வெள்ளி, 12 அக்டோபர், 2012

நவீன முதியோர் இல்லங்கள்


மக்களிடையே, குறிப்பாக சில வட்டங்களில் உள்ளவர்களிடம், பணம் ஒரு பொருட்டல்ல என்ற நிலை நிலவுகின்றது. அதிலும் தன்னுடைய மகன்கள் வெளி நாட்டில் வேலையிலிருந்தால் பணம் அதிகம் துள்ளி விளையாடும். இப்படிப் பட்டவர்களைக் குறி வைத்து இப்பொழுது சில பில்டர்கள் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

அது பற்றிய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் காட்டும் வசீகரங்கள் சில.

1. முற்றிலும் பாதுகாப்பான தனி வீடுகள்.
2. 24 x 7 பாதுகாப்பு
3. சீனியர் சிடிசன்களுக்கான ஸ்பெஷல் கட்டுமானம்.
4. சென்ட்ரல் கிச்சன்.
5. மருத்துவ வசதி
6. தியான மண்டபம்
7. உடற்பயிற்சி மையம்
8. வாக்கிங்க் போக தனிப் பாதை
9. பிக்னிக் வசதி
10. ரீடிங்க் ரூம்
11. விளையாட்டு அறை
12. கேபிள் டி.வி.
13. லாண்ட்ரி
14. பொது கிளீனிங்க்
15. பிரேயர் ஹால்
16. ஹவுஸ் கீப்பிங்க்

இப்படி வசதிகளை அடுக்கி வரும் விளம்பரங்களைப் பார்த்து விட்டு அயல்நாட்டிலிருக்கும் மகன்/மகள் உடனே அப்பாவிற்கு ஒரு ப்ளாட் புக் பண்ணி விடுவார்கள். ப்ளாட் ஒன்று 25 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை போகிறது. தங்கள் பெற்றோர்களுக்கு, தங்களைப் பெற்ற கடனை இதன் மூலம் தீர்த்த திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்த மாதிரி அமைப்புகளை நீடித்து நிர்வகிப்பதில் உள்ள சிரமங்கள் பலருக்குப் புரிவதில்லை. வீடுகளைக் கட்டி விற்பதுடன் கான்ட்டிராக்டரின் வேலை முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு அந்த அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த கூட்டமைப்பில் குடியிருப்பவர்களையே சேரும். ஒரு தனி வீட்டிற்கு வேண்டிய பராமரிப்பு வேண்டாமென்றுதான் இத்தகைய கூட்டமைப்புகளுக்கு சீனியர் சிடிசன்கள் வருகிறார்கள். மறுபடியும் அதே வேலை என்றால் அவர்களால் எப்படி நிர்வகிக்க முடியும்?

ஒரு பெரிய குடியிருப்பில், சென்ட்ரல் கிச்சனுடன், பராமரிப்பு வேலைகளை கவனிக்க ஒரு ஆள் போட்டாலும் அவரைக் கண்காணிக்க ஒரு தலைவர் வேண்டும். இப்பொழுது இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. வயதான பின்பும் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்ளும் திறன் இருப்பது கடினம்.

ஆகவே இந்த மாதிரி சீனியர் சிடிசன் குடியிருப்பில் வீடு வாங்குவது யோசித்து செய்யவேண்டும். பணம் இருக்கிறதென்று அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது.

எந்த திட்டமும் ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகத் தெரியும். நாளாவட்டத்தில் அதன் கவர்ச்சி மங்கி அதன் உள் விகாரங்கள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் வளராததற்கு காரணம் இதுதான். தொடர்ச்சியான முனைப்பு இருப்பது கடினம்.

பிரச்சினைகள் தோன்றும்போது இந்த வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் அங்கு இருக்கமாட்டார். அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு அந்த வீடுகளில் குடியிருப்பவர்களையே சேர்ந்ததாகும். தரமான உணவு என்பது கனவாக மாறலாம். மற்ற எல்லா வசதிகளும் ஆரம்ப காலத்தில் காட்டியது போல் பராமரிக்க முடியாமல் போகலாம்.

அத்தகைய வீடுகளை உங்கள் இஷ்டம்போல் விற்க அல்லது வாடகைக்கு விட பல சங்கடங்கள் ஏற்படும். இந்த சிக்கல்களை எல்லாம் மனதில் கொண்டு இம்மாதிரி குடியிருப்பில் சேருங்கள்.

18 கருத்துகள்:

  1. அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு ஐயா .நீங்கள்
    சொல்வதுபோல் பிரச்சனைகள் ஏராளம் இப்போது
    உள்ளது .அதிலும் வெளிநாட்டில் இருந்துகொண்டு
    இந்த மாதிரி விசயங்களில் ஏமாந்து போறவர்கள்
    அதிகம்பேர் .அருமையான தகவல் இது பலரையும்
    சென்றடைய வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவுதான் பணம் கைகளில் புரண்டாலும் பணத்தைக் கொண்டு பெற்றோரின் பாசத்தை வாங்கமுடியாது என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுவிட்டார்கள்.....

    என்னைப் பொருத்தவரை தனியான வாழ்க்கை வேண்டாம்

    பதிலளிநீக்கு
  3. பபயன்மிக்க சிந்திக்கவைக்கும் தகவல்கள்.. ப்

    பதிலளிநீக்கு
  4. சென்ட்ரலைஸ்டு கிச்சன் என்பது கிட்டதுதட்ட ஓட்டல் மாதிரிதான். பல்வேறு பின்னணிகளிலிருந்து வருபவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி டேஸ்ட் இருக்காது. மேலும் வயதான காலத்தில் வீட்டுச் சாப்பாடுதானே சிறந்தது? வீடுகளை வாங்கியவர்கள் சின்ன வயசு ஆட்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டால் சீனீயர் சிட்டிசன்ஸ் குடியிருப்பு என்பதே அர்த்தமில்லாமல் போய்விடும்.

    சரவணன்

    பதிலளிநீக்கு

  5. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது
    தினபதிவு திரட்டி

    பதிலளிநீக்கு
  6. எல்லாத்தையும் சொல்லி வீட்டை வித்திட்டு அவன் எஸ்கேப் ஆயிடுவான், நாம் மாட்டிகிட்டு அவன் குடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி யாரைக் கேட்பது என்று தெரியாமல் விழிக்க வேண்டும். அருமையான கட்டுரை, யோசிக்க வேண்டிய விஷயம்........!!

    பதிலளிநீக்கு
  7. ஆரம்ப எச்சரிக்கை! காது உள்ளவன் கேட்கக் கடவன்!

    பதிலளிநீக்கு
  8. //பணம் இருக்கிறதென்று அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது.//
    சரியான அறிவுரை.

    பதிலளிநீக்கு
  9. நல்ல விழிப்புணர்வு தகவல்.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்ல விழிப்புணர்வு பகிர்வு.. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  11. தகவல்களுக்கு நன்றி ஐயா. வெளியிலிருந்து பார்த்தால் நல்ல அமைப்பு மாதிரி தெரியும். உள் விவகாரங்கள் நிறைய உள்ளன என்று புரிய வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. இங்கும் இப்படித்தான் சில இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  13. அடுத்த தடவை பாமக கட்சி தலைவர் ராமதாசுக்கு வோட் போட்டு அவரை முதல்வராக்கினால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும். மரங்கள் செழித்து வரும் (நாங்க ஆட்சிக்கு வந்தா யாரு மரத்தை வெட்டுவது). துணை முதல்வராக உங்கள் மனம் கவர்ந்த தலைவன் அன்புமணி நியமிக்கப்படுவார்.
    எந்த கூட்டணியில் இருப்பார் என்று இப்போது என்னால் கூறமுடியாது - நிச்சயமாக ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பார். (பெரும்பாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பார் ஜெயாவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும்-மகளிர் விவகார அமைச்சர்)

    தெரிவிப்பது - ராமதாஸ் அவர்களின் கால் செருப்பான தொண்டன் அருள் (ARUL GREEN )

    பதிலளிநீக்கு
  14. Building isolated communities has it's downside too. Domestic help/maid's can't live near it and have to travel from outside city and hard to find.

    Instead of buying it, it's probably better to rent in assisted living run by private companies.
    if you don't like one, you move to other. market will determine the effective one's.



    பதிலளிநீக்கு