவிசேஷம் நடந்தா இந்த முய்யை திருப்பி வைக்கோணுமுங்க.வாங்கின முய்யத் திருப்பி வைக்கலைன்னாஅதசொல்லிக்காட்டுவாங்கஅது ரொம்ப கேவலமுங்கசோத்துக்குஇல்லைன்னாலும் வாங்கின முய்யைச் செலுத்தீடணுமுங்க.

அப்றம் பொண்ணுப்புள்ளக்கும் இதே மாதிரி பட்டினிச்சீருசெய்வாங்கஒரே வித்தியாசம் என்னன்னாபுள்ளக்கி தண்ணிவாக்கமாட்டாங்கபுதுச்சாலையெல்லாம் மொதல்லேயே கட்டிவாசல்ல கூட்டீட்டு வந்து முக்காலீல உக்கார வைப்பாங்க.மத்த சாங்கியத்தையெல்லாம் செஞ்சுகுளிப்பாட்டறதுக்குபதிலாதண்ணிய சும்மா தலையச் சுத்திப்போட்டுட்டுகூட்டீட்டுப்போயிடுவாங்கஅப்பறம் சாமி குப்பிட்டுட்டுமுய்வாங்குவாங்க.


இந்த சீர் நடக்கறப்பத்தான் பையனுக்கும் பொண்ணுக்கும் கால்ல மிஞ்சி போட்டு உடுவாங்க.

அவ்வளவுதானுங்க பட்டினிச்சீரு.

7 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    உங்களது செய்முறை பழக்கங்களை தெரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. ப்ரியா, ரத்னவேல், இருவருக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  3. ஒரு புதுமுறை கல்யாண அனுபவ செய்தி தந்து புதுமுறை சங்கதிக்கு வழி தொடுத்தவைக்கு நன்றிகள் பல !

    பதிலளிநீக்கு
  4. வளவன், வேலு,
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  5. அய்யா வணக்கமுங்க உங்க பதிவு நல்லாருக்குங்க......

    பதிலளிநீக்கு
  6. ப‌ட்டினிச் சீர் ப‌ற்றி அறிய‌ வைத்த‌மைக்கு ந‌ன்றி. எங்க‌ ப‌க்க‌ம் திரும‌ண‌ நாள‌ன்று காலை முகூர்த்த‌ம் முடியும் வ‌ரை ம‌ண‌ம‌க்க‌ள் சாப்பிடாம‌லிருப்பது வ‌ழ‌க்க‌ம். திரும‌ண‌ம் முடிந்து மூன்று வ‌ழிப் ப‌ய‌ண‌மும் கும்பிடு ப‌ண‌ம் உண்டு. மேலும் உண‌வு வேளைக‌ளில் மாப்பிள்ளை வீட்டு விருந்தில் ம‌ண‌ம‌க‌ளுக்கும் பெண் தோழிக்கும் ம‌ண‌ம‌க‌ன் வீட்டில் ப‌ண‌ம்பாக்கு வைப்ப‌தும், ம‌ண‌ம‌க‌ன் ம‌ற்றும் மாப்பிள்ளை தோழ‌னுக்கு பெண் வீட்டு விருந்தில் ப‌ண‌ம்பாக்கு வைப்ப‌தும் ச‌ம்பிர‌தாய‌ம்.(சில‌ர் நெருங்கிய‌ முறைக்கார‌ர்க‌ளுக்கும் சேர்த்து வைப்ப‌ர்) அந்த‌ந்த‌ ஊரின் திரும‌ண‌ச் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை த‌ங்க‌ளைப் போன்றோர் ப‌திவிடுவ‌து வ‌ரும் ச‌ந்த‌தியின‌ருக்கு ந‌ல்ல‌ அறிமுக‌ப்ப‌டுத்த‌லாயிருக்கும். உங்க‌ வ‌ட்டார‌ வ‌ழ‌க்கிலேயே ப‌திவெழுதியிருப்ப‌து த‌னிச் சுவையாயிருக்கிற‌து ஐயா.த‌ங்க‌ள் ப‌திவில் க‌ருத்துரையிட‌ ஏதோ தொழில்நுட்ப‌ சிக்க‌லிருப்ப‌தால் மெயிலில் அனுப்ப‌ நேர்ந்த‌து.

    பதிலளிநீக்கு