சில நாட்களுக்கு முன் விண்டோஸ் 7 Home Basic வாங்கி என் கம்ப்யூட்டரில்
நிறுவினேன். விண்டோஸ் 7 நிறுவினவர்களுக்கு விண்டோஸ் 8 Pro. சலுகை விலையில் கொடுப்பதாக
மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது. இதற்கு முன்பே “விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ” நிறுவி
அதில் ஈடுபாடு வந்துவிட்டது. ஆகவே விண்டோஸ் 8 ஜ விலை கொடுத்து வாங்கிவிடுவது என்ற ஆசை
வந்தது.
அக்டோபர் 26 ம் தேதி விண்டோஸ் 8 ரிலீஸ் பண்ணினார்கள். நம்
ஊரில் 27 ம் தேதி 00.01 AM முதல் கிடைக்க ஆரம்பித்தது. அதாவது இன்டர்நெட்டில் இருந்து
டவுன்லோடு செய்து கொள்ளவேண்டும். அதற்கு நம் கம்ப்யூட்டரில் ஒரிஜினல் விண்டோஸ் 7 அல்லது
விண்டோஸ் XP நிறுவியிருக்கவேண்டும். நாம் விண்டோஸ் 8 டவுன்லோடு செய்ய முதலில் இன்டர்நெட்டில்
பணம் கட்டவேண்டும். (1999 ரூபாய்). முதல் நாள் என்னுடைய ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை.
அடுத்த நாள் என் பெண்ணின் கிரெடிட் கார்டை உபயோகித்தேன். பணம் மைக்ரோசாஃப்ட் கம்பெனிக்கு
போனவுடன் விண்டோஸ் 8 டவுன்லோடு செய்ய விண்டோஸ் கீ வந்து விட்டது.
டவுன்லோடுக்கு இரண்டு மணி நேரம் ஆயிற்று. அந்த பைல், ISO
வடிவில் இருக்கிறது. அதை DVD யில் ஏற்றவேண்டும். அதன் பிறகு அந்த DVD ஐ கம்ப்யூட்டரில்
போட்டு விண்டோஸ் 8 ஐ நிறுவ வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. மொத்தமாக நான்கு
மணிநேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கரன்ட் கட் ஆகாமல் வேறு தொந்திரவுகள் வராமல்
இருக்கவேண்டும். கடவுள் புண்ணியத்தில் எந்த தொந்திரவும் இல்லாமல் விண்டோஸ் 8 ஐ நிறுவி
விட்டேன்.
விண்டோஸ் 8 உடன் “விண்டோஸ் மீடியா சென்டர்” என்ற புரொகிராமை
இலவசமாக கொடுக்கிறார்கள். அதற்கு தனியாக ஈமெயில் அனுப்பி, தனி கீ வாங்கவேண்டும். அப்படியே
செய்து, அதன் கீ வந்தவுடன் அதையும் டவுன்லோடு செய்து நிறுவினேன். “விண்டோஸ் மீடியா சென்டர்” என்ற புரொக்ராம் எல்லா வகையான ஆடியோ, விடியோ பைல்களையும்
பிளே பண்ணுகிறது. இது ஒரு நல்ல புரொக்ராம்.
விண்டோஸ் 8 புரொக்ராமில் Antivirus சேர்ந்திருக்கிறது. தனியாக
Antivirus மென்பொருள் வாங்க வேண்டியதில்லை.
இப்படியாக இந்த இரண்டு மாதங்களில் மென்பொருட்களுக்காக ஏறக்குறைய
பத்தாயிரம் ரூபாய் செலவு ஆகிவிட்டது.
பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இதற்கு முந்தைய விண்டோஸ்
7 அல்லது விண்டோஸ் XP ஐ விட விண்டோஸ் 8 ல் பிரமாதமாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. விண்டோஸ்
77ஏழுக்கு ஒரு புது டிரஸ் மாட்டியிருக்கிறார்கள், அவ்வளவுதான். நான் கம்ப்யூட்டர் வைத்திருப்பது
இந்த மாதிரியான கிறுக்குத்தனங்கள் பண்ணுவதற்காகத்தான். அதனால்தான் விண்டோஸ் 8 ஐ வாங்கினேன்.
குழந்தைகள் ஒரு பொம்மை பழசாகிப் போனால் வேறு புது பொம்மை வாங்குகிறார்கள் அல்லவா? அதுமாதிரி
என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு இந்த விண்டோஸ் 8, ஒன்றும்
புதிதாக தரப்போவதில்லை.