திங்கள், 30 ஏப்ரல், 2012

உதகமண்டலம் - மலைகளின் ராணி

மலை வாசஸ்தலங்களின் ராணி எனப் புகழ் பெற்றது மக்களால் சுருக்கமாக ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம். ஒத்தைக்கல் மந்து என்பது மருவி உதகமண்டலம் ஆகி அது சுருங்கி ஊட்டி என்றாயிற்று.

கோடை காலத்தில் தங்க நல்ல இடம். பேங்கில் ஓரளவு கணிசமான அளவு தொகை (சுமார் 10 லட்சம்) இருந்தால் குடும்பத்துடன் ஒரு வாரம் போய் இருந்து விட்டு வரலாம். ஹனிமூன் தம்பதிகள் பெண்ணின் தகப்பனார் செலவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் போய்வர தகுந்த தலம்.

ரூம் வாடகை 4000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை அவரவர் சக்திக்குத் தகுந்த மாதிரி கிடைக்கிறது. நீங்கள் அரசாங்க உயர் அதிகாரியாய் இருக்கும் பட்சத்தில் கவர்ன்மென்ட் விடுதிகளில் உங்கள் டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஊட்டியில் பணி புரியும் அலுவலர்கள் ஏற்பாடு செய்து விடுவார்கள். மற்றவர்கள் தங்கள் கைக்காசைத்தான் செலவு செய்யவேண்டும்.

என்னை மாதிரி இளைஞர்களுக்கு அங்கு போனவுடன் நாலு பெக் விஸ்கி போட்ட மாதிரி தலை கழுத்தில் நிற்காமல் தள்ளாடும். அப்படிப்பட்டவர்கள் அங்கும் இங்கும் அலையாமல் ரூமில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு தூங்கவும்.

நானும் என் நண்பரும் இரண்டு நாட்கள் ஊட்டி சென்று வந்தோம். இவ்வாறு சென்று வர வாய்ப்பு இல்லாத நண்பர்கள் இங்கு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து இன்புறவும்.


1.சேரிங் கிராஸ்:

ஊட்டியில் முதலில் உங்களை வரவேற்கும் அடையாளச்சின்னம்.



2. ஊட்டி லேக்:

தண்ணீரைத் தொட்டு விட்டால் ஒரு பாட்டில் பினாயில் வேண்டும் கை கழுவ. அத்தனையும் சுத்தமான சாக்கடை நீர்.


3. பொட்டானிகல் கார்டன்.


பல சினிமாக்களில் காட்டப்பட்டு விட்டதால் நேரில் பார்க்கும்போது அவ்வளவு த்ரில் இருக்காது.





4. சில இயற்கை / செயற்கைக் காட்சிகள்.





5. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்:

Lakshmi Cottages
272,Church Hill Lane,
Behind Safire Grand Cottage,
Udhagamandalam - 630001.


Phone: LL 0423-2452141
Mobile: 98435 67425


24 hours hot water, Parking Space Available. Located in a serene atmosphere within walking distance of Charring Cross. 





ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஊர்.


23 கருத்துகள்:

  1. ரொம்ப நாளாக ஊட்டி போகணும் ஆசை. எப்ப முடியும் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு முறை சென்று ஊட்டியின் அழகை ரசித்து இருக்கிறேன். தங்கும் இடம் பற்றி சொன்னது உண்மை.

    பதிலளிநீக்கு
  3. வாடகையெல்லாம் எவ்வளவுங்க
    சர்வீஸ் நல்லாயிருந்ததா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாடகை, சீசனைப் பொருத்தும் வார லீவு நாட்களைப் (சனி, ஞாயிறு) பொருத்தும் மாறுபடும். வார நாட்களில் 2500 ம் லீவு நாட்களில் 4000 மும் வாங்குகிறார்கள். இந்த மாதிரி ஊட்டி லாட்ஜ்களில் சர்வீஸ் குறைவுதான். பெரிய ஓட்டல்களில் நல்ல சர்வீஸ் கிடைக்கும்.

      நீக்கு
  4. தண்ணீரைத் தொட்டு விட்டால் ஒரு பாட்டில் பினாயில் வேண்டும் கை கழுவ. அத்தனையும் சுத்தமான சாக்கடை நீர்.

    வெறுக்கும் ஊர் ஊட்டி...

    பதிலளிநீக்கு
  5. சார் ஊட்டி தான் தமிழக மலை வாசஸ்தலங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். கொடைக்காணல் மாதிரி இடங்களில் பார்க்க அதிகம் இடங்கள் இருக்காது இங்கு நிறைய சுவாரஸ்ய இடங்கள் உள்ளன நீங்கள் அவற்றை அருமையாக பட்டியல் இட்டுள்ளீர்கள் ஊட்டி செல்வோருக்கு இப்பதிவு மிக உதவும்

    பதிலளிநீக்கு
  6. ஐயா, லாட்ஜ் முகவரியை போட்டதோடு வாடகையையும் சேர்த்து போட்டிருக்கலாமே! 4000-க்கும் மேலோ? :)

    பதிலளிநீக்கு
  7. ஊட்டியின் அழகை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் ஓரிரு முறை சென்று வந்துள்ளேன். சுகமான அனுபவங்களே.

    பதிலளிநீக்கு
  8. இந்த ஊட்டியும் கொடைக்கனாலும் எனக்கு இன்னும் கனவாவே இருக்கு. பேசாம இதுக்குன்னே ஒரு பயணம் இந்தியாவுக்கு வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, உங்களுக்கு எல்லா ஏற்பாடும் செய்து கொடுக்கிறேன்.

      நீக்கு
    2. ப்ரீயா பண்ணிக்கொடுத்தா நான் வர்றேன்! :)

      நீக்கு
    3. தாராளமா பண்ணிக் கொடுக்கறேனுங்க. எனக்கு கமிஷனே வேண்டாம். எல்லாம் லாட்ஜுக்காரங்களே தந்துடுவாங்க (20 % ஸ்டேண்டேர்ட் ரேட்).

      உங்களுக்கு செலவில்லாம ப்ரீயான்னு கேக்கறீங்களா? அப்படியும் பண்ணலாங்க, ஆனா உங்க ஒடம்பு தாங்குமான்னு பார்த்துக்கோங்க. ஓசி ரயில், பிளாட்பாரத்துல படுக்கை, குளியல் அங்கு தேவையில்லை, சாப்பாடு உங்கள் சௌகரியம். சரீன்னா சொல்லுங்க, பக்காவா ஏற்பாடு பண்ணீடலாங்க.

      நீக்கு
  9. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த மாதிரி போஸ்ட் போட்டு கடுப்பேற்ற வேண்டாம்! என்று "சிரிச்ச" மூஞ்சியோட சொல்லிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல பயணக்கட்டுரை எழுதி இருக்கீங்க!!
    நான் சென்று வந்த பயணம் பற்றி விரைவில்..

    பதிலளிநீக்கு
  11. ஊட்டி போறதுக்கு எதுக்குங்க பேங்க் பேலன்ஸ் 10 லட்சம் வேணும்? போக்குவரத்துக்கும் தங்கறதுக்கும் சாப்பிடறதுக்கும் ஒரு 20 ஆயிரம் இருந்தா ஒரு மூனு நாளைக்கிப் போதாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதுமுங்க. ஆனா ஜனங்களை அவ்வளவு சுலபமா ஊட்டி பார்க்க உடலாமுங்களா? அப்புறம் ஊட்டி மவுசு கொறைஞ்சுடாதுங்களா? எதுவும் கஷ்டப்பட்டுக் கிடைச்சாத்தானுங்க சந்தோஷமா இருக்குமுங்க.

      நீக்கு
  12. //ஒத்தைக்கல் மந்து // புதிய தகவல்

    //சுத்தமான சாக்கடை நீர்.// ஹாஸ்யம் இது போல் பதிவு முழுவதும் தொடர்வதை நான் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. oottyil ainthu naal thanginen.mahedra club vasathi yaana nalla service seytha resort.annal oor veedukal peruththu malaivaasasthalam pol illai.en blggil eluthi ullen.tea podi ,gutia oil emaatram.salaiyil nadappathu uyirai panayam vaippathu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sethuraman Anandakrishnan அண்ணா! ஏதோ ஆங்கிலத்தில் காலட்சேபம் பண்ணியிருக்கீறீர்கள் தமிழில் எழுதுனா நாங்களும் படிப்போம் இல்லையா?

      நீக்கு